கொம்பன்

RamyaNatarajan
கற்பனை
4.9 out of 5 (14 Ratings)
Share this story

ஒரு நாள் காலார நடந்து செல்கையில் ஒரு மரத்தின கொம்பொன்று பொத் என்று என் தலையில் விழுந்தது.தலையைஸதடவியபடி அந்த கொம்பை எடுத்தேன்.இது எந்த மரத்தினுடையநு என்று அன்னாந்துப் பார்த்தேன்.அது அங்கிருந்த எந்த மரதிதினுடையதும் இல்லை.ஆச்சரியம் மேலிட அந்த கொம்பை உற்று நோக்கினேன்.பார்ப்பதற்கு சாதாரண கொம்பாய் தானிருந்தது.சுமார் ஒன்னரை அடி நீளம்.பழுப்பும் சாம்பலுமாய் நிறம்.அழகாய் தான் இருந்தது.ஆனால் என்ன பயன்.தூக்கி வீச நினைததேன்.ஏனோ மனம் வரவில்லை. சரி வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.எதற்காவு பயன்படும் என்று கையில் எடுத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தேன்.

எதிரில் என் வெகுநாள் நண்பர் வந்தார்.பார்த்து பல நாள் ஆயிற்று."என்ன சந்தானம் எப்படி இருக்கீங்க..எங்க ஆளையேக்காணோம்"

"அது ஏன் கேட்கறீங்க.ஊருக்கு போயிருந்தேன்.உறவுக்காறங்க.பஞ்சாயத்து.என்னவோ உறவுக்காரங்க.எல்லாம பாசாங்கா இருக்கு.காலம் சரியில்லைங்க"

"உறவுகள்ன்னா அப்படி தான் சந்தானம்.இப்ப பாருங்க அஞ்சு விரலும் ஒரே போலவா இருக்கு.அது அது காலம் வந்தா சரியா போகும்.கவலைய விடுங்க.சரி...உங்க பையனுக்கு கல்யாண விசயம் என்ன ஆச்சு..அமைஞ்சதா.. ஏன் கேட்கறேன்னா..என்வீட்டுகாரம்மாவோட சிநேகிதி பொண்ணு ஒன்னு இருக்கா..நல்ல படிப்பு.நல்ல குணம்.படு சுட்டி.ஜாதகம் ஒத்து வருதான்னு பார்க்கலாமேன்னு தோணிச்சு அதான்"

"நல்லதுங்க.எங்கயும் அமையல.அந்த பொண்ணு ஜாதகம் பார்க்கலாங்க.உங்க மூலமா நல்லது நடந்த சந்தோஷம் தானே"

"அட நீங்க ஒன்னும் அந்த மனுஷாள பார்க்கவேண்டாமா..சட்டுன்னு பொருத்தம் பார்க்கலாங்கறீங்க..யார் எவர் கூட கேட்கல"

"நீங்க எனக்கு எப்பவும் நல்லதே தானே நினைப்பீங்க.உங்க மனசுல பட்டுச்சுன்னா சரியாத்தான் இருக்கும்"

"அது சரி..ஆனாலும் நீங்க ஒரு தரம் அவங்கள பார்த்துட்டு எந்த முடிவும் பண்ணுங்க.அவசரம் வேண்டாம்"

சொல்லிமுடிக்கும்போது எதிர்திசையில் என் மனைவியின் தோழியின் கணவர் வந்துகொண்டிருந்தார்.

"அட..நீங்க எங்க இந்த பக்கம்.நூறு ஆயுசி போங்க.இப்ப தான் இவர் கிட்ட உங்கள பத்தி சொல்லிட்டிருந்தேன்.இவர் என் நணபர் சந்தானம்.சந்தானம்!இவர் தான் நான் இப்ப சொல்லிட்டு இருந்தேன்ல..பரமசிவம்"

"வணக்கங்க..என்ன பத்தி என்ன.எப்பவும் பக்கத்து பார்க் தான வாக்கிங் போவேன்.இன்னைக்கு என்னவோ இந்த பக்கம் வனரனும் போல இருந்துச்சு."இது பரமசிவம்.

"அதுவும் நல்ல்துக்கு தான்.நேர விஷயத்துக்கு வரேன்.சந்தானம் தன் பையனுக்கே பொண்ணு தேடிட்டு இருக்காரு.உங்க பொண்ணு பத்தி சொன்னேன்.அவ்வளவு தான.இனி நீங்க பேசிகுங்க.நாம அப்புறம சந்திப்போம்"

விடைபெற்றுகொண்டு ஏதோ சாதித்த சந்தோஷத்தில் அங்கிருந்து புறப்பட்டேன்.தூரத்தில் இருவரும் கலகலவென சிரித்து பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது.மனதில் சிரித்துகொண்டேன்.திரும்பிக்கொண்டு பார்த்து வந்ததில் ஒரு கல் என் காலை பதம் பார்த்தது. சிறிது இரத்தம் கூட வந்தது.கல் மீது எரிச்சல் வந்தது.கையில் இருந்த கொம்பால் கல்லை அடித்தேன்.இப்போது கையும் வலித்தது.வலி பொறுக்க மாட்டாமல் அங்க இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தேன்.பலரும் என்னைத்தாண்டி சென்று கொண்டிருந்தனர்.அதுவே எரிச்சல் தந்தது எனக்கு.

ஒருத்தன் அடிபட்டு உட்கார்ந்திருக்கேன் எனக்கென்னான்னு போறாங்க.கேட்பாரில்ல.அதோ போறானே...தினமும் அவ பின்னாடி என்னைக்கு அடி வாங்கப்போறானோ..இந்த மவராசி வாக்கிங் வருதா வம்பளக்க வருதா..எப்பவும் மருமவள வறுக்கனும்..இதுக்கெல்லாம் ஒரு பக்கம இழுத்தா தான் எவ செய்வான்னு தெரியும்..வந்துட்டான் ஜோல்னா பை ஒன்னு தூக்கிகிட்டு.கவிஞர்னு நெனப்பு..வீட்டுலேயே தனி ரூம்ல குடித்தனம்.புள்ள பேரன் ஒன்னும் பாசம் இல்ல.பென்ஷன் வர திமிரு..இவனெல்லாம் தனிமரமா விடனும்.சாப்பிடுன்னு கூட சொல்ல ஆளில்லாம.

ச்சை என்ன உலகம் இது.எல்லாமீ நாடகம்.ஆமா எனக்கு என்னவோ..என் புள்ளைக்கு எப்படி வாய்க்குமோ...அடடா போயும் போய் அந்த சந்தானம் புள்ளைக்கு பரமசிவம் பொண்ண பேச வச்சேனே...முட்டாள் நான்.ஏன் என் பையனுக்கு கேட்க தோணல.அவ என் பொண்ணு போல..இருந்தா என்ன மருமவளும் பொண்ணு தானே..சிரிச்சு சிரிச்சு வேற பேசினாங்க..அமைஞ்சிடும..அது எப்படியாவது நின்னுட்டா பரவாயில்ல.என் புள்ள அளவுக்கு சந்தானம் புள்ள இல்ல.ம்ம்ம் முட்டாள் முட்டாள்.

என்ன அங்க கூச்சல் குழப்பம்.பெருங்கூட்டம்.எழுந்து பார்க்க ஓடினேன்.ஆம் இரத்தம் வழியும் காலோடு தான். அந்த வாலிபம் தர்ம அடி வாங்கிக்கொண்டிருந்தான்.

"நிறுத்துங்க பா..ஏன் இப்படி சாத்தறீங்க...ஏதாவது ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிட போவுது."

"புள்ளையா தருதல..இந்த பொண்ணுகிட்ட பப்ளிக்கா தகாதமுறையில நடந்தா வேடிக்கை பார்ப்பாங்களா"கூட்டத்தில் ஒருவன்.

"அதுசரி அடி பலமா விழுது.பாவம்.திருந்திடுவான்.விடுங்க"

"ஆமா வந்திடுங்க பரிஞ்சிகிட்டு...உங்க வீட்டு பொண்ணுன்னா சும்மா இருப்பீங்களா...பேசாம போயிருங்க பொருசு"

இவன் என்ன ஹீரோ மாதிரி..நாளையிலிருந்து இவனும் தான் அவ பின்னாடி சுத்தபபோறான்.பெரியவங்களுக்கு மரியாதையே இல்ல..ம்ம்ம்..அந்த கூட்டத்தில் ஒரு பெண் மயங்கி விழுந்தாள்.அய்யா வாங்க வாங்க இந்தம்மாக்கு வலிப்பு போல தெரியுது.இழுத்துக்இட்டு கிடக்காங்க.கூட்டம் குழப்பம் நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது. அந்தம்மாவின் மருமகளுக்கு போன் பறந்தது..அவளும் வந்தாள்.'அத்தை அத்தை பயப்படாதீங்க நானிருக்கேன்'.எல்லாம் கன நேரத்தில்.

அருகில்அ நின்ற ஜோல்னா பை ஆசாமி"அப்பாடா எப்படியோ அந்தம்மா பொழச்சிடுவாங்கன்னு நம்பறேன்.கடவுள் விட்ட வழி.ஆனாலும் அந்தம்மா வாயத்திறந்தா மருமவள அப்படி ஏசும்.கடவுள் இருக்கான் சார்..இவங்க மாதிரி ஆளுக்கு"என்றார்.

"அப்ப உங்களப்அபோல ஆளுக்கு?"குரல் கேட்டு திரும்பினோம்.ஒரு இளைஞன் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தான்."என்ன அப்பா பார்க்கறீங்க.ஊர்ல இருக்கிறவங்க கதையெல்லாம் நல்லா பேசுவீங்க.முதல்ல நீங்க எப்படின்னு யோசிங்க.உங்க கூட இனி பேச என்ன இருக்கு.பொறுமை போயிடுச்சு பா.நானும் என பொண்டாட்டியும் புள்ளையும் கிளம்பறோம்.இனி நீங்க உங்க வீட்டில சந்தோஷமா இருங்க.எங்க போறோம்னு கூட தெரியபடுத்த விரும்பல.வீட்டு சாவி கொடுக்க வந்தேன்...ம்ம்ம் புடிங்க.உங்க மருமவ இராத்திரிக்கு சமைச்சு வச்சிருக்கா..."சாவியை அவர் கையிலீ திணித்து விட்டு விறுட்டென்று சென்று மறைந்தான்.மகன் போன திசை பார்த்து விழித்த அவருக்கு ஆதரவாய் தோள் தொட்டேன்.என் கையை உதறிவிட்டு நடந்தார். பாவம் அவர் என்று தோன்றியது.

"அய்யா உங்க கால்ல ரத்தம்.இந்தாங்க தண்ணீ.போட்டு கழுவுங்க.அப்புறம் இந்த பேன்ட்எய்ட் போடுங்க.சரியாகிடும்.இல்லன்னா தூசி போய் காயம் பெரிசாகிடும்"மெல்லிய சிரிப்பும் குறும்பு பார்வையுமாய் சிறுவன் ஒருவன் நின்றான்.இனிமையான கனிவான குரல்.அதில் மயங்கி அவன் கொடுத்த தண்ணீரையும் பேன்ட்எய்டையும் வாங்கி சுத்தம் செய்து கொண்டேன்.நன்றி சொல்ல திரும்பினேன்.அவனைக்காணவில்லை.ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. எவ்வளவு நேரம் போனது என்று கூட நினைவில் இல்லை.மறுபடி அங்கு ஒரு பெஞ்ச்சில் அமர்ந்தேன்.அலைபேசி அலறியது.

"என்ன சந்தானம்"

"என்னவா..பரமசிவம் ன்னு ஒருத்தர் அறிமுகப்படுத்தி வைச்சீங்களே..அவர் பொண்ணு வேற யாரையோ காதலிக்கறாங்களாம்.உங்களுக்கு தெரியும்ன்னு வேற சொல்றாங்க அந்த பொண்ணு.இப்படி மாட்டிவிட்டீங்களே...சரியாவா இருக்கு.எனக்கு கொஞ்சம் அசிங்கமாகிட்டுது.போங்க"அலைபேசியை டொக் என்று அணைத்தார்.காது சுட்டது.எதுவும் புரியவில்லை. குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றேன்.உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சி. பரமசிவம் அவர் பெண்ணுடன் நின்றிருந்தார்.அவள் கையை பிடித்தபடி என் மகன்.விஷயம் ஒருவாரு புரிந்தது.

அவன் ஏதோ பேசினான்.அவள் ஏதோ பேசினாள்.என் மனைவி சந்தோஷத்தில் குதித்தாள்.பரமசிவம் என்னை தழுவி கொண்டார்.நான் எதிர்பார்க்காத நிகழ்வு.நான் பெண்ணாய் நினைத்தவளே என் மருமகளாக.மகிழ்ச்சி தான் எனக்கும்.திருமண தேதி குறித்தாயிற்று.வீட்டில் மகிழ்ச்சி நிறைந்தது.

தன் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய என் மனைவி கோயில் சென்றுவந்தாள்.என்றைக்குமில்லாமல் இன்று மிகுந்த படபடப்புடன் இருந்தாள்.

"என்னம்மா ஒரு மாதிரி இருக்க.உடம்பு சரியில்லையா.அன்னதானம் நல்லா செய்துட்டயா"

"உடம்புக்கு ஒன்னுமில்ல.வயசாசுன்னா இப்படி தான்.முடியறதில்ல.எல்லா வேலையும் நானே செய்யனும்.பொண்ணா பொறந்தா ஓய்வேயில்ல"இது அவள்..ஆனால் அவள் இப்படி பேசுபவள் அல்ல.

"அதுக்கென்ன கொஞ்ச நாள்ல மருமக வந்திடுவா.உன் பாரம் குறையத்தானே போகுது."

"என்ன குறையும்.அவ பேக் மாட்டிகிட்டு அவனோட ஜோடியா வேலைக்கு போயிடுவா.அவளுக்கும் சேர்த்து நான் சுத்தனும்.அப்புறம் அவ புள்ளைய வளரக்கனும்..இதே தான்.என்னவோ என் ஜென்மா"

"என்னம்மா நீ இப்படி நினைக்கறவ இல்லையே...ஏன் என்னாச்சு"

"என்னவோ ஆச்சு.நீங்க வந்து அந்த காய் நறுக்கி கொடுங்க.வேலைய முடிக்கறேன்."

ஒரு நாளும் இப்படி பேசுபவள் அல்ல என் மனைவி.சரி சமையல் அறையில் உதவலாம் என்று சென்றேன்.ஃப்ரிட்ஜ் மேலிருந்து என் தலையில் ஏதோ விழுந்தது. எடுத்தேன்.கொம்பு.அதே கொம்பு.பதறிப்போய்

"ஏம்மா இந்த கொம்பு எங்கிருந்து?"

"கோவில்ல இருந்து வரும்போது என் மேல விழுந்தது.தூக்கி போட மனசு வரல.அதான் கொண்டு வந்தேன்.ஏன்"

"ஒன்னுமில்லமா சும்மாதான் கேட்டேன்"

கையில் எடுத்தேன்.மனம் பின்நோக்கி போனது.அன்று சந்தானம் டொக் என்று அலைபேசி வைத்தும் ஒன்றும் புரியாமல் நடந்து வந்தவர் மறதியாக அந்த கொம்பை விட்டிருந்தார்.இன்றுவரை அதன் நினைவு வரவில்லை. அவர் எண்ணவோட்டத்தை கலைத்தது வாசலிலிருந்து ஒரு குரல்.

"அம்மா அம்மா.."

வாசலில் வந்து பார்த்தேன்..அவனா இவன்...அவனை போலத்தான் இருக்கிறது.ஆனால்....

"அய்யா அம்மா கோயிலிருந்து வரும்போது ஒரு கொம்பு கொண்டாந்தாங்க அது என்னுடையது.விளையாடுமபோது தவறுதலா போட்டுட்டேன்..அதோ உங்க கையில இருக்கே அதான் அதே தான்"

எதுவும் புரியாமல் அவனிடம் நீட்டினேன்.கையிலிருந்து வாங்க வந்தவன் கைகளைப் பற்றினேன்.

"தம்பி இது வேண்டாம் பா...வேற கொம்பு எடுத்துக்க விளையாட.இதை நீ கையாள முடியாது பா"

கலகலவென சிரித்தான்.என் கையிலிருந்துவாங்கிக்கொண்டு சிட்டாய் பறந்தான்.கொஞ்ச தூரம் தள்ளி சென்று திரும்பி ஒரு சிரிப்பு சிரித்தான்.கையில் அந்த கொம்பை சுழற்றிக்கொண்டே திரும்பி ஒடினான்.

Stories you will love

X
Please Wait ...