வினா வங்கி

நகைச்சுவை
4.9 out of 5 (36 रेटिंग्स)
कहानी को शेयर करें

குழந்தை பருவம் மிகவும் சுவாரஸ்யமான ஓன்று;
அதுவும் குறிப்பாக நான்கு முதல் ஏழு வயது வரை.
பேச்சு வழக்கு நன்றாக புலப்படும்
புதிதாய் கேள்விப் பட்ட சொற்றொடர்களை எப்படியும் தனது பேச்சில் நுழைத்து விடுவார்கள்.
எதையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உச்சத்தில் இருக்கும்
பயம் என்பது தெரியாது.
சோசியல் இன்ஹிபிஷன் என்பதிற்கான அறிகுறியே தெரியாது
ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகள் தடையில்லாமல் தினந்தோறும் அம்பு மழை போல தொடுத்து கொண்டே இருப்பார்கள்.

வெளி உலகம் சென்று அவர்கள் பார்க்கும் கோணம் முற்றிலும் மாறுபட்டது - கேள்விகளும் தனி ரகம்.
கடந்த இரண்டு வருட காலங்கள் கரோனாவினால் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளயே இருந்துவிட்டு
பொது இடங்களை முதல் முறையாக பார்க்க நேரிடும் போது ஆர்வம் அதீதமாக இருக்கும்.
அப்படி பட்ட ஒரு சுட்டீஸ் இன் கதை தான் இது.

நடுத்தர குடும்பம், நகரத்தில் வசிப்பவர்கள், சிறியவனுக்கு நான்கு வயது, அக்காவிற்கு எட்டு வயது.
அக்காக்கள் சிறிய வயதாயினும் தம்பியிடம் பொறுப்பாகவும் வயதிற்குரிய விளையாட்டுத்தனத்தோடு இருப்பர்.
கரோனா முடிந்து அவர்கள் வெவ்வேறு பொது இடங்களுக்கு சென்ற போது நடந்த உரையாடல்களின் தொகுப்பு இது.

சூப்பர் மார்க்கெட்

விவரம் தெரிந்த வரை மளிகைக் கடையில் வெளியே நின்ற படி வாங்கித்தான் பார்த்திருக்கிறான்.
முதல் முறையாக சூப்பர் மார்கெட்டிற்கு அம்மா, அக்காவுடன் சென்று இருந்தான்.

அக்கா, என்ன வேணும்னு அங்கிள்ட்ட சொல்லாம நீ பாட்டுக்கு உள்ள போறே. கடைக்குள்ள உன்ன விட மாட்டாங்க.
இது சூப்பர் மார்க்கெட் ரா இங்க உள்ள போகலாம்

அவன் அதற்குள் பில் கவுன்டரில் இருந்தவரிடம் அங்கிள் எனக்கு ஒரு லால்லிபாப் என்றான்.
அவர் சாக்லேட் செக்க்ஷன் பக்கம் கையை காட்டினார்.
கை காட்டிய திசையை சில வினாடிகள் எட்டி பார்த்துவிட்டு
அங்க யாருமே இல்ல அங்கிள் - இன்னும் எவ்ளோ நேரம் ஆகுமென்றான்.

அக்கா அவனிடம் வந்து, இங்க யாரும் எடுத்து தர மாட்டாங்க டா, உள்ள வா கடைசியாக வாங்கிக்கலாம்.
அப்ப அவரு சும்மாவே நின்னுட்டு இருப்பாரா?

அக்கா, இது என்ன கடை? இவ்ளோ பெருசா இருக்கு. வரிசையா 4-5 வழி இருக்கு. எல்லாத்தையும் பூந்து வரணும்.
யார் மொதல்ல வராங்க பாப்போம் என்றான்
பதில் ஏதும் வரவில்லை. உதட்டை பிதுக்கியவாறு சாட் ஸ்மைலி முகத்துடன் பின் தொடர்ந்தான்.

இங்க ஐஸ் கிரீம் இருக்குமா?சாப்ட்டு ரொம்ப நாளாச்சு.
அதெல்லாம் இங்க விக்க மாட்டாங்க.

ஹேய் என்ன உள்ளயே வண்டிலாம் நிக்குது. 3 வீல் இருக்கு. இது என்ன குட்டி ஆட்டோவா?
இல்லடா இது ட்ராலி - வாங்கினதெல்லாம் எடுத்துட்டு போக ஈசியா இருக்கும்
சரி இங்க கொடு நா ஓட்றேன்.
உன்னால முடியாது டா வெயிட்டா இருக்கும்.
இப்ப பாரு - வேகமாக தள்ளி முன்னாடி நிற்கும் ஒரு அங்கிளை கிட்ட தட்ட முட்டி விட்டான்.
அங்கிள் சாரி அங்கிள் இவன் இவ்ளோ fastஆ தள்ளுவான்னு நினைக்கல
இன்னும் கூட fasta தள்ளுவேன்
அத முதல்ல என்ட கொடு
சரி இப்ப நீ வச்சுக்கோ ஆனா வீட்டுக்கு போகும் போது நா தான் இத ஓட்டுவேன்
வீட்டுக்கெல்லாம் இத கொடுக்க மாட்டாங்க

இந்த பிஸ்கட் எடுத்துக்கலாம் கா
நல்லா இருக்காது டா இந்த டேஸ்ட் உனக்கு புடிக்காது டா
இல்ல இதே எடுத்துக்கலாம்
முன்னாடி சாபிட்டிருக்கியா
இல்ல இதுல தான் யானை படம் போட்டிருக்கு. எனக்கு யானை ரொம்ப புடிக்கும்

இங்க என்ன இவ்ளோ ஜில்லுனு இருக்கு பால் பாக்கெட் பட்டர் லாம் இருக்கு!
fridge மாதிரி டா.
fridgeஆ என்ன மட்டும் வீட்ல திறந்து வைக்காதன்னு திட்டுவீங்க.
இங்க திறந்தே இருக்கு!

ஹேய் இங்க ஐஸ் கிரீம் இருக்கு - விக்க மாட்டாங்கனு சொன்னே. எல்லாத்தையும் இந்த கட கார அங்கிளே சாப்பிட்ருவாரா?


சினிமா தியேட்டர்

சினிமா தியேட்டர் னா என்ன
வீட்ல டிவி ல படம் பாத்திருக்கல்ல அது மாதிரி பெரிய டிவி ல படம் பாக்கறது

என்ன இவ்ளோ குளிருது இந்த ஊர்ல வின்ட்டர் சீசன்ஆ?
நம்ம ஊர்ல தான்டா இருக்கோம் ஏசி நெறையா இருக்கு

இங்க எது டிவி
முன்னாடி பெருசா இருக்கே அதான்
டிவி பிளாக் கலர்ல தானே இருக்கும் இங்க என்ன ஒயிட்டா இருக்கு

டிவி இன்னும் ஆன் பண்ணலயா
வெயிட் பண்ணு பண்ணுவாங்க

சரி ரிமோட் கொடு நானே ஆன் பண்றேன்.
ரிமோட் லாம் கிடையாது
இவ்ளோ பெரிய டிவிக்கு ரிமோட் கூட கிடையாதா?!

எல்லாரும் பாப் கார்ன் வச்சிருக்காங்க
அதெல்லாம் உள்ள இல்ல டா வெளில தான் தருவாங்க
வாசல்ல ஸ்டூல் ல ஏற சொல்லி கைய நீட்டி exercise பண்ண சொன்னாரே அந்த அங்கிள்ளா
அவரு செக்யூரிட்டி டா செக் பண்ணாரு
அப்ப வேற யாரு தருவா
ஷ் ஷ்

ஐயையோ கரண்ட் கட் ஆயிடுச்சு candle எடுத்துட்டு வந்தீங்களா?
இல்லடா லைட் ஆப் பண்ணி இருக்காங்க.

எனக்கு பயமா இருக்கே.
பயப்படாத டா படம் போட்டா லைட் வந்திடும்.

டைட்டில் கார்டில் ஹீரோ ஹீரோயின் பெயற்கு அரங்கமே அலறியது
என்ன பயப்படாதன்னு சொன்னே எல்லாரும் படம் ஸ்டார்ட் ஆனப்றம் கத்தறாங்க பாரு

பேசிகிட்டே இருக்காங்க வேற சேனல் மாத்தலாம் எனக்கு போகோ வேணும்
சேனல் லாம் மாத்த முடியாது
இதுக்கு நா வீட்லயே டிவி பாத்துட்டு இருந்திருபேன்

அப்பாடி கரண்ட் வந்திருச்சு வாங்க கிளம்பலாம்
இல்ல டா இப்ப தான் இன்டர்வெல்
அப்டினா
அப்டினா பாப் கார்ன் வாங்கணும் னு அர்த்தம் வா

ட்ரெயின்
கூ சிக்கு புக்கு ன்னு சவுண்டே வரல - தடக்கு தடக்குன்னு தான் சவுண்ட் வருது.
அதெல்லாம் பழைய டிரெயின் சவுண்ட் டா.

நம்ம சீட் எங்க இருக்கு?
நம்பர் இருக்கும் டா
அப்டியா எனக்கு என் நம்பர் சொல்லுங்க, நான் கண்டு பிடிக்கிறேன்
ஒரு சீட்ல ஒருத்தங்க தான்னு சொன்னே - ஏன் இவ்ளோ பேர் இருக்காங்க?
சீட் தான் பெருசா இருக்கே டா எல்லாரும் லோயர் பர்த்ல தான் உட்காந்துக்கணும்.

நாம தானே டிரெயின்ல போறோம் - ஆனா மரமெல்லாம் ஏன் பின்னாடி ஓடுது?

ஏன்னா ட்ரெயின் இப்டி ஆடுது - பஸ் னா ஆடவே ஆடாது
ட்ரெயின் பெருசா பஸ் பெருசா?
ட்ரெயின் தான் - ஒரே ட்ரெயின் ல நெறைய பஸ் இருக்கே!
இதுக்கு பெயர் பஸ் இல்ல டா கோச்.
ஒவ்வொரு கோச்சும் தனித் தனி டிரைவரா? எப்படி எல்லாரும் ஒரே நேரத்துல ஸ்டார்ட் பண்றாங்க? போன்ல பேசிப்பாங்களா?
இல்ல டா மொத்த ட்ரெயின்னுக்கும் ஒரே டிரைவர் அங்க்கிள் தான்

இவ்ளோ பெருசா இருக்கே.. ட்ரெயின்னுக்கு எப்படி பெட்ரோல் போடுவாங்க
அவ்ளோ பெரிய பெட்ரோல் பங்க் இருக்குமா

எல்லாரும் எங்க படுத்து தூங்குவாங்க?
மேல ஒருத்தங்க, கீழ ஒருத்தங்க, அப்புறம் நடுவில
நடுவிலயா?!- எப்டி நடுவில படுக்கறது? பெட்டே இல்லயே!
ஆமா, நடுவில தான் படுப்பாங்க - நீயே கீழ படுத்துக்கோ பா.
மிடில் பெர்த் மாட்டியவுடன் - பத்திரமா புடிச்சுகோ டா மிடில் பெட் கீழ விழுந்திட போகுது
எனக்கு வேணாம் பா - நா மேல் பெட்டுக்கு போய்டரேன்.
எப்படி மாடி பெட்டுக்கு போறது எறரதுக்கு ஸ்டூல் லாம் கெடையாதா?
மாடிக்கு ஸ்டெப்ஸ் இருக்கான்னு பாரு டா
அவ்ளோ ஹைட் ஏற முடியாது நா கீழேயே படுத்துக்றேன்.


கோவில்

ஏம்மா செருப்ப வெளில போடுரோம்?
நம்ம வீட்டுக்கு போகும் போதும் வெளில தானே போடுவோம்?
ஓஹ், இது சாமியோட வீடா?
டோர் காலிங் பெல் லாம் காணோம்!

ஏன் எல்லா சாமியும் வேற வேற ரூம்ல இருக்கு? - அவங்களுக்குள்ள சண்டையா?
நம்ம வீட்ல எடம் இல்ல டா அதான் ஒரே ஷெல்ப்ல எல்லா சாமி படமும் இருக்கு.

சாமிட்ட கேட்டா கிடைக்கும்னு சொன்னியே அம்மா .
என்ன டா வேண்டிகிட்டே?
எனக்கு ஒரு புது பேட் வேணும்னு கேட்டேன், கொடுக்கவே இல்ல. வீட்டுக்கு வந்திருக்குமா
அது உன்கிட்ட ஏற்கனவே நெறய பேட் இருக்குல்ல அதான் கொடுக்கல.
வெளியே வரும் போது அம்மா நம்ம இங்க டெய்லி வருவோமா?
டெய்லி முடியாது டா, ஏண்டா?
இல்லம்மா ஒரு நிமிஷம் இரு,
மறுபடியும் உள்ளே ஓடிச் சென்று ஒரு நிமிஷத்தில் திரும்பி வந்தான்.
என்னாச்சு டா ? உன் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் பாத்தியா?
இல்ல மா சாமிடகிட்ட நா டெய்லி வரேன்னு சொன்னேன்
அதன் இப்ப போய் டெய்லி லாம் வர முடியாது எப்பயாச்சும் தான் வருவேன்னு சொல்லிட்டு வந்தேன்.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...