இறைவன் போட்ட முடுச்சு.

காதல்
5 out of 5 (1 )

இறைவன் போட்ட முடிச்சு '

»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»

அந்த எட்டாம் நம்பர் வீட்டில் ஏகப்பட்டக் கூட்டம்?

என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே நடந்துக் கொண்டு இருந்தாள் அவள் கதிஜா.

போன மாசம் கூட இதே மாதிரி இதே வெள்ளிக்கிழமை, இதே தேதியில் இப்படியே கூட்டம் கூடி இருந்தது.

மணிக்கட்டைப் பார்த்தாள். மணி மூன்னு.

போய் அங்கேயே பார்த்து விடலாமா என்று கூட அவள் மனதில் தோன்றியது.

வேண்டாம் எதுக்கு வம்பு என்றும் நினைத்தாள்.

பஸ் ஸ்டாண்ட் வந்தது. வந்து நின்றதும் அதில் ஏறி இரண்டாவது ஜன்னல் ஓர சீட்டு காலியாக இருந்தது அதில் அமர்ந்தாள் கதிஜா.

ஆனால் அவள் மனசு மட்டும் அந்த கூட்டத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தது.

எதற்கு அப்படி ஏகப்பட்ட ஆட்கள் சேர்ந்து இருப்பாங்க.?

பஸ் நகர ஆரம்பித்தது அப்போ இரண்டு முஸ்லீம் பெண்கள் புருக்காப் போட்டப்படி வண்டியை நிறுத்த அவர்கள் ஒருவர் பின் ஒருவர் ஏறி காயத்திரி சீட்டுக்கு பின்னால் இருந்த மூன்று பேர் உட்கார்ந்து வரும் சீட்டில் ஒரு ஆண் இருக்க அவனை பின் சீட்டில் உட்கார சொல்லி விட்டு உட்கார்ந்து விட்டார்கள்.

கன்ராக்ட்டர் இடம் இரண்டு டிக்கெட் தாம்பரம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கினார்கள்.

கதிஜாவும் ஒரு டிக்கெட் வாங்கினாள்.

பஸ் கொஞ்ச தூரம் போய் இருக்கும் இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.

அந்த முஸ்லீம் பெண்களில் கொஞ்சம் மூத்தவர் அந்த அம்மா முகத்தை பார்த்தா போட்டு மூடி இருந்ததாள்

கோஷ சரியாக முகம் தெரியவில்லை..

இரண்டு பேரும் அப்படி தான் அவங்க கண்கள் மட்டுமே தெரிந்தது.

கொஞ்சம் தூரம் போய் முகத்தில் உள்ள துணி விளக்கி பஸ்சில் யார் பார்க்கப் போறாங்கள் என்று

கொஞ்சம் முக்காடு விளக்கி

மூஞ்சி காட்டினார்கள்.

ரபியா அந்த புள்ளையாண்டான் வெளி நாட்டில் போய் எலக்டீசியன் வேலை பார்த்து வந்து இருக்கிறான். நல்லப் பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நல்லா கை நிறைய சம்பாதிச்சு பணம் அனுப்பி வைக்க அவன் அப்பா ஜூபேர் பாய் அந்த இடம் வாங்கி வீடு கட்டி இருக்கிறான்.

பங்களா மாதிரி பெரிய வீடு தோட்டம் வேறு.

அது தான் போன மாசம் இதே வெள்ளிக்கிழமை கிராகபிரவேசம்.

அதுக்கு அன்புடன்

அந்த பையன் ரஷீத் அவனால் வர முடியல.

இப்போ ஒரு வாரத்துக்கு முன்னாடி இந்தியா வரேன் என்று வீடியோ கால் பண்ணி பேசி இருக்கிறான்.

எல்லோருக்கும் அவன் வருவான் என்று எதிர்பாத்துக்கொண்டு இருந்த சமயம்.

இரவு குவைத்தில் இருந்து அவன் வேலை செஞ்ச முதலாளி போன் பண்ணி ரஷீத் இறந்து விட்டான் என்று சொல்லி இருக்கிறார்.

எப்படின்னு கேட்டா கார் ஆசிடென்ட் என்று சொல்லி இருக்கிறார்.

பாவம் ஜூபேர் பாய்க்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.

பையன் ரஷீத்

பொண்ணு மும்தாஜ்

பொண்ணுக்கு கலிமுல்லா பையன் சம்சுதீன் கலியாணதுக்கும்பொண்ணு ரஷீத்க்கும் நிச்சயம் செய்து இருக்கிறார்கள்.

பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிற மாதிரி பேச்சு.

அடுத்த மாசம் கலியாணம் வச்சி இருக்காங்க.

பொண்ணு முடிஞ்ச கையோடு பையனுக்கும் அடுத்த முகூர்த்தத்தில் அந்த வீட்ல மும்தாஜூக்கும் ரஷீத்க்கும்

கலியாணம் முடிவு செய்து இருக்கிறார்கள்.

கலியாண வேலை இரண்டு வீட்டாரும் சேர்ந்து சந்தோசமா செய்து வந்து இருக்காங்க.

இப்போ இப்படி ஆகி விட்டது.

அவங்க பொண்ணு வாழ்க்கை?

இந்த பொண்ணு வாழ்க்கை?

யா அல்லாஹ்......

நம்ம கையில் ஒன்னும் இல்ல. எல்லாம் அவன் கையில் இருக்கு.

இதோ பாரு ரபியா பாடி பிளைட்டில் கம்பெனி செலவில் நாளைக்கு வருதாம்.

இப்படி ஆகிவிட்டது.

வீடு கட்டின நேரம் சரி இல்லையா.....!?

இல்லை

கலியாணம் செய்ய பொண்ணு நிச்சயம் செய்த நேரம், சரி இல்லையா?

இன்னொரு விஷயம் கேள்வி பட்டேன் அந்தப் பொண்ணுக்கு செய்வாய் தோஷமாம்.

இப்படி ஏதேதோ பேசிக்கிறாங்க.

நம்ம ஷரியத்தில். ஹதீசில் அப்படி எதுவும் பார்ப்பதில்லை. ஆனால் இப்போ உலகமே தலை கீழாய் மாறிப் போச்சி.

இப்போ வாஸ்து, பெயர் பொருத்தம், ராசி பலன், நாள் நட்சத்திரம் ராகுகாலம், ஏமகண்டாம். அம்மாவாசை, பௌர்ணமி, அரமொட்டு, ராகு, கேது, சனி, சுக்கிரன், திசை, பஞ்சாங்கம், ஜாதகம், எல்லாம் இந்துக்கள் பார்க்கறாங்களோ இல்லையோ!

முஸ்லீம்கள் தான் அதிகமா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

பத்துப் பொருத்தம், பெயர் பொருத்தம் பார்த்து தான் கலியாணம் முடிவு பன்றாங்க.

அடச்....சை...

நேரம் காலம் எல்லாம் நம்ம முடிவு பண்றது இல்லை.

அந்த அல்லாஹ்....தான் முடிவு பண்ணுறான்.

வண்டி போய்க்கொண்டு இருந்தது.

கதிஜா எல்லாம் கேட்டு உள்ளம் நொந்து போனாள்.

ஒரே வீதியில் இருந்தும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்துக் கொள்ளாமலே இருப்பது எவ்வளவு பெரிய அவமானம்.

எங்கேயோ இருந்து வந்து துக்கம் விசாரித்து போறாங்க.

ஆனால்

ஒரே வீதியில் இருந்துக் கொண்டு அக்கம் பக்கம் கூட தெரிந்துக் கொள்ளாமல் இருப்பது எவ்வளவு வேதனை?

எல்லோரும் மனிதர்கள் தானே!

ஒருவருக்கு ஒருவர் அனுசரணையா, நட்பா, ஒட்டா, உறவா இருக்கிறாங்க.

தூரத்து தண்ணி தாகத்துக்கு எட்டாது.

அக்கம் பக்கம் அண்ணன் தம்பியா...மாமன்...மச்சான்னு எப்படி உறவு கொண்டாடிக் கொண்டு.

ஒருவருக்கு ஒருவர் நல்லது கெட்டதில் ஒண்ணா நின்னு பாது காப்பா உதவியா இருக்காங்க.

ஆனால் இந்த வீதியில் இப்படி பக்கத்து வீட்டில் எது நடந்தாலும் அடுத்த வீட்டுக்கு தெரியாமல், பார்த்தும் பார்க்காமல், கேட்டும் கேளாமல் இருப்பது எவ்வளவு பெரிய வேதனை.

ச்சி...

ஜாதியாவது, மதமாவது, ஏழையாவது, பணக்காரனாவது.

மண்ணு, காற்று, மலை காடு வானம் பூமி

சூரியன் சந்திரன் இயற்கை பாகு பாடு, பார்க்கிறதா?

செத்தவனுக்கு பூமி எந்த வேறுபாடு காட்டுது.?

இல்லை கட்டை எரிக்கும் போது நெருப்பு பாகு பாடு காட்டுத்தா?

பஞ்ச பூதங்கள் எல்லாம் பொதுவாக தானே இருக்குது.

ஆனால் இந்த மனிதனுக்கு ஏன் இப்படி ஒரு கேடு கெட்ட பாகு பாடு.?

ஆண்டவன் படைக்கும் போது எல்லோருக்கும் சமமாக தான் படைத்தான்.

ஆனால் மனிதன் மாறி விட்டான். மதத்தில் ஏறி விட்டான்.

உண்மை தான்.

இதெல்லாம் பார்த்து தான் இயற்கை கூட வேதனை தாலாமல் சீற்றம் கொண்டு மலைகள் வெடிக்கிறது.

கடல் கொந்தளித்து சுனாமியாக மாறுகிறது.

இயற்கை ஒருபுறம் இருக்க மனிதனை மனிதனே வெட்டி சாய்த்துக் கொண்டு மடிகிறான்.

புது புது நோய்கள்.

யாரும் கண்டு பிடிக்க முடியாத நோய்கள்

தொற்று நோய்கள்.

கொரோனா.

உலகமே அழிந்து போகும் என்பதுக்கு இது அடையாளம்.

இப்போ ரஷ்யா. உக்றைன் போர்.

எங்கே தான் போய் முடிகிறதோ.!

வந்தவாசி வந்ததும் அந்த இரண்டு முஸ்லீம் பெண்களும் இறங்கி விட்டார்கள்.

தாம்பரம் வந்ததும் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவளின் கனமான இதயத்தில் ஈரம் கசிய

கண்கள் அந்த முஸ்லீம் பையனுக்காக

அழுதது கதிஜாவின் இதயம்.

அவள் தோழி பாத்திமா வின் கணவன் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருப்பதால் பார்த்து விட்டு உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து விட வேண்டும் போய்க்கொண்டு இருந்தாள் அவள்.

பழைய நினைவுகள் ஓடிக்கொண்டு இருந்தது.அவன் மனம் தத்தளி த்துக்கொண்டு இருந்தது.

சுகமறியா உயரணுக்கள் துடித்தன, தன் நிலையை.. அப்பா, அம்மா இழப்புக்குப்பின் ஆழ்ந்த துக்கத்தில் நிலைகுலைந்து போய் விட்டாள் சுமதி

அனாதையானது போல் ஒரு உணர்வு. அவளைச் சுற்றி சூனியம் நிறைந்த உலகமே கண்ணில் பட்டது.

காலம் எப்படியோ நாகர்ந்தது. சிசுமதியின் அப்பா, அம்மா, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது காலம் கணக்கெடுத்துப் பார்த்ததாக தெரியவில்லை.

அவர்கள் எவ்வளவு செல்வாக்குடன் வாழ்ந்தார்கள் என்பது பட்டி தொட்டி எல்லாமே அறியும். ஆலாமரம் போல் தழைத்து இருந்த குடும்பம். சொந்தங்களும், உறவுகளும் மட்டுமல்ல எல்லா பொது மக்கள். பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் என எல்லோருக்கும் கதிஜா அம்மா அப்பா இழப்பு பெரும் சோகத்தை தந்தது..

வாரம். பத்து நாட்கள் அந்த சுற்று வட்டாரமே துக்கம் அனுசரித்தது.

வீதி எங்கும் வெறிச்சோடி காணப்பட்டது.

கதிஜா ஹாஸ்பிடலில் சேர்த்து பத்து நாட்கள் இருந்தாள்.

மருத்துவ மனையில் .பெண் குழந்தை பிறந்து சிகிச்சை முடிந்து வீட்டு வந்தாள்.

அவளை கை தாங்களாக பிடித்து கொண்டு வந்து ஹாலில் உட்கார வைத்தனர்.

அவர்கள் எல்லோருக்கும் பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை

கதிஜாவின் நிலைக்கண்டு உருகதாவர்கள் யாருமே இருக்க முடியாது.

கதிஜாவின் கோலத்துக்காக எல்லோர் நெஞ்சிலும் சோகத்தை சுமக்க வைத்தது.

ரொம்ப பலவீனம் ஆகி விட்டாள்

அவளையும் குழந்தையையும் கவனிக்க அவளுக்கு நாதி இல்லை

மாமியாரும் சரி மாமனாரும் சரி அவளை ஏன் என்று கேட்க வில்லை

மன இறுக்கத்தை குறைத்துக் கொள்ள அவள் நெஞ்சம் கொஞ்சம் பழைய நினைவுக்கு பின்னோக்கிப் போனாள்

அன்று ஒரு நாள்.....அவள் வேறு வழி இல்லாமல் அவளுக்கு அவங்க அப்பா அம்மா போட்ட நகைகள் ஒவ்வொன்றாய் விற்று குழந்தை ஹாஸ்பிடல் செலவு செய்தாள்

எப்படியோ பதினாங்கு வருடங்கள் ஓடி விட்டது. இப்போது குழந்தை கௌசர் ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.. வயதுக்கு வந்து கூட மூன்று வருடங்கள் ஆகி விட்டது

அன்று கதிஜா இருந்த நிலையை இன்னும் மறக்க வில்லை.

பாவம் ஏழைகுடும்பங்கள் வயிற்றுக்காக எவ்வளவு கஷ்டப் பட வேண்டியது இருக்கிறது.

அன்றும் சரி இன்றும் சரி

ஓடி ஆடி வேலை செய்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

ஹாஸ்பிடல் போய் பார்த்து விட்டு கௌசர் ஸ்கூல் விடுவதற்கு பத்து நிமிடம் முன்பாகவே வந்து சேர்ந்தாள்.

எப்படியோ போய் வந்து விட்டாள் எங்கும் ஒரு நிமிடம் கூட வெஸ்ட் செய்ய வில்லை.

கதிஜா வீட்டுக்கு வந்து சேரவும் கௌசர் வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. கதிஜா எங்குமே சாப்பிட வில்லை. பசி வயிற்றை கிள்ளியது . அந்த நேரம் பார்த்து வீட்டு வாசலில் கூட்டம் கூடி பேசிக்கொண்டு இருந்தனர்.

பக்கத்து வீட்டு சம்சாத் எதிர் வீட்டுக்கு பத்மநாபன் அய்யர் பையனோடு ஓடிப் போய் கலியாணம் செய்துக் கொண்டுஆட்டோவில் திரும்பும் போது லாரியில் ஆட்டோ மோதி அங்கேயே...... உயிர் இருவருக்கும் போய் விட்டதாம்.

யா அல்லாஹ்.......

==============================

தொடரும்

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...