வேலை கிடைத்து விட்டது.

Romance
5 out of 5 (1 रेटिंग्स)
कहानी को शेयर करें

காற்றோடு நான்.

நிலா

"+என் இதயத்தில்

இடம் பிடித்த நிலவே!

உன் எழுத்துகளுக்கு

உணர்வுகள் அதிகம்.

எதார்த்தத்தை எடுத்தாள்கிறாய்.

ஏக்கத்தை விதைக்கிறாய்.

உணர்வுகளில் புதைக்கிறாய்

வார்த்தைகளில் வாதம் புரிகிறாய்.

படிக்க படிக்க தூண்டுகிறாய்.

பார்க்காமலே பரவசப்படுத்துகிறாய்.

உன் திறமைக்குஅங்கீகாரம்

தேடி வரும் சீக்கிரமே.

இதயத்தின் இதயமே

நிலவாக பிரகாசிப்பாய்.

நிமிர்ந்து பார்த்திடும்

தூரத்து சிகரங்களில்."

இது ஒரு இதயத்தின் ஓசை.

உறவென்றால் அது அவளும் நானும்

உயிர் என்றால் அது நானும் அவளும்

அந்த வானத்தில் வசந்த வெண் புறாக்கள் இரண்டும் பறந்து கொண்டிருந்தது.

இன்னும் மேலே மேலே பறந்து கொண்டே போனது.

அது களுக்கு கவலைகள் என்பது தெரியவில்லை.

துன்பம் என்பதும் தெரியவில்லை.

மகிழ்ச்சி மகிழ்ச்சி சந்தோஷம், சந்தோஷம்.

இன்பத்தின் உச்சக்கட்டத்தில் பறந்து கொண்டு இருந்தது.

டேய் என்னடா இது? பகலில் கனவா?

கண்ணு பகல் கனவு பலிக்காது தாயே!

என்று தட்டி எழுப்பினான் சதிஷ்.

சோம்பலை முறித்துக் கொண்டுஎழுந்தான் விக்ரம்.

டேய் எழுந்து சீக்கிரம் இன்னைக்கு இன்டர்வியூ இருக்கு தெரியுமா?

ஓ ஆமா இல்ல?

ஆமா இல்ல உன் இல்ல இன்டர்வியூ இருக்கு?

என்னடா ஏதாவது பிரிப்பேர் பண்ணி வச்சியா இல்லையா!

நானாவது பிரிப்பேராவது.

கேட்ட கேள்விக்கு தெரிந்த பதில் சொல்லுவேன் இல்லை என்றால் பேசாமல் வந்து விடுவோன்.

வேலைக்கு போனோமா காசு சம்பாதிச்சமா கல்யாணம் பண்ணுமா குழந்தை குட்டி பெத்துக்கணுமா என்று சந்தோஷமாக இருக்கிறதை விட்டுட்டு

கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் எருமை மாடு படுத்துட்டு இருக்கியே இது சரியாடா விக்ரம்.

டேய் அதெல்லாம் விடு டா என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்?

அப்பா சாமி உன் வேதம் வேதாந்தத்தை காலையில் ஆரம்பிக்காதப்பா ரொம்ப தாங்க முடியாது.

அறு அறுன்னு அறுத்து தள்ளிடுவே .

விக்ரம் எழுந்து குளித்துவிட்டு சீக்கிரமாக ரெடி ஆகி இன்டர்வியூக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

அப்போ எதிர்வீட்டு சின்னப்பொண்ணு வசந்தி ஓடிவந்தது.

மாமா மாமா இன்னைக்கு உங்களுக்கு இன்டர்வியூ தானே?

ஆமா உனக்கு யார் சொன்னது?

அக்கா தான் சொல்லுச்சு?

என்ன உங்க அக்காவா?

ஆமா எங்க அக்கா தான் சொல்லுச்சு?

அதுக்கு எப்படி தெரியும்?

மாமா உங்களை இன்டர்வியூ நடத்தறது அக்கா தான் அது தெரியுமா உங்களுக்கு?

ஐயோ என்ன சொல்ற வசந்தி?

ஆமா உங்களுக்கு இன்டர்வியூ நட்சத்திரத்தை எங்க அக்கா தான்?

இதுவரை விக்ரம் எதிர் வீட்டில் இருக்கும் வச்சலா வை பற்றி தெரிந்து கொள்ளவே இல்லை.

வச்சலா எம்.சி.ஏ படித்துவிட்டு அந்த மக்கள் நல்ல பணியாளர் அலுவலகத்தில் இயக்குனராக வேலை செய்த வருவது அவனுக்குத் தெரியாது.

பார்ப்பதற்கு வச்சலா மிகவும் அழகாக இருப்பாள்.

அடர்ந்த கருமையான நீண்ட முடி.

இரண்டு அழகான கண்கள்.

வளைந்து நெளிந்திருக்கும் அழகான இரண்டு புருவங்கள்.

மின்னல் போல் மின்னும் அவளின் பார்வைகள்.

பார்ப்பவர்கள் மனதை சுண்டி இழுக்கும் அழகு தேவதையவள்.

அவள் சொல்லப்போனால் 50 கிலோ தாஜ்மஹால்.

அந்த இந்திரலோகத்து ரம்பை,ஊர்வசி மேனகை என்று எல்லோரும்இவளின் அழகுக்கு முன்பு பிச்சை எடுக்க வேண்டும்.

காற்று முதல் கார்மேகம் வரை இவளின் அழகை கண்டு காதலிக்கும்.

கவிஞர்களுக்கு இவளின் அழகைக் கண்டால் விதவிதமாக கற்பனையில் ஆயிரம் ஆயிரம் கவிதைகளை தொடுப்பார்கள்.

மாமா என்ன யோசனை?

மீண்டும் கன உலகத்தில் இருந்து மிக உலகத்துக்கு வந்தான் விக்ரம்.

வசந்தி சொன்னது அவனால் நம்ப முடியவில்லை.

விக்ரமம் எம்சிஏ முடித்தவன் தான்.

வேலை இல்லா பட்டதாரி.

விக்ரம் யார் சார் மேடம் கூப்பிடுறாங்க உள்ளே வாங்க.

அலுவலக உதவியாளர் அற்புதராஜ் கூப்பிட்டான்.

மே ஐ கம் இன் மேடம்?

எஸ் கம்மின் டேக் யுவர் சீட் ப்ளீஸ்.

ஓகே மேம் தேங்க்யூ.

கிவ் யுவர் ஒரிஜினல் ஆல் ஆப் த சர்டிபிகேட்.

எஸ் மேடம்.

எல்லா சான்றிதழ்களையும் எடுத்துக் கொடுத்தான் விக்ரம்?

அந்த இயக்குனர் ஒவ்வொன்றாக சான்றிதழ்களை சரி பார்த்தார்.

டேபிள் மீது இருந்த பெயர் பலகையில்

வச்சலா எம்.சி.ஏ இயக்குனர் என்று இருந்தது.

முகத்தில் லேசாக வியர்த்து கொட்டியது விக்ரமுக்கு.

இன்டர்வொர்க் இதுதான் அவன் வருவது முதல் தடவை.

குடும்ப சூழ்நிலை காரணமாக எப்படி என் வேலை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற காலகட்டத்தில் இருந்தான் விக்ரம்.

அவன் விண்ணப்பித்த முதல் முதல் வேலையே இந்த மக்கள் நல பணியாளர் அலுவலகத்தில் அக்கவுண்டன்ட் வேலை.

எடுத்த எடுப்பிலேயே மாதம் 20 ஆயிரம் பச்ச சம்பளம்.

போகப்போக சம்பளம் உயரும்.

இது வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரை செய்யப்பட்டு நடத்தப்படும் நேர்முக கானல் இது.

சார் உங்க பேர்?

விக்ரம் மேடம்.

உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?

எதுக்கு இந்த கேள்வி கேட்க வேண்டும் என்று அவன் உள்ள ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது.

கல்யாணத்திற்கும் இந்த வேலைக்கும் என்ன சம்பந்தம்?

எதற்காக இந்த கேள்வி அவர் கேட்பார் என்று கொஞ்ச நேரம் திக்கு முக்காடி போனான் விக்ரம்?

சார் உங்களை தான் கேட்கிறேன்

உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?

இல்லை இல்லை மேடம்?

உங்களுக்கு வயது என்ன?

பாவி அதான் சர்டிபிகேட்ல இருக்க பார்க்க வேண்டியது தானே என்று மனசுக்குள் கருவிக் கொண்டான் விக்ரம்.

27 மேடம்.

ஏன் இதுவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை?

எதற்கு என்னென்னவோ கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்துக் கொண்டு வந்த இவனுக்கு இப்படிப்பட்ட கேள்வி கேட்பது திகைப்பாக இருந்தது.

வேலைக்கும் இதுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லாத கேள்விகள் என்று நினைத்தான் விக்ரம்.

எனக்கு அப்பா இல்லை மேடம், நான் சின்ன வயதில் இருக்கும் போது அப்பா இறந்து விட்டார்.அம்மா மட்டும்தான் மேடம். எனக்கு அக்கா இருக்காங்க மேடம்

வசதி இல்லாத குடும்பம் அம்மா தான் என்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க.

வசதி இல்ல அதனால அக்காவுக்கு கல்யாணம் செய்யவே முடியவில்லை.

இப்பொழுது நான் தான் சம்பாதித்து அக்காவுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் மேடம்?

ஓ அப்படியா உங்க அக்காவுக்கு என்ன வயதாகிறது?

29 மேடம்.

சரி நீங்க எந்த ஊரில் போட்டாலும் வேலை செய்வீர்களா?

அல்லது தூரத்தில் போட்டால் அங்கே சென்று வேலை செய்வீர்களா?

இப்ப இருக்கிற சூழ்நிலை எங்கு வேலைகுப்போட்டாலும் செய்வேன் மேடம்?

ஓகே நீங்க போகலாம் உங்களுக்கு ஆர்டர் வரும் என்று சொன்னாள் இயக்குனர் வச்சலா.

விக்ரமுக்கு நம்பிக்கை இல்லை.

சோர்ந்த முகத்துடன் வெளியே வந்தான் விக்ரம்.

அங்கே வெளியே விக்ரம் நண்பன் சதீஷ் நின்று கொண்டு இருந்தான்.

என்னடா போன வேலை சக்சஸா இன்டர்னல் கேள்வி எல்லாம் கேட்டார்களா? நல்லா பதில் சொன்னியா?செலக்ட் ஆயிடுவியா என்று கேள்வி மேல் கேள்வி அடக்கி கொண்டே போனான் சதீஷ்.

போடாங்கோ?

உள்ளே உட்கார்ந்து இருக்கிற ஒரு பைத்தியம் சம்பந்தா சம்பந்தம் இல்லாம கேள்வி கேட்டு என் உயிரை எடுத்து விட்டது?

என்னடா சொல்ற?

ஆமாண்டா உனக்கு உன் பேர் என்ன? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? உங்க வீட்டுல எத்தனை பேர் இருக்காங்க? அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? உங்க அம்மா என்ன பண்றாங்க?உங்க அப்பா என்ன பண்றாங்க இப்படி? எங்கள் ஃபேமிலி பத்தி கேட்டு உயிர் எழுத்துருச்சு?

இது என்னவோ கல்யாணத்துக்கு மாப்பிளை கிட்டே கேட்கிற மாப்பிள்ளை கேட்கிற கேள்வி மாதிரி இருந்தது.

உண்மையில் வேலை கொடுக்குற இன்டர்வியூல கேட்கிற கேள்வி மாதிரி எனக்கு தெரியல?

என்னடா இப்படி சொல்ற இதுக்கு முன்னாடி போனவங்களுக்கு எல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணி இங்கிலீஷ்ல பேசி இருக்கே அந்த மேடம்?

எல்லோரும் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி ஓடி வந்திருக்கிறார்கள் உன்கிட்ட மட்டும்

ஆச்சரியமா இருக்குடா?

சரி வா போலாம் வேண்டி இருவரும் வீட்டுக்குள் வந்தார்கள்.

டேய் கண்ணு என்னடா இன்டர்வியூ ல என்னடா ஆச்சு?என்று கேட்டுக் கொண்டே வந்தாள் விக்ரமனின் அம்மா அம்சவேணி.

விக்ரமும் ரித்திகாவும் சின்ன வயதில் இருக்கும்போது அம்சவேணின் கணவன் இறந்து விட்டார்.

விக்ரமனையும் ரித்திகாவையும் வளர்க்க அம்சவேணி படாத பாடு எல்லாம் பட்டாள்.

வீட்டுக்கு எல்லாம் போய் பண்டம் பாத்திரங்கள் தொலைக்கி அதில் ஒரு சம்பளத்தை வைத்துக்கொண்டு விக்ரமனை மட்டும் படிக்க வைத்தாள் அம்சவேணி.

ஆனால் ரித்திகவை படிக்க வைக்க அவளால் முடியவில்லை.

விக்ரமும் அம்மாவின் கஷ்டத்தை புரிந்து கொண்டு அதிகம் கஷ்டம் தராமல் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று பட்டப் படிப்பு படித்து தேர்ச்சி பெற்றான்.

அம்சவேணி கண்ட கனவு எப்படியும் இரண்டு குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்கி கல்யாணம் செய்து வைத்த இடம் என்று தான் இருந்தது.

ஆனால் ரித்திகாவை படிக்க வைக்க அவளால் முடியவில்லை.

ஊதுவத்தி தேய்த்து, வீட்டு வேலை செய்து விக்ரமனை மட்டுமே அவளால் படிக்க வைக்க முடிந்தது.

பெண்ணுக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அவள் மனம் மிகவும் வேதனைப்பட்டது எப்படியாவது விக்ரமுக்கு வேலை கிடைக்கதா? என்று வேண்டாத சாமிகள் இல்லை. கும்மிடாத தெய்வங்கள் இல்லை. போகாத கோவில்களே இல்லை.

சார்....போஸ்ட்

உங்களுக்கு பதிவு தப்பா வந்திருக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு வாங்கி கொள்ளுங்கள் என்று போஸ்ட் மேன் கூப்பிட்டான்.

வேகமாக விரைந்து சென்றான் விக்ரம்.

தப்பால் அந்த உரையின் மீது மக்கள் நல்ல பணியாளர் இயக்குனர் அலுவலகம் என்று முத்திரை இருந்தது.

அதை வேகமாக வாங்கி பிரித்துப் பார்த்தான்.

அவன் கண்களையே உன்னால் நம்ப முடியவில்லை.

அது வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர்.

சந்தோஷத்தில் குதித்தான்.

அம்மா...அம்மா எனக்கு வேலை கிடைத்துவிட்டது.எனக்கு வேலை கிடைத்து விட்டது என்று சந்தோஷத்தில் கத்தினான் விக்ரம்.

சமையலறையில் இருந்து வேகமாக வந்தாள் அவள் அம்மா அம்சவேணி.

பின்னாடி ஓடி வந்தாள் அவள் அக்கா ரித்திகா.

குட் மார்னிங் சந்தோசத்தில் துள்ளி குதித்தார்கள்.

இவர்கள் சந்தோஷத்தில் மிதப்பதை ஜன்னலில் இருந்து இரண்டு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது.

அது அவர்களுக்கு தெரியாது.

ஆர்டரில் இயக்குனர் என்று கையெழுத்து போட்டிருந்தது.

விக்ரமுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைத்துவிட்டது.

அதும் வச்சலாவின் அலுவலகத்தில்.

நாளைலிருந்து வேலைக்குப் போகப் போகிறான் விக்ரம்.

அவன் கண்களும் அந்த ஜன்னலில் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு கண்களையும் பார்த்துவிட்டது..

அவனுக்கு அப்போது தான் தெரிந்தது அந்த இயக்குனர் வச்சலா எதிர் வீட்டில் இருக்கும் வசந்தியின் அக்கா என்று.

வசந்தி சொல்லி தான்.

குட் மார்னிங் மேடம்..

குட் மார்னிங் சார் கேட் இன்.

இட் இஸ் மை அப்பாயின்மென்ட் ஆர்டர் மேடம்.

ஓகே தேங்க் யூ.

யுவர் ஜாயிண்டெட் அன்ட் சிக்னேச்சர் தி அட்டெண்டன்ஸ்.

ஓகே தேங்க் யூ மேம்.

முதல் முறையாக அந்த வருகை பதிவேற்றில் கையப்பமிட்டான் விக்ரம்.

அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் இயக்குனர் வச்சலா.

அவள் கண்களில் காதல் தெரிந்தது.

இரக்கம் தெரிந்தது வாசம் தெரிந்தது?

காலப்போக்கில் அவனுக்கும் அவளுக்கும் காதல் பூக்குமா??

≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...