பண்ணையாரின் மனிதாபிமானம்

sarathsanthoesh
உண்மைக் கதைகள்
4 out of 5 (2 रेटिंग्स)
कहानी को शेयर करें

ஓர் அழகிய கிராமத்தில் மிகப்பெரிய பணக்காரராக பண்ணையார் குடும்பம் வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கு இரட்டை பிறந்த ஆண்பிள்ளை.

அந்தப் பண்ணையார் மிகவும் இரக்க குணம் படைத்தவர் அவரது மனைவி அவருக்கு நேர் எதிர் பிள்ளைகள் இருவரும் தாய் சொல்லுவது தான் சரி என்று வாழ்ந்து வருபவர்கள்

அந்தப் பண்ணையார் வீட்டில் பண்ணையில் தங்கி வேலை பார்க்கும் குடும்பங்கள் இருக்கின்றன அவர்கள் பிள்ளைகளுடன் தன் பிள்ளைகளும் சமமாக வளரவேண்டும் என்று பண்ணையார் ஆசைப்படுவார் ஏனென்றால் அனைத்து கஷ்டங்களும் பிள்ளைகளுக்கு தெரியவேண்டும் சமதர்ம தோடு இவ்வுலகில் அவர்கள் பயணிக்க வேண்டும் என்பது பண்ணையாரின் விருப்பம்

ஆனால் அவரின் மனைவி வேலை செய்பவர்களின் பிள்ளைகளிடம் தங்கள் பிள்ளை பழகுவதை தடுத்து நிறுத்திவிடுவார் வீட்டிற்குள்ளும் அனுமதிக்கமாட்டார் மனைவியின் செயல்பாடு பண்ணையாருக்கு பிடிக்காவிட்டாலும் என்ன செய்வது என்று அறியாது அனைத்தையும் அனுசரித்து செல்வார்

தங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சம்பளத்தை இல்லாமலும் அடிக்கடி கேட்கும்போதெல்லாம் உதவிகளை மட்டுமே தன் மனைவிக்கு தெரியாமல் செய்து வருவார்

தாயின் பேச்சை கேட்டு வளரும் பிள்ளைகள் ஒரு கட்டத்தில் தாய் சொல்வது மட்டுமே வேத வாக்காக எண்ணி செயல்படுவார்கள் தந்தை சொல்லும் வார்த்தையை கேட்பதில்லை இது பண்ணையாருக்கு மிகவும் மன வருத்தமாக இருந்துவந்தது

தன் பிள்ளைகள் படித்து முடித்து விட்டனர் அவர்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று படிக்க வேண்டுமெனறு தாயார் விருப்ப படுகிறார் ஆனால் பண்ணையாருக்கு அதில் உடன்பாடு இல்லை

இங்கு ஏதாவது ஒரு நல்ல கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க வைக்கலாம் என்று பண்ணையார் சொல்கிறார் அதற்கு பிள்ளைகளுக்கும் உடன்பாடு இல்லை தாயார் சொல்வதைக் கேட்டு வெளிநாடு சென்று படிக்க வேண்டும் நம்மிடம்தான் நிறைய பணம் இருக்கிறது என்று பண்ணையாரிடம் வாக்குவாதம் செய்து விட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.

இப்படி ஒருபுறம் சூழ்நிலை சென்று கொண்டிருக்க அதே வயது உடைய பண்ணையில் வேலை பார்க்கும் பிள்ளை பண்ணையார் பேச்சைக் கேட்டு நல்ல கல்லூரியில் உள்ளூரில் சென்று படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார் அது அவர்களுக்கு மிகப் பெரிய விஷயம்.

அதே நேரத்தில் தன் பிள்ளைகளின் விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொடுக்க அவர்களுக்கு வெளிநாடு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார் விருப்பமின்றி ஏனென்றால் தன் பிள்ளைகளின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்தவர் பண்ணையார் அனைவரும் இருக்கும் பொழுதே அவர்களை கண்டிக்க இயலாது இப்பொழுது வெளிநாட்டில் ஏனென்று கேட்பதற்கு கூட ஆள் கிடையாது அவர்கள் விருப்பம் போல வளர்வர்கள் என்பதுதான் பண்ணையாரின் கவலை

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது பிள்ளைகள் படிப்பு போய்க்கொண்டிருக்கிறது பண்ணையாருக்கும் அவரது மனைவிக்கும் வீட்டில் வசிக்கும் தருணத்தில் மன அழுத்தம் காரணமாக ஒருவரோடு ஒருவர் பேசுவதில்லை

ஒரு கட்டத்தில் பண்ணையாரின் மனைவிக்கு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது இதை அறிந்த பண்ணையார் தன் பிள்ளைகளிடத்தில் விஷயத்தைச் சொல்கிறார் ஆனால் பிள்ளைகள் ஏற்கவில்லை தந்தையார் பொய் உரைக்கிறார் என்று எண்ணினர்

பிள்ளைகளுக்கு தாயின் மீது பாசம் அதிகம் ஆனா தந்தை சொல்வதில் நம்பிக்கை இல்லை தாயிடத்தில் கவனித்துக்கொள்ள ஆட்கள் இல்லை தேவையான உதவிகளையும் செய்யக்கூட ஆட்கள் முன்வரவில்லை பண்ணையாரின் மனைவிக்கு ஒரு கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது பண்ணையாருக்கும் பண்ணையார் மனைவிக்கும் வைரஸ் தொற்று குரானா என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது

இருவரும் கலங்கி போய் நின்றனர் நம்மைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லையே என்று பண்ணையாரின் மனைவி கதறித் துடித்தார்

பண்ணையாரும் கவலைப்படாதே என்று மனைவிக்கு ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துக் கொண்டனர் இருவரும் இதைத்தான் பிள்ளைகளுக்கும தெரியப்படுத்தினர்

இருந்த போதும் பிள்ளைகள் வர முடியாத சூழ்நிலை. அங்கேயும் வைரஸ் தொற்று மிகவும் கடுமை விமானங்கள் இல்லை என்று இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர்.

பண்ணையாரின் மனைவி உடல் கவலைக்கிடமாகி கொண்டிருந்தது தன் பிள்ளைகளைக் காண இயலாத துக்கத்தில் உடல் மெலிந்து கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருந்தார்

பெரும் தொற்று காரணத்தினால் யாரும் அவர்களை பார்க்க வருவதில்லை இதை அறிந்த பண்ணையார் வீட்டில் வேலை செய்த குடும்பம் இப்படி ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்று வருந்தினர்

இப்படி ஒரு சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு உதவி செய்தே ஆகவேண்டும் என்று அந்த குடும்பம் எண்ணியது தன்பிள்ளை இடத்தில் நீ வீட்டில் இரு நாங்கள் சென்று பண்ணை யாரையும் அவரது மனைவியையும் கவனித்துக் கொள்கிறோம் என்று தன் பிள்ளை இடத்தில் சொல்கின்றனர்

அதற்கு அந்த பிள்ளை அம்மா நீங்கள் இருவரும் மட்டுமே எனக்கென்று இருக்கிறீர்கள் நீங்கள் அங்கே சென்று உங்களுக்கு ஏதேனும் ஏற்பட்டால் நான் என்ன செய்வேன் என்று அந்த மகன் கலங்கினான்

அதற்கு அந்த தாய் மகனே நாம் கஷ்டப்படும் தருவாயில் இந்த பண்ணையில் வேலை செய்யும் பொழுது நமக்கு தேவையான அத்துணை உதவிகளையும் பண்ணையார் நமக்கு செய்து கொடுத்தார் உன்னைப் படிக்க வைத்தார் இன்றுவரை அவர் கொடுக்கும் பணத்தில் மூலமாகத்தான் நமது வீட்டில் உலை கொதிக்கிறது இத்தகைய சூழ்நிலையில் அந்த மனிதனுக்கு மிகப்பெரிய ஆபத்து என்று அறிந்தும் நாம் செல்லாமல் இருப்பது மனிதாபிமானம் அல்ல.

யாரும் எனக்கும் உன் தந்தைக்கும் உதவி செய்யாத தருணத்தில் அவரிடம் உன்னை வைத்துக் கொண்டு வந்து நின்றோம் அன்று அவர் நம்மீது வைத்த மனிதாபிமானமே என்று நாம் உயிரோடு நடமாடும் மகனே என்று மகனுக்கு எடுத்துரைத்தார தாய்

இதைக்கேட்ட மகன் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பிக்க தாயும் சேர்ந்து அழுகிறாள் எங்களுக்கு ஒன்றும் ஆகாது கடவுள் இருக்கின்றான் என்று ஆறுதல் சொல்லிவிட்டு பண்ணையாரை பார்க்க இருவரும் சென்று விடுகின்றன

ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்த பண்ணையாரின் மனைவிக்கு மிகவும் மோசம் என்று மருத்துவர் அறிவித்துவிட்டார் இவர்கள் அவர்களை சென்று பார்க்கும் பொழுது கதறி துடிக்கிறாள் பண்ணையாரின் மனைவி இப்படி இக்கட்டான சூழ்நிலையில் என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள் மிகவும் நன்றி இனி நான் இருக்க மாட்டேன் என் பிள்ளைகளும் வர முடியாத சூழ்நிலை பண்ணையாரை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கதறி துடிக்கிறாள்

அவர்கள் இவர்களுக்கு ஆறுதல் சொல்லி நாங்கள் இருக்கிறோம் கவலைப்பட வேண்டாம் என்று இவர்களும் கலங்கி நின்றனர்

இவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் இவர்களும் அங்கும் இங்கும் சென்று தேடுகின்றன கிடைக்கவில்லை

இதை அறிந்த அவர்களின் மகன் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்து ஆஸ்பத்திரிக்கு வந்துவிடுகிறான் அவர்களின் தாய் தந்தை ஏன் மகனே நீ இங்கு வந்தாய் என்று கேட்கிறார் அதற்கு அந்த மகன் அம்மா நீங்கள் சொல்லுவது அனைத்தையும் நான் புரிந்து கொண்டேன் மனிதாபிமானமே ஒருவரைக் காப்பாற்றும் என்று புரிந்து கொண்டேன்

எது நடந்தாலும் நாம் அனைவரும் இணைந்து பண்ணை யாரையும் அவரது மனைவியையும் காப்பாற்றியாக வேண்டும் என்று மகன் தாயிடம் சொல்கிறான்

ஒரு கட்டத்தில் மருத்துவம் சரியாக கிடைக்கப்பெற்று பண்ணையாரின் மனைவி உடல் தேறி வருகிறார் மிகவும் ஆச்சரியம் நான் பிழைத்து விட்டேன் அதற்கு நீங்கள்தான் காரணம் சரியான நேரத்தில் எங்களுக்கு உன் பிள்ளை ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து கொடுத்தான் உங்களிடம் எவ்வளவு கடினமாக நடந்து கொண்டிருக்கிறேன் அதை அனைத்தும் மறந்து எனக்காக உங்கள் உயிரையும் பொருடபடுத்தாமல் என்னை காப்பாற்றி உள்ளீர்கள் என்று கண்ணீர் வடித்தாள்

இப்படி சூழ்நிலை சென்று கொண்டிருக்கும் தருவாயில் பண்ணையாருக்கு ஆக்சிசன் லெவல் குறைந்துவட்டது உயிருக்கு போராடுகிறார் மருத்துவர்களால் இனி காப்பாற்ற முடியாது என்று அறிவித்துவிட்டனர்

பண்ணையார் இறந்து விடுகிறார் அவரது மனைவி மருத்துவமனையில் இருக்கிறார் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்கின்றனர் என்ன செய்ய இயலும்

பண்ணையாரின் சொந்தக்காரர்களும் அவரின் மனைவியின் சொந்தக்காரர்களும் யாரும் முன்வரவில்லை அவரை நல்லடக்கம் செய்ய அவர் செய்த புண்ணியமே மனிதாபிமானமே அவரை நல்லடக்கம் செய்ய அந்த குடும்பத்தின் மூலமாக முன்வந்தது

பண்ணையாரின் மனைவி கடைசி வரை என் கணவரை நான் புரிந்து கொள்ளவில்லை என்று கதறினாள் அவரின் பிள்ளைகளும் அப்பாவின் முகத்தை கடைசிவரை காண முடியவில்லை என்று கதறினர்

எவ்வித எதிர்பார்ப்புமின்றி பண்ணையார் செய்த மனிதாபிமான செயல் இன்று அவரை மக்களின் மனதில் நிலைபெற செய்திருக்கிறது

நாமும் எத்தகைய சூழ்நிலையிலும் மனிதாபிமானத்தை பேண வேண்டும் என்று இந்த கதையின் மூலம் உணர முடியும் என்று நம்புகிறேன்

நன்றி வணக்கம்

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...