JUNE 10th - JULY 10th
( கொரோனா - Covid 19 )
உலக மக்களின் ஒரே வார்த்தை
உலகில் ஒட்டு மொத்த
நீதி நூல்களையும் ஒரே
வார்த்தையில் மொழி பெயர்த்தால்
அதன் பெயர் " கொரோனா "
தொகுப்பு :-
எஸ் . அஜ்மல் ஹூசைன் சாஹிப் MCA.,
தொகுப்பாளர் கருத்து :-
" உலகம் எதை நோக்கி பயணமாகிறது என்று தெரியவில்லை என்னும் சினிமா வசனம் தான் நினைவுக்கு வருகிறது " . நடந்துக்கொண்டிருக்கும் அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும்பொழுது உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது . உலகம் என்னும் சிறைச்சாலையில் மனிதன் மட்டும் (அடைக்கப்பட்டு) தனிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் இந்த வேளையில் சுதந்திரமாக பறந்து , திரிந்து கொண்டிருக்கிறது மற்ற ஜீவராசிகள். மனித நடமாட்டம் இல்லாத பூமி நன்றாக காற்று வாங்குகிறது இயற்கையின் வேண்டுதல் இறைவனிடம் நிறைவேறியது .
கொரோனா எச்சரித்த துளிகள்:-
மனித இனத்தின் மீதான இந்த எச்சரிக்கை மணி உலக அசரீரியாக ஒரு சேர ஒலிக்கிறது .
* கொரோனா COVID 19
* அசாதாரண கிருமி
* சமூக விலகல்கள்
* தனிமைப்படுத்துதல்
* மனிதம்
* இயற்கையின் எச்சரிக்கை
* ஊரடங்கு
* கொரோனா சிந்தனைகள்
கொரோனா covid - 19
உலக மக்களின் ஒரே ஓசை " கொரோனா " தன் பெயரை தடம்பதித்தது மக்களின் மனதில் இந்த covid -19 என்னும் ' கொரோனோ'. மக்களின் உயிரை பறிக்க வந்த கொடிய நோய் அல்ல இந்த "கொரோனோ" உலக மக்களின் உள்ளத்தில் நான் என்னும் கர்வத்தை அறுவடை செய்ய வந்த அருவா covid -19 நுரையீரலையும், சுவாசக்குழாயையும் தாக்கிசுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பமே இந்த கொரோனா ஆகும் .
இந்த கொரோனா என்னும் வைரஸ் குடும்பத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் இருந்தாலும்,பெரும்பாலானவை மனிதனுக்கு தீங்கிழைக்காதவைகள் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களாக இதற்கு முன்பு அறியப்பட்டவை ( சார்ஸ் ) மற்றும் ( மெர்ஸ் ) ஆகும் அதன் பின் இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்டது covid -19 எனப்படும் இந்த கொரோனோ வைரஸ் வகையானது மனித இனம் இதுவரையில் சந்தித்திடாத புதிதான மற்றும் புதிரான ஒன்றாகும் .
கோவிட் - 19 உலகை அலற வைத்திருக்கும் இந்த கொரோனோ வைரஸின் வீரியம் அதன் பரவும் வேகமும் உதாரணமாக 1000 பேர் கொண்ட ஓர் மக்கள் தொகையை இதுபாதிக்க எடுத்துக்கொள்ளும் நேரமானது மற்ற வைரஸ்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் நான்கில் ஒரு பங்கே மேலும் இது மனித இனம் இதுவரையில் கண்டிராத ஒரு புது இன வைரஸ் என்பதால் , இதற்கான தயாரெடுப்புகளோ, மருந்துகளோ நடைமுறையில் இல்லை என்பதே இந்த வைரஸ் இவ்வளவு அச்சுறுத்தல் மிக்கதாய் அமைந்திட்டதற்கான காரணங்கள் .
சீனாவில் பெயரிடப்படாத மர்மக்காய்ச்சல் கடந்த ஆண்டு டிசம்பர் துவங்கி, உலகம் முழுவதும் பரவி, இன்றுவரையில் பல லட்சம் பேர்களுக்கு மேல் பாதித்து, ஏறத்தாழ உலகளவில் நான்கு லட்சத்திற்கு மேல் அதிகமான உயிர்களையும் காவுவாங்கி கொண்டிருக்கிறது, கொரோனா என்னும் வைரஸ்ஸால் பரவி வரும் கோவிட் -19 என்னும் கொடிய தொற்று நோய் .
உலகத்தையே முடக்கிப் போட்ட இந்த வைரஸிற்கான முழுமையான தீர்வு இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை பரிசோதனை முயற்சிகளால் சில மருந்துகள் பயனளிக்க துவங்கிருப்பதாய் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆயினும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவது அதனை குறித்து அச்சத்தை மேலும் அதிகப்படுத்துகிறது .
இந்தியாவில் இந்த நோயானது இதுவரையில் 1,336,861 மேல் அதிகமானோரை பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த இருநாட்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கொரோனோ பாதிப்பின் சங்கிலியை தகர்க்கவும் பாதிப்புகளின் எண்ணிக்கையை குறைக்கவும் சுயமனித தனிமைப்படுத்துதல் மிக அவசியமானதாகிறது .
கொரோனோ பெயரை கேட்டதுமே உலக நாடுகள் பீதியில் உறையக்காரணம் அது அதிவேகமாக பரவும் தொற்று நோய் என்பதால் தான். இது மற்ற எந்த நோய் தொற்றுகளையும் காட்டிலும் பல மடங்கு வேகமாய் மக்களிடையே பரவிடுவதும், அவ்வாறு வேகமாய் பரவி பலரை பாதிப்புக்குள்ளாக்குவதாலும், அதனை சமாளிக்கும் வகையிலான போதுமான மருத்துவசதிகள் இல்லாததாலும் தான் இதன் பாதிப்புகள் வரலாற்றில் இதுவரையில் கண்டிராத , வகையில் அமைந்திருக்கிறது.
கொரோனா ட்ராப்லெட் இன்பெக்ஷன் என்னும் முறையை பின் பற்றி பகிர்கிறது. அதாவது, பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர் மற்றும் கபத்துகள் மூலமாய் நோய் பரவும் முறையே ட்ராப்லெட் இன்பெக்ஷன் முறை ஆகும். கொரோனா ட்ராப்லெட் இன்பெக்ஷன் முறையில் பரவுவதால் , பாதிக்கப்பட்டவரைச் சார்ந்தோருக்கும் வெகு சுலபமாய் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமிடும் போதோ தும்மிடும் போதோ வெளிப்படும் உமிழ்நீர் மற்றம் கபத்துகள்ளானது பத்து மீட்டர்தூரம் வரையில் பயணிக்கும் திறன்வல்லது. மேலும் பத்து நிமிடங்கள் வரையில் காற்றில் மிதக்கக் கூடிய தன்மையையும் அவைகள் கொண்டுள்ளதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறாய் அந்த பாதிக்கப்பட்டவரின் உமிழ் நீர் மற்றும் கபத்துக்கள் படிந்த பொருட்களை நாம் தொடுவதன் மூலமும் நமக்கு நோய் தொற்று ஏற்பட்டிடும்.
* கொரோனா வைரஸானது காற்றில் மூன்று மணி நேரமும்
* காப்பர் ( தாமிரம் ) பொருட்களில் நான்கு மணி நேரமும்
* அட்டை மற்றும் துணி பொருட்களிள் 24 மணி நேரமும்
* பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லேஸ் ஸ்டில் பொருட்களில் மீது 72 மணி நேரமும், அதற்கு தக்கதான வாழ்வியல் கூட வீரியத்துடன் அழியாது இருப்பதாய் ஆய்வுகள் கண்டறிந்து இருக்கின்றன. மேலும் தாக்கிய வைரஸுக்கான இன்பெக்ஷன் டைம் எனப்படும் முதிர்ச்சியடையும் காலம் 14 நாட்கள் ஆகும் மேலும் இந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகள் தெரியத்துவங்கும் முன்னரே அவரை சுற்றியிருக்கும் மக்களையும் பாதிப்புக்குள்ளாக்குவதாய் கண்டறியப்பட்டிருக்கிறது . இவையே இந்த நோய் தொற்று வீரியம் மிக்கதாயும், அதன் பரவலை தடுக்க பல்வேறு அரசாங்கங்கள் எடுத்திடும் முயற்சிகளை பால்படுத்துவதாயும் அமைந்திடுகிறது.
அசாதாரண கிருமி :-
பணம் பணமென்று எதைப்பற்றியும்
கவலைப்படாது ஒடியவனை,
பிணம் பிணமாய் சாலையில்
சாய்த்திருக்கிறது இந்த (அ) சாதாரண நோய்.
ஆறறிவு மனிதனுக்கு
ஒரு செல் கூட அற்ற
நுண்ணுயிர் ஒன்று
உபதேசம் செய்கிறது;
கிரீடத்தையும் பிச்சைப்பாத்திரத்தையும், தனது நோயென்னும் துலாக்கோலில் சமமாக எடைபோடுகின்றது இந்த ஆச்சரியக் கிருமி!
செவ்வாய் கிரகத்தில் புகுந்து வீடு கட்ட திட்டமிட்டவன் நுரையீரலில் புகுந்து கூடு கட்டிக்கொண்டிருக்கிறது ஒரு சிறு கிருமி !!!
கடவுள் துகள் கண்டு பிடித்தவனின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது , கண்ணுக்கு தெரியா நுண்ணுயிரொன்று!
சமூக விலகல்கள்:
உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ எனக் குறிப்பிடப்படும் சமூக விலகலை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா போன்ற வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படும் சமூகத் தொலைவு உத்தியின் முக்கியத்துவத்தை சுகாதாரத் துறை வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர்.
சமூக விலகல் என்றால் என்ன?
இதை எப்படி கடைப்பிடிப்பது, இதன் அவசியம் என்ன? போன்ற அடிப்படையான கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்: சமூக விலகள் என்றால் என்ன? தொற்று நோய் பரவாமல் தடுக்க, பின்பற்றப்படும் சமூக பழக்க வழிமுறையே சமூக விலகல் எனக் குறிப்பிடப்படுகிறது. சமூக சூழலில், விலகி நிற்பது என இதை புரிந்து கொள்ளலாம். நோய்க்கிருமிகள் மேலும் பரவாமல் தடுக்க இது அவசியமாகிறது. பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, கூட்டங்களை தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத சூழல் தவிர மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருப்பது நல்லது. வெளியே சென்றாலும், மற்றவர்களிடம் இருந்து போதுமான தொலைவு (ஒரு மீட்டர்) தள்ளியிருக்க வேண்டும். கைக்குலுக்குவது போன்ற செயல்களையும் தவிர்க்க வேண்டும். நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்பைக் குறைத்து, அதன் தீவிரத்தை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம்.
தனிமைப்படுத்துதல் ( சுயத்தனிமை )
நீயாக தனித்திருந்தால்
நீண்ட நாள் நிலைத்திருப்பாய்
மனிதா தனித்திரு :
மனிதன் பயப்பட வேண்டியதற்கு பயப்படாமலும் தூய்மையாக இருக்க வேண்டிய நேரத்தில் தூய்மையாக இல்லாமலும் இருந்ததின் காரணத்தால் இன்று "கொரோனா " என்ற கொடுமையான தொற்று நோயை கண்டு மனிதன் தனித்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த தனிமை மனிதனின் மனநிலையை உருகுலைக்காமல் இருக்கும் பட்சத்தில் தனிமை தவறில்லை ஆனால் இவர்கள் சொல்லும் தனிமை எந்த அளவிற்கு இருக்கிறது என்றால் மனிதனை மனிதன் அணுகுவதில் கூட சற்று இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் .
தனிமையில் இருவகை இருக்கிறது ; ஒன்று தனிமையை நாம் தேர்ந்தெடுப்பது மற்றோன்று தனிமை நம்மை தேர்ந்தெடுப்பது இப்பொழுது நம்மை தனிமை தேர்ந்தெடுத்து இருக்கிறது இத்தகையை தனிமையிலிருந்து இறைவன் உலக மக்களுக்கு வெற்றியை தருவானாக.
தற்போது இருக்க கூடிய காலகட்டத்தில் பரவி வரக்கூடிய கொரோனா என்ற (உயிர் கொல்லி நோயை) அழிப்பதற்கு நாம் அனைவரும் தானாக வந்து தனித்திருந்து தன் வாழ்வை எண்ணி இறைவனிடம் பிராத்திக்க வேண்டும். நிச்சயமாக இந்த நிலை மாறி மக்கள் அனைவரும் இந்த நிலையில் இருந்து விரைவில் மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கையில் முற்று புள்ளி வைக்கிறேன் .
மனிதம் :-
மனிதம் இப்போ
மரணமாச்சு
கொரோனா வந்து
கொன்று போச்சு
உலகமெங்கும்
இதே (கொரோனா) பேச்சு
இந்த மக்களை எண்ணி
பார்க்கும்போது மனமே இருளாச்சி.....
மனிதா பணம் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம் ஆனால் மனிதத்தை இதை போன்ற நெருக்கடியான நேரத்தில் தான் வெளிப்படுத்த முடியும். நீ மனிதத்தை காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை காட்டுபவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்துவிடாதே..!
இதை போன்ற நேரத்திலும் சில ஈன புத்தி கொண்டவன் சுத்தம் செய்யும் பொருட்களின் விலையை ஏற்றி விற்பனை செய்கிறான் இது அனைத்து நாட்டு மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் தலையாய பிரச்சினை.
மக்களில் பணக்காரர்களும் இருக்கிறார்கள், ஏழைகளும் இருக்கிறார்கள். இந்த 144 அவசர காலகட்டத்தில் அவர்களின் அவசியத்தை கருத்தில் கொண்டு நம்மால் இயன்ற காரியத்தையும், நல்லுதவிகளையும், பல செய்து: பணமின்றி, வீடுகளின்றி , உடையின்றி , உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்து நாம் இறைவன் படைத்த படைப்புகளில் சிறந்த படைப்பு மனித படைப்பு என்பதை நிரூபிக்க கடமைப்பட்டு இருக்கிறோம். ஆனால் இப்பொழுது நிகழும் இயல்பு நிலையை பார்த்தால் மக்களை !!!!!!! மக்களே பார்த்து பயப்படுகிறார்கள் ' ஓ ' மனித உன் மனிதம் எங்கே.
மனிதா உனக்கு ஏதாவது
ஒன்று என்றால் மனிதன் தான்
வரணும் அப்படி வருபவர்கள்
தான் மனிதம் நிறைந்தவர்கள்.....
This is Dr Ali. He treated Covid 19 victims in Indonesia and became victim himself. This is his last meeting with his kids and wife who is expecting their 3rd child. Standing at a distance to not to affect his family. Can you imagine what type of meeting this must have been and what all of them must have gone through knowing this could be their last meeting. He is no more. Imam Qasim
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து - இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து, தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் -தொலைவில் நின்று இறுதி யாத்திரை கூறும் - இந்தோனிஷிய (Dr Hadio Ali) டாக்டர் ஹாதியோ அலியின் புகைப்படத்தை அவரது கர்ப்பிணியான மனைவி படம் பிடித்துள்ளார்..
ஒரு அந்நிய நபரைப்போன்று தூரத்தில் நின்றே விடைபெறும் டாக்டர் தனது இறுதி சூழலிலும் குடும்பத்தினரை அருகில் வர அனுமதிக்கவில்லை..
கொரோனா பாதித்த பலருக்கு சிகிச்சையளித்து இந்தினேஷியாவிற்கு மட்டுமின்றி உலகுக்கே ஹீரோவாக திகழும் டாக்டர் ஹாதியோ அலி மார்ச் 22 அன்று தனது மரணத்தை தழுவினார்!!!
இவர்களிடம் தான் மனிதம் வாழ்கிறது..
கண்ணீரோடு வீர வணக்கம்...
இயற்கையின் எச்சரிக்கை :-
கொரோனா மனிதனை கொல்ல வந்த நோய் அல்ல . உலக மக்களின் மனதில் இருக்கும் ( சுயநலம் என்னும் ) கிருமியை கொல்ல வந்த இயற்கையின் கருவி .
மக்கள் காசு பணம் சொத்து சுகம், பேங்க் பேலன்ஸ் என்று சுயநலத்துடன் ஓடிக்கொண்டிருந்த வேலையில் அந்த ஒரு வார்த்தை ( கொரோனா ) ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரிடத்தில் ஒடுக்கியது. இருப்பினும் இந்த படிப்பினையிலும் திருந்தாத மக்களும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் .
உலக மக்களுக்கு இயற்கையின் எச்சரிக்கை மணி இந்த கொரோனா:-
மனிதன் தன் சுயநலத்திற்காக
இயற்கையே அழித்தான்
இன்று இயற்கை
மனிதனை அழிக்கிறது
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்.....
இந்த பாருலகம் நமக்கு மட்டுமே சொந்தமானது அன்று உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தான். ஆனால் நாம் அதனை விளங்கிக்கொள்ளாமல் இயற்கைக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் மாறு செய்ததன் விளைவு மனிதனை தவிர அனைத்தும் இன்று சுதந்திரமாக பறந்து திரிந்து கொண்டிருக்கிறது எந்தவித மனித அச்சமும் இன்றி.! மனிதனோ கொரோனாவிற்கு பயந்து வீட்டில் (சுய தனிமையில்) அடைந்து கிடக்கிறான். இயற்கையின் கோர தாண்டவம் சில சமயங்களில் இயற்கையும் கொதித்து எழுகிறது இந்த மக்களை சமநிலைப்படுத்த சுனாமியாகவும் ,கஜாவாகவும்,இப்பொழுது கொரோனவாகவும் ......நாளை ?
தலை கனத்தின் உச்சத்தில்
உலகினை ஆட்டிப்படைத்திட்ட
வல்லரசுகளின் உச்சந்தலையில்
இயற்கை கொடுத்த சம்மட்டி அடியிது¡¡¡
அன்றும், இன்றும், என்றும் ;
அதே வானம்
அதே சூரியன்
அதே நிலம்
அதே கடல்
அதே காற்று
அதே மலை
ஆனால் மனிதன் நின்று ஆடாத
ஆட்டம் போட்டவன் இன்று
அழுது புலம்புகிறான் நாளை ?
விமானங்களற்ற உச்சிவானம்,
கப்பல்களற்ற நடுக்கடல்,
வாகனங்களற்ற சாலை ,
புகைமண்டலமற்ற வாயுமண்டலம்;
இயற்கை மட்டுமே இங்கு மாறாதது. இதில் எதையுமே பங்கு போடவோ, பாகம் பிரிக்கவோ, பங்கம் விளைவிக்கவோ, உரிமையற்றவர்கள் ((((இதை பின்பற்றாததன் விளைவு)))) அழித்துக கொண்டிருக்கிறோம்.. அழுது கொண்டிருக்கிறோம்..!
இயற்கைக்கு எதிராக
தறிகெட்டு ஒடிய மனித
வர்க்கத்தின் சுய நலத்தேரின்
அச்சாணியைப் பிடுங்கி,
தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறது
தீய நோயொன்று !
தொலைவில் கேட்கும்
பறவையின் ஒலி,
காற்றோடு பேசும்
இலைகளின் மொழி...,
இத்தனை சோகத்திலும் அனுபவித்திட எத்தனையோ ? இருக்கத்தான் செய்கிறது....
இனி இந்த உலகத்தை இயற்கையிடம் ( இறைவனிடம்) ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை.
இயற்கையே விஞ்ஞானி !
இயற்கையே ஆசான் !!
(((((இயற்கையே இறைவன் !!!))))
ஊரடங்கு (curfew) :-
நம் நாட்டில் curfew என்னும் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டும் அதன் விபரீதம் அறியாமல் இந்த மக்கள் கூட்டம் கூட்டமாக நடமாடுகிறார்கள். இந்த curfew என்னும் சட்டத்தை மீறியதால் தான் இத்தாலியில் உயிர் சேதம் இன்று அதிகரித்துவருகிறது. என் அருமை மக்களே சற்று முழித்திரு, தனித்திரு இந்த சுய தனிமைப்படுத்தும் சட்டம் என்பது உனக்கானது அல்ல. ஒட்டுமொத்த சமுகத்திற்கானது. நாம் அரசாங்கத்திற்கு இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில் நம்மால் இயன்ற அளவு உதவ வேண்டும். எனவே, மக்களே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதின் நோக்கம் சுய தனிமைகாகத்தான் ஆகவே இதை மனதில் கொண்டு நம்மை நாமே தனிமைப்படுத்தி (கொரோனாவை) உலகை விட்டும் அப்புறப்படுத்துவோம்.
அன்று
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை
இன்று
கூடி வாழ்ந்தால்
கொரோனாவுக்கே நன்மை
அன்று
ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு
இன்று
ஒன்றுபட்டால்
உண்டு சாவு
அன்று
தொட்டால்
பூ மலரும்
இன்று
தொட்டால்
நோய் பரவும்
அன்று ஒண்ணாயிருக்கக்
கத்துக்கனும்
இன்று ஒதுங்கி இருக்கக்
கத்துக்கனும்
அன்று, தீண்டாமை ஒரு
பாவச்செயல்
இன்று, தீண்டாமை
பகுத்தறிவின் செயல் ...
அன்று உலா வந்தால்
உடலுக்கு நன்மை
இன்று உலா வந்தால்
உயிருக்கே தீமை
மிக விரைவில்
மீண்டு வருவோம்
என்ற மாபெரும் நம்பிக்கையில்
முற்று புள்ளி வைக்கிறோன்........
குட்டி ஸ்டோரி :-
ஒரு ஊருல பெரிய வெள்ளம் வரப்போகுதுன்னு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
பலரும் பாதுக்காப்பான இடங்களை நோக்கி சென்றுவிட்டனர்.
ஒரே ஒருவன் மட்டும் நான் எங்கும் போகமாட்டேன், என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றிருந்தான்.
கூறியது போலவே பெரிய வெள்ளம் வந்துவிட்டது.
ஊரே வெள்ளக்காடாய்
காட்சி அளிக்கிறது. இவன் வெள்ளத்தில் தத்தளித்து ஒரு மேட்டின் மீது ஏறி அமர்ந்திருக்கின்றான்.
அப்போது மீட்புக்குழு ஒன்று வருகிறது, யாராவது இருக்கின்றார்களா என்று பார்த்து, இவனை கவனித்து அழைக்கிறது. வா வந்து படகில் ஏறு என்று.
அவனோ வர மறுக்கிறான், என்னை கடவுள் காப்பாற்றுவார் நான் வரவில்லை என்றுவிட்டான்.
இரண்டாவது படகு வருகிறது. அழைக்கிறார்கள், வரமறுக்கிறான். என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றுவிட்டான்.
மூன்றாவது படகும் வருகிறது, அப்போதும் ஏற மறுத்துவிட்டான், என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றுவிட்டான்.
நேரம் ஆக ஆக நீரின் அளவு அதிகரித்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுகிறான்.
இறந்தவன் மேலே சென்று கடவுளிடம்
நீ என்னை காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.
ஆனால் நீ என்னை ஏமாற்றிவிட்டாய் என்று வாதாடுகிறான்.
அதற்கு கடவுள் நான் தான் உன்னை மூன்று முறை படகில் வந்து அழைத்தேனே
நீதான் வரமாட்டேன் என மறுத்துவிட்டாய் என்றாராம்.
இப்போது கொரானாவை பற்றியோ அதன் பாதிப்பைப்பற்றியோ, அதற்கான பாதுகாப்பைப்பற்றியோ பேசும்பொழுது, பலர் இப்படிதான்,
அதுலாம் ஒன்னும் பண்ணவேணாம், எல்லாத்தையும் இறைவன் பாத்துப்பான் என்று அசட்டைபதில் தருகிறார்கள்.
அப்படியே கொரானா வந்தாதான் என்ன, அது வந்துதான் நமக்கு மௌத்னா ( இறப்பு ) அதுக்கென்ன பண்ணமுடியும் என்று கூறுவதை கேட்கும் பொழுது என்ன கூறுவதென்றே தெரிவதில்லை.
கொரானா வந்து மௌத் ( இறப்பு ) என்பது என்ன அவ்வளவு லேசா?
குளிப்பாட்டுதல் இல்லாமல், கஃபன் இடாமல், உறவுகளிடம் ஒப்படைக்காமல், அப்படியே ஆழக்குழியில் புதைக்கப்படுவது தான் வேண்டுமா?....
நம்முடைய பாதுகாப்பு எதில் உள்ளது என்பது நமக்கு தெரியாது, மறைவான விஷயங்களை இறைவன் ஒருவனே அறிவான்.
நம்மாலான முயற்சிகளை நாம் செய்யவேண்டும், அதற்குமேல் முடிவு படைத்தவன் கையில்.
பாதுகாப்பு நடவடிக்கை என்பது நாம் எடுக்கும் முயற்சி நம் ஆயுளை நீட்டிப்பதும், மரணத்தை தருவதும் அவனுடைய முடிவு.
எதையுமே செய்யாமல் மெத்தனமாக இருந்துகொண்டு எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் என்பது சரியில்லை.
அதை அவனும் விரும்புவதில்லை.
நமக்கு சாப்பாடு வேணும்னு அவனிடம் கையேந்தி கேட்கிறோம், இறைவன் அதற்கு உண்டான வழிகளை காட்டுவான், நாம்தான் அதை சரியாக பயன்படுத்தி பாடுபட்டு உழைத்து வருமானம் ஈட்டி, அதில் அரிசி வாங்கி சமைத்தால் தான் சோறு வரும்.
இறைவனிடம் எனக்கு சோறு கொடு என்று கேட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துகொண்டால்
தட்டில் உணவு பறந்து வரப்போவதில்லை,.
இன்னும் உணராமல் பலரும் இப்படிதான் கொரானாவா வந்தா வரட்டும் பாத்துக்கலாம் என்றுதான் இருக்கிறார்கள். ....
கொரோனா சிந்தனைகள் :-
The world famous word:
உன் பெயர் சொல்ல அச்சம் தான்
இருப்பினும் சொல்லிக்கொண்டு இருக்கிறது
உலகம் (கொரோனா)
ஆண்டவனால்
மனிதனை அடக்கி
ஓடுக்கிட முடியும்
என்பதற்கு சான்று
இந்த (கொரோனா)
கொரோனா
இங்கே
மனிதம்
எங்கே????????
கொரோனா கொல்ல வந்தது
மனிதனை அல்ல
ஒட்டுமொத்த உலக மக்களின்
மனிதத்தை
இறைவனிடமிருந்து
உலக மக்களுக்கு ஒரு எச்சரிக்கை
" கொரோனா "
நீயாக
தனித்திருந்தால்
நீண்ட நாள்
நிலைத்திருப்பாய்.
கொரோனா
இல்லா
உலகம்
வேண்டும்.......
உலக பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார் கொரோனா என்னும் உலக மெகா வீரர்.....
( ***** கொரோனாவை வெல்வோம் ***** )
#656
Current Rank
10,210
Points
Reader Points 210
Editor Points : 10,000
5 readers have supported this story
Ratings & Reviews 4.2 (5 Ratings)
kskselvakumar86
வளரும் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் எனது கதை https://notionpress.com/ta/story/ssc/19561/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D#.YrfF
Sonia Francis
வணக்கம் தாங்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. என் கதை பட்டாம்பூச்சியின் பாடம் படித்து விட்டு rating தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
kannanalla1966
உங்களது கதையை படித்தேன் மிகவும் அருமையான கதைக்களம் சிறந்த எழுத்தாளராக எனது வாழ்த்துக்கள்.. என்னுடைய கதையின் பெயர் "அவள் விரும்பிய வாழ்க்கை " என்னுடைய கதை உண்மையை தழுவிய கற்பனைக் கதை ,என்னுடைய தோழி ஷீலா வாழ விரும்பியதை கதையாக எழுதியிருக்கிறேன். இந்தக் கதையை அவளிடம் நான் கூறிய பொழுது அவள் கண்களில் கண்ணீர் வந்தது நான் இப்படித்தான் வாழ விரும்பினேன் கற்பனையில் ஆவதே என் கனவு நிறைவேறியது என்று.சிறிது நேரம் எடுத்து தயவுசெய்து என்னுடைய கதையை படியுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இந்த சமுதாய
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points