Share this book with your friends

Yaar Intha Nilavu / யார் இந்த நிலவு

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

யார் இந்த நிலவு, எனது  பத்தாவது தொடர்கதை. பிரதிலிபி தளத்தில் தொடராக வந்தது.  ஆசிரியரின் பிற நூல்களைப் போலவே, இதிலும் மூன்று தலைமுறை கதை மாந்தர்களைக் கொண்டது.  இளம் நாயகன் அபிராம், தனது கனவு நாயகியை , ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். அவள் யாரெனத் தேடும் தேடலில் கதை ஆரம்பிக்கிறது. 

அபிராமின், குடும்ப நண்பர், மாமான் , தொழில் கற்றுத்தந்த குரு , பிஸ்னஸ் டய்கூன் கே ஆர் மில் சேர்மன் , கைலாஷ் ராஜன் , பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி, ஆயிரக்கணக்கானோர்க்கு ,வாழ்வளிப்பவர் தன் சொந்த வாழ்க்கையில், திருமணம் துணையின்றி  தனித்து நிற்கிறார். அவரின் முன் கதை என்ன. 

அவரது , மில்லுக்கு கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்வாகி வேலையில் சேர காத்திருக்கும் மராத்திய ராஜகுடும்பத்து வாரிசு  ஆதிரா. அவளைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துகள். அவளை பின் தொடரும் மராத்திய ராஜகுடும்பம்.

குன்னூரில்  வசந்த விலாசம் என்ற பெயரில், கூடி வாழும் மூத்த தலைமுறை பாலநாயகம் மற்றும் அவரது நண்பர்கள். இவர்களைப் பார்த்துக் கொள்ளும் கேர் டேக்கர் பெண்மணி பவானி.

யார் இவர்கள்… மாமன் கைலாஷ் ராஜனின் கடந்த காலம் என்ன , மருமகன் அபிராம் தேடும் அந்த நிலவுப் பெண் யார். மலைமேல் அமர்ந்திருக்கும் மூத்தவர்கள் யார்… கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

கொங்கு தமிழும், அவர்கள் வாழ்வுமுறை, கலாச்சாரம், திருமண முறை வாழ்வியல் ஆகியவற்றைச் சொல்ல வரும் கதை. 

காதல், நேசம், பாசம், நட்பு, குடும்பம் , உறவு,பகை என எல்லாவற்றையும் தன்னில் கொண்டுள்ள கதை. 

Read More...
Paperback
Paperback 660

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தீபா செண்பகம்

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 6நெடுந் தொடர் நாவல்கள், 5நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். 

சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசையும், பிரதிலிபி சூப்பர் ரைட்டர்ஸ்-3 போட்டியில், மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.


  இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Read More...

Achievements

+2 more
View All