பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய திருச்சபை சீர்திருத்தக் கொள்கைகள் இன்றும் மனித இனத்துக்கு வேண்டியவைகளே. சீர்திருத்த சிந்தனைக்கும் செயலாற்றலுக்கும் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான, தீர்க்கதரிசன ஆற்றல் அமைக்துள்ளன. இந்த ஆற்றலைப் பயன்படுத்தி புதியஆவிக்குரிய சீர்திருத்தம் ஏற்படக்கூடும். சீர்திருத்தம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமல்ல, திருச்சபைக்கும் சமூகத்துக்கும் உதவக்கூடிய புது முறைகளில் அது: தோன்றலாம். திருச்சபை சீர்திருத்தத்தின் வரலாற்றினையும் சிறப்புக்களையும் அருள்திரு R V ஸ்டீபன் சாமுவேல் வேதகாயகம், DD ஐயரவர்கள் இந்நூலில் அழகுற அமைத்துத் தந்துள்ளார்கள். அவர்களுக்கு எம் ஈன்றி, திருச்சபை சீர்திருத்தத்துக்கு உதவும் என்ற நம்பிக்கையுடன், இந்நூலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்,