JUNE 10th - JULY 10th
திடீரென்று கண்ணைப் பறிக்கும் ஒளிவட்டம். அந்த எழுமலையானே நேரில் நின்றார் போல் இருந்தது.
கண்களை கசக்கி பார்த்தான் கபிலன்.சந்தேகமேயில்லை திருப்பதி வெங்காசலபதியே தான்.”எழுமலையானே .. கோவிந்தா…” என்று கூறினான் கபிலன்.
“போதும் போதும்…என்னை தரிசிக்க தினமும் கோடிக்கணக்கான மக்கள் வருகிறார்கள் ஆனால் நீ மட்டும்…..”
“பெருமாளே எனக்கும் வருவதற்கு ஆசை தான்.ஆனால் இந்த வயதில் அந்த கூட்ட நெரிசலில் வந்து உன்னை தரிசிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது.
திருப்பதிக்கு வந்து தங்களைப் பார்க்காவிட்டாலும், தங்களின் திவ்யரூபத்தை, நான் என் மனக் கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் சுவாமி…”
“தெரியும், தெரியும்…. என் மேல் உள்ள உன் பக்தியை நான் அறிவேன்.”
நான் ஒண்ணு கேட்டால், தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?’
“கேள் கபிலா”’
“சிருவயதில் என்னுடைய ஊரில் நானும், தினமும் பெருமாள் கோவிலுக்குச் செல்வேன்.பூக்களைப் பறித்து, கூடை நிறைய அங்கிருக்கும் குருக்களிடம், அர்ச்சனைக்கு கொடுத்துவிட்டு வருவேன். கூட்டமே இருக்காது.ஆரவாரம் அறவே இருக்காது. மனதிற்கு மிகவும் அமைதியாக இருக்கும். மணிக்கணக்கில் அமர்ந்து இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்கலாம். ஜனங்கள் வருவதும், போவதுமாக இருப்பர்; யாருக்கும் எந்தச் சிரமும் இருக்காது.காத்திருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லாமல், இறைவன் காட்சி கிடைத்துக் கொண்டே இருக்கும். பிரத்யேகமாக கட்டணம் என்று எதுவுமே கிடையாது. ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசம் கொஞ்சம் கூட இருக்காது.”
“முடித்து விட்டாயா… நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குப் புரிகிறது. ஏன் மணிக்கணக்கில், நாள் கணக்கில், அடைத்து வைத்து உயிரை எடுக்கின்றனர் என்று தானே கேட்கிறாய்?’
“ஆமாம் பெருமாளே!’
“ஏன் இத்தனைச் சுற்று… ஏன் இத்தனைத் தடைகள்… கடவுளுக்கும், பக்தனுக்கும் ஏன் இந்த நீண்ட இடைவெளி. கையில் எடுத்து நேராக, வாயில் வைப்பதை விட்டுவிட்டு, தலையைச் சுற்றி மூக்குக்குக் கீழே கொண்டு செல்ல வேண்டுமா உணவை…”
“வருபவர் வரட்டும்; வந்து கொண்டே இருக்கட்டும். பார்த்துவிட்டு செல்லட்டும் என்று விடாமல், கூட்டத்தை ஏன் சேர்க்க வேண்டும். பெருங்கூட்டம் பெருங்கூச்சல்.. இதான் பக்தியா பெருமாளே?”
“மொத்தத்தில்… பக்தி என்பது இன்று வியாபாரமாகி விட்டது என்கிறாய்… அப்படித்தானே கபிலா?”
“ஆமாம்… நீங்களே சொல்லி விட்டீர்கள். வியாபாரமாகி விட்டதென்று. தாங்கள் கொஞ்சம் தயவு செய்து, இதில் தலையிட்டு, கருணை கூர்ந்து, இந்த நடைமுறைகளைக் கொஞ்சம் மாற்றக் கூடாதா பெருமானே?’
சிரித்தார் பெருமாள்.
“இதையெல்லாம் மாற்றி விடுங்கள் என்று, நானே போய்ச் சொன்னாலும், இதை மாற்றுவதற்கு, அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வைத்தது தான் இன்றைக்குச் சட்டம். அவர்கள் போட்ட சட்டத்தை, அவர்களே மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்ற போது, நான் என்ன செய்வேன்”
“மன அமைதிக்காகவும், மன நிம்மதிக்காகவும் எங்கெங்கிருந்தோ உங்கள் சன்னிதிக்கு வருகிறோம். உங்களைப் பார்ப்பதற்கு, குறைந்தது ஒரு நிமிட அவகாசமாவது எங்களுக்குத் தரக் கூடாதா…
நாங்கள் நடந்து வரும் போதே, தங்களைக் கண்டால் தான் உண்டு. இந்த நிலை எங்களுக்கு எதற்கு… மனமுருக உன்னை, ஒரு நிமிடமாவது சேவிக்க முடியாதா பெருமானே!’
“புரிகிறது அப்பனே… உன் தவிப்பும், வருத்தமும்…’
“அதற்கில்லை பெருமானே… என் நண்பர் ஒருவருக்கு, திருப்பதி நடைமுறை எதுவுமே தெரியாது. உன்னைத் தொலைவில் பார்த்த போதே, பக்திப் பெருக்கால் தம் கண்களை மூடிக் கொண்டார். கண்ணைத் திறந்த போது, அங்கிருக்கும் குருக்கள், “ஜர்கண்டி… ஜர்கண்டி…’ என்று, அவரை இழுத்து வெளியிலே தள்ளி விட்டிருந்தனர்.
“பாவம் அவர்…கண்மூடி பக்தி செய்வது தவறா… கண்மூடித்தனமான பக்திதானே தவறென்று சொல்வர்?’
“எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது அப்பனே… ஒரு வகையில் பார்த்தால், இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான்… நன்றாக யோசித்துப் பார்…’
“என்ன சொல்கிறீர்கள் சுவாமி!’
“ஆமாம் அப்பனே… எனக்கே இப்போதெல்லாம் ஒரு சந்தேகம் எழுகிறது. நான் மனிதனைப் படைத்தேனா… இல்லை மனிதன் என்னைப் படைத்தானா என்று… பக்தி என்பது இன்று ஆடம்பரமாகி விட்டது;எனக்கே சில நேரங்களில், என் மீதே கோபம் கோபமாக வருகிறது!’
“சரி சுவாமி… இன்னொன்றையும் தாங்கள் எனக்கு விளக்க வேண்டும். எத்தனையோ ஊர்களில், எத்தனையோ கோவில்களில், பெருமாளாகிய நீங்கள் இருக்கும் போது திருப்பதிக்கு மட்டும், திருப்பதி வெங்கடாஜலபதி பெருமானுக்கு மட்டும், அப்படி ஏன் ஒரு சிறப்பு… எங்கிருந்தாலும் கடவுள் ஒன்றுதானே…
மனிதர்களில் தான் பிரிவினை என்று பார்த்தால், இறைவனிடம் கூடவா?
இன்று எத்தனையோ கோவில்களில், அன்றாடம் விளக்கேற்றுவதற்கே எண்ணெய் இல்லாத போது, அங்கு மட்டும் ஏன் இந்த ஆடம்பரம், அமர்க்களம், ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம்…’
“இதற்கு நானெப்படி பதில் சொல்வது அப்பனே… இதற்கு நானா காரணம்; நீங்கள் தானே.. அப்படி ஒரு மாயையை ஏற்படுத்தி, அந்த மாயையில் மக்கள் எல்லாரையும் மயக்கி வைத்திருக்கிறீர்கள்…
“ஒன்று மட்டும் சொல்வேன்… அவரவர் கடமையை, அவரவர் தவறாமல் செய்தால், என்னைத் தேடி வர வேண்டும் என்ற அவசியமே இல்லை; நானே உங்களைத் தேடி வருவேன்.”
“இவ்வளவு தூரம் உன்னைத் தேடி, உன் வீட்டிற்கே வந்திருக்கிறனே..சாப்பிட ஏதாவது தருவாயென்று பார்த்தால், எதையும் கண்ணால் கூடக் காட்ட மாட்டேன் என்கிறாயே… நியாயமா; இது தர்மமா கபிலா?’
“மன்னிக்க வேண்டும். அடியேன் அபச்சாரம் செய்து விட்டேன். அடியேன் தங்களைத் திடீரென்று கண்டதில், என்னையே மறந்து விட்டேன். கல்யாணத்திற்குச் சென்றிருந்தோம். அங்கேயே குடும்பம் மொத்தமும் சாப்பிட்டு விட்டோம்; வீட்டில் சமையல் செய்யவில்லை. பெருமாளே, லட்டு இருக்கிறது சாப்பிடுகிறீர்களா? உங்களுடைய திருப்பதி லட்டு அளவுக்கு இருக்காது. ஐயங்கார் பவனில் வாங்கியது; நன்றாகவே இருக்கும். எடுத்து வரட்டுமா?’
“போ… போய்க் கொண்டு வா!’
“இந்தாருங்கள் கால் கிலோ லட்டு. மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்…’
“ஏன்… மிச்சம் வைத்தால் என்ன?’
“அதொன்று மில்லை… என் வீட்டில் என் மனைவி, குழந்தைகள் யாரும் இனிப்பை விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். வீணாகி விடக் கூடாதே என்று நான் எடுத்துச் சாப்பிட்டாலும், என் மனைவி என்னை அர்ச்சனை செய்வாள். ஏன் அந்த வேண்டாத அர்ச்சனையும், ஆராதனையும் என்று தான்…’
“ஓ… உன் மனைவியிடம் உனக்கு அவ்வளவு பயமா?’
“இல்லை சுவாமி… பயமில்லை; அவ்வளவு மரியாதை. என்ன இருந்தாலும், கடைசி வரை என் கூடவே இருப்பவள் அவள் தானே!’
“சரி சரி… நீ சொன்னபடி மொத்தத்தையும் சாப்பிட்டு விட்டேன்; நன்றாகவே இருக்கிறது…
“என்ன சாமி… திருப்பதிக்கு லட்டு புதிதா”
புன் சிரிப்பு சிரித்து விட்டு, “நான் கிளம்பட்டுமா… நாழியாகிறது…’
“இப்போதுதானே வந்தீர்கள்… அப்படியென்ன அவசரம்… கொஞ்சம் பொறுத்துத்தான் போவது…
“ஏதோ கேட்க நினைக்கிறாய் போலிருக்கிறதே… தயங்காமல் கேள். சங்கோஜம் எதற்கு?’
“வரும் புரட்டாசி மாதம் எப்படியாவது குடும்பத்தோடு எல்லாரும் திருப்பதிக்கு வர வேண்டும் என்று எண்ணியிருக்கிறோம்..
நானும் எப்படியாவது முயற்சி செய்து உந்தன் திருவடியை திருப்பதியில் காண மிகுந்த ஆசையோடு உள்ளேன்”
“கண்டிப்பாக கூட்டிக் கொண்டு வா…’
“அதற்கில்லை சுவாமி… அங்கிருக்கும் கோவில் குருக்களிடம் கொஞ்சம் சொல்லி வையுங்கள். காண்பதற்கு சிறிது அவகாசம் தரச் சொல்லுங்கள். “ஜர்கண்டி… ஜர்கண்டி…’ என்று பலாத்காரம் செய்ய வேண்டாம் என்று சொல்லி வையுங்கள். கொஞ்சம் மனிதாபிமானம் காட்டச் சொல்லுங்கள் போதும்…’
“என்ன சிபாரிசா?’ சிரித்தார்
கடவுள் .
“ஆகட்டும் அப்பனே… நான் வரட்டுமா?’
“சுவாமி… நீங்கள் வந்து போனதைக் கேள்விப்பட்டால், எல்லாரும் என்னை உண்டு, இல்லையென்று செய்து விடுவர். என்னை படாதபாடு படுத்தி விடுவர். அடிக்கடி படுத்தி எடுப்பர். கொஞ்சம் இருங்கள் என் அக்கா, மாமா, அவர்களுடைய குழந்தைகள், மருமகன், மருமகள்கள், என்னுடைய மைத்துனர்கள், அவர்களுடைய மனைவி, குழந்தைகள், என் தம்பி, என் தம்பி மனைவி, அவர்களுடைய குழந்தைகள், என் மாமியார், என் மனைவி, என் குழந்தைகள் எல்லாரும் இருக்கின்றனர். எழுப்பிக் கூட்டி வருகிறேன்; கொஞ்சம் பொறுங்கள்!’
“சரி, சரி அழைத்து வா… காத்திருக்கிறேன்!’
“”எல்லாரும் எழுந்திருங்க… சீக்கிரம், சீக்கிரம் திருப்பதி வெங்கடாஜலபதி, நம் வீட்டுக்கு வந்திருக்கிறார்; வந்து பாருங்க…”
“”என்னது… திருப்பதி வெங்கடாஜலபதி வந்துட்டாரா… எங்கே… எங்கே?”
”இங்கேதானே இருந்தார். உங்களை எல்லாம் கூட்டி வரச் சொன்னாரே… அதுக்குள்ளே எங்கே போனார்?”
“சுவாமி… சுவாமி… சுவாமி…”
“அய்யய்யோ…”
“அடக்கடவுளே… எல்லாம் கனவா?”
“திருப்பதியில் உன்னை காண வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் கனவில் கண்ணாரக் கண்டேனே… ஏழுமலையானே… வெங்கடாஜலபதி பெருமானே…”
“கனவில் தான் நீங்க ஏழுமலையானை பாக்க முடியும்..சும்மா படுங்க”
“ கனவாக இருந்தால் என்ன.. எனக்கு இது போதும்…”
“கோவிந்தா…..”
#379
49,987
820
: 49,167
17
4.8 (17 )
ruthvikruthvikakiyoshoyz
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
kayal345
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50