முடிவேது?

gowthamnagaraj21
பதின்பருவக் கதைகள்
5 out of 5 (16 )

முடிவேது...?

"டேய் மச்சான் எந்திரிடா" என தட்டி எழுப்பிக் கொண்டு இருந்தான் ராஜேஷ். "ஏண்டா... நைட்டே விடிஞ்சப்றம் தான்டா நானே வந்தேன் " என தூக்கத்திலேயே உழறினான் கோகுல்.

காரணம் இரவு ஏழு மணிக்கு ரயில் ஏறி நாலு மணிக்கு தான் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான் கோகுல். வந்ததும் உறங்கியவனை ஒன்பது மணிக்கே எழுப்பிக்கொண்டு இருந்தான் ராஜேஷ்.

"டேய் நானே ரெஸ்ட் எடுக்கலாம்னு தாண்டா வீட்டுக்கு வந்தேன். ஏண்டா வாதிக்கிற" என்றவாறு எழுந்து அமர்ந்தாள் கோகுல். "ரெஸ்ட் எடுக்கணும்னா அங்கேயே இருந்திருக்கணும். வரதே எப்பவாவது அப்போ உனக்கு என்ன தூக்கம். அதான் எழுந்தாச்சுல்ல போ போய் கிளம்பு" என்றவாறே வெளியேறினான் ராஜேஷ். " அம்மா அவனுக்கு வச்சிருந்த காபி ஆறிடுச்சு அதனால நானே குடிச்சிட்டேன். அவனுக்கு வேற ஒன்னு போட்டு கொடுத்துடுங்க" என சிரித்துக்கொண்டே கிளம்பினான்.

முகத்தில் தூக்கம் கலந்த புன்னகையோடு துண்டை கட்டிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான் கோகுல்.

அடுத்த அரை மணி நேரத்தில் வண்டியின் ஹாரன் ஒலி கேட்டு அவசரமாக ஓடினான் கோகுல். " என்னடா பண்ணிட்டு இருக்க இங்கேயே மணி பத்து ஆச்சு எப்ப அங்க போறது" என்றான் இன்னொரு நண்பன் ரவி. "அப்படி எங்கடா போறோம்?" என வினவினான் கோகுல். அதே நிமிடத்தில் ராஜேஷின் வண்டியும் வந்து சேர உடனே மின்னலாய் தொடங்கியது இவர்களின் பயணம்.

அடுத்த 20 நிமிடங்களில் அருகில் இருந்த மாலை அடைந்திருந்தனர். ஒன்பதரை மணி ஷோவிற்கு பத்தரை மணிக்கு வந்து சேர்ந்திருந்தனர் மிகவும் பொறுப்பாக. "அடுத்த ஷோ ஒரு மணிக்கு தான் அதுவரை இங்கேயே சுத்தலாம்" என்ற ராஜேசை பார்த்து முறைத்தான் கோகுல். நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டாவது இருந்திருப்பேன் என அவன் அகத்தில் எண்ணுவது முகத்தில் தெரிந்தது.

"அட வாடா" என்றவாறு இழுத்துக் கொண்டு ஒவ்வொரு மாடியாக சுற்றினர். குழந்தைகளை ஒழுங்கு காட்டி கொண்டும் கடந்து செல்லும் பெண்களின் பெயர் கேட்டுக்கொண்டும் விற்பவர்களையும் விற்கப்படுபவைகளையும் ஏற இறங்க பார்த்துவிட்டும் அப்படியே உலாவினர். அதிகம் சுற்றியதில் பசிக்க ஆரம்பித்து அருகில் இருந்த உணவகத்திற்கு சென்றனர். "நாங்க போய் ஃபுட் ஆர்டர் பண்றோம் நீ போய் மூஞ்சி கழுவிட்டு வா முகத்துல தூக்கம் தள்ளுது" என்றான் ரவி. "நான் நல்லா தானடா இருக்கேன்" என்று கோகுல் கூறியும் விரட்டினர் ராஜேஷும் ரவியும். ராஜேஷும் ரவியும் உணவை தேர்வு செய்ய சென்ற நேரம் கோகுல் முகம் கழுவ சென்றான். பாத்ரூமின் கதவை வேகமாக தள்ள எதிரில் வந்தவர் மீது மோதியது.

"சாரி...சாரி சார் "என்றவாறு நுழைந்தவனுக்கு ஆச்சரியம்.

" டேய் நல்லவனே நீ எப்படிடா நீங்க" என கோகுல் கேட்க "அத நான்தான் கேக்கனும். சென்னைல இருந்து நீ எப்படா கோயம்புத்தூர் வந்த?சொல்லவே இல்ல"என்றான் கோகுலின் கல்லூரி தோழன் தருண்.

"இன்னைக்கு காலைல தான்டா வந்தேன். மறுபடி நாளைக்கு சாயந்திரம் கிளம்பணும் அதான் யாருக்கும் சொல்லல.நீ எப்படி இங்க?"என வினவினான் கோகுல்."சும்மா என் ஆளுகூட வெளிய போகலாமேனு வந்தோம்."என்றான் தருண்."எது ஆஆஆளாஆ..." என இழுத்தான் கோகுல்."ரொம்ப இழுக்காதடா அங்கபாரு " என்றான் தருண்."யாருடா அந்த செவப்பு ட்ரஸ் போட்ருகாங்களே அவங்களா?" கேட்டான் கோகுல்."அவங்ககூட பேசிட்டு இருக்காங்களே அவங்க. எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆளு தான் .வா நீயே வந்து பாரு" என கூறிவிட்டு "ஆனா யாருகூட பேசிக்கிட்டு இருக்கா..?" என யோசித்தவாறே கோகுலின் தலையை திருப்பினான் தருண்.

"கீதாவா...." என அதிர்ச்சியாக கேட்டான் கோகுல்." கீதாவே தான். எப்படின்னு தானே யோசிக்கற எல்லாம் அப்படித்தான்" என புன்னகைத்தான் தருண்." எப்படி டா ரெண்டு பேரும் எலியும் பூனையுமா இருப்பீங்க இப்போ எப்படி" என கேட்ட கோகுலுக்கு "அதான் சொன்னேனே" என பதிலளித்தான் தருண்." நீ இங்கேயே இரு நான் போயிட்டு கூப்பிடுகிறேன்" என கூறி விட்டு முன்னேறினான் தருண் . " ஹே பேபி உனக்கு ஒரு சர்ப்ரைஸ். எழுந்திரு ஒருத்தர உனக்கு காட்டனும்" என கீதாவின் கண்களை மூடினான் தருண். கண்களை திறந்த போது எதிரில் கோகுலை பார்த்து ஆச்சரியத்தில் கத்தினாள் கீதா." டேய் கோகுல்.எங்கடா ஆளே காணாம போய்ட்ட" என ஒரு சாத்து சாத்தினாள் கீதா." நீங்க மட்டும் என்னவாம் இப்படி திடுதிப்பென ஜோடியாக சொல்லாம கொள்ளாம" என தன் தவறை மறைக்க அவர்களின் தவறை சுட்டினான் கோகுல்.சரி இங்க பாருங்கடா,என்னோட சின்ன வயசு நட்பு ஷாலினி.இங்க கோயம்புத்தூர்ல தான் இருக்காலாமா.அவ நிச்சயத்துக்கு மோதிரம் வாங்க வந்திருக்காங்க " என வீட்டில் தன் காதலை பற்றி சொல்ல தயங்கிக்கொண்டு இருக்கும் தருணை நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள் கீதா."மீரா பத்தி எதாச்சும்....." என கோகுல் ஆரம்பித்த நேரம்

"அவருதான் என் வருங்கால கணவர் தேவ்" என ஷாலினி கூறினாள். அவ்வாறு கூறியதுதான் தாமதம் "எது தேவ் ஆஆ....." என மூவரும் ஆச்சர்யத்தில் திரும்ப, வந்தது அவர்கள் எதிர்பார்த்த அவர்களின் கல்லூரி தோழன் அதே தேவ் தான். மூவரும் ஓடிச்சென்று அவன் கையில் இருந்த பர்கரை பத்திரபடுத்திவிட்டு ஆரத்தழுவினர்.

"டேய் என்னடா நடக்குது இங்க.உண்மைய சொல்லுங்க இது உண்மையாவே நடக்குதா, இல்ல நான் தான் கனவு காண்றேனா? அப்படியே உண்மைனாலும் தற்செயலா தான் நடக்குதா" எனக் கேட்டான் கோகுல்."பரவாயில்லையே மச்சான் மூளை இருக்கே உனக்கு" என தேவ் கூறி கோகுலின் பின்னால் பார்த்து சிரிக்க சட்டென திரும்பிய கோகுல் கையில் மோதிரத்தோடு "வில் யூ மேரி மீ" எனுமாறு நின்றிருந்த மீராவை பார்த்து திகைத்தான்.

மேலும் பார்த்தான். பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான்.மீராவின் பின்னால் நிற்பது தன் தந்தையும் தாயும் என உணரும் வரை. கோகுலின் தந்தை தாய் மட்டும் இல்லாமல் அவன் நண்பர்களும் அங்கே இருப்பதை எண்ணி மகிழ்ந்தான்.

கோகுல்,தருண்,தேவ்,மீரா,கீதா அனைவருமே கல்லூரியில் ஒன்றாக தெரியும் கூட்டம். இந்த நட்புக்குள் மலர்ந்தது தான் மீரா மற்றும் கோகுலின் காதல். அனைவரின் நட்பில் இருவரின் காதல் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனும் காரணத்தால் இருவரும் காதல் இருந்தும் பரிமாறி கொள்ளாமல் இருந்தனர் கல்லூரி கடைசி நாள் வரை.

இறுதிநாளில் ஏதேதோ யோசிப்பதை விடுத்து எதார்த்தத்தை சிந்தித்தாள் மீரா. காதலை உரைக்க ஆண்களே தயங்கும் காலத்தில் கையில் மடல் எடுத்து தன் காதலை அதில் பொறித்து அவனிடம் நீட்டினாள் மீரா."முடியாது" என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டு சென்றான் கோகுல்.தடுத்து நிறுத்திய மீரா காரணம் கேட்க அந்த நேரத்தில் மனதில் தோன்றிய காரணங்கள் அனைத்தையும் மடமடவென கூறிக்கொண்டே மனதை கல்லாக்கி விட்டு நகர்ந்தான் கோகுல்.

தன் நண்பர்களிடம் கூட கூறி அழமுடியா நிலையில் தவித்தனர் இருவரும்.கல்லூரி முடிந்ததும் தவறி கூட நண்பர்களிடம் கூறிவிடக்கூடாது என நினைத்தனர் மனதால் நன்றாக புரிந்து வைத்திருந்த இருவரும்.

ஆனாலும் மீண்டும் அவன்முன் வர ஏனோ தயக்கம் கொண்டாள்.அவன் மறந்திருப்பானோ என கவலை கொண்டாள்.பொழுதுபோக்கிற்காக அவன் வரைந்து பதிவிட்ட ஒவ்வொரு படத்திலும் அவள் பெயர் மறைமுகமாக அச்சிட்டிருப்பதை அவள் கவனிக்கும்வரை.

அவன் விட்டுச் சென்றாலும் அவன் கண்ணில் தெரிந்த காதல் அவனின் காரணங்களை களையெடுக்க தூண்டியது மீராவிற்கு.

ஒவ்வொன்றாய் சரிசெய்து இன்றுவரை வந்துவிட்டாள் அந்த கெட்டிக்காரி.

# ஏதேதோ ஏதேதோ கூறி

எனை ஏனோ நீ விலகிச்சென்றாய்

உன் காரணங்களை எல்லாம்

நான் கடைந்தெடுத்து விட்டேன்

உன் காதலை உரைத்திடு

உணர்வுகளை வெளிப்படுத்தி... #

என மீரா கூறக் கேட்டதும் உடனிருந்தவர்களுக்கே தெரியாமல் இருவரும் பரிமாறிய உணர்வுகளும்,

உண்மைக்காதலை அவள் உரைத்தபோது உதறித்தள்ள நேர்ந்ததும் உடனே நினைவுக்கு வர செய்வது அறியாமல் தவித்தான், கதைக்கு மட்டும் அல்லாமல் அந்த கவிதைக்கும் நாயகனான கோகுல். ஓடிச் சென்று தன் காதலை உரைப்பதை தவிர வேறு உபாயம் உதிக்காமல் அங்கேயே மண்டியிட்டு அவளிடம் மனமார மன்னிப்பு வேண்டினான் அந்த குடும்ப சூழல் காரணமாகவும் தந்தையின் மீது இருந்த பயத்தின் காரணமாகவும் காதலை சொல்லத் தவறிய காதலன்.நம் கதாநாயகன்.கோகுல்.

ஓடிச்சென்று அவனை கட்டியணைத்தாள் நம் கதையின் நாயகி.மீரா.....

_ _ முற்றும் _ _

அவர்கள் காதல் தொடரும்......

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...