முதல் நீ முடிவு நான்

ya
காதல்
4.5 out of 5 (8 Ratings)
Share this story

அபி பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தால். மனதில் ஏதோ இனம் புரியாத தவிப்பு உழன்று கொணடே இருந்தது. அவன் என்ன ஞாபகம் வச்சிருப்பான? அவன் கருப்பு சட்டைல பாக்க எனக்கு புடிக்கும் னு அவனுக்கு தெரியும் ஒருவேளை இன்னக்கி கருப்பு சட்டை போட்டுட்டு வந்தா அவனும் என்ன எதிர்பார்த்துதான் வந்திருக்கான்னு புரிஞ்சிக்கலாமா? மனதிற்குள் யோசித்தபடியே தூரிகையில் பௌடெரை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டாள், மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் கூட சிறிதாய் தெரியும் அளவிற்கு ஒரு பொட்டு அவ்வளவு தன் தோழி அஞ்சனாவின் கல்யாணத்திற்கு போக தயாராகிவிட்டால் அபி.

"அம்மா நா கிளம்பிட்டேன் எல்லாம் நல்லருக்குள்ள?" பக்கத்தில் முருங்கை கீரையை உருவிக்கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டால் அபி.

"நல்லா இருக்கு... கொஞ்சம் பெரிய பொட்டு வாசிக்கிவிட்டா இன்னும் நல்லாருக்கும், கல்யாண வீட்டுக்கு போற கொஞ்சம் பூ வச்சிக்கலாம்ல, தங்க நகை போட்டுட்டு போன இன்னும் பார்வையா இருக்கும்"...

"யம்மா யம்மா நிறுத்துங்க மா...தெரியாம உங்கட்ட கேட்டுட்டேன்...ஆள உடுங்க பேசாம கீரையைவே உருவுங்க". சலித்துக்கொண்டாள் அபி.

இப்படியே ஏட்டிக்கு போட்டியாவே பேசிக்கிட்டிரு என்றவாரே அம்மா வெடுக்கென்று கிள்ளினால். முருங்கை இலையை!

பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஹாரன் சத்தம் கேட்டது. "ம்மா... ஜெஸ்ஸி வந்துட்டா நாங்க கிளம்பறோம் மா" வாசல் நோக்கி விரைந்தாள் அபி.

"ஏலேய் ஜெஸ்ஸி அப்பதையே கிளமிபிட்டேன்னு மெசேஜ் அனுப்பியிருந்த ஏன் லேட்டு? அத ஏன் கேக்கற நான் கிளம்பி வெளிய வர நேரம் கருப்பு சுடிதார் போட்டுட்டு கல்யாண வீட்டுக்கு போக கூடாதுன்னு அம்மா கடுப்பேத்திட்டாங்க போய் டிரஸ் மாத்திட்டு அதுக்கு மேட்சா கொஞ்சம் மேக்கப் சரி பண்ணிட்டு வர லேட் ஆயிருச்சு". இவ்ரகள் பேசி முடிப்பதற்குள் அம்மா வெளியில் வந்து "ஏம்மா ஜெஸ்ஸி உள்ள வந்துட்டு போயேன்" என்றாள். "ஏற்கனவே லேட்டா ஆயிருச்சு மா இன்னோர் நாள் வரேன்" என்றவரே இருவரும் புறப்பட்டனர்.

கல்யாணம் சேரன்மகாதேவியில். அம்பாசமுத்ரத்திலிருந்து புறப்பட்டால் வழியில் தாமிரபரணி ஆற்றுப் பாலம் இருக்கும். அது தனது குளுமையாலும் ஈரப்பத்தினாலும் தன்னை கடந்து செல்பவர்களின் இதயத்தோடு ஒரு கட்டிப்பிடி வைத்தியத்தை நிகழ்த்தும். ஆனால் அன்று அபிக்கு அந்த வைத்தியம் நிகழவே இல்லை. வெளியில் இயல்பாய் தெரிந்தாலும் அவளது மனம் இன்னும் புழுக்கத்திலேயே தகித்துக் கொண்டிருந்தது. ஸ்கூல் பிரிஎண்ட்ஸ் நிறைய வருவங்கள்ல டி எல்லாரையும் பார்க்க ஆர்வமா இருக்குல்ல என தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் ஜெஸ்ஸிக்கு உம் கொட்டியபடியே பள்ளி நாட்களை அசைபோட தொடங்கினாள் அபி.

மகேந்திரன் அம்பாசமுத்ரத்தில் இருந்த ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அன்று முழுவாண்டு விடுமுறை முடிந்து பள்ளித் திரைக்கும் நாள். பள்ளித்திருந்த கடுப்பிலும் நீண்டால் கழித்து நண்பர்களை பார்க்கப்போகும் ஆர்வத்தில்ழும் பள்ளிக்கு வந்தான் மாஹி. இந்த வருடம் அவன் ஒன்பதாம் வகுப்பு எப்போதுமே ஒன்பதாம் வகுப்பென்றால் நிறைய புதிய மாணவர்கள் வந்து சேர்வது வழக்கம், இப்படித்தான் அபியும் வந்து சேர்ந்தாள் அவன் வாழ்வில். ஏறக்குறைய எழுபது மாணவர்களை கொண்ட வகுப்பு. மீன் போன்ற கண்கள் வில் போன்ற புருவம் என்றெல்லாம் எதுவும் இல்லை ஆனாலும் அவனுக்கு அவளைப் பார்த்தவுடனேயே காதல். வகுப்பில் ஆங்கிலம் தான் பேச வேண்டும், மாணவிகள் சிகப்பு ரிப்பன் வைத்து இரட்டைஜடை போட்டிருக்க வேண்டும், மாணவர்கள் சட்டையை இன் பண்ணியிருக்க வேண்டு என்று பல சட்டங்கள் இருந்தது, இதில் எதை மீறினாலும் இருபத்தைந்து ருபாய் அபராதம் மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ளக்கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது அதை மீறினால் மட்டும் நேரடியாக வகுப்பு ஆசிரியரை சந்திக்க வேண்டும் கையில் இரண்டு கிள்ளு முதுகில் இரண்டு அடி சில சமயங்களில் பெற்றோரை அழைத்துவரும் சம்பிரதாயங்களும் நிகழ்ந்துவிடும். எண்வே மாஹி பார்வையிலேய காதல் செய்தான். பத்தாம் வகுப்பின் இறுதி நாட்களில், யாரெல்லாம் நம் பள்ளியிலேயே பதினொன்றாம் வகுப்பை தொடர விரும்புகிறீர்கள் என்று கணக்கு ஆசிரியை கேட்க, கை உயர்த்தினாள் அபி. அதேப்பள்ளியில் தொடர்ந்தான் மாஹி.

பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பிழும் அதே சட்டங்கள் அமலில் இருந்தது பள்ளியிலும் அவன் காதலிலும். அவளுக்கு எந்தவித தொல்லையோ பயமோ கொடுக்காமல் ரொம்ப ஆழமாகவும் மென்மையாகவும் நேசித்தான் மாஹி. நண்பர்களோ அவள் கடந்து செல்லும்போது அவன் பெயரை சொல்லி அழைப்பது , இருவரின் நோட்டுகளை அடுத்தடுத்து அடுக்கி வைப்பது என தங்கள் நண்பனின் காதலுக்கான தங்கள் கடமைகளை சரியாகவேய செய்தனர். இது எல்லாம் தெரிந்தும் அபி எதையுமே கண்டுக்கொள்ளவில்லை இவ்வற்றிலிருந்தெல்லாம் விலகி இருக்கவே விரும்பினால். பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதி நாள் இறுதிப்போது தேர்வு முடிந்தது விடைப்பெறுதல் நிகழ்வு எல்லோர் மனதையும் பாரமாக்கி வீட்டிற்கு அனுப்பிவைத்தது. மாஹியும் சில நண்பர்களும் மட்டும் பள்ளியில் இருந்தனர் வகுப்பறையில் அவள் இருக்கையில் பொய் அமர்ந்தவன் உடைந்து அழுதுவிட்டான். அவளிடம் இருந்து ஒரு பாதி சிரிப்பாவது கிடைத்துவிடாதா என ஏங்கினான். ஆனால் கிடைக்கவில்லை! "ஏல் மாஹி காலேஜ் போனதுக்கப்பரோ ஈசியா அவ நம்பர் வாங்கிரலாம்ல... கண்டிப்பா அவ உன்ட்ட பேசுவா" என தேற்றி அழைத்துச் சென்றனர்.

அவள் திருநெல்வேலியில் ஒரு கல்லூரியில் சேர்ந்தாள். இம்முறை பள்ளியில் எந்த ஆசிரியரும் அடுத்து எந்த கல்லூரியில் சேர போகிறீர்கள் என கேட்டிருக்கவில்லை அதனாலேயே அவன் சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தான். முகநூலில் பள்ளி நண்பர்கள் நண்பிகள் எல்லாம் பேசிக்கொள்ள தொடங்கினர். அபிக்கு வீட்டில் மொபைல் வாங்கிக்கொடுத்தார்கள் வாட்ஸாப்ப் பிரபலமாக தொடங்கிய காலகட்டம் அது. நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் அவள் வாட்ஸாப் எண்ணை கண்டுபிடித்து விட்டான். பிளாக் செய்து விடுவாளோ என்ற பயத்துடனே "ஹாய் அபி, திஸ் இஸ் மாஹி, எப்டி இருக்க" என்று அனுப்பிக் காத்திருந்தான். மெசேஜிற்க்கு ப்ளூ டிக் கிடைத்தது. அபிக்கு அவ்வளவு ஆச்சர்யம்! ஹாய் மாஹி, ஐம் ஃபைன், நீ எப்படி இருக்க என பதில் வந்தது. திகைத்துப்போனான் மாஹி. எங்க படிக்கிற என்ன படிக்கிற என்று இயல்பாய் ஆரம்பித்த உரையாடல் பள்ளிக்கால நினைவுகள், பிடித்த விஷயங்கள், கல்லூரியில் புதியதாய் கிடைத்த நண்பர்கள் என நீண்டநெடுந்தொடராய் தொடர்ந்தது.

ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் தன் காதலை வெளிப்படுத்தினான் அவளோ தான் தோழியாக மட்டுமே பேசுவதாக அவ்வப்போது காட்டிக்கொள்வாள். உண்மையில் அவளும் அவனை நேசிக்கத்தொடங்கினாள் ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அப்பா அம்மாக்கு தெரிஞ்ச ரொம்ப நொந்துபோய்ட்ருவாங்க அதனால இதெல்லாம் வேண்டாம் என தனக்குள்ளேயே திரும்ப திரும்ப சொல்லி மனதிற்கு அணைப்போட்டால். மாஹியிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் காதலை வெளிக்காட்டி விடுவோமோ என்ற பயம் எனவே பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தால்.

"மாஹி... நீ ப்ரொபோஸ் பண்ண ந இக்னோர் பண்ணிட்டேன் இனிமே நம்ம பேசிக்க வேண்டாமே இது சரியா இருக்கும்னுதோணல". அவளுக்குள்ளேயும் காதல் இருப்பதை மாஹி உணர்ந்தான். "உனக்கு என்ன பிடிக்கலைன்னா நா உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன் அபி... ஆனா உனக்கும் என்ன புடிச்சிருக்கு அப்ரோ ஏன் இப்புடி இக்னோர் பண்ற?

அவள் வெளிப்படையாக பேசினால், "நமக்கு இப்போ பத்தொன்பது வயசு தான் ஆகுது இரண்டாம் ஆண்டு தான் படிக்கிறோம். நாம இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் நம்பிக்கையை குடுத்துட்டு நாளைக்கு நம்ம வீட்ல அப்பா அம்மா எதிர்த்தாங்கனா என்ன பண்றது?

"கண்டிப்பா எதிர்க்க தான் செய்வாங்க அபி. எந்த அப்பா அம்மா தான் ஓ! காதலிக்கிறியா நல்லது சரி வா கல்யாணம் பண்ணிவைக்கறேனு சொல்லுவாங்க? கண்டிப்பா எதிர்ப்பாங்க...ஆனா நம்ம தான் அவங்களுக்கு நம்மள நிரூபிக்கணும், எதிர்காலத்துல ஒரு நல்ல நிலமைல வரணும், நம்மளால ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியும், நம்ம எடுக்கற முடிவு சரியாகத்தான் இருக்கும்ங்கிற நம்பிக்கையை அவங்களுக்கு கொடுக்கணும்" என்றான். அவன் கூறியதைக்கேட்டு அவளுக்குள்ளும் நம்பிக்கை துளிர்த்தது.

இருவரும் காதலர்களாகவும் இல்லை பிரியவும் இல்லை. குடும்பத்தினர், மாஹி எந்த சூழ்நிலையிலும் ஒருவருக்காக ஒருவரை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது இருவருமே வாழ்வில் மிக முக்கியமானவர்கள் என நினைத்த்தால். அவள் தவிப்பை புரிந்து கொண்ட மாஹிக்கு அவள் இப்படி கஷ்டப்படுவது பிடிக்கவில்லை. ஒருபுறம் அவன் கொடுத்த நம்பிக்கையில் தன் காதலுக்கான தைரியத்தை வளர்த்துக் கொண்டிருந்தால் அபி. இன்னொரு புறம் அபி தன்னை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையை மொத்தமாக இழந்து அவள் பிரிவிற்கு தன் மனதை தயார்படுத்திக்கொண்டான் மாஹி.

அபி தன் காதலை பகிர்ந்தபொழுது மாஹி நம்பிக்கையிழந்து பிரிய நினைத்தான். நிலைமை நேர் எதிராகிப்போனது. அபி காதலுக்காக பேசினால் அவன் பிரிவிற்காக பேசினான். "அபி...அப்பா அம்மா காக நீ யோசிக்கிறது ரொம்ப நல்ல விஷயம் தான் ஆனா அவங்களுக்கு புரியவச்சி நம்ம காதல அடுத்த கட்டத்திற்கு எடுத்துட்டு போக நிறய காண்பிடென்ஸ் வேணும் தைரியம் வேணும் உன்கிட்ட அது இல்ல அபி" என்றான்.

"ஆனா இப்போ நா அதுக்கான முயற்சி எடுத்துட்டுதானே இருக்கேன் அதுக்குள்ள நீ இப்படி பேசினா என்ன அர்த்தம்? குடும்பம் மட்டும் தான் முக்கியம் நீ வேண்டாம்னு யோசிச்சிருந்த எப்பயோ போயிருப்பேன் மாஹி...எனக்கு நீயும் முக்கியமங்கிறதுனாலதான இதுல இவ்ளோ யோசிக்கிறேன்" என்றால் அபி. "இப்பயும் உன்ன நா உன்ன ரொம்ப நேசிக்கிறேன் அபி உன்ன பிடிக்காம பிரியனும்னு சொல்லல ஆனா இன்னும் எவ்ளோநாளுக்கு இப்படியே இருக்கிறது நம்ம ஒரு முடிவு எடுத்துதான் ஆகணும் அதனால தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்". அபி எவ்வளவோ சமாதான படுத்த முயற்சித்தும் மாஹி பிரிவில் உறுதியாக இருந்தான்.

அவன் தனியாக எழுத தொடங்கிய காதல் கதையை இப்பொழுது அவள் தனியாக தொடர்கிறாள். அவ்வப்போது எதேர்ச்சியாக கேட்பது போல் அபியைப்பற்றி நண்பர்களிடம் விசாரித்துக்கொள்வான் மாஹி. சமூக வலைத்தளங்கள் மூலம் அவனைப்பற்றி தெரிந்து கொள்வாள் அபி. தங்கள் உறவில் தங்களுக்கே தெளிவு இல்லாததால் நண்பர்கள் யாரிடமும் தாங்கள் பேசிக்கொண்டதை பகிர்ந்துக்கொள்ளவில்லை. நான் இருக்கிறேன் எல்லா பிரெச்சனைகளையும் எதிர்கொள்ளலாம் என்ற பாதுகாப்பை மாஹிக்கு கொடுத்திருக்க வேண்டும். அந்த வயதில் சரியான முடிவெடுக்கும் பக்குவமோ நம் வாழ்க்கைக்காக நாம் போராட வேண்டும் என்ற தைரியமோ இல்லாமல் இருந்தது தான் பிரிவிற்கு காரணம் என்று உணர்ந்தாள்.

ஆண்டுகள் ஓடின அபியின் வீட்டில் கல்யாணப்பேச்சை எடுத்தனர் அவளுக்கு மாஹியைப் பற்றிய எண்ணங்களே ஓடத்தொடங்கின. அவன் கொடுத்த காதலும் நம்பிக்கையும் அவளுக்குள் ஆழமாக இருந்தது. வீட்டில் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் முன் மாஹியிடம் பேச வேண்டும் என்று விரும்பினால். இருப்பது ஒரு வாழ்க்கை அதை பிடித்தவர்களோடு வாழ நினைப்பதில் தவறில்லையே. மாஹியிடம் பேசலாம் அவனுக்கு விருப்பமிலையெண்ணில் அமைதியாக விலகிவிடலாம், ஒரு வேலை அவனுக்கு என்னைபோல இன்னும் காதல் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு அழகாக மாறிவிடும் ஆனால் முயற்சியே செய்யாமல் இருப்பதென்பது பெரும் அபத்தமல்லவா எனவே மாஹியிடம் பேசுவது என முடிவு செய்தால்.

எப்படி பேசுவது என யோசித்துக்கொண்டிருந்தபொழுது தான் தோழி அஞ்சனா கல்யாண பத்திரிக்கையை நீட்டினாள் "கண்டிப்பா வரணும் டி...ஸ்கூல்ல எல்லாரையும் கூப்ட்ருக்கேன் நீயும் வரணும்" என்றால். மாஹியும் வருவான் அங்கே பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்தால்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் அசைப்போட்டுக்கொணடே அபியும் ஜெஸ்ஸியும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள் நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள் கலாட்டாக்கள் அரட்டைகள் சுயமிகள் கிண்டல்கள் என எல்லாம் நிகழ்ந்தன டஸ்டர் சாக்பீஸ் துகள்கள் இல்லாமலேயே வகுப்பறையின் வாசம் எல்லார் மனதிலும் ஒட்டிக்கொண்டது அபியின் கண்கள் ஒரு பக்கம் மாஹியை தேடிக் கொண்டிருந்தது அவன் வரவில்லை. லீவ் கிடைக்கவில்லை போல என்று நினைத்துக்கொண்டாள்.

எல்லோரும் சாப்பிட சென்றார்கள். பந்தியில் யாரோ தன்னை கவனிப்பது போல் உணர்ந்தாள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சாப்பிட தொடங்கினாள். கல்யாண சாப்பாடு என்றல் அபிக்கு மிகவும் பிடிக்கும் சொதி-இஞ்சி தொக்கு, சாம்பார்-அவியல், வத்தக்குழம்பு-கேரட் பீன்ஸ் பொரியல், ரசம்-பச்சடி, மோர்- ஊறுகாய் இடைஇடையே அப்பளம் இறுதியாக பாயசம் என்ன ஆனாலும் இந்த ஜோடிகளை பிரித்தோ மாற்ற்யோ உன்ன மாட்டாள். அவ்வற்றை முறையாக அவைகளின் ஜோடிகளோடு சேர்த்து வைப்பதில் மிகுந்த மனநிறைவடைவாள். அனால் இன்று அவளுக்கு எதுவுமே ரசிக்கவில்லை. மாஹியை பார்க்க முடியாததால் ஏமாற்றத்தில் மனம் கசந்துப்போயிருந்தால். "பாயாசத்துல இனிப்பு பத்தலடி என்றால் ப்ரீத்தி". அவளுக்கு பதில் சொல்ல திரும்பிய அபி தான் இன்னும் கவனிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்தாள் சற்றே சுதாரித்து நிமிர்ந்து பார்த்து திகைத்துப் போனால்,

அவள் குவளையில் இருந்த பாயாசத்தின் இனிப்பு சமன் செய்யப்பட்டது. என்றோ ட்விட்டரில் வாசித்த ஒரு கவிதையின் கடைசி வரியை அவள் இதயத்திற்கு அனுப்பும்படி உத்தரவிட்டது மூளை. "நீ கூறிய நான் வெற்றி நாட்களில் நலம்தானே அன்பே" என்ற இதயத்தின் கூச்சலையும் கண்ணீரையும் ஒருசேர விழுங்கிகியபடியே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆம்! அது மகேந்திரன் தான் கரும்பச்சை நிற சட்டையில் வந்திருந்தான்.

Stories you will love

X
Please Wait ...