Share this book with your friends

VENDUM VIDUTHALAI / வேண்டும் விடுதலை

Author Name: Pavalareru Perunjithanaar | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

பாலத்தீனர்களின் விடுதலையைப் பற்றியும், தென்னாப்பிரிக்கர்களின் அரசியல் உரிமைகளைப் பற்றியும் இங்குள்ள தலைவர்களும் நாமும் பேசவில்லையா? அங்குள்ள மக்களுக்காகப் போராடி வரும் தலைவர்களான யாசீர் அராபத்தையும் மண்டேலாவையும் நாம் வரவேற்றும், பாராட்டியும் நம் இந்திய அரசு அவர்களுக்குப் பற்பல உதவிகளையும் பரிசுகளையும் வழங்கவில்லையா? அவையெல்லாம் தேச விரோதமில்லாத பொழுது, 'சதி'யில்லாதபொழுது, தமிழீழ விடுதலையைப் பற்றியும் தம்பி பிரபாகரனைப் பற்றியும் பேசுவது மட்டும் எப்படி தேசவிரோதமும் சதியும் ஆகும்?

இனி, இவையன்றித் தமிழ்நாட்டுக்கும் தமிழின மக்களுக்கும் ஞாயமாகக் கிடைக்க வேண்டிய அரசியல், பொருளியல், மக்களியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும், கருத்துகள் கூறுவதும், கோரிக்கைகள் வைப்பதும எப்படிக் குற்றமாகும்? இவையெல்லாம் குடியரசு அமைப்பிலுள்ள ஒரு குடிநாயக ஆட்சியின் நடைமுறைகள் இல்லையா? தாக்கமுற்ற ‘பாதிக்க’ப்பெற்ற மக்கள் தங்கள் இன உரிமைகளையும், வாழ்வியல் உரிமைகளையும் பேசுவது எழுதுவது எப்படித் தவறாகும்? தமிழர்கள் இந்தியாவின் ஒரு தேசிய இனமில்லையா? இங்குள்ள மற்ற தேசிய இனங்களைப் போல இத்தமிழ்த் தேசிய இனமும் தன்னுரிமை கேட்பதும், இனி அதுவும் நிறைவேறாதபொழுது, தனிநாடு கேட்பதுந்தான் எப்படித் தேச 'விரோத' 'சதி' ஆகிவிடும்? அத்தகைய குரல் எழுப்புதல்கள், கோரிக்கை வேண்டல்களே குற்றம், சதி, தேச விரோதம் என்றால், குடியரசின், மக்களாட்சியின் இலக்கணம்தான் என்ன என்பதை ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

Read More...
Paperback
Paperback 450

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.

Read More...

Achievements

+15 more
View All