JUNE 10th - JULY 10th
நள்ளிரவு நேரம்,
அவன் அந்த பூங்காவினுள் சுவர் ஏறி நுழைந்தான், அங்கே படுத்திருந்த நாய் அவனை நோட்டமிட்டுவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது , அங்கே வெறிச்சொடி இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தான்.
அப்போது அங்கு ஒரு பைக் சத்தம் கேட்டது, பைக்கிலிருந்து கையில் ஒரு பாட்டில் கிளாஸ்சுடன் இறங்கினான் ஒரு இளைஞன் . அவனும் இவனைப்போலவே உள்ளே நுழைந்தான். இவன் அமர்ந்திருந்த இருக்கையை தாண்டி சென்று அருகில் இருந்த தரையில் அமர்ந்து வந்தவேலையை பார்க்க தொடங்கினான் . பாட்டிலை திறந்து க்ளாஸ்ஸினுள் ஊற்றினான், கண்ணை மூடிக்கொண்டு ஒரு ரவுண்டு அடித்தான் ஆல்கஹால் அவன் வயிற்றுக்குள் எரிச்சலுடன் சென்றது வரும்போது சைடிஷை வாங்கிவந்துருக்கலாம் என்று நினைத்து கொண்டான் . கொஞ்சம் கொஞ்சமாக அவனை போதை ஆக்கிரமிக்க தொடங்கியது. திடீரென அவன் பின்னால் காலடி சப்தம் கேட்க தொடங்கியது இவன் திரும்பி பார்த்தவுடன் அவன் கழுத்தில் அந்த கத்தி இறங்கியது அவன் சுதாரித்து தப்பிக்க நினைப்பதற்கு கூட இடம் தராமல் அவன் எதிர்ப்பு அடங்கிய பிறகும் அவனை குத்திக்கொண்டு இருந்தான். பின்பு யாரவது இவனை பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவன் அந்த பூங்காவை விட்டு வெளியேறினான், அங்கே எதுவும் நடக்காததை போல அந்த நாய் அங்கே உறங்கி கொண்டிருந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகாலை 6 மணி,
சப்இன்ஸ்பெக்டர் விக்ரமின் தொலைபேசி அடிக்க தொடங்கியது அரைத்தூக்கத்தில் எழுந்தவன், செல்போனை காதில் எடுத்து வைத்தவன் செய்தியை கேட்ட உடன் கிளம்பினான்.
விக்ரம் அந்த பூங்காவிற்கு நுழைந்தவுடன் மணி 6.30 என்று அவனது வாட்சில் காட்டியது, அங்கே சில வாலிபர்கள் அங்கு வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள் அவர்களை ஒரு கான்ஸ்டபில் லத்தியால் விரட்டிக்கொண்டு இருந்தான்.
அங்கே இன்ஸ்பெக்டர் ஜார்ஜுக்கு ஒரு சலுயூட் வைத்தான் விக்ரம்,
“என்னயா நம்ம ஏரியால இப்டி ஒரு கொலை நடந்துருக்கு” என்று சொல்லியபடி நடக்கத்தொடங்கினார், அந்த இடத்தை சுற்றி ஃபாரன்சிக் அதிகாரிகள் இருந்தார்கள் அங்கே ஒரு பிணம் துணியால் மூடப்பட்டிருந்தது, ஜார்ஜ் கை காட்ட அந்த துணியை விளக்கினார் ஒரு கான்ஸ்டபில் .
அந்த உடலின் முகம் சிதைந்தபடி இருந்தது, இறந்தவன் இளைஞனாக இருக்கலாம் என்று நினைத்தான் விக்ரம்
“எப்படி சார் கொலை நடந்துச்சு”
“நேத்து நைட் இந்த ஆளு குடிச்சுட்டு இருக்கப்போ யாரோ இவனை brutal-ஆ மர்டர் பண்ணிருக்காங்க, இறந்தவனோட தலைப்பகுதி ரொம்ப சேதம்ஆகியிருக்கு அதனால முகம் செரியா தெரியல பட் இவனோட பைக்கை வெச்சி செத்தவன் யாருனு ஐடென்டிபை பண்ணியாச்சி. செத்தவன் பேரு சுமன், ஒரு export கம்பெனில வேலைபாக்குறான்.”
“கொலை நடந்தத பாத்த சாட்சி இருக்கா சார் ?”
“இல்ல விக்ரம், யாரும் இல்ல காலைல park-அ தொறக்க வந்த வாட்ச்மன் தான் பாத்துட்டு போலீசுக்கு கால் பண்ணான்.”
“அவனை விசாரிச்சுட்டீங்களா சார் ?”
“எஸ், பெருசா ஒன்னும் அவன்கிட்ட இன்பர்மஷன் கிடைக்கல. அவன் அந்த டெட் பாடிய பாத்ததுல இருந்து பேயறைஞ்ச மாதிரி இருக்கான். இங்க பார்குக்கு வர சிலபேர்கிட்ட விசாரிச்சதுல மிட்-நையிட்ல இங்க அடிக்கடி சில பேரு தண்ணி அடிக்க வருவார்களாம், ஒருவேளை அவங்ககுள்ள போதைல தகராறு ஆகி எவனாவது கொலை பன்னிருப்பான் போல.”
“சரி சார் நான் கொஞ்சம் இங்க எதனா க்ளூ கிடைக்குதான்னு பாக்றேன் சார்”
“ஓகே விக்ரம் யு கோ அஹேட்..”
யார் இவ்வளவு கொடூரமாக இந்த கொலையை செய்திருப்பார்கள் என்று சிந்திக்க தொடங்கினான் விக்ரம் . அந்த பிணத்தின் அருகில் ஒரு ஷூ தடயம் இருந்தது அந்த ஷூ அடையாளம் பார்ப்பதற்கு கொஞ்சம் வித்யாசமாக இருந்தது அதை ஃபாரன்சிக் போட்டோக்ராபரிடம் படம்பிடிக்க சொன்னான்
“விக்ரம் நீங்க பாடிய எடுத்துட்டு போய் டாக்டர் கிட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கிட்டு வாங்க” என்றார் ஜார்ஜ்.
விக்ரம் உடனே புறப்பட்டான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடம்: மருத்துவமனை
மூன்று மணிநேரமாக மரத்தடியில் காத்துக்கொண்டிருந்தான் விக்ரம், காத்திருப்பின் அடையாளமாய் கீழ சிகரெட் துண்டுகள்...
“சார் உங்கள டாக்டர் கூப்டாரு என்றான் ஒரு அட்டெண்டர்”
“ஹலோ மிஸ்டர் விக்ரம்”
“ஹெலோ டாக்டர் ஹொவ் ஆர் யு”
“ஐயம் ஃபைன் டேக் யுவர் சீட்,”
“ரிபோர்ட்ஸ் ரெடி-ஆ டாக்டர்”
“எஸ் விக்ரம் இட்ஸ் ரெடி”
“ரிப்போர்ட் என்ன டாக்டர் சொல்லுது?”
“ரொம்ப brutal-ஆ இவன கில்லர் கொன்றுக்கான், ஈவன் விக்டிம் இறந்த பிறகும் கூட குத்தி இருக்கான். சோ ஒன்னு இது வெஞ்சென்ஸா இருக்கலாம் இல்லனா மென்டல்லி டிசார்டரா இருக்க ஒரு பர்சன் கூட கொலை பண்ணிருக்கலாம். பட் மை கெஸ் இவன் ஒரு சைகாட்டிக் பிஹேவியர் இருக்க ஒருத்தனா இருக்க வாய்ப்பிருக்கலாம்.”
“சைக்கோவா இருக்கலாம்னு சொல்ல வரிங்களா?”
“என்னால ரொம்ப உறுதியா சொல்லமுடியாது பட் ஒரு 80% அது சைக்கோவா இருக்க வாய்ப்பு இருக்கு.”
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“என்னங்க இந்த நேரத்துல நீங்க ஆபீஸ் போய்த்தா ஆகணுமா?”
“ஆமா கலா மேனேஜர் உடனே வர சொன்னாரு ஏதோ ஆபீஸ்ல கொஞ்சம் டெக்னிக்கல் ப்ரோப்ளமாம்”
“போய்ட்டு எப்ப வருவீங்களாம், எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு”
“பயப்படாத டார்லிங், வேலைய முடிச்சுட்டு சீக்கிரம் வந்துட்றன் சரியா, என்று சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான் தினகர்”
“சரி சீக்கிரமா வந்துருங்க” என்று கையசைத்து அவனுக்கு டாடா காட்டினாள்
இதையெல்லாம் கேட்டபடி, அவன் மரத்தின் மீது அமர்ந்திருந்தான்
அங்கே யாரும் இல்லை என்று உறுதிசெய்த பிறகு மரத்திலிருந்து இறங்கினான்
திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்டது, தினகர் எதையாவது விட்டுவிட்டு போய்ட்டாரா என்று நினைத்துக்கொண்டு கதவை திறந்தாள் சசி, அங்கே தினகர் இல்லை, முகத்தை மூடியபடி ஒருவன் இருந்தான், அவன் கையில் ஒரு துப்பாக்கி
அவள் அச்சத்தால் உறைந்து போனான்
“நா சொல்ற படி செய் இல்லனா உன் உயிர் இருக்காது “
“ச…. ச…. சரி நீங்க சொல்றபடியே செய்றன்”
“அந்த ரூமுக்கு போ”
“அவன் சொன்னபடியே அவள் அந்த அறைக்கு சென்றாள்”
அவளை சேரில் கட்டிபோட்டு, கயிறால் கழுத்தை நெறிக்கதொடங்கினான், கொஞ்சம் இடைவெளி விட்டு அவளை கயிற்றிலிருந்து விடுவித்து அவளுக்கு தண்ணீர் கொடுத்து அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தான் பின்பு மீண்டும் அவளின் கழுத்தை இருக்கத் தொடங்கினான்.... கொஞ்சம் கொஞ்சமாக அவள் மூச்சு அடங்க தொடங்கியது..
பின்பு கிட்சனுக்கு சென்று டேபலில் இருந்த சிக்கனை எடுத்து கொறிக்கத் தொடங்கினான், அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து சசியின் கழுத்தை வெண்ணைத் துண்டை போல வெட்ட தொடங்கினான்…….
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்த வீட்டிற்கு முன் கையில் மைக்கும் கேமராவுமாக பத்திரிக்கையாளர்கள் காவல்துறையின் விளக்கத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.
சைரன் சப்தத்துடன் அங்குவந்து இறங்கினான் விக்ரம், அவனை பார்த்தவுடனே பத்திரிக்கையாளர்கள் ஈ மொய்ப்பதைப்போல அவனை மொய்க்கத்தொடங்கினார்கள்
“மிஸ்டர் விக்ரம் சென்னைல அடுத்தடுத்து ரெண்டு கொலை கொடூரமா நடந்துருக்கு, யாரு பன்னிருப்பானு நினைக்கிறீங்க” என்று ஒரு பெண் கேட்க
“நோ கமெண்ட்ஸ்” என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றான்
வாசலில் ஜார்ஜ் நின்றுகொண்டு இருந்தார்
“கல்யாணம்னாலும் சரி கருமாத்தினாலும் சரி இவனுங்க தொல்லை தாங்க முடியல விக்ரம்”
“ஆமா சார் சமீபத்துல கூட ஒரு நடிகை கல்யாணத்துல, மேக்கப் போட்டவங்க மெஹந்தி வெச்சவங்கள கூட இன்டெர்வியூ எடுத்தாங்களே.”
“அட இவனுங்க first-நைட்ல கூட மைக்க எடுத்துட்டு வந்து கேப்பானுங்க”
“அது என்னவோ உண்மைதான் சார், இந்த மர்டர் எப்படி சார் நடந்துச்சு”
“செத்து போன பொண்ணோட பேரு கலா, கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சி நேத்து நைட்டு இவங்க கணவர் வேல விஷயமா ஆபீஸ் வரைக்கும் போயிருக்காரு அப்போதான் கொலை நடந்துருக்கு, கொலைகாரன் ப்ரண்ட் டோர் வழியாதா வந்துருக்கான், எந்தவித போர்ஸிபில் என்ட்ரியும் இல்ல, உள்ள வந்து இந்த பொண்ண கட்டி போட்டு கழுத்தை நெறிச்சியிருக்கான் கழுத்துல மார்க்ஸ் தெரியுது, வீட்ல இருந்த கத்திய எடுத்துட்டு வந்து அந்த பொண்ணோட தலையை வெட்டி இருக்கான், ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்த புருஷன் போலீசுக்கு கால் பன்னிருக்காரு.”
“கண்டிப்பா வீட்ல வேற யாரும் இல்லனு இவனுக்கு தெரிஞ்சு இருக்கனும் சார் அதான் கொலை பண்ணவன் ரொம்ப கூலா இங்கவே சாப்டுட்டு போயிருக்கான்,”
“எனக்கும் அப்டிதா தோணுது விக்ரம்”
எதர்ச்சியாக, வெளியே மரத்தின் கிளை வளைந்தபடி இருப்பதை கவனித்த விக்ரம் மரத்திற்கருகில் சென்றான்
மரத்தடியில் அந்த கால் தடம் தெரிந்தது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நெல்சன் மாணிக்கம் ரோட்டில் வாகனங்களை ஓவர் டேக் செய்தபடி விக்ரமும், ஜார்ஜூம் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தார்கள்,
“விக்ரம் அப்டியே என்னோட பொண்ண காலேஜ்ல இருந்து பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு போகலாம் “
“ஓகே சார்”
லயோலா காலேஜ் ஓரம் ஜீப் ஒதுங்கியது
“ஹாய் டாடி, ஹாய் விக்ரம்” என்றபடி காரில் வந்து ஏறினாள் ஸ்டெல்லா
“ஹலோ ஸ்டெல்லா படிப்புலாம் எப்படி போது”
“அதுபாட்டுக்கு ஒருபக்கம் போகுது என்று விக்ரமும், ஸ்டெல்லாவும் பேசிக்கொண்டிருக்க.”
ஜார்ஜின் போன் அடித்தது, டிஸ்பிலேயில் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று காட்டியது
“என்ன ஜார்ஜ் அந்த ரெண்டு கொலையையும் கண்டுபுடிக்கிற ஐடியா இருக்க இல்லையா?”
“அப்டிலாம் இல்ல சார் விசாரிச்சுட்டு இருக்கோம் புடிச்சுருவோம் சார்”
“கிழிச்சுடுவீங்க ரெண்டு கொலை நடந்துருக்கு இதுவரை எவனையாவது சந்தேகப்பட்டு அரெஸ்ட் பனிருக்கிங்களாயா?அங்க கமிஷனர் என்ன கேள்வி மேல கேள்வி கேக்குறார்யா”
“சார் கொஞ்சம் டைம் குடுங்கசார் கண்டிப்பா புடிச்சுடறோம்”
“ஒரு வாரம் டைம் அதுக்குள்ள கண்டுபுடிக்கிற இல்லன்னா சட்டையை கழட்டி வெச்சிட்டு வேற வேலைக்கு போயா என்று போனை துண்டித்தார்.”
“ச்சை எதுக்குதான் இந்த போலீஸ் வேலைக்கு வந்தோம்னு இருக்குயா விக்ரம், என் நேரம் இவன்கிட்டலாம் திட்டு வாங்குற மாறி இருக்கு பாருயா,நம்ம என்னமோ ஒண்ணுமே பண்ணாத மாதிரிதான் பேசுவானுங்க இவனுங்க”
“சார் எனக்கென்னவோ இந்த ரெண்டு கொலைய ஒருத்தன்தான் பன்னிருபான்னு தோணுது சார் “
“எப்படியா சொல்ற “
“Park-ல நடந்த மர்டார்ல ஒரு விஷயத்தை நான் கொஞ்சம் unique-கா நோட் பண்ணன் சார், அங்க இருந்த ஷூ தடம் பொதுவா யூஸ் பண்ற ஷூ மாதிரி இல்ல அது ஒரு மிலிட்டரி ஷூ மாதிரி இருந்துச்சு, அதே மாதிரி சசி மர்டர் ஸ்பாட்ல கூட அதே கால் தடத்த நா பாத்தேன் சார், சோ ஒருவேளை அதே ஆளு இந்த மர்டர் பன்னிருக்கலாம்னு நெனைக்கிறேன்.”
“ஷூலாம் ஒரு எவிடேன்ஸா யா?”
“இல்ல சார் சில நேரத்துல ரொம்ப சின்ன எவிடன்ஸ் தான் பெரிய கேஸ சால்வ் பண்ண உதவிருக்கு சார்”
“விக்ரம் நீங்க இன்வெஸ்டிகேஷன் பண்ற கேஸ நான் ஆல்ரெடி கேட்ருக்கேன் என்றாள் ஸ்டெல்லா”
“நீ மட்டும் இல்ல தமிழ்நாட்டுல எல்லாமே கேட்ருப்பாங்க அதான் நியூஸ்ல வந்திருச்சே”
“இல்ல நியூஸ்ல வரதுக்கு முன்னாடியே நா ஒரு podcast-ல கேட்ருக்கேன்”
“Podcast-லயா ?”
“ஆமா மிஸ்ட்ரி மைண்ட் அப்டினு ஒரு சேனல் spotify-ல இருக்கு , அதுல ஆரியனோடpodcast கேப்பன் அவரு செம்மையா கதை சொல்லுவாரு”
"யாரு அந்த ஆரியன்”
“என்ன இப்டி கேட்டுட்டீங்க இன்னிக்கி தமிழ்நாட்ல நம்பர் ஒன் podcaster அவருதான்”
“ஒஹோ” என்றபடி அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தான் விக்ரம்
“வேணுனா உங்க கேஸ்ல என்கிட்ட கேளுங்க நா வேணுனா ஐடியா சொல்றன்’
“அதெலாம் ஒன்னு வேணாம் நீ ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு “என்று ஜார்ஜ் அதட்டினார்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“விக்ரம் உங்களுக்கு வீட்டுக்கு போயிட்டு லிங்க் ஷேர் பண்றேன்” என ஹஸ்கி வாய்ஸில் சொன்னாள்.
ஸ்டெல்லா நம்பருக்கு டயல் செய்தான் விக்ரம்
“ஹாய் ஸ்டெல்லா டிஸ்டர்ப் பனிடன்னா”
“இல்ல விக்ரம் சொல்லுங்க”
“நேத்து podcast பத்தி பேசிட்டு இருக்கப்ப லிங்க் அனுப்புறன்னு சொன்னியே”
“அச்சோ மறந்தே போய்ட்டேன், இருங்க இப்போவே அனுப்புறன்”
“ஓகே….”
“விக்ரம் இப்போ புதுசா ஒரு கதையை ஆரியன் ரிலீஸ் பன்னிருக்கான், நீங்க கதையை கேளுங்க நான் படிக்கிறேன் இல்லனா அப்பா திட்டுவாரு”
விக்ரம் இயர்போனை காதில் மாட்டிக்கொண்டு லிங்க்குள் சென்று க்ரைம் என்ற folder-ஐ கிளிக் செய்தான்
அங்கே வரிசையாக மூன்று கதைகள் இருந்தது அதில் இரண்டாவது கதையை கிளிக் செய்தான், கதை ப்லே ஆக தொடங்கியது
”என்னங்க இந்த நேரத்துல நீங்க ஆபீஸ் போய்த்தா ஆகணுமா?”
“ஆமா கலா மேனேஜர் உடனே வர சொன்னாரு ஏதோ ஆபீஸ்ல கொஞ்சம் டெக்னிக்கல் ப்ரோப்ளமாம்”……………………………………………………………………………………………………………………………………………….
……………………………………………………………………………………………..அங்கே கிட்சனுக்கு சென்று டேபலில் இருந்த சிக்கனை எடுத்து கொறிக்க தொடங்கினான், கையில் கத்தியை எடுத்து வந்து சசியின் கழுத்தை வெண்ணை துண்டை போல வெட்ட தொடங்கினான்.
கதவை மீண்டும் திறந்துகொண்டு வெளியே இருட்டில் வந்தவன் மறைந்து போனான் என்று கதை முடிந்தது...
ஆச்சர்யத்தின் உச்சத்திற்கு போனான் விக்ரம், எப்படி நேரில் பார்த்ததைப்போல இவன் கதை சொல்லி இருக்கிறான் என்று தோன்றியது
ஒருவேளை கோயின்ஸடன்ஸா இருக்கலாமோ என்று நினைத்தபடி மூன்றாவது கதையை ப்லே செய்தான்
இரவு 12 மணி
அந்த டூ வீலர் குன்றத்தூர் கோயிலை தாண்டி இடது பக்கத்தில் சென்றது, போக போக வீடுகள் குறைந்துகொண்டே வந்தது இறுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஒருவன் கையை காட்ட அவன் வண்டியை நிறுத்தினான்
“சார் போற வழில கொஞ்சம் என்ன ட்ராப் பண்ண முடியுமா?”
“ஓகே ஏறுங்க “
“இங்க பக்கதுல டாஸ்மாக் ஏதாவது தெரியுமா சார்?”
“இல்ல தெரியாதே”
“வேலைய முடிச்சுட்டு வாங்கலாம்னு இருந்த, மறந்து அப்டியே வந்துட்டன் சார்”
“அதை விட பெரிய போதை ஒன்னு இருக்கு வேணுமா?”
அவனது கண்கள் சந்தோஷத்தில் மின்னியது சார் எங்க சார் கிடைக்கும்
“இங்கதா பக்கதுல இருக்கு போலாமா?”
“சீக்கிரம் போங்க சார்?”
சிறிது தூரம் சென்றபிறகு, பைக்கை புதருக்கு அருகில் நிறுத்தினான்
“ரொம்ப இருட்டா இருக்கே இங்கேயா சார் கிடைக்கும்”
“ஆமா நீங்க நேரா போங்க நா பைக் பார்க் பண்ணிட்டு வரேன்”
“சரிங்க சார் என்றபடி அவன் நடந்து அந்த புதருக்குள் நுழைந்தான்”
அவன் சென்ற உடன் இவன் கையில் உறையை எடுத்து மாட்டிக்கொண்டு கையில் துப்பாக்கியோடு பின்தொடர்ந்தான்
பைக்கை நிறுத்திட்டு வர இவ்ளோ நேரமா என்று நினைத்து திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி
அவன் கையில் துப்பாக்கியோடு நின்று கொண்டிருந்தான்
“இதை ஏன் சார் கைல வெச்சிட்டு இருக்கீங்க என்று நடுங்கிய படி கேட்டான்”
அவன் சிரித்துக்கொண்டே ட்ரிகரை அழுத்தினான் முதல் குண்டு அவன் தலையை துளைத்தது, குண்டுகள் தீர்ந்துபோகும் வரை அவனை சுட்டு விட்டு பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினான் என்று கதை முடிந்தது.
இரண்டாவது கதையை அப்லோட் செய்த நேரத்தை பார்த்தான் விக்ரம் மணி 1 என்று காட்டியது, கலா கொலை செய்யப்பட்ட நேரம் மணி 12 என்று காட்டியது.
உஷாரானான் விக்ரம்
உடனே போனை எடுத்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டரை அழைத்தார்
“சொல்லுங்க விக்ரம் பேசி ரொம்ப நாள் ஆச்சு”
“ஒன்னும் இல்ல சார் ஒரு தகவல் கேக்கத்தான் கால் பண்ண”
“சொல்லுங்க என்ன தகவல் வேணும்”
“உங்க ஏரியால யாராவது சுடப்பட்டு இறந்துருக்காங்கலா?”
“அப்படி ஒன்னும் இல்லையே”
“தாங்க யூ சார் என்று போனை கட் செய்தான்”.
ஒருவேளை நாமே அங்கே சென்று பார்த்தல் என்னவென்று மனது சொல்லியது
உடனே பைக்கை எடுத்து கொண்டு குன்றத்தூரை நோக்கி சென்றான்…..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரியாக ஒரு மூன்று கிலோமீட்டர் தூரம் சென்றவுடன் வானில் கழுகுகள் வட்டமிடுவதை பார்த்தவுடன் விக்ரம் வண்டியை நிறுத்திவிட்டு அந்த புதருக்குள் சென்றான்
சிறிது தூரம் உள்ளே சென்றவுடன் துர்நாற்றம் வீசியது, சில அடிகளில் கொஞ்சம் அழுகிய நிலையில் ஒரு பிணம் கிடைத்தது
ஜார்ஜுக்கு போன் போனது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆரியன் வீட்டிற்கு போலீஸ் சென்றபோது,
வீட்டில் யாரும் இல்லை என்று அந்த பூட்டு சொன்னது
“ஹலோ கண்ட்ரோல் ரூம் 8xxxx xxxx1 உடனே இந்த நம்பரை ட்ரஸோவுட் பண்ணுங்க”
சில நிமிடங்களில் வாக்கி டாக்கி ஒலித்தது
“சார் அந்த பர்சன் கிண்டி தாண்டி போயிட்டு இருக்கான் சார்”.....
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆரியனின் யுவஸ்ரீ வீட்டிற்குள் நுழைந்தான்
“வாடா செல்லம் என்றாள் யுவஸ்ரீ”
“வீட்ல யாரும் இல்லையா யுவா”
“ஆமா யாரும் இல்ல என்று அவனை பார்த்து கண்ணடித்தாள்”
“அப்போ ரொம்ப வசதியா போச்சு” என்று கதவை சாற்றி விட்டு அவளை அணைத்து அவள் உதட்டில் கன்னத்தில் முத்தமிட்டான்
“பேபி என்ன எப்போடா மேரேஜ் பன்னிப்ப?”
“அது ஓகே மாப்பிள யாரு?”
அந்த கேள்வியை யுவஸ்ரீ கொஞ்சமும் எதிர்பாக்கவில்லை
“வேற யாரு நீதா ஆரியன் ?”
“அப்டியா அப்போ இது யாரு” என்று அவன் மொபைலை காட்டினான் அதில் யுவஸ்ரீயை யாரோ ஒருவன் அனைத்துக்கொண்டிருந்தான்
“அது வந்து, இது”
:சொல்லுடி யாரு அது, இவன் மட்டுதனா இல்ல இந்த மாறி நெறய பேர் இருக்காங்களா”
“ஆரியன் மரியாதையா பேசு “
“உனக்கு என்னடி மரியாதை” என்று யுவஸ்ரீயின் கன்னத்தில் அறைந்தான்
“ஏய்! ஒழுங்கா வெளிய போடா இல்லனா போலீசை கூப்பிட வேண்டி இருக்கும்”
“ஒஹோ சரி கூப்டு என்று சொல்லிக்கொண்டு கையில் அந்த துப்பாக்கியை எடுத்தான்”
“ஆரியன் ப்ளீஸ் என்ன எதுவும் பண்ணிடாத”
“இதுலாம் அவன்கூட போறப்போ யோசிச்சிருக்கணும்டி “என்று சொல்லி அவளை சராமாரியாக சுட்டான்
அப்போது அங்கே போலீஸ் நுழைந்தது
“ஆரியன் துப்பாக்கியை கீழ போடுங்க என்று விக்ரமும், ஜார்ஜும் கையில் துப்பாக்கியோடு நுழைந்தார்கள்”
“முடியாது என்ன பண்ணுவீங்க”
”தேவையில்லாம எதுவும் பண்ணாதீங்க ஒழுங்கா துப்பாக்கியை கீழ போடுங்க ஆரியன் என்று விக்ரம் சொல்லும்போதே"
அவன் ஜார்ஜை நோக்கி சுட்டான்
விக்ரம் ஆரியனை பார்த்து சுட அவன் கீழே சரிந்தான்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபல podcaster போலீசாரால் சுட்டு கொலை, தொடர் கொலைகளில் ஈடுபட்டது அம்பலம் என்று முதல் பக்கத்தில் வந்தது
இடம்: ஸ்டான்லி மருத்துவமனை
“நல்லவேளை சார் உங்களுக்கு எதுவும் ஆகல “
“எல்லாம் அந்த கடவுள் ஆசிர்வாதம் விக்ரம் எப்டியோ இந்த கேஸ் முடிஞ்சு போச்சு"
“ஓகே சார் நான் ஆரியன் வீட்ல வேற ஏதாவது எவிடேன்ஸ் இருக்குமான்னு பாக்கிறேன்”
“ஓகே விக்ரம் நீங்க போங்க.”
விக்ரம் ஆரியனின் அறையை ஆராய்ந்து கொண்டிருந்தான், அங்கிருந்த அவன் லேப்டாப்பில் night walker என்பவன் அனுப்பிய மெயில் இருந்தது
அதில் ஆரியனின் காதலியும், இனொருவனும் அணைத்தபடி இருந்தார்கள்
அவன் ஆரியனுக்கு நிறைய மெயில் அனுப்பி இருந்தான், ஒவ்வொன்றாக படிக்க தொடங்கினான் விக்ரம்
அதில் சில கதைகள் இருந்தது, அதை படித்த விக்ரம் அதிர்ச்சி அடைத்தான் அதில் சென்னையில் இருந்த கொலைகள் அப்படியே இருந்தது, கடைசி மெயில் வந்த நேரம் மணி 1 என்று காட்டியது ஆனால் ஆரியன் podcast அப்லோட் செய்த நேரம் மணி 4
உண்மையில் கொலையை செய்தது ஆரியன் தானா என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது
விக்ரமின் தொலைபேசி அடித்தது அதில் unknown நம்பர் என்று காட்டியது
ஹலோ யாரு?
நீங்க ரொம்ப திறமைசாலி சார் இவ்ளோ சீக்கிரமா அவனை கண்டுபிடிப்பிங்கனு நான் எதிர்பாக்கல, அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் சார் இங்க கோயம்பேடுல ரெண்டு பெத்த யாரோ கொன்னுட்டாங்க சார் உடனே வாங்க சார்.
அப்டியே இருங்க உடனே வரேன், நீங்க யாரு பேசுறது
Night walker.
#23
69,690
19,690
: 50,000
395
5 (395 )
xipotop780
manjoy
praveen
Nice
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50