திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்சபை தோன்றி சுமார் இரண்டு நூற்றாண்டுகளாகின்றன. இயேசு பெருமாபெருகிக்கொண்டு வருகின்றது. கடவுளுக்கு ஸ்தோத்திரம். திருநெல்வேலி திருச்சபை சரித்திரத்தை அறியவேண்டும் என்ற அவாவும் மக்கள் மனதில் அதிகரித்துக்கொண்டு வரு கிறது. இந்நிலையில், "யார் நமது காரியமாய்ப் போவான்’’, என்ற கேள்விக்கு, "இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்’’, என்று ஏசாயா தீர்க்கன் முன்வந்தது போல், திருநெல்வேலி திருச்சபை சரித்திரத்தை எழுத முன்வந்திருப்பவர், மறை திரு. D. A. கிறிஸ்துதாஸ். அவர் ஒரு திருநெல்வேலி வாசி, திருநெல்வேலி மாவட்டத்திலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, குருத்துவ பணிவிடைக்கு அபிஷேகம் பெற்று, இங்குள்ள வேத சாஸ்திரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி, தற்பொழுது செராம்பூர் பல்கலைக்கழகத்தில் திருச்சபைப் பேராசிரியராகத் தொண்டாற்றுபவர். திருச்சபை சரித்திரத்தைக் கற்பதிலும், கற்பிப்பதிலும் பேரவா கொண்டவர். திருநெல்வேலி திருச்சபை சரித்திரத்தை எழுதுவதற்குரிய அறிவும், ஆற்றலும். அனுபவமும் படைத்தவர். அவர் இயற்றியுள்ள இந்நூலுக்காக நான் முதற்கண் இறைவனைப் போற்றுகின்றேன். பின்பு நெல்லைத் திருமண்டலக் கிறிஸ்தவர்கள் சார்பாக என் நன்றியை நூலாசிரியருக்கும் தெரிவித்துக்கொள்ளுகிறேன். மணலுக்குள் புதைந்து கிடக்கும் மாணிக்கக் கற்களைப் பொறுக்கி எடுத்து அணிகலமாகச் செய்தாற்போல், ஆங்காங்கு சிதறியும், மறைந்தும் கிடந்த சரித்திரங்களைக் கண்டெடுத்து, சிறந்ததொரு ஆபரணமாகச் செய்து கொடுத்திருப்பவர் மறைதிரு கிறிஸ்துதாஸ். அவரால் இயற்றப்பட்டுள்ள இந்நூலே அச்சிறந்த அணிகலமாகும். இதனைப் பலர் பெற்று இதன் மூலமாகப் பயனடைவார்களென்பது எனது நம்பிக்கை.