கடைசி நாள் - BYE BYE !

mr_rangarajan
Life Journey
0 out of 5 (0 )

10-Jul-2042

கால்களை தீண்டிய அலைகள் கரைதனை தீண்டும் நேரம் கூட அளந்திடலாம்! ஆனால், நாம் வாழும் வாழ்க்கை நேரத்தை மட்டும் அளந்திடவே முடியாது.

சில நேரங்களில் சிலருக்கு நாம் சேதி சொல்வதாக நினைத்து நாம் சிலவற்றை செய்து விடுவோம். ஆனால் அது பல நே நேரங்களில் பலருக்கு பட்டுனு போயி சேர்ந்துவிடும். அதாவது என்னுடைய இந்த கடைசி நாள் காகிதம் சேர வேண்டிய கைகளுக்கு சேராம தவறுதலா உங்க கைகளுக்கு கிடைச்சுட்டுதுன்னா, தயவு செய்து இந்த காகிதத்தை கரெக்டான ஆளுங்க கிட்ட கொண்டு போயி சேத்துடுங்க.

யார் படிக்கிறாங்களோ இல்லையோ என்னுடைய அம்மா அப்பா மனைவி சீது, மகன் அனி, மச்சினன் பாலாஜி மச்சினன் மனைவி வித்யா மற்றும் என் அலுவலக HR Officer மட்டும் அல்ல ஆத்ம நண்பன் முரளிக்கும் போய் சேர்வதை உறுதி படுத்தவும். ஆனா கிழிச்சோ தூக்கியோ மட்டும் போட்டுடாதீங்க, ப்ளீஸ்.

கடைசி நாள் என்னைக்கு என்பது இந்த உலகத்துல பிறக்கும் எந்த ஜீவனுக்கும் தெரியாது. அதனால தானோ என்னவோ அந்த கடைசி நாள் வரைக்கும் பல கனவுகளோடு மட்டுமே வாழ்ந்து திறமை ஆயிரம் இருந்தாலும் ஒன்னும் சாதிக்காம பலரும் காணாம போயிடறாங்க.

ஆனா, பல கனவுகளோட இருந்த நான், எப்படி ஒரு கல்லு சிற்பமா மாறனும்னா அத்தனை உளி அடியை தாங்கணுமோ அத்தனையும் தாங்கி வாழைக்கையில பல போராட்டங்களை பல வெற்றி தோல்விகளை சந்திச்சி, இன்னைக்கு என்னுடைய இந்த கடைசி நாள்-ல சிலருக்கு ஒரு உண்மைய தெரிவிக்கணும்னு நினைக்கிறேன்.

அம்மா அப்பா என்னை மன்னிச்சிடுங்க. மனைவி சீது, மகனே அனி நீங்களும் என்னை மன்னிச்சிருங்க. இவ்வளவு நாளா நீங்க என்கிட்டே பலமுறை கேட்ட பல வினாக்களுக்கு இன்னைக்கு விடை கொடுத்து பின்னே விடை பெறவும் வேண்டி இருக்கு.

நீங்க தூங்கும் போது நான் இதை எழுதி வைச்சிட்டு என் மனசுல இருந்த அத்தனை பாரத்தையும் இதுல இறக்கி வைச்சிட்டேன். ஆனா, நீங்க இதை படிக்கும் போது நான் நிச்சயம், நீங்க கூப்பிடற தூரத்துல இருக்க மாட்டேன்.

பல அடி உயரத்துல பல கருப்பு வெள்ளை மேகங்களையும், வானத்துல ஒரு நாளைக்கு இந்த பூமியிலிருந்து எதனை பேரு மேல போறாங்களோ அவங்க ஒருசிலரோட நானும் ஒன்னா போயிகிட்டு இருப்பேன்.

அதனால இதை படிக்கும் போதே ரொம்ப டென்ஷன் ஆகி, வருத்தப்பட்டு, புத்திசாலித்தனமா எதையோ விதியை என்னால தான் மாத்திட முடியுமுன்னு உடனே என்னுடைய அலைபேசியை அழைக்க வேண்டாம். ஏன்னா என்னுடைய அலைபேசி நீங்க தொடர்பு கொள்ள முடியாம அது தொடர்பு எல்லைக்கு அப்பால இருக்கும், அப்படியே தான் நானும்.

இது வித்யாக்கும் எனக்கும் மட்டுமே இது நாள் வரைக்கும் தெரிஞ்ச விஷயம். வாழ்க்கையில எத்தனையோ நாள், கிழமைகள் ஓடி போச்சு. சீதுக்கு கூட சந்தேகம் இருந்துகிட்டே இருந்துது. நானா உண்மையா சொல்லுவேனான்னு அவளும் வெயிட் பண்ணிகிட்டே இருந்தா.

வித்யாவும் அவ வாயாலேயே சொல்லுவாளான்னு நானும் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தேன். இதுக்கு மேல என்னால முடியாது, ஏன்னா நாளைக்கே இது ஊருக்கு தெரிஞ்சிடும். ஆனா அதுக்கு முன்னாடி உங்ககிட்ட இதை நான் பகிர்ந்துக்கறேன்.

சீது எப்போவுமே எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ இருக்குன்னு சொல்லிண்டே இருப்பா. அது உண்மை தான்! இது நாள் வரைக்கும் இதை உங்க எல்லோருக்கும் சொல்லாததுக்கு எங்க ரெண்டு பேரையும் நீங்க எல்லாரும் மன்னிச்சிடுங்க.

ஒரு நிமிஷம், போன் வருது அதை அட்டென்ட் பண்ணிட்டு வந்துடறேன்,

சொல்லுங்க முரளி, இந்த நேரத்துல என்னை அழைக்க உங்களைவிட்டா வேறு யாரு இருக்கா. STOP, STOP, STOP…..நீங்க எதுவும் இப்போ சொல்ல வேண்டாம், நான் போற அவசரத்துல இருக்கேன், முடிவெடுத்தா எடுத்தது தான். வர்ற பணத்தை அப்படியே ஒரு பங்கை அநாதை ஆஸ்ரமத்துக்கும் ஒரு பங்கை முதியோர் இல்லத்துக்கும் ஒரு பங்கை கோமாதா டிரஸ்ட்ற்கும், ஒரு பங்கை வளரும் எழுத்தாளர் சங்கத்துக்கும், ஒரு பங்கை என்னுடைய ராமர் கோயில் சீர்திருத்த பணிக்கும் கொடுத்திடுங்க, ப்ளீஸ்.

நான் போன்ல பேசினதை கூட அப்படியே எழுதிட்டேன் ஏன்னா நாளைக்கு பிரச்சனை வரக்கூடாதுன்றதுக்காக. திரும்பவும் மேட்டருக்கு வரேன்,

நாங்க ரெண்டு பெரும் பல நாள் பல நேரம் பல இடத்துல சந்திச்சிண்டு இருக்கோம், நிறைய விஷயம் பேசிருக்கோம், எங்களுக்குள்ள ஒருமித்த கருத்து எல்லா விஷயத்துலையும், எப்போவும் உண்டு. பல முறை எனக்கே ஆச்சர்யம் வருவது உண்டு. சொல்ல போனா, பேமிலியோட திருப்பதி போனா, நாங்க ரெண்டு பேரும் தான் நடைபாதை பார்ட்னர்ஸ்.

எலுமிச்சை சோடா (சர்க்கரை, உப்பு சேர்த்து) சில்லுனு சாப்படறது தொடங்கி மாங்கா பத்தை வரை வழியில ஒன்னு விடமாட்டோம். எல்லாமே புடிக்கும் சாப்பிட்டுக்கொண்டே காலார களைப்பே இல்லாம நடந்தே ஜாலியா ஏறிடுவோம்.

அப்படித்தான் ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் கார்ல தனியா போயிண்டுருந்த போது தன்னோட ஒரு ஆசைய என்கிட்டே சொன்னா நான் ஷாக் ஆயிட்டேன். என்னாலே முடியாதுன்னு பயந்தேன்! அவ தான் என்னை ஊக்கப்படுத்தினா.

என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சுது அவ்ளோதான் என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவா இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னேன். ஆனா அவ, என்ன விடவே இல்ல! தினமும் நச்சரிச்சுண்டே இருந்தா! அதனால கடைசியிலே நானும் அதுக்கு ஒத்துண்டேன்.

என்னைக்குன்னு நான் கேட்க அதுக்கு அவ இன்னும் ஒருவரதுக்குள்ள அப்படின்னா….காரை விட்டு இறங்கி அவ போயிட்டா….ஆனா அதை நெனைச்சி நெனைச்சி எனக்கு ஒரு வாரம் தூக்கமே இல்ல.

அவ சொன்ன படி பண்றதா வேண்டாமா அத பண்ணா பின் விளைவுகள் என்ன என்ன அப்படின்னு யோசிச்சி யோசிச்சி தூக்கமே போச்சு. ஏன்னா நான் ஒரு கம்பெனில கவுரவமா ஒரு உயர் அதிகாரியா உட்கார்ந்துண்டு இருக்கேன். அப்படி இருக்க நாளைக்கே நான் பண்ண காரியம் தெரிஞ்சி அலுவலகத்துல என்ன இதுன்னு அவங்க கேட்டா என்ன பதில் சொல்ரதுன்னு வேற கவலை.

ஆனாலும் மச்சினன் பொண்டாட்டி சொன்னா ஆசை விடுமா? அதுவும் ஆசையா வேற சொல்லி இருக்கா! அது தான் அந்த எண்ணம் தான் என்னை அந்த காரியம் செய்ய தூண்டினது.

அதுக்குள்ள உத்யோகத்துல ரெண்டு நாள் வேலை பளுவுல இந்த விஷயத்தையே நானும் மறந்துட்டேன். அவள் கூட மறந்திருக்கணும்னு தான் நினைச்சேன், ஆனா அவ கரெக்டா மூணாவது நாள் ராத்திரி கிட்டத்தட்ட இதே நேரத்துல தான் போன் பண்ணா!

என்ன பண்றீங்க, நான் சொன்னது ஞாபகம் இருக்கா இல்லயான்னு கேட்டா, சட்டுனு திகிள்ள அறஞ்சாப்ல இருந்துது. சரி, தப்போ ரைட்டோ பண்ணிப்பார்ப்போம் அப்படின்னு அவளுக்கு ஓகே சொன்னேன்.

வேலைய முடிச்சிட்டு, அவகிட்டே ஒண்ணே ஒன்னு மட்டும் சொன்னேன் இது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் ரகசியமா இருக்கட்டும். பிற்காலத்துல அவசியம் வந்தா, நானே சொல்றேன்னு. அதை தான் இப்போ சொல்ல வேண்டிய நேரம் வந்துடுத்து.

அவ என்னை ஒரு தடவை இப்படி தூண்டலை பல தடவை தூண்டினாள். வருஷம் ஓடிப்போச்சு. கால தாமதம் ஆகி நான் இதை உங்க கிட்ட சொல்லறதுக்கு என்னை மன்னிக்கனும்.

அன்னைக்கு அர்த்த ராத்திரில நான் மண்டை குழம்பி ஒண்ணுமே செய்யத்தெரியாம எனக்குள்ளேயே புழுங்கி நல்ல யோசிச்சிட்டு ஒரு முடிவுக்கு வந்தேன். நாளைக்கு தானே கடைசி நாள்! அதையே நம்ம கதைக்கு கருவாக்கி ஒரு கதையை உருவாக்கி எழுதிலாம்னு. அப்படியே எழுதினேன். படித்தவர்கள் எல்லாருமே மிகவும் பிடிச்சிருக்குன்னு நிறைய மார்க் கொடுத்து தேசிய அளவிலான சிறுகதை இது தான்னு அன்னைக்கு செலக்ட் பண்ணினாங்க…….

அன்னைக்கு எழுத்தாளரா மாறின என் வாழ்க்கை அதன் பிறகு பல சரித்திர, குடும்ப, நகைச்சுவை நாவல்கள் பல எழுதி இன்னைக்கு கம்ப ராமாயணத்தினை இயற்றிய கம்பரின் அவர் ஸ்ரீரங்கத்திலே அந்த கம்பன் முன் உட்கார்ந்து அவன் அருளாலே தாம் இயற்றிய இராமாயணத்தை தான் வாசித்ததும் அதை அந்த கம்பன் அல்ல கள்வன் ரசித்து நகைத்ததுமான வரலாற்று நிகழ்வை தமிழ் படுத்தியதிற்க்காக பாரதத்தின் உயர்ந்த விருதை வாங்க வானுர்தியில் சென்று கொண்டிருக்கிறேன்.

நாளை பேட்டியிலும் இதையே குறிப்பிட்டு என் வாழ்நாளில் கடைசி நாள் தான் முதல் சிறுகதை என்றும் அதற்கு ஊன்று கோலாக இருந்த வித்யா அந்த சிறுகதை போட்டி பற்றிய விஷயத்தை ஒரு நாள் என்னிடம் காரிலே பகிர்ந்து கொண்டு என் மேல் நம்பிக்கை வைத்து என்னை எழுத செய்ததையும் அதன் பிறகு நிறைய முறை ஞாபக படுத்தியதையும் எனக்கு அதன் மூலம் வரும் வருவாயை உபயோகமாக செலவு செய்ய உதவி புரிந்த முரளிக்கும் நான் நன்றி சொல்ல உள்ளேன்.

எத்தனையோ நாள் நீங்கள் எல்லோரும் என்னை கேட்டிருக்கிறீர்கள் எது என் வாழ்க்கை பாதையை மாற்றியது என்று..... இன்று இப்போது விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு முறை அல்ல பல முறை என்னை மேன்மேல எழுத தூண்டியது இவர்கள் தான்.

10-Jul-2022, அது தான் அந்த சிறுகதை போட்டிக்கான கடைசி நாள்! நான் என் சிறுகதையை எழுதி அனுப்பியதும் நள்ளிரவே!

உடனே முதல் பக்கத்தில் நான் குறிப்பிட்ட தேதியை பார்பீர்களே!!!!!. இனிய புன்முறுவலுடன் வணக்கம்.

சத்ருஞன் (புனை பெயர்)

Rangarajan M

13B/23B SriRanga Nivas, 11th Avenue, Ashok Nagar, Chennai 600 083,

Mobile number 9840497893

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...