இந்த மொழிபெயர்ப்பானது சமஸ்கிருத மூலம், அவற்றைத் தமிழில் உச்சரிக்கும் ஒலிபெயர்ப்பு வடிவம், தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ் இலக்கியங்களின் ஒப்புமைப் பகுதி, ஆங்கில மொழிபெயர்ப்பு என்ற முறையில் அமைந்திருக்கிறது. இது ஒரு முழுமையான மொழிபெயர்ப்பு என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக இருக்கும். அதைப்போலவே தமிழ் இலக்கியங்களில் இருந்து ஒப்புமைப் பகுதியைக் காட்டியிருப்பது மிக முக்கியமானது. ஒப்பிலக்கிய ஆய்வுப்பார்வையை வளர்ப்பதற்கும் தமிழ் – சமஸ்கிருத பொதுப்பண்புகளை இலக்கியம்வழி அறிவதற்குமான நல்வாய்ப்பாக இது அமைகிறது. தமிழ்-சமஸ்கிருத ஒப்பாய்வை உணர்ச்சிக்கு இடந்தராமல், தரவுகளினூடாக ஆக்கபூர்வமான வழியில் அணுகும் பார்வைக்கு இந்த நூல் உதவியாக இருக்கும். அந்த வகையில் முனைவர். நண்பர் பத்ரி அவர்களின் இம்மொழிபெயர்ப்புப் பணி தமிழுக்கு வளம்சேர்ப்பதாக அமையும். இன்னும் நிறைய இதுபோன்ற பல இலக்கிய, மெய்யியல் நூல்களை மொழிபெயர்த்துத் தமிழ் - சமஸ்கிருத கலை, அறிவுமரபுசார் இயங்கியல் உறவுகளை வெளிப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கிறேன்