விழிகளுக்குப் புலப்படுகிற படைப்புகளும் காலநடப்புகளும் கவிதைகளுக்குக் கருப்பொருளாகிறது. எண்ணவோட்டங்களை எடுத்தியம்பிட வரிகளுக்குள்ளே பனிப்போர் நடத்தி, தெரிவுகண்டு, சொற்களின் வலிமையால் பொருந்தி வசப்படுத்துகிறது கவிதை.
கவிஞர். ஆ.கார்த்திகைநாதனின் கவிதைகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஆலோலம் பாடும் அலைகளைக் கடந்து, உலகத்தமிழர்களோடு உறவுப்பாலம் அமைக்கிறது. விடலைப்பருவத்தில் வெளிப்படும் காதல் உணர்வுகளை சில்லு சில்லாகப்பெயர்த்தும், தன்னகத்தே ஊருடுருவிய நினைவுகளைத் தண்டமிழ் சொற்களால் தடம்பார்த்தும், இயற்கையை ஆராதித்தும், செயற்கையை நீவியும், இயல்பை இனங்கண்டும், வாழ்வைப் போற்றியும், நல்வழிக்கு நடைப்பந்தல் அமைத்தும் மனதோடு படியும் அகப்பார்வையால் நம்மைத் தழுவிச்செல்கிறது இந்த ‘அந்திக்காற்றின் ஈரம்’.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners