Share this book with your friends

THAMIZHAGATHIL KURINJI VALAM / தமிழகத்தில் குறிஞ்சி வளம்

Author Name: Murugu Sundaram | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

படகர் :

நீலகிரியில் வாழும் வெள்ளையர் இவர்களைப் பர்கர் (Burgher) என்று அழைக்கின்றனர். வடக்கிலுள்ள மைசூரிலிருந்து வந்ததால் இவர்கள் வடகர் என்று பெயர் பெற்றனர் என்றும், அப்பெயரே படகர் எனத் திரிந்தது என்றும் சிலர் கூறுகின்றனர். மைசூர் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாகவும், அரசியலில் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகவும், சமுதாயக் கொடுமை காரணமாகவும், மைசூரில் வாழும் லிங்காயத்தாரிடம் கொண்ட சமயப்பூசல் காரணமாகவும் இவர்கள் இங்குக் குடியேறினராகக் கூறப்படுகிறது, தோடர்களிடையே வழங்கும் பரம்பரைக் கதைகளில் படகரைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லாத காரணத்தால், இவர்கள் தோடர்களுக்குப்பின் இங்குக் குடியேறியவர்கள் என்பது தெளிவாகிறது.

படகர்கள் உழவுத் தொழிலில் வல்லவர்கள். நீலகிரியில் உள்ள பயிர்த்தொழில் முழுக்க முழுக்கப் படகர்களின் உழைப்பையே நம்பி நடைபெறுகிறது. நீலகிரியின் கிழக்குப்பாதியில் இவர்கள் நிறைய வாழ்கின்றனர். குந்தா பீட பூமியில், தோட்டக் கூலிகளாக நிறைய பேர் பணிபுரிகின்றனர். சிலர் தங்களுக்குரிமையான நிலங்களில் பயிர்த் தொழில் புரிந்து வாழ்கின்றனர். தோட்டங்களில் உழுவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பெண்களே செய்து கொள்கின்றனர். நகரங்களில் கூலிவேலை செய்வதற்காக ஆண்கள் நிறையபேர் வருகின்றனர். படகர்கள் சிலர் கொட்டுக்காரராகவும் (Artisans), தச்சராகவும், நாவிதராகவும், வண்ணாராகவும் தங்கள் இனத்தார்க்குப் பணிபுரிகின்றனர். கொரலியும், சாமையும் இவர்களுடைய முக்கிய உணவுப் பொருள். உணவுப் பொருள் பயிரிட்டது போக எஞ்சிய நிலங்களில் உருளைக்கிழங்கு, குச்சி வள்ளிக்கிழங்கு முதலியவற்றைப் பயிரிட்டு விலைக்கு விற்கின்றனர். இவர்கள் பரம்பரையாகப் பரம ஏழைகள்.

Read More...
Paperback
Paperback 399

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர் முருகு சுந்தரம்

முருகு சுந்தரம் (26 திசம்பர் 1929 – 12 சனவரி 2007) தமிழ்க் கவிஞராவார். இவரை மறுமலர்ச்சிக் கவிஞர் என்று போற்றுகின்றனர்.1929ஆம் ஆண்டு திருச்செங்கோடு ஊரில் முருகேசன் - பாவாய் தம்பதியனருக்கு மகனாக முருகுசுந்தரம் பிறந்தார். இளநிலை கல்வியும், புலவர் பட்டமும் பெற்று மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1960ஆம் ஆண்டு தனது முதல் கவிதையை எழுதினார்.

Read More...

Achievements

+15 more
View All