காட்டு தீ

உண்மைக் கதைகள்
5 out of 5 (8 )

காட்டு தீ

காலையில் காமாட்சி பரபப்புடன் வேலை செய்து கொண்டு இருந்தார். மதிய உணவை கட்டி பிரபாகரனுக்கும் மணிக்கும் தனித் தனியாகக் குடுத்து கீழ கொட்டாமல் எல்லாத்தையும் சாப்பிடுங்கள் என்றார் காமாட்சி. பிரபாகர் சாயங்காலம் வரும் போது அம்மாக்கு ஒரு Diapride m1 அட்டை வாங்கிட்டு வா நாளைக்கு மாத்திரை இருக்காது என்றார். வாங்கிட்டு வரேன் அம்மா என்று கிளம்பினார்கள் பிரபாகரனும் மணியும். தம்பி மணியை அவன் படிக்கும் பள்ளியில் இறக்கிவிட்டு பிரபாகரன் வேலைக்குச் சென்றான். வீட்டில் பிரபாகரன், மணி,காமாட்சி மூன்று பேர் மட்டும். காமாட்சி மருத்துவர்களுகென்றே உருவாக்கப்பட்ட சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோயால் பாதிக்க பட்டு மீதமுள்ள வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாத்திரையால் எண்ணிக் கொண்டிருந்தார்.மணியோ எழுத போகும் பொது தேர்வே முதல் பொது தேர்வு என்ற பயத்தில் எப்பொழுதும் புஸ்தகத்தோடு உலவி கொண்டு இருப்பான். பிரபாகரன் தந்தை மூன்று வருடங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக குடித்ததால் குடல் புண்ணால் அவதிப்பட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்.அவர் கொள்கை என்னவென்றால் போதையாய் இரு அல்லது போதையாய் இருக்க யோசி என்பதால் என்ன வேலையாக இருந்தாலும் செய்வார் போதையோடு போதைக்காகவே. பிரபாகரன் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு CTC Construction என்கிற கம்பெனியில் Site Supervisor வேலை செய்து கொண்டு இருக்கிறான். குடும்ப பொறுப்பு அனைத்தயும் ஏற்றுக்கொண்டு குடும்ப பொறுப்பு என்றால் அவன் மட்டும் தான் வேலைக்கு போகிறான். அவன் மட்டும் தான் நன்கு படித்தவன் அதனால் குடும்பத்தில் வரவு செலவு அவன் மேற்கொள்வதே. சில நேரங்களில் காமாட்சியை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு அவனே சமையல் வேலைகளைச் செய்வான்.காமாட்சி ஒரு நாள் கேட்டால் ஏன்டா பிரபாகரா இதுலாம் ஏன் பண்ணுற நான் கொஞ்சம் இப்போ சுகமா தானடா இருக்கேன் நான் பாத்துக்குறேன் இந்த வேலை எல்லாம் நீ போய் ரெஸ்ட் எடு. இதுவரை எத்தனை பேருக்கு சமைச்சு கொடுத்துருகிங்க உங்களுக்கு இது வரை யாராவது சமைச்சு கொடுத்துருக்காங்களா அம்மா. அந்த பாக்கியம் எனக்கு வர கூடாதா அம்மா. நான் ஒரு பொண்ண இருந்த என்ன நீங்களே சமைக்க சொல்லிருப்பிங்க என்றான் பிரபாகரன். தத்துவமாவே பேசு என்றார் காமாட்சி. சிறிது நேரம் கழித்து காமாட்சிக்கும் மணிக்கும் உணவை அவன் கைகளில் அள்ளி உட்டி விட்டு அம்மாவின் ஆனந்த கண்ணீரை கண்டு ரசித்தான் பிரபாகரன். அவன் செய்யக்கூடிய முக்கியமான வேலைகளை ஒன்று மாதாந்திர பட்ஜெட் போடுவது. அதை சிறப்பாக செயல்படுத்துகிறான். அவன் வாங்கும் சம்பளம் அவன் போடும் பட்ஜெட்டில் தீர்ந்துவிடும். அவனுக்கு நெறைய ஆசைகள் உண்டு. அதில் ஒன்று ஒரு முறையாவது அம்மாவுக்கு தங்க மோதிரம் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான்.ஒவ்வொரு மாதமும் முழு சம்பளம் பெறவேண்டிய நிர்பந்தத்தால் எவ்வளவு சோம்பலாக இருந்தாலும் வேலைக்கு சென்று விடுவான்.ஒவ்வொரு மாத முதல் நாள் அவன் சம்பள நாள் மகிழ்ச்சியான நாள் அவனக்கு. ஒவ்வொரு சம்பள நாளைக்கு ஐந்து நாளைக்கு முன்பே பட்ஜெட் போட்டுவிடுவான்.

மாதாந்திர பட்ஜெட்

பெட்ரோல்-4000

சமையல்-4000

வீட்டு வாடகை-3000

மொபைல் ரீசார்ஜ்-300

அம்மா மருத்துவம்-700

கல்வி கடன்-3000

அவசர தேவை-1000

மொத்தம்=16000

இவ்வாறு எல்லா மாதமும் 25 தேதி வரப்போகும் மாதத்தின் மாதாந்திர பட்ஜெட் தயார் செய்யப்படும். அடுத்த நாள் காலை எப்பொழுது போல சைட்டில் மேற்பார்வையிட்டு கொண்டு இருக்கிறான். அவனுடன் வேலை செய்பவர்கள் அதிகமானோர் குஜராத், சண்டீஸ்கர் பக்க உழைப்பாளிகள். கொஞ்சம் தமிழ் உழைப்பாளிகளும் உள்ளனர்.அன்று மாலை 5 மணி அலுவலக அட்மினிடம் இருந்து அழைப்பு வந்தது மாலை வேலை முடித்ததும் அலுவலகத்துக்கு வர வேண்டும். என்று சொன்னதும் அழைப்பு துண்டிக்கபட்டுவிட்டது. அவனுக்கு என்னவென்றென தெரியாமல் அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ரவி என்கிற நண்பனுக்கு அலைகிறான்.

மறுமுனையில் மிக அமைதியாக சொல்லுங்க பிரபா என்கிறான் ரவி. வெளியா வந்து பேசு மச்சான் என்கிறான் பதட்டதுடன் பிரபாகரன். அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ரவி சொல்லுடா லவடைகோபால் என்று எப்பொழுதும் போல பேசுகிறான். என்ன அட்மின் கால் பண்ணற என்று ரவி கேட்க வேகமாக ஆமா மச்சான் ஆமா மச்சான் என்று வேகமாக பதட்டதுடன் பதில் கூறினான் பிரபாகரன். எனக்கு தெரியல மச்சான் ஆனா இன்னைக்கு 5 மணி ஆகிருச்சு இன்னும் MD போகல நம்ல ஏதாச்சும் ஏத்துறதுக்கா(திட்டுவதற்கு) இருக்கும் நெனைக்குறன் வந்து வாங்கிட்டு போ மச்சான் என்றான் ரவி. இவ்வாறு ரவி சொன்னதும் பிரபாகரன் பயம் அதிகம் ஆகியது அந்த விசயத்தை நினைத்ததுக் கொண்டே இருந்தான். மாலை 6 மணிக்கு வேலை முடித்ததும் சைடில் இருந்து ஆபீஸ்க்கு கிளம்பினான். அவன் உடன் வேலை செய்யும் ஒரு தமிழ் உழைப்பாளி சார் நில்லுங்க சார் என்றான். அருகில் வந்து சார் எந்த பக்கம் சார் போறீங்க என்றான் ஆபீஸ் வர சொல்லிருக்காங்க அங்க தான் அவசரமா போறான் என்றான் பிரபாகரன். சூப்பர் சார் என்ன பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி விட்டுருங்க சார் ப்ளீஸ் என்றான் தமிழ் உழைப்பாளி. சரி ஏறிக்கோ என்றான் பிரபாகரன். நன்றாக அமர்ந்ததும் ரைட் போலாம் சார் என்ற குரல் வந்தது பின் இருக்கையில் இருந்து. மிதித்தான் Rx100 ஐ முன்றாவது மிதியில் உயிர் பெற்றது டூரிங், டூரிங் என்ற பெரும்சப்ததோடு புகையை பரப்பி கொண்டு வீறிட்டு புறப்பட்டான். பேருந்து நிலையத்தில் அந்த தமிழ் தொழிலாளியை இறக்கி விட்டு அவசர அவசரமாய் ஆபீஸ்க்கு சென்றான். அவன் எண்ணமெல்லாம் பயத்துடனும் முகமெல்லாம் வியர்வையோடும் வந்து இறங்கினான். அவன் ஆபீஸ்க்கு வரும் போது நேரம் 6.30 ஆகிவிட்டது. கண்ணாடி கதவை திறந்து உள்ளே நுழைந்ததும் ஏ.சி காற்று பட்டதும் தேகம் சில்லிட்டது. வழிந்தோடிய வியர்வை தடைப்பட்டு போனது. வந்த பிரபாகரனை வந்து வரவேற்றான் ரவி. நீ இன்னும் வீட்டுக்கு போகலையா என்கிறான் பிரபாகரன். என்னையும் வெயிட் பண்ண சொல்லிருக்காங்க அதான் I Am Waiting என்றான் ரவி. பிரபா வந்தது அறிந்ததும் MD அறைக்கு அழைக்கப்பட்டார்கள் இருவரும். MD அறைக்குள் பயத்துடன் நுழைந்தனர். பிரபாகர், ரவி, சுரேஷ்,கார்த்திக், அபி மற்றும் ஸ்ரீ என எல்லாரையும் பெயர் சொல்லி வரவேற்றார் MD. எல்லாரும் MD க்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர சொன்னார் அனைவருக்கும் நன்றி என்று கன்னத்தில் குழி விழும்படி புன்னகையுடன் சொன்னார் MD. அதை கேட்ட அனைவரின் முகத்திலும் எதற்கு இந்த மனிதன் புன்னைகை செய்கிறார் எதற்கு நன்றி கூறுகிறார் என்ற அதிர்ச்சியுடன் கூடிய புன்னகை ஆட்கொண்டது ஆறு பேர் முகத்திலும். ஆறுபேரும் என்ன சார் என்ன என்று அதிர்ச்சியுடன் கேட்டார்கள்.

நாம் CTC Construction தொடங்கி 2 ஆண்டுகள் முடிந்து விட்டது. நீங்கள் ஆறு பேரும் தான் தொடங்கியதில் இருந்து இப்போது வரை கூடவே இருந்து வேலை செஞ்சுட்டு இருக்கீங்க. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சொல்லியே ஆக வேண்டும் அது மட்டும் இல்லாமல் வரும் மாதத்தில் இருந்து 6 மாதத்திற்கு ஒரு முறை 2000 என சம்பள உயர்வு வழங்கப்படும் என்றார் MD. எதிரே அமர்திருந்த அனைவருக்கும் அளப்பரிய ஆனந்தம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு மேலும் சந்தோஷம் அடைந்தனர். ஆறுபேரும் ஒரே நேரத்தில் நன்றி சார் நன்றி சார்….. என்று MD உடன் கைகுலுக்கி விடை பெற்றார்கள். எவ்வளவு நல்ல மனுஷன் நம்ம MD என்று கூறினான் ரவி. ஆமாம் மச்சான் நான் கூட நம்மள ஏத்துறதுதற்கு(திட்டுவதற்கு) தான் வர சொன்னாங்கனு பரபரப்பா வந்தேன் மச்சான் இங்க வந்தா சந்தோச படுத்தி அனுப்புறாங்க என்று பேசிக்கொண்டே ஆபீசிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருகிறார்கள் ரவியும் பிரபாகரனும். ஒரு சந்திப்பில் நான் வரேன் மச்சான் என்று ரவி அவன் வீட்டிற்கு செல்லும் சாலையில் பிரிந்தான். இந்த நாள் ரொம்ப சந்தோஷமான நாள் என்று இந்த சந்தோசமான விஷயத்தை வீட்டிற்கு போய் சொல்லியாக வேண்டும் என்று வேகமா திருவுகிறான் வண்டியை பிரபாகரன். Now I'm the Happiest Man in the world என்று கத்தி கொண்டே வேகமா திருவுகிறான் வண்டியை. வீட்டிற்கு வந்ததும் வண்டியை எப்பொழுதும் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி கொண்டு இருக்கிறான். பிரபாகர் தம்பி இங்க வா என்று ஒரு அழைப்பு வாடகை வீட்டின் உரிமையாளர் பெண். அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைகிறான் சொல்லுங்க ஆண்ட்டி என்று அந்த பெண் சோபாவில் உட்காரு என்கிறாள் வீட்டிற்குள் எங்கிருந்தோ. அவனும் சோபாவில் அமர்கிறான் அவன் எதிரே இருந்த டீபாயில் அன்றைய மாலை மலர் செய்தித்தாளில் தலைப்பு செய்தியை பார்த்தான் உடனே எதற்கு அழைக்கப்பட்டோம் என்பதை அறிந்து கொண்டான். வீட்டின் உள்ளிருந்து இரண்டு பீங்கான் கப்பில் காப்பி கொண்டு வந்தாள் அந்த பெண். ஏன் ஆண்ட்டி இப்போ காப்பி. ஏன் நாங்க காப்பி போடா குடிக்க மாட்டியோ? சரி குடுங்க கோவப்படாதிங்க ஆண்ட்டி. இருவரும் சோபாவில் அமர்ந்து காப்பி குடித்தார்கள். தண்ணி சேர்க்காத பாலில் காப்பிக் கொட்டைத் தூளுடன், சிக்கரித் தூளை 80க்கு 20 என்ற விகிதத்தில் கலந்த காப்பித்தூளும் சரியான அளவு சர்க்கரையுடன் கூடிய காப்பியை உதட்டில் வைத்து ருசித்து சூப்பர் ஆண்ட்டி என்றான். அவள் புன்னகைத்தாள். ஓகே என்ன விஷயம் சொல்லுங்க ஆண்ட்டி என்ன பண்ணும்? என்றான். இல்ல பிரபா எல்லாருக்கும் 4 மாசத்துக்கு முன்னாடியே வீட்டு வாடகை 1000 ரூபாய் இன்கிரிஸ் பண்ணிட்டேன். ஆனா உன் நிலைமை எனக்கு தெரியும். அதான் 4 மாசத்துக்கு அப்புறம் கேக்குறான். வரும் மாதத்தில் இருந்து 4000 கொடுத்துரு என்றால் வீட்டின் உரிமையாளர் பெண். நான் 7,8 மாதம் பிறகுதான் கேட்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் என்று அந்த மாலை மலர் செய்தி தாளை கை எடுத்து கொஞ்சம் முன்பு பிரபாகரன் பார்த்த அதே செய்தியை காட்டி விலைவாசி இப்படி மாசம் மாசம் ஏறிட்ட இருந்தா எப்படி இந்த இவ்ளோ பெரிய இந்தியால உயிர் வாழ முடியும் என்றாள். அதை கேட்ட அதிர்ச்சியில் இவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் இந்த இரண்டு விஷயத்தை கேட்டதும் சுத்தமாக போய்விட்டதென உணர்ந்தான். சரி ஆண்ட்டி நான் போய் வருகிறேன் என்று வீட்டை விட்டு வெளியேறி அவன் வீட்டை நோக்கி அவன் கால்கள் செல்கிறது. அவன் மனதுக்குள் எண்ணங்கள் அனைத்தும் விறகு கட்டையாய் மாறி அவனையே எரித்து கொண்டு இருந்தது. இந்த நெருப்பு போததென்று அவன் எண்ணங்கள் பல பல எண்ணங்கள் மேலும் ஊதி பெரிதாக்கி காட்டு தீயாய் பரவி அவனை எரித்துக் கொண்டிருந்தது.மறுநாள் பொழுது விடிந்தது பல எண்ண ஓட்டங்களுக்கு நடுவே. வழக்கம்போல் வாழ்க்கையின் ஓட்டத்தில் பிரபாகரனின் நாட்கள் ஓடத் துவங்கின….

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...