625 Views

Ilangu Nool Seya Valar

Arts, Photography & Design | 15 Chapters

Author: Krishna Nagarathinam

625 Views

These are essays written on Dr. K. Panjangam's collections of literary criticism, recognised both in the critical and linguistic circles of the world of Tamil literature.

சமர்ப்பணம்

முனைவர் க. பஞ்சாங்கத்திற்கு.....

Contents

முன்னுரை

1. திறனாய்வும் திறனாய்வாளரும்

2. பெண்ணியல் கோட்பாடுகள்

3. பெண்-மொழி-புனைவு

4. பெண்ணெனும் படைப்பு: சில மானுடவியல் குறிப்புகள்

5. எடுத்துரைப்பியல்

6. கதைமாந்தர்கள்

7. நோக்குநிலை

8. எடுத்துரைப்பின் படிநிலைகள்

9. முனைவர் க.பஞ்சுவின் தலித் இலக்கிய பார்வை

10. 'புரியவில்லை' என்ற பிரச்சினை பற்றி

11. பேச்சும், பனுவல் வாசித்தலும்

12. கதை மனிதர்கள் : க. பஞ்சு வின் ‘அக்கா’ நாவலை முன்வைத்து

நாகரத்தினம் கிருஷ்ணாவின் பிறநூல்கள்

முன்னுரை

க.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் கட்டமைந்ததல்ல, ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி' நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த வியத்தலும் பாராட்டுதலும்' என்ந்தொரு தீப்பொறி அதற்குப் பொறுப்பு. பேராசிரிய ஆடம்பரங்களைக் களைந்து மொழிமீது உண்மையானக் காதலின்பாற்பட்ட அவருடைய சிந்தனை, படைப்பிலக்கியத்தை நடுநிலை பிறழாமல் மதிப்பிடும் நேர்மை; நியாயமென உணர்ந்தவற்றை அஞ்சாமல் தெரிவிக்கும் துணிவு போன்றவை அத்தீப்பொறியை செந்தழலாக மாற்றின. அம்மனிதரோடு ஒப்பிடுகையில் எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சிதானந்தன், தமிழவன் ஆகியோரை நான் கவனத்திற்கொண்டது, அவர்கள் எனது நூல்களை வாசித்து பாராட்டிய பின்னரே. பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர்கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை. மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தான். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் சிபாரிசு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கால் பல நேரங்களில் நல்ல நூல்களை இழக்கிறேன். படைப்பாளிக்கு இதனால் எவ்வித நட்டமுமில்லை, வாசகராகிய நமக்கே நட்டமெல்லாம். பலனாக பல நேரங்களில் கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.

காலத்தின் சகாயத்தினால், க.பஞ்சாங்கத்தின் நூல்கள் சிலவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அந்நூல்களைப் பற்றி எழுதுவது அவசியமாகிறது. தமிழ், மொழி, இனம், தமிழ் தேசியமென்று, உண்மையில் அக்கறைகொண்டு இயங்குகிற நெஞ்சங்களுக்காக இந்த அவசியம், அத்தியாவசியமாகிறது. ஆரவாரமின்றி மொழிக்கு உழைத்துக்கொண்டிருக்கிற க. பஞ்சாங்கம் போன்றவர்களால்தான் தமிழ் ஜீவித்துகொண்டிருக்கிறது என நம்புகிறேன். தமிழுக்குப் பருவ மழைபோல துணைநிற்கிற பஞ்சாங்கம் போன்ற மனிதர்கள் அங்கொருவர் இங்கொருவர் என இருக்கவே செய்கிறார்கள். அந்த ஒருவர் நீங்களாகக்கூட இருக்கலாம். உங்கள் அறிமுகம் எனக்கு வாய்க்காமல் போயிருக்கலாம், உங்கள் உழைப்பு எனக்கு தெரியாமலிருக்கலாம். ஆக க.பஞ்சாங்கத்தை எழுதுவதென்பது உங்களை எழுதுவதைப்போல.

என்னைப்பற்றிய தெளிவையும் நண்பர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும். எனக்கு படைப்பிலக்கியம் வரும், நவீன உலகின் போக்குகளை முன் வைத்து காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் திறனுமுண்டு, எனவேதான் சாமர்த்தியமாக எனக்கு இணக்கமான நவீன இலக்கியம் சார்ந்த பேராசிரியரின் திறனாய்வினை இங்கே பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டேன்.

க. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வந்துள்ளன. இரண்டுமே காவ்யா வெளியீடு, நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இரண்டாயிரம் பக்கங்கள். தொன்ம இலக்கியங்கள், நவீன இலக்கியங்களென மரபு நவீனம் இரண்டையும் திறனாய்வு செய்திருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களில் படைப்பிலக்கியத்தை எழுதலாம், திறனாய்வு என்பது வேறு. ஒப்பிட முடியாத உயர்வான பணி. மொழியின் மீது தீராத காதலும், அக்கறையும் அதற்கு மனமுவந்து உடலுழைப்பை தரவல்ல முனைப்பும் வேண்டும். முடிந்த அளவிற்கு திறனாய்வு பொருளுக்கு உதவவல்ல நூல்களை சேகரிக்க வேண்டும், அவற்றைப் புடைத்து தூற்றி பதர்களையும் கற்களையும் அகற்ற வேண்டும். பொறுமையுடன் வாசித்து ‘ஒருபாற் கோடாமை மனத்துடன் ‘ உள்வாங்கியும், உள்வாங்கியவற்றை சீர்தூக்கியும், சீர்தூக்கியவற்றை நடுவு நிலை பிறழாமல், எண்ண ஓட்டத்தை உள்ளது உள்ளவாறே எழுத்தில் வடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், அசாதரண உழைப்பின்றி இது சாத்தியமல்ல. வாசித்து எழுதியதைக் காட்டிலும் விருதுகளைப்பட்டியலிடும் மனிதர்களுக்கிடையில் பேராசிரியர் போன்ற அபூர்வ மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்தத் தமிழ் சஞ்சீவியைக் கொண்டாடினால்தான் இந்த இனத்திற்கு விமோசனமென்று ஒரு சராசரி தமிழனாக நினைக்கிறேன். பஞ்சாங்கத்தை எழுதுவது எனது தமிழை எழுதுவது.

நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற முதற்தொகுப்பு -காவியா வெளியீடு - 68 கட்டுரைகள் இருக்கின்றன. இன்றைய இளம் படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய கையேடு. நவீனத் தமிழிலக்கியத்தின் உட்கூறுகளான புதுக் கவிதைகள், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் போன்ற திணைகளையும், அக்கலை நேர்த்தியை செப்பனிடக்கூடிய கருவிகள் பற்றியும், சு.ரா. தமிழ் ஒளி, இ.பா. சிற்பி, தமிழன்பன், பிரபஞ்சன் போன்ற மூத்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகளும், நவீன இலக்கியத்திற் தாக்கத்தினை ஏற்படுத்திவரும் பிற காரணிகள் பற்றியதுமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பெண்ணிலக்கியம், தலித் இலக்கியம், எடுத்துரைப்பு ஆகியவை எல்லோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டியவை.

-----------------------

Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}

திறனாய்வும் திறனாய்வாளரும்

க.பஞ்சாங்கத்தின் திறனாய்வு கட்டுரைகளின் முதற் தொகுப்பு நவீன இலக்கிய கோட்பாடுகள். இதற்கு அணிந்துரை பாரதி புத்திரன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எப்போதுமே பலநேரங்களில் ‘ஏதோ கேட்டார்கள் எழுதினேன்’ என்பதுபோல சில அணிந்துரைகள் அமைந்துவிடும். இந்நூலுக்கான அணிந்துரை அவ்வாறு எழுதப்பட்டதல்ல. எழுதியிருப்பவர், உள்ளத்தால் க. பஞ்சாங்கத்தோடு அண்மித்தவராக இருக்கவேண்டும், எனினும் மருந்துக்கும் துதிபாடல்களில்லை. நூலாசிரியருக்கும் நூலுக்கும் எது பொருந்திவருமோ அதனைக் கூடுதல் குறைவின்றி சொல்லி யிருக்கிறார்.

"மனித நேயம் மிக்கதோர் இலக்கிய திறனாய்வாளனின் சமூகத் தொண்டாக, வாழ்வின் உண்மை நோக்கிய தேடுதலாக அவர் தம் பணிகளை - படைப்புகளை உணர முடியும்" என ஓரிடத்தில் பாரதிபுத்திரன் குறிப்பிடுகிறார். இலக்கிய நண்பர்களால் ‘பஞ்சு’ என அழைக்கப்படும் க. பஞ்சாங்கத்தின் உழைப்பை இதனினும் பார்க்க வேறு சொற்களால் செரிவுடனும், பெருவெடிப்பு பிரகாசத்துடனும் சொல்ல இயலாது. இவாக்கியத்தை வாசித்தபோது பஞ்சாங்கம் குறித்த எனது முடிவில் தவறில்லை என்பதை உணர்ந்தேன். இத்தொடரை எழுத உந்து கோலாக இருந்த சக்திமிக்க சொற்கள் அவை.

கலை இலக்கியம் இரண்டுமே எங்கிருந்து வருகின்றன என்பதைப் போலவே எவரிடம் போய்ச்சேருகின்றன என்பதன் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்ந்ததொரு சிற்பியின் கைவண்னத்தில் உருவாகும் சிலையில் அழகும், கலை நேர்த்தியும், உணர்வின் வெளிப்பாடும், உரையாடும் மொழியும், அதன் பின்னல்களும்,வளைவுகளூம்,நெளிவு சுளிவுகளும், நேர்க்கோடுகளும் ஏற்ற இறக்கங்களும், தவழலும், நடையும், ஓட்டமும், மழலைப்பேச்சும், ஊடலும் சிணுங்கலும் இன்னமும் இதுபோன்ற படைப்பிலுள்ள எண்ணற்ற கூறுகளும், அணுக்களும், இதயத்தில் இறங்கவும் உடல் சிலிர்க்கவும் ஒருவன் தேவை. நீரில் மிதக்கும் நிலவை உள்ளங்கையில் ஏந்தி உதிரத்தில் வெதுவெதுப்பை உணர்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அவன் வாசகன் மட்டுமல்ல வாசகனுக்கும் மேலானவன், படைத்தவனைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தவன் - ஒரு தேர்ந்த திறனாய்வாளன். ஒரு நல்ல தலைவிக்கு உரிய தலைவன் அமைவதுபோல அது நிகழவேண்டும். அது நிகழாதவரை அந்த நூல் தனது பிறவிப்பயனை எட்டியதாகச் சொல்வதற்கில்லை. தமிழிலக்கியக் கொப்பில் முகிழ்த்து இதழ்பரப்பிய அனேக மலர்களை முகர்ந்து முகர்ந்து அதன் நறுமணத்தையும் துர்க்கந்தத்தையும் இனம் பிரிக்க அளப்பரிய ஞானமும், பழுத்த அனுபவும் வேண்டும்.

Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}
Like what you read?
{{global.chaps[8].like_count}} {{global.chaps[8].like_text}}
Like what you read?
{{global.chaps[9].like_count}} {{global.chaps[9].like_text}}
Like what you read?
{{global.chaps[10].like_count}} {{global.chaps[10].like_text}}
Like what you read?
{{global.chaps[11].like_count}} {{global.chaps[11].like_text}}
Like what you read?
{{global.chaps[12].like_count}} {{global.chaps[12].like_text}}
Like what you read?
{{global.chaps[13].like_count}} {{global.chaps[13].like_text}}
Like what you read?
{{global.chaps[14].like_count}} {{global.chaps[14].like_text}}
Like what you read?
{{global.chaps[15].like_count}} {{global.chaps[15].like_text}}

{{user_data.book_status}}

Arts, Photography & Design | 15 Chapters

Author: Krishna Nagarathinam

Support the author, spread word about the book to continue reading for free.

Ilangu nool seya valar

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}