JUNE 10th - JULY 10th
Night Adventure experience of Yazhini!
2011 ஆம் ஆண்டின்
சென்னை மாநகரம் இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறது.
யார் மரித்தாலும் யார் சனித்தாலும் வழக்கம் போலே இந்த நகரம் பரபரவென இயங்கி கொண்டே இருக்கிறது.
இயந்திரங்கள் தொடர்ந்து இயங்க எரிபொருளும், உயவு எண்ணெயும் உழல்வதை போலே மக்களும் இந்நகரின் தொடர் இயக்கத்திற்கு தங்கள் உழைப்பை வாழ்க்கையை அழுகையை கொட்டி கொண்டே இருக்கின்றனர் .
இந்த ஆண்டின் ஜீலைமாதக் காற்றும் மிகுந்த ரம்யமாகவும் ,வீரியமாகவும் சென்னை நகரத்தின் வீதிகள் அம்மிக்கற்களை போலே வானில் பறந்து சென்று விடுமா என்று யோசிக்கும் அளவிற்கான வேக காற்றின் மையலில் பரபரக்க மாலைப்பொழுது மங்க துவங்கி இருந்தது.
நகரமெங்கும் ஒளிவெள்ளம் பாய்ச்சப்பட்ட இரவின் நதியினில் ,
இனிய அமைதி குடிகொள்ளும் அதே சூழலில் நகரத்தின் அதிதீவிர பரபரப்பான வாகனங்களின் இரைச்சல் மிக்க சப்தத்தின் நடுவே யாழினியும் தனது தோழி காவ்யா உடன் சென்று கொண்டிருக்கிறாள்.
இருளில் ஒளிரும் நகரில் மின்னலென மின்னும் யாழினி எந்தவித யோசனையும் இல்லாமல் மைண்டை ப்ரியா ரிலாக்சா வச்சிக்கிட்டு ஜாலியா கிளம்பிகிட்டு இருந்தாள் .
அவளை பொருத்தமட்டில் நாளையை பற்றிய எண்ணம் துளியும் இல்லை.மிக தெளிவாய் தற்போதைய செயல்பாட்டையும் தன்னுடைய மனநிலையையும் மிகவும் அறிவு கூர்மையுடன் சூழ்ந்த பிரக்ஞை உடன் இயங்குபவள்.
யாழினியின் அகவை 23,
அவளது பெயரினை உச்சரிக்கையில் மனதிலே தோன்றும் தேன்சுவை தமிழ் போலே,
உள்ளத்திலும் தோற்றப் பொலிவிலும் மனிதர்களை மயக்கும் மாயக்காரி அவள்.
இத்தனைக்கும் யாரிடமும் வலிய சென்று பேசமாட்டாள்.
நீங்களே விரும்பி சென்று அவளிடம் பேச்சுக் கொடுத்தாலும் கூட சில நிமிடங்களுக்கு மேலே உரையாட மாட்டாள்.
எப்பொழுதும் சுயதெளிவில் மனிதர்களின் சூழ்நிலைக்கேற்ற சுபாவங்களை நன்கு புரிந்து கொண்டவள் அவள் .
"சக மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சமகால கட்டாயப்போக்கின் முன்னெச்சரிக்கை தெளிவு தான் யாழினியை மிகவும் விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கிறது போலும்" என்று அவளிடம் தனிப்பட்டு அன்புடனும் பிரியமுடனும் பேசி தங்களது சுயநலப்போக்கின் காரியத்தை சாதித்து கொள்ள நினைக்கும் ஆண்கள் எண்ணி கொள்வது உண்டு.
நிற்க.
இனி
யாழினியின் குடும்ப சூழல் குறித்த மேல் பார்வையோட்டத்தை தொடர்வோம்.
யாழினியின் அன்பிற்குரியத் தந்தை பெயர் நம்மாழ்வார்! என்பதாகும்.
நம்மாழ்வார் அவர்கள் இயல்பிலேயே தத்துவங்கள்,ஆன்மீகம், நாஸ்தீகம் என அனைத்தையும் நன்கு புரிந்து கொண்டு பகுத்தறிவோடு நம்பிக்கைகளை கூட மதிநுட்பத்துடன் அணுகி பிறர் மனம் நோகாதவாறு தனது கருத்துக்களை வெளிப்படுத்துபவர்.
அரசியலிலே பெரும்புள்ளிகளை எல்லாம் தனது நட்பு வட்டத்தில் வைத்திருந்தாலும் தனக்கென்று இதுவரை ஒரு முறை எந்த வீத சகாய உதவியும் அவரது பெரும்புள்ளி அரசியல் நண்பர்களிடத்து பெறாத பண்பாளர் .
தன் மகள் யாழினியை பெண் குழந்தை என்று சமூகத்தின் போக்கிற்கு ஏற்றவாறு வளர்க்காமல் சிறுவயதிலிருந்தே ஆண் குழந்தைக்கு கொடுக்கும் சுதந்திரத்தை விட அதீத இடம் கொடுத்து அதே சமயத்தில் பொறுப்புடன் வளர்த்து வந்தவர்.....
அப்பாவின் மீது உயிரையே வைத்திருப்பதால் யாழினிக்கு வாழ்க்கையில் எந்த முடிவு எடுத்தாலும் பகிரங்கமாக வீட்டிலேயே தனது தாய் தந்தையிடம் கிஞ்சிற்றும் மறைக்காமல் அனைத்தையும் சொல்லும் பக்குவம் கொண்டிருப்பவள்.
ஆதலால் பெண் தோழிகளோ, ஆண் நண்பர்களோ யாருடன் எங்கே வெளியில் சென்றிருந்தாலும் தனது பெற்றோரிடம் உண்மையை பகிர்ந்து விட்டு தான் வீட்டின் வாசல் படியை தாண்டி வெளியே செல்வாள்.
இன்று,
இவளது தோழி காவ்யா சமீப காலமாய் தன்னுடன் நட்பினில் இருக்கும் அன்பரசனிடம் டேட்டிங் செல்ல விரும்பியே,
துணைக்கு தன்னுடைய தோழி யாழினியையும் தற்போது அழைத்திருக்கிறாள்....
திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் யாழினி பல முறை Pub ற்கு சென்றாலும் அவளுக்கு குடிப்பழக்கம் இருந்ததில்லை...
கேட்பதற்கு செயற்கையாய் தோன்றினாலும் சிற்சில உண்மைகள் நம்ப முடியாததாகவே இருப்பது என்பதை நாம் வெகு நுட்பமாகபுரிந்து கொள்ள வேண்டும்.
நம் நாயகி யாழினிக்கு குடித்து விட்டு மதிமயங்கி தன்னிலை மறந்து சுயம் தொலைப்பதை விட மிகவும் இயல்பாய் இவ்வுலகில் வாழ்ந்து விட்டு கடந்து செல்வதையே அவள் மனதார எப்பொழுதும் விரும்பினாள்.
தன்னுடைய விருப்பச்சூழலை விட அந்த கொண்டாட்ட தளத்தின் சூழலை ரசிப்பது அவளுக்கு பிடித்தமானதாக இருந்ததால் தொடர்ச்சியாக மனம் விரும்பும் நேரத்தினில் எல்லாம் நண்பர்களுடன் வெளியே உலாச்சென்று கதைத்தவண்ணம் நகர்ந்திட அவள் நகரின் மையப்பகுதிக்கு அடிக்கடி செல்வாள்...
நம் யாழினி எப்பொழுதும் குடிப்பது தவறென்று சொல்பவளும் அல்ல.
அதே சமயத்தில் குடிபழக்கத்தை அவள் என்றைக்கும் ஊக்கப்படுத்தியதில்லை.
அது என்றைக்குமே ஆரோக்யத்திற்கு வேட்டு வைக்கும் என்கிற பார்வையும், அவளுக்கு இருந்ததால் சற்றே இயல்பாய் அவளிடம் உரையாடிட தயக்கமும் கலங்கிய நதி போன்ற மனமும் எனக்கு உண்டு.
நண்பர்கள் இவளுடன் மது அருந்தினால் இவளுக்கு ஸ்நாக்ஸும் கூல் டிரிங்க்ஸும் தான் எப்பொழுதும் தீனி .....
வீட்டில் தன் கணவரிடமும் ,தாயிடமும் தன்னுடைய தோழியுடன் இரவு கொண்டாட்ட Pub ற்கு செல்வதாய் சொல்லிவிட்டு தற்போது ஆரா Cab il பயணித்து கொண்டிருக்கிறாள்.
அந்த Cab ஐ கடந்து பைக்கில் செல்லும் இளைஞர்களது பார்வை அவர்களை அறியாமால் ஜன்னலோரம் அமர்ந்து இருக்கும் யாழினியை பார்த்து விட்டு புன்னகைத்து கடப்பதை யாழினி மென்புன்னகையோடு கடந்து வந்து கொண்டிருந்தாள்.
காவ்யாவிற்கும், யாழினிக்குமான உரையாடல்!
"என்னடி ஏதுமே பேசாம கம்முன்னு வர்ற?"
இல்ல மதியம் Spa போயிட்டு நீச்ச குளத்துல நெறைய நேரம் குளத்து மீனு மாதிரி கெடந்ததுல பயங்கரமா தூக்கம் சொக்கி வர்றது, இதுல எங்கட்டு நைட்டு உனக்கு நா கம்பெனி கொடுக்கிறதாம்?
எத்தனை மணி வரைக்கும் ப்ளான் எப்ப ரிட்டர்ன்?
வீட்ல அப்ரூவல் வாங்கியாச்சி .பேலன்ஸ் நா பாத்திக்கிறேன் . மகாராணி கம்முன்னு வாங்க . ப்ளான்லாம் நா பாத்திக்கிறேன் .....
இவ்வாறு காவ்யா பதில் கொடுத்து கொண்டிருக்கும் போதே அவர்கள் வந்த Cab "Royal" pub வாசலில் வந்து நின்றது.
யாழினி மெல்ல கதவை திறந்து இறங்கியதை பார் வாசலில் இருந்த
ஆதர்ஷ் கண்கொட்டாமல் அசந்து போய் பார்த்து கொண்டிருந்தான்.
அங்கே வாசலில் காவ்யாவின் பாய் ப்ரெண்ட் பிரவினும் அவனது நண்பன் யஷ்வந்த்,யஷ்வந்தின் இன்றைய காதலி ?! மகதியும் உடன் நின்றிருந்தார்கள்.
காவ்யாவும் யாழினியும் இன்று உடுத்தி இருந்த ஆடை கவர்ச்சி என்றும் சொல்ல முடியாது.
கட்டுக்கோப்பான ஆடை என்றும் சொல்ல முடியாது.
அழகிய Crop top phant உடன் வயிற்றில் மெல்லிசாக கோடு போல ஆப்பிள் பலூனின் ஸ்டைலில் தொப்புள் தெரிய காண்போரை மயக்கி கிறுக்கேற்றும் ஈர்ப்புக்குரிய வடிவழகுடன் இருவருமே கவர்ந்த வண்ணம் மின்னினார்கள்....
யாழினிக்கு மட்டும் தன்னுடைய துணைக்கு Pair இல்லியே என்ற கவலை கிஞ்சிற்றும் இல்லை.
Royal pub ன் உள்ளே இளைஞ, இளைஞிகள் கூட்டம் ஜோராக இருந்தது.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கைகளில் மதுபுட்டி என காண்போரை அசரடிக்கும் வண்ணம் அந்த உலகம் வேறு வண்ணத்தில் இருந்தது....
யாழினி இரண்டு டேபிள் தாண்டி சென்று சோபாவின் மீது நன்கு கம்போர்ட்டாக அமர்ந்து கொண்டாள்..,,
காவ்யாவும் ப்ரவினும் யாழினி அமர்ந்திருக்கும் சோபாவில் அமர்ந்து தங்களுக்கு முன்பு அழகிய வெவ்வேறு நிறங்களில்,
கெமிஸ்ட்ரி லேபில் இருக்கும் பிப்பெட் Tube போன்ற கண்ணாடி குடுவைகளில் நிரப்பப்பட்டிருந்த விதவிதமான மதுவகைகளை பார்த்து தேர்ந்தெடுத்து குடித்து கொண்டிருந்தார்கள்...
ப்ரவினின் நண்பன் ஆதர்ஷ் யாழினிக்கு எதிரே அமர்ந்து கொண்டு யாழினியின் காதருகே சென்று
"Excuse me
myself aadharsh
If u dond mind
Shall we dance? "
என கோரிக்கை வைத்தான் .
திடிரென்று யாரென்று தெரியாத ஓர் ஆண் கொண்டாட்ட களத்தினில் வந்து தன் முன்னே நேரடியாய் வந்து நின்று என் கூட டான்ஸ் ஆட வர்றீங்களான்னு கேட்பதை விநோதமாக உணர்ந்தாள் யாழினி.
ஆதர்ஷ், யாழினியிடம் பேசுவதை பார்த்து காவ்யா "டேய் மச்சி சொன்னா கேளு. அவள பத்தி உனக்கு தெரியாது.
சொன்னா கேளு அவ உனக்கு செட் ஆகமாட்டா!" என கண்களை சிமிட்டிய படி லந்தடித்தாள்....
"மிஸ்டர் ஆதர்ஷ்
I have no interest to play dance ...."என்றவாறு யாழினி சொல்லி முடிக்க ஆதர்ஷ் தன் கரங்களில் வைத்திருந்த சிறிய சிவப்பு கலரில் இருக்கும் மாத்திர வடிவ வஸ்துவை காட்டி "உங்களுக்கு என்னோட கிஃப்ட், எடுத்துக்கோங்க ,இத ட்ரை பண்ணி பாருங்களேன்,
செம கிக்கா இருக்கும் ." என்றான்.
சற்றே ஆதர்ஷ்ஷின் முகவாட்டத்தையும் அவனது அதீத ஆர்வத்தையும் பார்த்த யாழினிக்கு "இவன் வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாண்டா " என்றே கடுப்பாய் கலாய்த்த வண்ணம் அவனை Nose cut பண்ணும் வகையில் சொல்லி விட வேண்டும் என்று தோன்றியது.
ஆனாலும் சென்னையின் நவீன கேளிக்கை விடுதிகளில் இது போன்ற புதிய நண்பர்களின் நடவடிக்கைகள் இவ்வகையிலான இயல்பின் தான் இருக்கும் என்பதால் யாழினிக்கு இன்றைய அனுபவம் புதிய அனுபவமாக இருந்தது.
எப்படி இருந்தாலும் சில மணிநேரங்களில் முடிந்த மட்டும் இன்றைய ஆட்டத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட வேண்டும் என்கிற பிரக்ஞை மட்டும் ஒவ்வொரு கணத்திலும் யாழினியின் மனசாட்சியிடம் வாதிட்டு கொண்டே இருந்தது.
யாழினியின் மனம் இருந்த தற்காலிக சுழல் மனநிலை அவளை ஆல்கஹாலின் ரசச்சுவையை வழக்கம் போல் அருந்தி இயல்பாய் கடந்திட விருபியது.
யாழினியை கடந்து சென்ற இளைஞனின் கைகளில் ஏந்தி இருந்த தட்டுக்களில் இருந்த மதுக்கோப்பைகளை பார்த்த அவள் அந்நபர்களை நோக்கி சைகை செய்து தன்பக்கம் மதுபுட்டிகளை கொண்டு வருமாறு அறிவுறுத்தினாள்.
அவளது அருகே வந்த நபரின் கைகளில் இருந்த தட்டில் நான்கு மதுக்கோப்பைகள் தயாராய் நீரும் ஆல்கஹாலும் கலந்த கலவை என தயாராய் விருந்திற்கு ஊக்கமாய் தயார் செய்யப்பட்டிருந்தது.
யாழினியின் அருகே அவன் வந்து கண்சிமிட்டிய சில நொடிகளில் நான்கு கோப்பைகளையும் சடச்சடவென குடித்து முடித்திருந்தாள்.
சற்றே ஒருவித மயக்கமும் ஆனாலும் விரைவில் வீட்டிற்கு சென்று விட வேண்டுமென்கிற வைராக்கியமும் லேசான தன்னுடைய தள்ளாட்டத்தின் துவக்கத்திலேயே யாழினிக்கு புரியதொடங்கி இருந்தது.
மெல்ல நகர்ந்து ரெஸ்ட் ரூமிற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் தன்னுடைய நினைவு விரைவில் தன் சுயநினைவை மீறிமறந்துவிடும் என்று உணர்ந்து கொண்டவாறு நடந்து சென்ற யாழினி தனது தோழியை நேரில்பார்த்து தா கிளம்ப போகிறேன் என்று சொல்ல நாடி,தன் தோழியை பார்க்க விரைந்தாள்.
#725
Current Rank
30,150
Points
Reader Points 150
Editor Points : 30,000
3 readers have supported this story
Ratings & Reviews 5 (3 Ratings)
tamilthendral1710
chandralekha472001
Sonia Francis
வணக்கம் தாங்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. எனது கதை பட்டாம்பூச்சியின் பாடம் படித்து விட்டு rating தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points