சரியான பாதை எதுவென தெரியாத நிலையில் நாம் இருக்கும் போது, வரலாற்றுச் சம்பவங்கள் நமக்கான பாதைகளை சாட்சிகளாக நமக்கு காட்டுகின்றன. இத்தகைய வரலாறுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் நமக்களித்த வரலாற்று அறிஞர்கள் மூலமாய் அதிக தியாகத்தோடும் அர்ப்பணிப்போடும் அடுத்த தலைமுறைக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், பொக்கிஷமாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வரிய செல்வத்தை நமக்கு மட்டுமல்லாமல், நம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வது நம் மேல் விழுந்த தலையாய கடமையாகும். அந்த அளப்பரிய பணியை செய்ய அர்ப்பணிக்கப்பட்ட இயக்கங்களுள் கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கமும் ஒன்று.
இந்நூலை ஆக்கியோன் இறையியல் ஊழியரான திரு சுஜித் அவர்கள் பெத்தேல் இறையியல் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு இறையியல் (B.D) படிப்பையும் பயின்றுள்ளார். தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் உபதேசியாகவும் ஊழியம் செய்து வருகின்றார். திருச்சபை வரலாற்றுப் பணிகளிலும், கள ஆய்வுப் பணிகளிலும், வரலாற்றுச் சங்க மாத இதழிலும் கட்டுரைகளை எழுதி வருகின்றார். இந்நூல் அவர் எழுதிய இந்த நூல் “கிறிஸ்துவ அரசியல்” நூலை படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அரசியலில் தங்களின் பங்களிப்பை பற்றியும், இயேசு கிறிஸ்து, ஆதி திருச்சபையின் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றியும், நீதி, நேர்மை பற்றிய கிறிஸ்தவ எண்ணங்களையும் பிரதிபலிக்கின்றது.