பெண்.........
அவன் இப்போது நாளும் அவளைப் பற்றியே நினைக்க தொடங்கி விட்டான்.
இந்த உலகில் பெண்களை சரியாக புரிந்து கொள்ளாத மடையர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதில் முதல் வரிசையில் இருந்த இவனுக்கு இப்போதாவது புத்தி வந்ததே அது வரை சந்தோஷப்பட வேண்டும்.
இப்போ புத்தி வந்து என்ன பிரயோஜனம். ஷர்மிளா உயிரோடு இல்லையே "
இந்த உலகில் பிறக்கும் எல்லோருக்கும் வாழ்க்கையில் வாழும் காலம் வரை சந்தோசமும், மகிழ்ச்சியும் கொடுப்பவள் பெண் தான்.
அவனுக்கு ஏனோ அன்று அது புரியவில்லை. அவனுக்கு மட்டும் இல்லை சில மடையர்களுக்கு இன்னும் புரியவில்லை.
அப்படி புரிந்து கொண்டு வாழ்ந்தால் அவன் அல்லது அவர்களின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாக தான் இருக்கும் அதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.
ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்.
ஒவ்வொரு ஆணின் வளர்ச்சியிலும் அவளே துணை நிற்கிறாள்.
ஒவ்வொரு ஆணுக்கும்
சுகத்தையும்
இன்பத்தையும் அள்ளி அள்ளி கொடுப்பவள் பெண்ணாக தான் இருக்க முடியும்.
அந்த ஆணின் சுக துக்கங்களில் சரி பாதியாக ஏற்று அவனுக்கு ஆறுதலையும், தேறுதளையும் தரும் அவளுக்கு என்ன பரிசு கொடுத்தாலும் கம்மி தான்.
ஆயுள் முழுவதும் அவளுக்கு நன்றி கடன் பட்ட அவன் மட்டும்.
ஏன் அவளை இவ்வளவு நாள் புரிந்துக் கொள்ள வில்லை?
அவன் மட்டும் அல்ல இந்த சமுதாயத்தில் நூற்றுக்கு தொன்னுற்று ஒன்பது பேர் புரிந்து கொள்ள விலை என்பது வெட்க கேடானது தான்.
பெண் ஒரு ஆணுக்கு எவ்வளவு முக்கியமானவள்?.
இதை அறிந்து அவளை போற்றாமல், புரிந்து கொள்ளாமல் இருக்கும், ஆண் கயவர்களின் வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோசமும் நிச்சயம் இருக்காது.
ஒரு பெண்ணின் கரு முட்டையில் தொடங்கி மண்ணோடு அவன் மறையும் வரையில் ஒரு ஆணுக்கு அவள் செய்யும் தியாகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.
ஒரு ஆணுக்கு பெண்... முதலில் தாயாக இருக்கிறாள்.
அவளின் ஆசை கனவுகள் எல்லாம் அவன் மீது தான் இருக்கிறது.
கண்ணுக்கு கண்ணாக வைத்து எப்போது அவள் வயிற்றில் வளர ஆரம்பித்தானோ அப்போது இருந்தே அவள் வயிற்றில் வளரும் அந்த சிசு மீது அக்கறை கொள்கிறாள்.
கரு கலைந்து போக கூடாது.
கருவில் இருக்கும் குழந்தைக்கு ஒன்னும் ஆக கூடாது என்று நினைத்து அவள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்த குழந்தை வளர்ச்சி அடைய வேண்டும் வளர்ந்து பிறந்து சந்தோசம் தர வேண்டும் என்றே அவள் நினைக்கிறாள்.
இப்படி அவள் அவனுக்காக விந்து அணு கரு முட்டைய்யுள் புகுந்து வளர்ச்சி பெரும் அந்த நொடியில் இருந்தே அவளின் தியாகம் தொடங்கி விடுகிறது.
இதை யாரும் உணர்வதில்லை...
ஏன்.... ஏன்.... ஏன்...?
அவள் நினைத்து இருந்தால் நிச்சயம் உன்னை கர்ப்பத்திலே கலைத்து இருக்க முடியும்
ஆனால் அவள் அப்படி செய்ய மாட்டாள்.
உன்னைப் பொறுத்த வரை அவள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வித்தியாசமாக தான் தெரியும்.
உன் கண்ணுக்கு இன்னும் அவளின் அருமை பெருமை தெரியவில்லை என்றால் நிச்சயம் நீ மிருகத்தை விட கீழ் தரமானவன் தான்.
ஆண்டவன் யார்?
அவன் எங்கே இருக்கிறான்?
என்ன செய்கிறான்?
உங்களில் யாராவது நேரில் பார்த்து அவனிடம் பழகி பேசி இருக்கிறீர்களா....!!
உண்மையை சொல்லணும்.
உண்மையில் யாரும் பார்த்து இருக்க முடியாது.
காரணம் அவன் அந்த இறைவன் ஒரு தாயின் உருவில் உன் அருகே உன்னிடமே. ஒரு சக்தியின் வடிவில் இருக்கும் போது நீ எப்படி பார்க்க முடியும்?.
எல்லோருக்கும் இன்றைக்கு கோயில் போகிறார்கள்.
உயிர் இல்லாத சிலையை வணங்குகிறார்கள்.....
பாவிகள்....
ஆமாம் நான் அப்படி தான் சொல்வேன்.
உயிரோடு உன்னருகில் உனக்காக வாழும் தெய்வத்தை விட்டு. கற்பனையில் உரு கொடுத்து சிலை வடித்து வணக்கும் ஒரு பேசாத, பார்க்காத, கல்லிட்டம் பேசுகிறாய்.
இதை தான் என்ன வென்று சொல்வது?
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய்...
அவன் இதை இப்போ நினைக்க தொடங்குகிறான்.
அவன் ஒரு கல்வியியல் நிபுணர் பட்டம்..
வாழ்க்கையில் முக்கால் பகுதியை கடந்து விட்டவன்.
அவனது கடந்து போன வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறைந்த வாழ்க்கை தான்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை சந்தோசமாக அமைவதும் இல்லை சோகமாக அமைவதும் அவரவர் கையில் தான் இருக்கிறது.
இவன் சந்தோசம் இவனால் கெட வில்லை...
ஆமாங்க....
உண்மை தான்...
இவன் சந்தோசம் கெட பல கரணங்கள் இருக்கு அதை தான் இந்த கதை..
அந்த கொல்லை மேடு கிராமம். எல்லோரும் மேட்டுக்கொல்லை
மேட்டுக்கொல்லை என்று தான் அந்த குக் கிராமத்தை அழைப்பார்கள்.
அங்கே ஒரே இடத்தில் வீடுகள் இருக்காது.
கொல்லை மேட்டில். இல்லை மேட்டுக் கொல்லையில் மட்டும் இருப்பது வீடுகள் இருக்கும்..
எல்லாம் கூரை வீடுகள் தான். காங்கிரட் வீடு என்பது இல்லை.
அங்கு எல்லோருக்கும் விவசாய நிலம் தான் ஐந்து ஏக்கர், மூன்று ஏக்கர் என்று இருக்கும். அதில் தான் அவர்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை.
விவசாயம் தான்....
நெல், கரும்பு, வாழை, என்று அவரவர்கள் நிலத்தில் பயிரிட்டு அவர்களின் வீட்டுக்கு தேவையான வற்றை வைத்துக் கொண்டு அதிகம் இருப்பதை சந்தையில், அல்லது வியாபாரிகளிடம் விற்று சந்தோசமா வாழ்ந்து வந்தார்கள்.
இந்த மேட்டுக்கொல்லையில் அதிகமாக நிலத்திலே மஞ்சம் பில்லினால் நெய்து கட்டிய வீடு இருக்கும்.
அது ஐந்து அங்கணம் அல்லது மூன்று அங்கணம் என்று சொல்லுவார்கள்.
அந்த கூரை மஞ்சம்பில்லின் வீட்டில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும் சமையல் அறை சின்ன அறையாக இருக்கும்.
குளிக்க வெளியே மறைவாக இருக்க தடுப்பு கட்டி இருப்பார்கள்.
இயற்கை கழுவுகளுக்கு சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு காற்றோட்ட வசதி கொண்டு கழனி காட்டுக்கு போய் விடுவார்கள்..
ஏரி, குளம் ஆறு என்று பக்கத்தில் இருக்கும், அங்கே போய் குளித்து முடித்து விட்டு பிரெஷ் ஆகி வருவார்கள்.
பல்லு தொலைக்க இவர்களுக்கு வேப்பங் குச்சியும், ஆலங்குசியும் தான்..
வீட்டில் இருப்பவர்களுக்கு அடுப்புக் கறி, சாம்பல் அல்லது செங்கல் தூள் தான்.
இன்னும் கூட இங்கே மாற்றங்கள் வர வில்லை என்பது தான் ஆச்சரியம்.
இங்கு வாழும் மக்கள் எல்லாம் ரெடியார், வன்னியர், குருமன்ஸ், முஸ்லீம் என்று இந்த ஜாதியை சேர்ந்த வர்கள் தான்.
ஆனால் எப்போதும் இவர்களுக்குள் இந்த ஜாதி சண்டைகள் இந்த நாள் வரை வர வில்லை.
எல்லோரும் மாமன், மச்சான்,அண்ணன் தம்பி, பங்காளிகள் போல் தான் உறவு வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
இவர்களின் ஒற்றுமை கண்டு எல்லோருக்கும் பொறாமை தான் வரும்.
பெண்..........
ஆமாம்....
பெண்ணில் கலந்து பெண்ணில் வளர்ந்து பெண்ணின் துணையோடு வாழும் உனக்கு பெண்ணின் அருமை பெருமை மட்டும் ஏன் தெரியவில்லை.
கழிசட்டைகள்......
பெண்ணிற்கு பாதுகாப்பு தர வேண்டிய நீ. பெண்ணிற்கு ஈனத்தனமான செய்யல்கள் செய்வது ஏன்?
உன் வாழ்க்கையின் பயத்தில் உன் கூட துணையாக வருவது பெண் தானே!
பிறப்பு என்ற ஊரில் இருந்து இறப்பு என்ற ஊர் வரை உன்னோடு இருப்பவள்.
உன் கூடவே பயணம் செய்துக் கொண்டு இருப்பவள்..
இந்த நீண்ட தூரத்தில் எத்தனையோ சிக்கல்கள், எத்தனையோ வீழ்ச்சிகள், எழுச்சிகள், மாற்றங்கள், ஏமாற்றங்கள், எத்தனையோ அனுபவங்கள்.
இதில் உன்னோடு துணையாக வாழ்க்கை துணையாக பயணம் செய்யும் அந்த உள்ளம். பெண் உள்ளத்தில் எத்தனையோ ஆசைகள் கொட்டி கிடக்கிறது. அதில் எதாவது ஒன்றைப்பற்றி நீ கேட்டு இருக்கிறாயா!.
இல்லை
தெரிந்துக் கொள்ள முற்பட்டு இருக்கிறாயா!
அவளுக்கென்று ஆசைகள், அவளுக்கென்ற கனவுகள்,
அவளுக்கென்ற ஏக்கங்கள் என்ன என்பது பற்றி நீ ஒரு முறையாவது கேட்டோ அல்லது தெரிந்துக் கொள்ளவோ ஆசைப் பட்டு இருக்கிறாயா!
பைத்தியக் காரா...
நீ ஒரு சுயநல வாதி தான்.
நீ மட்டும் இல்லை உன் ஜாதியே அப்படி தான்.
உன் ஆண் ஜாதியின் ஆத்திகம் தான் அதிகம்.
உன் உடல் பசிக்கு மட்டும் அவள் விருந்து அளிக்க வேண்டும்.
உன் இச்சை களுக்கு மட்டும் அவள் உடன் பட வேண்டும்..
ஆனால் ஆர்வமில்லாத சினேகிதமாக நீ இருப்பாய்.
ஒவ்வொரு நிமிடமும் அவள் மீது சந்தேகப்பட்டே அவளை கொல்கிறாய் இதில் என்ன நியாயம் இருக்கிறது.
ஷர்மிளா.........
இளமை ததும்பும் அவளின் விழிகளில் தான் எத்தனை ஏக்கம்?
அவளின் உள்ளத்தில் தான் எத்தனை கனவுகள்.
மேட்டுக்கொல்லை ஒரு அழகான வயல் வெளிகள் கொண்ட கிராமம்.
இங்கே தார் சாலைகள் இல்லை. ஓங்கி வளர்ந்து இருக்கும் தென்னை மரங்கள் இருக்கும்....
இன்று கூட அதை நினைத்து கண்ணீர் சிந்துகிறான். இதனால் என்ன லாபம் இருக்கு.
இருக்கும் போது அதன் அருமை, பெருமைகள் அறியாமல், அது தெரியாமல் காலம் கடந்து எல்லாம் முடிந்து விட்டாப்பின்.
கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் தான் இருக்கிறது.
பைத்தியங்கள்..
உலகில் இருக்கும் எல்லாம் உயிரினங்களுக்கும் ஆண்டவன் ஒரே மாதிரி ஆசை, பசங்களை, இன்னப்பெறுக்க ஆர்வத்தை வைத்து படைத்து வைத்து இருக்கிறான்.
ஆனால் மிருகங்கள், பறவைகள், எல்லா உயிரினங்களும் மனிதனை தவிர அது ஒரு பசியாக தான் உண்டு மகிழும். பசி ஆரியப்பின் அதுகள் அந்த ஆர்வதில் மிதப்பதில்லை.
ஆனால் மனிதன் மட்டும் அந்த மிருகங்கள், பட்சிகளில் இருந்து மாறுபட்டு கீழ் தரமாக நடந்துக் கொள்கிறான்.
அதனால் தான் அழிவின் பாதைக்கே செல்கிறான்.
ஷர்மிளா ஒன்றும் அதிகமாக படிக்க வில்லை. பத்தாம் வகுப்பில் அறிவியல், ஆங்கிலம், இரண்டு பாடங்களில் இருப்பது மதிப்பெண்களுக்கு மேல் அவளால் எடுக்க முடியவில்லை.
அவளும் எவ்வளவோ முயற்சி செய்து பணம் கட்டி மீண்டும் மீண்டும் தேர்வு எழுதினாள்.
ஹு ஹும் தேர்ச்சி பெறவில்லை. அவள் ஐந்தாம் வகுப்பில் குள்ளநரியும் திராட்சையும் கதை நினைவுக்கு வந்தது.
திராட்சை தின்ன ஆசைப் பட்ட குள்ளநரி எம்பி எம்பி குதிக்கிறது.
திராட்சை கொத்துக்குகள் உயரத்தில் இருக்கிறது.
எவ்வளவு முயற்சி செய்தும் அதுக்கு திராட்சை கொத்துக்கள் வாய்க்கு எட்டவில்லை. தோல்வி தான். இறுதியில் ச்சீ.. ச்சீ... இந்த பழம் புளிக்கும் என்று ஓடி போய் விட்டது.
இந்த கதை நினைவுக்கு வந்தது.
அவளுக்கு வயது பதினெட்டு சின்ன வயது.
பதினெட்டு வயது பருவ மங்கை..
பால் போன்ற முகம்
பளிங்கு சிலைப்போன்ற தோற்றம்.
அவள் அப்பா குருநாதன்
அம்மா செம்பவளம்
திருச்சங்கோட்டில் தான்இருக்கிறார்கள்.
அப்பா லாரி டிரைவர் அவர் டிரைவராக ஹைத்திரபாத், டெல்லி, என்று தோலை தூரம் சரக்கு ஏற்றிக்கொண்டு போய் மாதக் கணக்கில் வீட்டிற்றிக்கு வர மாட்டார்.
இதன் விளைவு அவளின் அம்மா வின் நடத்தையில் மாற்றம்.
அவள் கணவன் இல்லாததால் அவளும் எத்தனை நாள் பார்ப்பாள்.
வீட்டுக்கு செலவுக்கு கொஞ்சம் கூட பணம் கொடுப்பது இல்லை..
வெளியே லாரி லோடு எடுத்துக் கொண்டு போன்னால் இங்கே குடும்ப செலவுக்கு காசும் கொடுக்கவில்லை..
என்றால் என்ன செய்வாள்?
வீடோ வாடகை வீடு.
வீட்டுக்கு வாடகை எத்தனை மாதம் கொடுக்காமல் இருக்க முடியும்?
பால் காரனுக்கு பாக்கி, மளிகை கடைக்காரனுக்கு பாக்கி, கரண்ட் பில் கட்டமுடியவில்லை, காய்கறி அரிசி பருப்பு மளிகை சாமான்கள் வாங்க முடியாத நிலை.
அக்கம், பக்கம் எல்லோரிடமும் கடன் வாங்கி கொடுக்க முடியாமல் காரி துப்பும் நிலை. திடீரென்று உடம்புக்கு சரி இல்லை என்றாலும் டாக்டர் யிடம் காட்ட. மருந்து மாத்திரை வாங்க கூட பணம் இல்லாத நிலை அவள் அம்மா ஷர்மிளாவின் அம்மா என்ன செய்வாள்?
குடிக்கார கணவன் குடும்பத்துக்கு ஐந்து காசு கொடுக்க வில்லை.
போனவன் எப்போ வருவான் என்று தெரியாது.
அவன் வந்தாலும் குடும்ப செலவுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டான்.
சம்பாதித்து கொண்டு வந்த காசு எல்லாம் கூட்டாளிகளோடு சேர்ந்து அவன் மீண்டும் மாங்காய், தேங்காய் லோடு ஏற்றி நாகப்பூர், ஷோலப்பூர் போவதரற்குள் குடித்து காலி செய்து விடுவான்.
இப்படியான சூழ்நிலையில். ஷர்மிளாவின் தாய் வழிப் பாட்டி ஷர்மிளாவை வேலூர் மாவட்டம் திருப்பத்துருக்கு சின்ன வயதில் கூட அழைத்து வந்துஆதரவற்ற இலவச மாணவிகள் விடுதியில் சேர்த்து அவர்கள் நடத்தும் மகளீர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட்டாள்..அவளும் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்தாள்.
திருச்சங்கேட்டில் இருக்கும் அவளின் தாய் அவளுக்கு பிடித்த ஒருவனோடு கலியாணம் செய்யாமலே சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டாள்.
ஊர் என்ன சொன்னாலும் இந்த உலகம் என்ன சொன்னாலும் அவள் அதற்கு கொஞ்சம் கூட அசிங்கப்பட வில்லை.
வயிற்று பசியோடு உடல் பசியும் அவள் தீர்த்துக் கொண்டாள்.
இந்த விஷயம் அறிந்து அவளின் தாய் ஷர்மிளாவின் பாட்டி அங்கு மகளைப் பார்க்க போவதில்லை.
இங்கே இருக்கும் ஷர்மிளாவிற்கும் அவள் தாயின் வாழ்க்கை நடத்தைப் பற்றி தெரியாமலே ஹாஸ்டலில் வளர்ந்தாள் ஷர்மிளா...
எப்போவாவது அவளின் தாய் வருவாள் அவள் அவளின் தாயின் முகத்தில் முழிக்க முடியாமல். மகள் படிக்கும் ஹாஸ்டல் சென்று கேட்டிற்கு அருகில் நின்று பார்த்து விட்டு. மகளுக்காக அழுது விட்டு வாங்கி கொண்டு வந்த திண்பண்டங்களை பழங்களை கொடுத்து விட்டு கை செலவுக்கு எதாவது வாங்கி கொள்ள சொல்லி நூறு ரூபாயோ இல்லை இருனூறு ரூபாயோ கொடுத்து விட்டுப் போவாள்.
பாவம் தானே ஷர்மிளா.....
≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥
#666
50
50
: 0
1
5 (1 )
nazar
Check out my story "How are you ?"
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50