Notion Press
Sign in to enhance your reading experience
You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Sign in to enhance your reading experience
Sign in to continue reading.
Join India's Largest Community of Writers & Readers
An Excellent and Dedicated Team with an established presence in the publishing industry.
Vivek SreedharAuthor of Ketchup & Curryஜென் நமது மனம் அதன் எண்ணங்கள் எல்லாமே அடிப்படையில் இரவல் வாங்கப் பட்டவை என்கிறது. சுகமும் துக்கமுமாகத் தோன்றுபவை நமக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்ட அல்லது பாரம்பரியமாக நம் மனம் பழக்கப் படுத்தப் பட்ட மேற்பூச்சுக்களே. தன்னை உணரும் தேடலின்றி புறவயாமான நோக்கில் சுகமும் துக்கமுமாய், பெருமையும் சிறுமையுமாய் அலை பாய்ந்து ஒரு ஊடாடும் வெறுமையைச் சுமக்கிறது மானுடம்.
காலம் காலமாக ஜென் இந்த வெறுமையை எப்படி எதிர் கொண்டது என்பதை ஜென் மரபுச் சிந்தனையாளரின் கவிதைகள் சுட்டுகின்றன. ஜென் வழி ஆன்மீகத் தேடலை புரிந்து கொள்ள ஜென் கவிதைகள் நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியுடன் வழிகோலுகின்றன. கால வரிசைப்படி இக்கவிதைகளையும் ஜென் கவிஞர்களையும் இக்கட்டுரைத் தொடரின் வாயிலாகத் தரிசிப்போம்.
சத்யானந்தன்
சத்யானந்தன்
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு, தீராநதி, காலச்சுவடு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத் தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி). இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணை இணைய இதழில் பிரசுரங்கண்டன. நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இரு கரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருகிறார்.
நூல்கள்
சிறுகதைத் தொகுதி:
தாடங்கம் (காலச்சுவடு)
தோல் பை (கிழக்கு பதிப்பகம்)
நாவல்கள்:
விக்கிரகம் (கிழக்கு பதிப்பகம்)
முள்வெளி (கிழக்கு பதிப்பகம்)
போதிமரம் (கிழக்கு பதிப்பகம்)
புது பஸ்டாண்ட் (ஜீரோ டிகிரி பப்ளிஷிங்)
கவிதைத் தொகுதிகள்:
கைப்பைக்குள் கமண்டலம் (எமரால்ட்)
குதிரை ஏறும் காதல் (எமரால்ட்)
ஆய்வு நூல்
ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி –Notion Press
sathyanandhan.mail@gmail.com
sathyanandhan.tamil@gmail.com
The items in your Cart will be deleted, click ok to proceed.