Share this book with your friends

Clarinda / கிளாரிந்தா திருநெல்வேலி திருச்சபையின் தாய்

Author Name: Prof. Rev. D. A. Christadoss B. A. , L. T. , B. D. , M. Th. | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

பல தலைமுறைகளாகக் கிறிஸ்தவர்களாயிருக்கும் குடும்பங்களில் பிறந்து, கிறிஸ்தவ அறிவிலும் அனுபவத்திலும் வளர்க்கப்பட்ட போதிலும், “அநேகரை நீதிக்குட்படுத்தி நட்சத்திரங்களைப் போல் பிரகாசிக்கிற’’ கிறிஸ்தவர்கள் எத்தனை சொற்பப் பேர்! அப்படியிருக்க, பிராமணப் புரோகிதக் குடும்பத்தில் பிறந்து, சகல சம்பத்தும் செல்வாக்குமுடையவளாய் வாழ்ந்து, பின் சகலத்தையும் இழந்து, குலத்தாரின் இகழ்ச்சிக்குள்ளாகி, உலகத்தாரின் தூற்றுதல்களுக்காளாகித் துயருற்ற நாளில், தானறிந்து ஆறுதல் பெற்ற ஒரு அந்நிய தெய்வ நம்பிக்கையின் சுவிசேஷகியாக வேற்று மனிதர் வாழும் நாட்டில் அதைப் போதித்து, அனைத்துலகும் அதிசயிக்கும் வண்ணம் வளர்ந்து பெருகும் ஒரு மாபெரும் கிறிஸ்தவத் திருச்சபையின் தாய் என்னும் கிருபையின் ஆசீர்வாதத்திற்கு ஒரு பெண், அதிலும் ஒரு கைம்பெண், உரியவளாயின், ஆஹா, என்னே எம் பெருமான் இயேசுநாதரின் இணையற்ற இரக்கம்! அடுப்பினடியில் கிடந்த கோகிலா, வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட சிறகுகளையுடைய வெண்புறாவானாள். வெந்தணலில் வேகவிருந்த வெளியிடையாள், அக்கினியினின்று மீட்கப்பட்ட கொள்ளியாகி ‘எரிந்து பிரகாசிக்கிற விளக்’கானாள். 

முதல் முதலாவது இந்தத் திருநெல்வேலி நாட்டில் அறிமுகப்படுத்தும் இந்திய சுவிசேஷகியாகும் சிலாக்கியம் இவளுக்குக் கிடைத்த திருநெல்வேலியின் முதல் கிறிஸ்தவள், முதல் சுவிசேஷ முதல் சபையை நாட்டினவள், அதின் முதல் அங்கமானவள். சபையை ஆதரித்தவர்களில் முதல்வள், முதல் ஆலயம் கட்டினவள், அதின் முதல் உபதேசியாரை நியமித்தவள், முதல் பள்ளிக்கூடத்தை நிறுவி ஆதரித்து, அதன் முதல் ஆசிரியரை நியமித்தவள், முதல் கிறிஸ்தவ குடும்பத்தை ஆக்கியவள், திருநெல்வேலி திருச்சபையின் தாய். 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

பேராசிரியர் அருள்திரு தே. அ. கிறிஸ்துதாஸ்

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் (1912- 1990) அவர்கள் தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பிறந்து, பாளையங்கோட்டையில் வளர்ந்தவர். பள்ளி ஆசிரியர், வேதாகமக் கல்லூரி பேராசிரியர், முதல்வர், அருட்பணியாளர் மற்றும் எழுத்தாளர் என பல துறைகளிலும் ஜொலித்தவர். திருச்சபையின் வரலாறு மற்றும் திருச்சபையின் வெற்றிக்குக் காரணமான தேவ மனிதர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள இவர் எழுதிய நூல்கள் ஒரு திறவுகோல் என்றால் அது மிகையாகாது. எளிய மற்றும் வட்டார வழக்கு தமிழில் எவரும் புரிந்து கொள்ளும்படி ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை எழுதுவது இறைவன் இவருக்குக் கொடுத்த வரம். அநேக புத்தகங்களை மட்டுமல்ல, அநேக கிறிஸ்தவ தலைவர்களையும் இவர் தன் திருப்பணி மூலமாக உருவாக்கி இருக்கின்றார்.

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் (1912-1990) அவர்கள் இயற்றியுள்ள “திருநெல்வேலி திருச்சபையின் தாய் - கிளாரிந்தா” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நூலை நமக்கு தந்துள்ளதற்காக முதற்கண் பராபரனை போற்றுகின்றோம். பேராசிரியர் எழுதியுள்ள வரலாற்று நூல்களில் இந்த நூல் மிக சிறப்பானதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் நமக்கு சந்தேகம் இல்லை. திருச்சபையின் முதல் வித்தை, மக்களின் மறதிக் குவியலிலிருந்து வெளிக்கொணர்ந்து, அவர்கள் மன அரங்கில் நிலையாக நின்று நிலவுமாறு. அவர் வரலாற்றைத் தமக்கே உரிய வரலாற்று ஆராய்ச்சி ஆதாரங்களுடன் கவிதை நடையில் வரலாற்றை நமக்கு தந்துள்ளார்.

“அநேகரை நீதிக்குட்படுத்தி நட்சத்திரங்களைப் போல் பிரகாசிக்க” இந்நூல் உதவும்.

கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்

Read More...

Achievements

+9 more
View All