காவேரி.

Historical
5 out of 5 (2 रेटिंग्स)
कहानी को शेयर करें

காவேரி.

சிறு கதை.

மழை பெய்தால் மண்ணின் புழுக்கம் அடங்கி விடும்.

மனம் திறந்து பேசினால் மனதின் புழுக்கம் குறைந்து விடும்.

ஏர் பிடித்து ஓட்டுகின்றவன் கலைப்பையின் ஆணியின் கார் மீது கண் வைக்கவேண்டும்.

மனதின் சுமைகளை இறக்கிவிட்டால் பாரம் குறையும்.

காலங்களில் சிதைந்துப் போன நினைவுகள்.

நேசம் மறந்த உறவுகள் எல்லாம் இன்று

உரு மாறிப் போக காரணம் என்ன என்று அலசி பார்க்கும் விதியின் விளையாட்டு தான்.

அன்று வீராப்பாக பேசியவன் மூஞ்சில

சாணியை அள்ளி வீச வேண்டாமா?வாய் கொழுப்பு யாரு கிட்டே என்ன பேசணும் என்று கூட தெரியல.

பெரியவங்க,சின்னவங்க என்ற மரியாதை இல்லை.

கலியாணம் செய்து கொடுத்தா மாப்பிளை மகன் தான்

அதாவது மரு மகன் என்று அதேபோல் மருமகள் மகள் தான் என்று.

இப்போ ஒரு நாய் சொன்னான் மருமகன் மகன் ஆக முடியாது மாமனார் அப்பா ஆக முடியாது. என்று

பெற்று வளர்த்து படிக்க வச்சி ஒரு நாய் கிட்டே எல்லாம் செய்து கலியாணம் செய்து வைச்ச

மாப்பிளை அவன் எப்போ கலியாணம் செய்து தன் பிள்ளையை அவன் கையில் ஒப்படைத்தோமோ அப்போதே அவன் மகனாகி விட்ட சந்தோஷத்தில் அவர் இருக்கு. அவன் சொன்ன வார்த்தைகள் அவர் நெஞ்சில் வேல் கொண்டு குத்தியது போல ஆகிவிட்டது.

பாவம் அவர் அவன் மீது கட்டிய பாசத்துக்கு பரிசாக அந்த வார்த்தைகள் அவருக்கு கிடைக்க துடித்துப் போனார் அவர்.

சில பிள்ளைகள் மாமனார் மாமியார் இருவரையும் அப்பா அம்மா மாதிரி அன்போடு பாசத்தோடு நடத்தும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர் அந்த மருமகனை ஒரு மூத்த பிள்ளையாக பாசத்தோடு அவர் நினைத்தார்

ஹரே...ஹரே... பேட்ட்டே தும் கியா சாத்திஹோ.?

மேரி பேட்டி பர்ஷோனாவை நிக்காஹ் பண்ணி கொடுத்து விட வேண்டும் என்று சர்தார் கான் நினைத்தார்..

இதில் என்ன தப்பு இருக்கிறது?

எல்லா அப்பா அம்மாவும் பெண்களை பிள்ளைகளை இப்படித்தான் நினைப்பார்கள்?

ஐயோ... இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஏகப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள்,

இது இப்போ நேற்று நடந்தது கிடையாது.

காலா காலத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நிஷ்பத்து நடந்து முடிந்து விட்டால் பாதி கல்யாணம் முடிந்த மாதிரி தான் கணக்கு (நிஷ்பத்து நிச்சயதார்த்தம்)

நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே!

ஜி.... வீட்டில் உட்காந்தால் மாப்பிள்ளை வீட்டு தேடி வருவாங்களா?

போய் பார்க்கணும்...

போய் பார்க்கணும்

கல்யாணம் பிறகு கிட்ட சொல்லி வைக்கணும்.

நாலு பேரு கிட்ட சொல்லி நாலு சொந்தத்துல சொல்லி, வெச்சா அவங்க தகுதியைப் பாத்து. முடிக்கலாம்.

அவங்கஎல்லாம் அவங்க தலையெழுத்து.

சரிம்மா... பேட்டி திலோத்தமா

பரத நாட்டிய அரங்கேறும் திருவண்ணாமலை யில் நடப்பதாக சொல்கிறார்களே எப்ப நடக்கிறது பேட்டி.?

அடுத்த மாதம் நடக்கிறதா இருக்கு மாஜி..

என்னங்க தோழி ஒரே சிந்தனை வாழ்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.?

ஆமாம் ஆமாம் சுந்தரியே உங்களைப் பற்றி தான் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

என்னைப் பற்றிய....!

ஆமாம் தோழி உங்களைப் பற்றித்தான்

என்னைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு என்ன இருக்கிறது தோழியாரே?

இங்கே வேண்டாம் கொஞ்சம் வெளியே போய் பேசுவோமா..?

பர்ஷோனாவும்

திலோத்தமாவும் தோட்டத்துக்கு வந்தார்கள்.

கதையில்

நாரதர் முனிவர் வருகிறார்.

மன அமைதியும் சுய நினைவு கட்டுப்பாடும் தெய்வீக சக்தியும் படைத்தவர் அவர்.

தேவர்களும்,முனிவர்களும், சித்தர்களும் உயர் ஆன்ம முனிவர்களும் பூலோகத்தில் நடக்கும் துன்பங்களையும் கண்டு பொறுக்காமல் உள்ளம் பொறுக்க முடியாமல், என்ன செய்வது என்றே புரியாமல் இருந்தார்கள்.

ஆசைகளையும் ஆன்மாவையும் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்த அவர்கள்..

பூலோகத்தில் மீது பரிவு

கொண்டு அவர்கள் அனைவரும் பெரும் பாட்டனார் பிரம்மதேவன் இடம் முறையிட சென்றார்கள்.

பிரம்ம தேவனை சுற்றி முனிவர்களும், ரிஷிகளும் தேவர்களும்,சித்தர்களும் பிரம்ம முனிவர்களும் சுற்றி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

மகாதேவன், வர்ண தேவன், வாய்வு தேவன்,சூரியன், சுக்கிரன், அக்னி தேவன். பிரம்மனே தியானிக்கும் பிரம்ம ரிஷிகளும், வைகாசனங்கள், வழக்கிலியர்கள் வானபிரஸ் தசர்கள்.

மரிசீபர்கள், அவிமூடர்கள் ,என்ற பெரும் சக்தி படைத்த பல துறவிகள் இருந்தார்கள்.

சோகம் நிறைந்த இதயங்களுடன் தேவர்களும், மற்ற முனிவர்களும் பிரம்மனை அணுகிய போது. மேல சொன்ன அனைத்து முனிவர்களும் பெருந்தகப்பனோடு அமர்ந்திருந்தார்கள்.

தோழியாரே கதை எங்கோ செல்கிறது நீங்கள் ஏதோ ஒரு கதையை சொல்லி என்னை இப்படியே மடக்கிவிட்டீர்கள்

அப்புறம் என்ன நடந்தது?

திலோத்தமை தேவியே இருங்கள் உங்கள் விஷயத்துக்கு நான் இப்போதுதான் வரப் போகிறேன்.

உங்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன்.

உங்களோடு இன்று நேற்று மட்டும் பழகவில்லை

உங்களைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டிருப்ப போல் நான்.

போதும் போதும் தூய தமிழில் பேசியது சாதாரணமா பேசினாலும் புரிகின்ற மாதிரி பேசுங்கள் தோழியரே!

உங்கள் மனதில் குடியேறிய அந்த கள்வனைப் பற்றி தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சீச்...சீ அப்படி ஒன்றும் இல்லை

ஆஹ. நீங்கள் சொல்வது உள்ளத்தில் இருந்து வரவில்லை தோழியாரே!

உங்கள் உதட்டில் இருந்து வருகிறது எல்லாவற்றையும் நான் அறிவேன்.

உங்கள் இதயத்தை களைவாடிய அந்த விசுவை பற்றி தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அது போகட்டும் அங்கேயே இப்பொழுது உன் திருமணத்தைப் பற்றி உங்க அப்பா அம்மா பேசிக் கொண்டிருந்தார்களே யாராவது மாப்பிள்ளை பார்த்து இருக்கிறார்களா?

பேச்சை மாற்ற நினைக்கிறீங்கள்.

இப்போதைக்கு யாரும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை ஆனால் ஒரு இடத்தை மட்டும் அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

எந்த இடம் அந்த நல்ல இடம்?

இருங்க வெற்றிலை கொண்டு வருகிறேன். மை போட்டு பார்க்கலாம்.

இந்த கிண்டல் தானே வேண்டாம் என்று சொல்வது?

கிண்டலும் இல்லை சுண்டலும் இல்லை.

சரி கதை பாதியில் விட்டால் எப்படி முழுவதும் சொல்லி முடியுங்கள்.

அந்த நேரம் பூலோகத்தை சுற்றிப் பார்க்க

லோபமுத்திரை தோழிகளோடு குடகு மலைக்கு மலைக்கு போக

அங்கே இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை அன்னையை ரசித்தப் படியே வந்துக் கொண்டு இருக்கிறார்கள்

அப்போ மிகவும் குள்ளமாக ஒரு முனிவர் வருவதை பார்க்கிறார்கள். லோபாமுத்திரை.

இதோ பாருங்கடி ஒரு குள்ள கத்திரிக்காய் உருண்டு ஓடி வருகிறது என்று கொல்லென்று சிரித்தப் படி கூற

தேவியே அப்படி அவரை ஏளனமாக பேசாதீர்கள்.

அவர் அகத்தியர் என்னும் மிகவும் சக்தி வாய்ந்த மா பெரும் முனிவர்.

அவரின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் தேவியே!

அடி போங்கடி இப்போ பாரு அவரை என்ன என்று பார்க்கப் போகிறேன்.?

வேண்டாம் தேவி இந்த விளையாட்டு.

நாம் போய் விடுவோம் வருங்கள் என்று அழைக்க.

அவளோ போங்கடி நீங்கள் ஏன் இந்த அற்ப புழுவுக்கு பயப்படுகிறீர்கள்?

யார் அர்ப்பம் தேவி அவரைப் பற்றி உங்களுக்கு தெரியாது போல் இருக்கிறது.

தெரியும் கொஞ்சம் அவரிடம் விளையாடி தான் பார்ப்போமே!

வேண்டாம்....வேண்டாம் என்று தோழியர்கள் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை.

அவர் முன்னாடி சென்று நின்றாள் லோபா முத்திரை.

தோழிகள் பயத்தில் நடுங்கி போய் ஓரத்தில் நிற்க.

லோபமுத்திரை

கத்தரிக்காய்க்கு கால் முளைத்து வரும் தாங்கள் யாரோ?

வாய் கொழுப்பில் பேசும் தாங்கள் யாரோ!

அழகிலும் செல்வதிலும் அகல அண்ட லோகத்தையும் ஆள இருக்கும் இளம் தேவதை என் பெயர் லோப முத்திரை.

நான் யாரென்று புரியாமல் பேசும் ஆணவமும், திமிரும் பிடித்த லோபமுத்திரையே.

அது விழுந்து ஆணவத்தோடு பேசும் தங்களிடம் பேச தயாராக இல்லை இங்கிருந்து சென்று விடு என்று கூறினார் அகத்திய முனிவர்.

உங்களைப் பற்றி நன்றாகவே தெரியும் இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம் முனிவரே!

என்ன சந்தேகம்.?

இந்த கமெண்டல் டே கையில் பிடித்துக் கொண்டு பரதேசியாக திரியும் நீங்கள்

பெரிய சக்தி படைத்த முனிவரோ!

வாய் நீண்டு கொண்டு போகிறது இது நல்லதுக்கு அல்ல.

என்ன செய்வீர்கள் முனிவரே உங்கள் கமெண்டலத்துக்குள் என்னை அடக்கி விடுவீர்களா?

கண்டிப்பாக முடியும் என் சக்தியை தெரியாமல் நீ பேசிக் கொண்டிருக்கிறாய் இங்கிருந்து ஓடிப்போய்விடு,

ஓடி போவதற்கு நான் ஒன்னும் பயந்தாங்கொல்லி இல்லை முனிவரே!

எங்கே என்னை உங்கள் கமண்டலத்துக்குள் என்னை அடக்கி விடுங்கள் பார்க்கலாம்.

உடனே அகத்தியருக்கு கோபம் தலைக்குறிவிட்டது.

இறைவா.... இறைவா இது என்ன சோதனை?

இந்த ஆணவமும் திமிரும் பிடித்த லோபமுத்திரையை அடக்க எனக்கு அருள் புரிவாயாக என்று கேட்டார் அகத்தியர்.

உடனே பெரிய உருவம் கொண்டார் அகத்தியர்.

சிறிய உருவத்திலே ஆகிவிட்டாள் லாப முத்திரை.

ஆஹா ரொம்ப அழகா இருக்கு இந்த கதை மேலே மேலே சொல்ங்கள் தோழியரே !

சுருக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.

சிறிய உருவம் கொண்ட லோபமுத்திரை சிரித்தாள்.

கோபத்தில் அகத்திய முனிவர் உச்சக்கட்டத்தை அடைந்ததும்.

லோபமுத்திரையை கமாண்டலத்துக்குள் அடக்கி மூடிவிட்டார்.

பின் கமலண்டத்தை எடுத்துக்கொண்டு சென்றார் அகத்திய முனிவர்.

இது நடந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.

பூலோகத்தில் தண்ணீர் பஞ்சம் வந்து மிகவும் மக்கள் வேதனைப்பட்டார்கள்.

தேவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து இறைவனிடம் முறையிட்டார்கள்.

லோபமுத்திரை

சிவ பக்தையாக வளர்ந்தவள்.

அன்று

லோபமுத்திரை, சிவனை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ வேண்டும் வரத்தை கேள்” என்றாராம். தான் நதி உருவமாகி பூமியை வளப்படுத்த வேண்டும் என்று தன் ஆசையை அவள் கூறினாள். 'கங்கைக்கு இணையான புனிதமுடையவளாய் காவேரி என்று நீ அழைக்கப்படுவாய். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை திருமணம் செய்து வாழ்வாயாக. உனக்கான காலம் வரும் போது நதி வடிவம் எடுப்பாய்' என்று கூறி மறைந்தார்.

தேவருக்கும் முனிவர்களும் இந்த குழப்பத்திலேயே போய்க் கொண்டிருக்கும் பொழுது எதிரில் விநாயகப் பெருமான் தோன்றினார்.

முதல்வனே!

எங்கள் பிரச்சினையை நீங்கள் தீர்த்து வைப்பீர்களா என்று அவரிடம் முறையிட்டார்கள்.

அறிவோம்..... அறிவோம்.

உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க நேரம் வந்துவிட்டது.

பூலகம் செழித்து வளர, தண்ணீர் பஞ்சம் நீங்கி மக்கள் மகிழ்ச்சியோடு வாழ நேரமும் காலமும் பிறந்து விட்டது.

ஆமாம் ஆமாம் முதல்வரே இதுதான் எங்களுடைய கோரிக்கை.

சரி நீங்கள் கவலைப்படாமல் போங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார் விநாயகர் பெருமான்.

ஒரு நாள் அகத்திய முனிவர் உட்கார்ந்த கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.

விநாயகர் பெருமான் காக்கை வடிவம் எடுத்தார்.

அகத்தியர் நெல்லி மரத்தடியில் உட்கார்ந்து தவம் செய்து கொண்டு இருந்த நேரத்திலே அந்த கமெண்டலத்தின் மேல் உட்கார்ந்து கீழே தள்ளி விட.

உடனே பெரிய ஆறாக மகிழ்ச்சியோடு துள்ளி குதித்து ஓடினாள்.

இதுவரை கமெண்டலத்தில் அடைப்பட்டு கிடந்திருந்த லோபமுத்திரை தனக்கு விடுதலை கிடைத்த மகிழ்ச்சியோடு பூமியில் பாய்ந்து ஓட ஆரம்பித்தாள்.

உடனே தேவர்களும் முனிவர்களும் தோன்றினார்கள்.

விநாயகப் பெருமான் காக்கை உருவத்தில் இருந்து பழையபடி உருவத்தை அடைந்தார்.

இதுவரை அகத்திய முனிவரின் கமாண்டலத்தில் வசித்து வந்த லாபமித்திரை.

காவேரி ஆறு என்ற பெயர் பெற்றாள்.

இறைவன் கூறியப்படியே அகத்தியரும் லோபமுத்திரையும் திருமணம் செய்து வாழ்ந்தனர்.

அகத்தியர் லோபமுத்திரையின் நதி வடிவத்தை தன் கமண்டலத்தில் வசிக்கும்படி செய்த லோப மித்திரை இன்று

நாட்டிற்கு வளம் சேர்க்கும் காவேரியாக என்று பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது

சையமலை அழைக்கப்பட்ட குடகுமலையில் காவிரி ஆறு தோன்றியது.

லோபமுத்திரை காவேரியாக மாறி நதி

பொங்கி எழுந்து ஓடிக் கொண்டிருக்கிறாள்.

விநாயகர் காகமாக மாறி, கமண்டலத்தை கவிழ்த்து காவிரியை பெருக்கெடுக்கச் செய்தது

பின் கண் விழித்த அகத்தியர் நடந்ததை உணர்ந்து வருந்தினார். பின் அனைத்தும் இறைவனின் திருவருள் படியே நடைபெறுகிறது என்று உணர்ந்து, காவிரிக்கு வழிகாட்டியவாறு நடந்தார்.

அவர் நடந்த சென்று பாதைகளில்தான் இன்றைக்கும் காவேரி பாய்கிறது,

ஆடி பதினெட்டம் பெருக்கன்று ,காவேரி பெருகி வருவதால் , மக்கள் அன்று காவேரியை சிறப்பாக பூஜித்து மகிழ்கின்றனர்.

அதுதான் இன்றும் ஆடி 18 விழா.

எல்லோரும் கொண்டாடி மகிழ்வது.

அகத்தியர் தந்த மற்றோர் ஆறு தாமிரபரணி. கங்கையின் தங்கை என்று போற்றப்படும் இவள் ,அகத்தியரை வேண்டி அவரது கமண்டலத்தில் தவமிருந்தாள். அப்போது பாண்டிய மன்னன் பஞ்சத்தில் வாடிய தன் நாட்டை வளப்படுத்தமாறு அகத்தியரை வேண்டினான். அகத்தியர் தன் கமண்டலத்தை கவிழ்த்து தமிரபரணியை பாண்டிய நாட்டை வளப்படுத்துமாறு கூறினார். அவள் பொதிகை மலையில் உருவாகி, பல மலைகளைக் கடந்து பாபநாசத்தில் அருவியாக மாறி பாண்டிய நாட்டை வளப்படுத்தியபின், வங்கக் கடலில் கலந்தாள். அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்த பொதிகை மலையானது, மூலிகைகள் நிரம்பப் பெற்றது. இதன் வழியே தாமிரபரணி உருவாகி பாய்வதால், தாமிரபரணி தண்ணீருக்கு மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது.

அருமை அருமை அருமையான கதையை கூறினாய் தோழி

என்று சொல்லி அவரே போதும் எனக்கு பசி எடுக்கிறது வா இவரும் போய் சாப்பிடலாம் என்று உள்ளே

சென்றார்கள்

அப்பொழுது?????

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...