Share this book with your friends

VASANTHA MALLIGA (Novel) / வசந்த மல்லிகா நாவல்

Author Name: Vaduvur. Duraisamy Iyengar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மல்லிகாவின் புதிய கணவன்
குறவன் பறவைகளைப் பிடிப்பதற்கு வலை விரிப்பதைப் போல் பீமராவ் தனது வஞ்சக வலையை விரித்து அதில் மல்லிகாவை வீழ்த்த மிகவும் பொறுமையாகவும், தந்திரமாகவும் விடா முயற்சி செய்து வந்தான். அவன் தன்னைப் பிடிக்கும் பொருட்டு வலை விரிக்கிறான் என்பதை மல்லிகா உணர்ந்தாள். ஆகிலும் அவள் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வல்லமையற்றவளாய் இருந்தாள். திருவையாற்றில் அவன் தனது மனதை வெளியிட்ட போதே அவள் அவனது சிநேகத்தை விலக்கியிருக்க வேண்டும். அவ்விதம் செய்யாமல் அலட்சியமாக இருந்ததனால், அவள் அவனை அதன் பிறகு கண்டித்து விலக்கக் கூடாமல் போயிற்று. ஆனால், அவன் அதன் பின்னர் அவளிடம் வந்த போதெல்லாம், சாதாரணமான சிநேகிதனைப் போல வந்து கொண்டிருந்தானே அன்றி, திருவையாற்றில் நடந்த விஷயத்தை அவளுக்கு நினைவூட்டக் கூடிய வார்த்தை ஒன்றையும் சொல்லாமல் நிரம்பவும் தந்திரமாக அவன் நடந்து கொண்டான். அவனது உண்மையான மனநிலைமை எப்படிப்பட்டதென்பதை அவள் நன்றாக அறிவாள். அவள் கடின மனதுடையவள் அல்ல. ஆனால், அவளது காதல் முழுவதையும் வஸந்தராவ் கவர்ந்து சென்றமையால், அவளுக்கு வேறு எந்தப் புருஷர் மீதும் விருப்ப முண்டாகவில்லை.

Read More...
Paperback
Paperback 325

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வடுவூர் துரைசாமி அய்யங்கார்

இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக் கொண்ட பெருமையர் Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் படைத்துள்ளார். இவர் படைப்பில் சிறந்ததாக மேனகா, கும்பகோணம் வக்கீல் குறிப்பிடத்தக்கன; படமாகவும் வந்தவை. வாசகர்களின் நாடித் துடிப்பறிந்து ஈர்க்கும் இனிய வசனமும் அழகு வருணனைகளும் அனைவரையும் அள்ளின.

திகைப்பூட்டும் திருப்பங்கள், சுவைமிகு நிகழ்ச்சிகள், ஆவலைத் துண்டும் விறுவிறுப்பும், படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் நடையும், நகைச்சுவை நெளிய நல்ல நல்ல நவீனங்களைப் படைத்துள்ளார்.

வெறும் மர்ம நாவல் என ஒதுக்க முடியாத அளவுக்கு வைணவத் தலங்களையும், வேற்று மதத்தினரும் கூடி வாழும் வகையும், சமூகக் குறை நீக்கமும் கொண்டும் விளங்குகின்றன. திகம்பர சாமியார் துப்பறியும் பாத்திரம் நினைவில் நிற்கும். நாவல் வரலாற்றில் சுவடு பதித்தவர் வடுவூரார் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

Read More...

Achievements

+15 more
View All