பில்கேட்ஸும் பிச்சைக்காரனாவன்

natarajanmayi
பயண இலக்கியம்
4.9 out of 5 (145 रेटिंग्स)
कहानी को शेयर करें

வாடிய முகத்துடன் கண்ணத்தில் கை வைத்துக்கொண்டு கோவிலின் வாசப்படியில் உக்கார்ந்து கொண்டிருக்கிறான் பிசசைக்காரன் ஒருவன்

தலையில் எண்ணெய் வைக்காமல் பறட்டையாக சுருட்டை முடியோடு மஞ்சள் கரை பல்லோடு கிழிந்த சட்டையோடு தலையை சொறிந்து கொண்டு அம்மா தாயி பிச்ச போடுங்கம்மா சாப்பிட்டு ரெண்டு நாளு ஆச்சும்மா கனத்த குரலோடு பிச்சை எடுக்கிறான்...

டெய்லியும் ஆயிரம் வருமானம் வரும் இன்னக்கி ஐநூறு கூட வரலையே கையில் காயம் பட்டவாறு வெள்ளைத் துணியை கட்டிக்கொண்டு காயம் பட்ட மனிதன் போல் கண் முலியை மேலே பார்த்தவாறு அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா மறுபடியும் கத்தி பிச்சை எடுக்கிறான்.....

இரவு வந்ததும் தன் முகமூடியை கலட்டி எறிந்து விட்டு தன் பிச்சை எடுத்த பணத்தில் தன் ஒரு பெண் பிள்ளைக்கு தீணி சாமன் வாங்கிகொண்டு அவன் நடக்கும் சத்தம் காதலி கேட்கும் படி காட்டில் இருக்கும் சிங்கத்தை போல் வீர நடை போட்டு செல்கிறான்... வீட்டற்கு சென்றதும் தாயி தங்கம் அப்பா உனக்காக என்ன வாங்கிட்டு வந்துருக்கேனு பாருங்க கூப்புடுகிறான் அவன் பிள்ளைக்கு பேருதான் தங்கம் ஆனால் பித்தளை விட மோசமானது அவனது வாழ்க்கை

தங்கத்திற்கு வாங்கி வந்த பாய் கடை புரோட்ட கூட சால்னா சிக்கன் குருமாவோடு பொட்டணத்தை மெதுவாக பிரித்து விட்டு அதில் இருக்கும் பரோட்டாவை பிய்த்து போட்டு சால்னாவும் சிக்கன் குழம்பையும் தன் பிள்ளைக்கு ஊட்டி விடுகிறான் திடிரென்று தங்கம் வேகமா ஊட்டுங்கப்பா என்று கத்தினாள் ஏமா என்னாச்சு என்று பிச்சைக்காரன் கேட்டான் தங்கம் சொன்ன வார்த்தை இவன் சாப்பிடாமலே விக்கி நின்றது வார்த்தை

இல்லப்பா நீ வாங்கிட்டு வந்தது ரெண்டு புரோட்டா ஒன்னு எனக்கு இன்னொன்னு உனக்கு அதான் வேகமா சாப்டா பசிக்காது அதான் பா வேகமா ஊட்ட சொன்னே ஐயா தங்கம் நான் சாப்பிட்டு வந்துட்டேன் நீ சாப்பிடு என்று சொல்லி பொய் கூறினான். பிச்சைக்காரன்

விடிந்ததும் வழக்கமாக பிச்சை எடுக்க சென்றான் காலம் போட்ட முடுச்சு நேத்து கையில் அடிபட்டவாறு துணியை கட்டிக்கொண்டு பிச்சை எடுத்தான் இன்று உண்மையாகவே கை உடைந்து கொண்டு கண்ணீர் மல்க தன் தங்கத்தை நினைத்து கொண்டே பிச்சை எடுக்க செல்கிறான் திடிரென்று இன்று கோவிலில் ஒரே கூட்டம் இன்று வருமானம் அமோகம் என்று கொஞ்சம் மகிழ்ச்சி நிறைய வலிகள்.....

பொல்லாத வெயிலில் தன் ஒரு பொட்டப்புள்ளைகாக பிச்சை எடுத்து வாழ்க்கை கடத்துகிறான்

பிள்ளையை இன்று ஸ்கூலுக்க சேர்க்க செல்கிறான் தன் பிச்சை எடுத்து சேமித்து வைத்த பணத்தை எடுத்து கொண்டு

தங்கத்திற்கு சிலேடும் பொம்மை வச்ச பேக்கோடு தன் அப்பாவின் சுண்டு விரலை பிடித்துக்கொண்டு முதுகில் தொங்கும் பேக் குதிக்கும் படி குதித்து குதித்து செல்கிறாள் தங்கம்......

பள்ளியில் உன் பெயர் என்னவென்று கேட்டார்கள் அவள் என் பெயர் தங்கம் என்று கூறினால்

தங்கத்தின் அப்பாவை பார்த்ததும் டீச்சர் சற்று ஒதுங்கி நின்றால் டீச்சர் போகும் கோவிலிக்கு இவன் பிச்சை எடுத்துள்ளார் ஆனால் அவனுக்கு தெரியாது டீச்சருக்கு தெரியும் தங்கத்தின் அப்பா என்று...... மரியாதை படி கூறாமல் யோ உன்னோடு பேரு என்னவென்று கத்தி கேட்டால் திடிரென்று உடம்பு தூக்கிப் போட்டது போல் இருந்தது தங்கத்திற்கு தகப்பனுக்கும்

ஏன் பேரு பில்கெட்சு என்று கூறினான் டீச்சரோ திகைத்து நின்றால்

பித்தளை குடும்பத்தில் பிறந்த பிள்ளைக்கு தங்கம் என்று பெயர் என்று டீச்சர் சிந்தனையில் இருந்தால்

ஏன் பிச்சைகாரனா இருந்தா பில்கெட்ஷ் பேரு இருக்ககூடாதா என் பெண் பிள்ளை பிறந்தாலே அவள் தங்கம் தான்.....

பிச்சைக்காரன் செல்வான் ஒரு நாள் பென்ஷ் காரில் என்று கத்தி கூறினான் படித்த மனிதனை போல் டீச்சர் திகைத்து நின்றால் ஆமாம் இவன் படித்தவன் தான் தன் தங்கத்தை பெத்துவிட்டு என் மனைவி வாசுகி இறந்து விட்டால் அந்த சோகத்தில் தான் இவன் பிச்சைகாரன் ஆனான் .... தன் பிள்ளைக்கு தெரியாது அந்த டீச்சருக்கு தெரியாது இவன் வேலை பார்த்த இடம் அந்த பள்ளிதான் அவனும் அந்த பள்ளியில் டீச்சராக பணி புரிந்தான் பத்து வருடங்களுக்கு முன்பு அங்குதான் வாசுகியை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டான்

இவனுக்கு அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் கிடைக்கவில்லை திருமணம் ஆன சில நாளில் அவன் இறந்துவிட்டால்.....

மறுமணம் செய்து கொள்ளாமல் தன் தங்கத்தை வளர்க்க ஆசைக்கொண்டான் வாசுகி இறந்த வருத்தத்தில் இவள் தினம் தோறும் குடுத்து விட்டு கடையில் பால் வாங்கி கொண்டு வந்தான் வீட்டிற்க்கு இரவில் மட்டும் குடித்தவன் வேலைக்கு செல்லும் நேரத்தில் குடித்து சென்றான் இவன் குடுத்து வருவதை பார்த்து விட்டு பள்ளி நிர்வாகம் இவனை வேலையை விட்டு நீக்கியது.....

என்ன செய்வது என்று தெரியாமல் தன் சம்பாதித்த பணம் பூறாவையும் குடித்து அழித்து விட்டு நல் ஆசிரியர் என்று விருது வாங்கியவன் குடிகாரன் என்று பட்டம் வாங்கிவிட்டான்....

அவன் வாசுகியை தீராது காதலித்து அவள் நீட்டாக இருக்கும் நேரத்தில் அவளது வலியை இவனது வலியாக நினைத்து கொண்டு அவளை தீராது அன்புடனும் தீராது காதலித்தான் அனைத்தையும்‌ நினைத்து பார்த்து கொண்டு தன் தங்கத்தை மடியில் போட்டுக்கொண்டு அவள் அழுவது கூட தெரியாமல் காலை ஆட்டிக்கெண்டு ஆராரிரோ சொல்ல தெரியாமல் உக்கார்ந்து கொண்டிருக்கிறான்.....

தங்கத்தை தகரத்தில் படுக்க வைத்தான் அனைத்தையும் குடித்து அழித்து பத்தாததுக்கு அடகு வைத்து வீட்டில் இருந்த அனைத்து தங்கத்தையும் அடகு வைத்துவிடசிப்ப தங்கத்தை தகரத்தில் படுக்க வைத்து ஆராட்டுகிறான் ஆராட்டுவது எப்படி என்று தெரியாமல்

புத்தி கெட்டவன் பக்கத்து வீட்டு கண்ணகியிடம் என் பிள்ளைக்கு பாலு கொடுத்து பசியாத்துறியானு கேட்கிறான் கண்ணகி என்பவள் கண்ணாலம் ஆகாத கன்னிப் பெண்.....

கண்ணகியிடம்‌‌ மட்டும் கேட்கவில்லை பார்க்கும் பெண் அனைவரிடமும் ஏன் பிள்ளைக்கு பாலு வேணும் நீங்க குடுக்கிறிங்களா என்று கிழிந்த சட்டையுடன் ரோட்டின் ஓரத்தில் தங்கத்தை வைத்துகொண்டு புலம்பி கொண்டிருக்கின்றான்....

என்ன செய்வது என்று தெரியவில்லை போரவங்க வரவங்க எல்லாரும் புள்ளை புடிக்கி என்று அவனை சுத்தி அடித்துவிட்டு பிள்ளையை புடங்கினர்....

பக்கத்து வீட்டுக்காரர் ஒருவன் இவள் பிள்ளை என்று கூறிய பிறகு இவனிடம் பிள்ளையை கொடுத்து விட்டு இவனை மனநல மருத்துவமனைக்கு கூட்டி சென்றே அழைத்தனர்

மறுபடியும் அங்கு உள்ள நர்சை பார்த்துவிட்டு ஏன் பிள்ளைக்கு பாலு கொடுக்கிறியானு கேட்டான்

நர்சோ கோபத்தில் செருப்பு பிய்யும் என்று கூறனால் அவளோ பைத்தியக்காரி மனநல மருத்துவமனைக்கு யார் வருவார்கள் என்று தெரியாமல் செருப்பு பிய்யும் என்று கூறினால் அந்த நேரத்தில் அவன் பைத்தியக்காரனாக இருந்தாலும் தன் தங்கத்தின் மேல் வைத்த பாசம் மட்டும் உண்மையாக தெளிவாக உள்ளது....

தான் தகரமா இருந்தாலும் தன் பிள்ளையின் மேல் அவன் வைத்த பாசம் சொக்க தங்கமா இருந்தது....

அவன் பிள்ளையை பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிகொண்டு அவனை அந்த மருத்துவ மனையில் வைத்து சிகிச்சை எடுக்க ஆரம்பித்தார்கள் பக்கத்து வீட்டுக்காரர் .....

நீண்ட நாட்களுக்கு பிறகு சிகிச்சை ஒன்று செயல்படாமல் சிறிய‌ மன தெளிவுடன் தன் தங்கம் எங்கே எங்கே என்று

வீட்டை முழுவதும் ஆராய்ந்தான்....

பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே வந்து இந்த உன் தங்கம் என்று குடுத்தான்

இவனுக்கு இவளை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல்

தன் பிள்ளைக்காக பிச்சை எடுக்க ஆரம்பித்தான் பில்கேட்ஸ்

ஆனால் அவனுக்கே தெரியாது அவன் பிள்ளையை சேர்க்கும் இடம் இவன் பணி புரிந்த பள்ளி என்று

அவன் மனைவி இறந்ததும் என்று தெரியாது

ஒன்று மட்டும் அவனுக்கு மறக்கவில்லை

மங்கியும் போகவில்லை

தகர வீட்டில் பிறந்த தங்கத்தின் மேல் வைத்த பாசம் மட்டும் மாறாமல் இருந்தது....

தாடியுடன் பறட்டை தலையோடு எண்ணெய் வைக்காமல் சுருட்டை முடியோடு கண்ணத்தில் கை வைத்துக்கொண்டு மஞ்சள் கரை பல்லோடு கோவிலில் உக்கார்ந்து பிச்சை எடுக்க ஆரம்பித்தான் பில்கெட்ஷ் என்ற பிச்சைக்காரன்....

யாருக்கு தெரியாது அவனுக்கு தெரியாது பில்கேட்ஸ் பிச்சைக்காரன் ஆவான் என்று....

எதார்த்தத்தை எதிர்பாராமல் எழுதியது

-நடராஜன் மாயி

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...