Share this book with your friends

VIDUTHALAI / விடுதலை

Author Name: Anton Balasingham | Format: Paperback | Genre : History & Politics | Other Details

1990களின் முற்பகுதி. தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலம். தமிழர் தேசத்தின் விடுதலைக் குரலாக, போராட்ட வாழ்வின் மெய்யுண்மைகளைத் தரிசிக்கும் கலை, இலக்கியப் படைப்புகளைத் தாங்கிய வண்ணம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது ‘வெளிச்சம்’ ஏடு. விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினாற் பிரசுரிக்கப்பட்டு வந்த இந்தக் கலை இலக்கிய ஏட்டிற்குத் திரு.கருணாகரன் அவர்கள் ஆசிரியராகவும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் நிர்வாக ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர். ‘வெளிச்சம்’ இதழிற் கட்டுரைகளாக எனது படைப்புகள் வெளிவர வேண்டும் என எனது நண்பர் புதுவை வலியுறுத்தி வந்தார். அன்றைய சூழலில் அரசியல் வேலைப் பளுவுடன் எழுதுவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆயினும் புதுவையின் அன்புத் தொல்லைக்கும் அழுத்தத்திற்கும் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆகவே, வெளிச்சத்திற்கு எழுதுவதெனத் தீர்மானித்தேன். ஆயினும் எதை எழுதுவது என்ற பிரச்சினை எழுந்தது. இளைஞர் பரம்பரையை – குறிப்பாக மாணவ சமூகத்தை புதிதாக, புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டும் வகையில் ஏதாவது எழுதுங்கள் என்று பணித்தார் புதுவை. இறுதியாக எழுதினேன். ‘பிரம்மஞானி’ என்ற எனது பழைய புனைபெயரில், ‘வெளிச்சம்’ ஏட்டில் கட்டுரைகளாகவும் தொடர்கட்டுரைகளாகவும் எழுதினேன். அவற்றில் முக்கியமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் திருத்தியமைத்து, செப்பனிட்டு, சிலவற்றை விரிவாக்கம் செய்து இத்தொகுதியில் மறுபிரசுரம் செய்கிறோம். அத்துடன் நான் சமீபத்தில் புதிதாக எழுதிய அரசியற் கட்டுரைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அன்ரன் பாலசிங்கம்

அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், Anton Balasingham; 4 மார்ச் 1938 – 14 திசம்பர் 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமை கொண்ட இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22-23 இல் செனிவாவில் நடைபெற்ற, செனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.

Read More...

Achievements

+15 more
View All