Share this book with your friends

Vaazhkai Payanathil Valigal / வாழ்க்கை பயணத்தில் வலிகள்

Author Name: Senthilkumar Thiyagarajan Mpt; Miap; Cdnt; Pgdfwm | Format: Paperback | Genre : Health & Fitness | Other Details

ஓவ்வொரு வெற்றியின் மறுபக்கம் வலிகள் நிரம்பியது. போராட்டம் நிரம்பிய வாழ்க்கையில் வலிகளும் நம்முடன் பயணித்து கொண்டேயிருக்கும். மன வலியை தாங்க நாம் எப்பொழுதும் நம்மை திட படுத்திக்கொண்டே வாழ்க்கை வாழ பழக கற்றுகொள்கிறோம். ஒவ்வொரு தோல்வியும் நமக்கு கொடுக்கும் மன வலியை நம் மனம் எப்படி அனுபவ பாடமாக கட்டமைத்து கொள்கிறதோ அதேபோல் உடலில் ஏற்படும் வலிகளுக்கும் நம் உடல் பல்வேறு சமயங்களில் மருத்துவத்தை தானே உருவாக்கி கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் SELF HEALING சக்தி என்பார்கள். வாழ்க்கை பயணத்தில் வலிகள் என்ற பிசியோதெரபி மருத்துவம் பற்றிய நூல் மனித உடலில் ஏற்படும் எலும்பு, அதனை சுற்றியுள்ள பகுதிகள், தசை பகுதி இன்னும் பல்வேறு உடல் கட்டமைப்பை தாங்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் அது தொடர்பான பிரச்சனைகள் அதற்கான தீர்வு விவாதகங்களை முன்னிறுத்தி பயணிக்கும். உங்களின் வலி சார்ந்த பிரச்சனைகளை பல்வேறு கட்ட நகர்தலில் விடையளிக்க முற்படுகிறேன்.

ஆசிரியர்

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செந்தில்குமார் தியாகராஜன் MPT; MIAP; CDNT; PGDFWM

பேராசிரியர் செந்தில்குமார் தியாகராஜன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரைச் சேர்ந்தவர் தற்சமயம் தனது வேலை நிமித்தமாக குமாரபாளையம் நகரில் வசித்து வருகிறார், 2018 ஆம் ஆண்டில் இருந்து எக்ஸெல் பிசியோதெரபி மருத்துவ கல்லூரியில் பணியில் உள்ளார், எக்ஸெல் பலதுறை மருத்துவமனை மற்றும் எக்ஸல் பிசியோதெரபி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிசியோதெரபி மருத்துவராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார், இதற்கு முன்பாக 2013 லிருந்து 2017 வரை ஆக்ஸ்போர்ட் மருத்துவக்கல்லூரி பெங்களூரில் பணி புரிந்து வந்தார், 2008ல் இருந்து 2013 ஆண்டு வரை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள காஸ்மோபாலிட்டன் என்ற மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார் மற்றும் மலேசியா காஸ்மோபாலிட்டன் மருத்துவக்கல்லூரி இயங்கிய மருத்துவமனையிலும் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து அனுபவம் இவருக்கு உண்டு.

Read More...

Achievements

+15 more
View All