வானம்

suthakaranm2244
பயண இலக்கியம்
3 out of 5 (2 )

டிசம்பர் 24.

அகலமான ரோடுகள் (பைபாஸ்). அதில்

சரசரவென போகும் லாரிகளும்,கார்களும்

மின்மினிப்பூச்சிகளாக காட்சியளிக்கின்றன.

ஓர் 32 வயது மிக்க மனிதன் ரோட்டை ஒட்டியுள்ள 1 அடி உள்ள கருப்பும் வெள்ளையும் கலந்த தடுப்பு சுவற்றின் மீதேறி நடந்தவாறு செல்கிறான். தடுப்புசுவற்றில் நாய் ஒன்று குறுக்கும் நெடுக்குமாக படுத்திருந்தது. அதனை எழுப்பி நகருமாறு சைகை காட்டி நகர்ந்தப்பின் அவன் பாதையிலே தொடர்கிறான். இவன் அதனை தொட்டதாலே பிடித்துப்போன அந்த நாய் இவனுடனே பயணிக்கிறது.

காலை உரசிக்கொண்டே அந்த நாய் வருவதால் இவன் திரும்பி நின்று அதனை போகுமாறு சைகை காட்டுகிறான். அது கேட்க்கவில்லை...

போ மணி.. அது நகரவில்லை. மீண்டும் போ ராஜா... நகரவில்லை. போ ரவி... அது அவனின் கண்களை கண்ணாடியை தாண்டி பார்த்தது.

அவன் மீண்டும் போ செல்வி... போ கபிலா என கத்தி பார்த்தான் அது இவனை பிரிவதாக இல்லை. மீண்டும் பயணித்தனர்.

இவன் ரோட்டை கடந்து போக முயற்ச்சிதான். அப்போது அது இவன் கடந்துவிட முயல்கிறான் என எண்ணி கடக்க முயற்சிகையில் அவ்வழியே வந்த பேருந்து ஒன்று நாயின் தலையில் ஏறி இறங்க கருப்பான சூடான ரத்தம் அவன் நடுநெஞ்சில் தெறித்து விழுந்தது.

பேருந்து சென்ற வேகம் இவன் முகமசிறுகளை கலைத்தது. அந்த அளவிற்க்கான வேகம் அது. இவன் சிறிதும் மிரளவில்லை நாயின் தலை பிளந்துகிடந்த சடலத்தையே உற்று நோக்கினான் பின் வானத்தை நோக்கி பெருமூச்சு வாங்கினான்.

தூரம் சென்று வேகத்தை கட்டுப்படுத்தியப்பின் பேருந்தானது நின்றது.அதனுள் இருந்த ஜனம் ஓ.. என ஒலி எழுப்பி சிறிது வருத்தம் கலந்த உணர்வை வெளிப்படுத்தியது. பின் நடத்துனரின் விசில் சத்தம் ஜனங்களின் உணர்வை தாண்டி ஒலி எழுப்ப..பேருந்தானது நகர ஆரம்பித்தது.

பிறகு இவனும் தன் நடுநெஞ்சில் உள்ள கருமை கலந்த சிவப்பு ரத்தத்தை சுண்டுவிரலின் நாகத்தால் வாரினான்.

கையை உதராமல் அகலமான ரோடுகளில் நடுவில் வளர்ந்திருந்த செடிகளுக்கு அடி மணலில் வாரிய இரத்தத்தை கொட்டிவிட்டு இறந்த நாயின் உடலை சர சரவென வாகனம் போகும் சாலையில் இருந்து அகற்றினான்.

அதன் பின் சாலையின் நடுவில் செடிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பங்களுக்கு இடையில் பறந்து விரிந்த செடிகளுக்கு இடையில் உடலை வைத்து,அங்கிருந்த பூக்களை பறித்து அதன் மேல் வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

அகலமான பாதை முடிந்து நகரத்தை நோக்கி வந்தடைந்தான். பூக்கடைகளின் முன்னால் பாலீத்தின் கவர்கள் கசடல் புரசாளாக கிடக்க, ஒன் யூஸ் டம்ளர்களும், காலியான தர்பூசணி கடையில் அதன் பழங்களின் எச்சங்களுக்குமாக நகரம் ஓர் வகையான வெக்கையை கொண்டிருந்தது.

பிறகு அங்குள்ள ஆண்கள் கழிவறை நோக்கி சென்றான். சிறுநீர் கழிக்க கழிக்க பீடியை பற்றவைத்து இழுக்க ஆரம்பித்தான்.

ஏதோ யோசனையில் ஆழ்ந்தவாறு இடது புறமாகவும், வலது புறமாகவும் தலையை ஆட்டி அவனது உடம்பு ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தது.

பிறகு நிதானமாக..

தான் இட்டிருந்த ஹவாய் செப்பலை கழட்டி அங்கிருந்த தொட்டியில் வாலியை கொண்டு தண்ணீர் எடுத்து செருப்பை அலசினான்.

பிறகு தன் கைகளை நுகர்ந்து பார்த்தான். ஏதும் துர்நாற்றம் அடிக்கவில்லை என்பதனை உறுதிபடுத்திக்கொண்டு அங்கிருந்த நடையை கட்டினான். பேருந்து நிலையத்தை நோக்கி அவன் செல்ல ஆரம்பித்தான்.

இரவு 11 மணி என இராமநாதபுரம் பேருந்து நிலையத்தின் கடிகாரம் காட்டியது.

பேருந்து நிலையத்தின் அருகில் ஓர் கிறிஸ்தவபுனிதாலயம் இருந்தது. அங்கு இன்று இரவு அதாவது (டிசம்பர் 25 அன்று கிறிஸ்தமஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது.

ஆலயத்திற்கு முன்பு மிகப்பெரிய அளவில் செயற்கையான கிறிஸ்தமஸ் மரங்கள் நடப்பட்டிருந்தன. மக்கள் கூட்டம்க்கூட்டமாக ஆலயத்திற்க்கு உள்ளேயும் வெளியேய்யுமாக அலைந்து கொண்டிருந்தனர்.

இவனும் தனது கண்ணாடியை கழற்றி சட்டையால் துடைத்தபடி ஆலயத்தின் கோபுர மணியை விழித்து விழித்து பார்த்தவாறு அந்த ஆலயத்திற்க்குள் சென்றான்.

உள்ளே வரிசையாக ஜனம் நின்று கொண்டிருந்தது. சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்பட்டு ஸ்டார் பட்டங்கள், கேக்பெட்டிகள், வைன் குடுவைகள் என பிரம்மாண்டமாக ஆலயம் கட்சியளித்தது.

இவனும் அந்த ஜனக்கூட்டத்தில் வரிசையில் நின்றான். பெண்கள் முக்காடு அணிந்தும் அழகான முக வசீகரத்தை மெழுக்கேற்றியும் பாதர் நெற்றில் இடும் சிலுவைகுறிக்காக ஒவொருவரும் காத்திருந்தனர். ஆண்கள் கோட்சூட் அணிந்தவாறு கேமராவின் முன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

இவனும் வரிசையில் காத்திருக்க அச்சமயம் சிலுவைகுறி வாங்கிவந்த பெண் முக்காடை சரிசெய்தப்படி இவனை பார்த்தவாறு செல்ல இவன் அப்பெண்ணை நோக்கி சிரித்தான். அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

பிறகு ஆலயத்தின் நடுவில் வெள்ளைகவுன் அணிந்த பெண் ஒருவள் வயலின் வாசிக்க ஆரம்பித்தாள். சிலுவைக்குறி வாங்கிய ஜனக்கூட்டம் அவளை சுற்றி நின்றது.

இவன் சமயம் வந்தது சிலுவை இட பாத்ர் முயல்கையில் இவன் அவருடைய நெற்றியில் சிலுவை இட்டான். கூட்டம் திரும்பி இவனை பார்த்தது. அவர் இவனுடைய செயலை எதிர்பாக்கவில்லை.மிகவும் பதட்டப்பட்டார்.

வேக வேகமாக தான் இட்டிருந்த ஜெப மாலையை கழற்றி இவன் கழுத்தில் இட இவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

ஆலயத்தின் கடைசி தூணில் மாட்டப்பட்டிருந்த ஏசுக்கிறிஸ்துவின் உருவப்படத்திற்கு தன் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி அப்படத்திற்கு மாட்டி, ஏசுவின் நெற்றியில் சிலுவைக்குறியிட்டான். பின் அங்கிருந்து கிளம்பி பேருந்து நிலையத்தை வந்தடைந்தான்.

மக்கள் சிலர் ராமேஸ்வரம் பஸ் வருவதற்க்காக காத்துக்கொண்டிருந்தனர். திருவிழா நாள் என்பதால் ராமேஸ்வரம் செல்லும் 12மணி பேருந்திற்க்கு காத்திருக்காமல் சின்ன சின்ன ஊர் செல்லும் பேருந்து மூலமாக அங்கிருந்து மாறி செல்ல ஏதுவாக சிலர் வரும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறிகொண்டிருந்தனர்.

சில குறிப்பிட்ட மக்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலற்க்குடையில் அந்த பஸ் வருவதற்க்காக அங்குள்ள டீ கடையில் சூடாக டீயும், பஜ்ஜியும் உண்டு கொண்டிருந்தனர். பஜ்ஜியில் வாழைக்காய்யின் சீவல் மொறுமொருவேன முருகலாக இருந்தது.

இவனும் அந்த நிலற்குடையை நோக்கி சென்று அங்குள்ள கம்பத்தில் சாய்ந்தபடி நிற்க்க ஆரம்பித்தான்.

அங்குள்ள டீ கடையில் இரண்டு முதியவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் கடையின் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.மீதமுள்ள நாற்காலியில் ஒரு சிறுமியும் அவளது அண்ணனும் அமர்ந்திருந்தினர்.

அப்போது அங்கிருந்த சிறுமியும் அவளது அண்ணனும் தாங்கள் எங்கிருந்தோ கொண்டுவந்திருந்த புளியோதரை சாதத்தை உண்டுகொண்டே நம் கதையின் நாயகனை நோக்கியும் நோக்காமலும் அவர்களின் வாய் அசை போட்டது.

சிறுமி:

தமிழு..நமக்கு பஸ் எப்போ வரும்? என புருவத்தை உயர்த்தியப்படி கேட்டாள்.

தமிழ் :

ம்ம் வந்துரும்டா ஒரு காமணிநேரம் தான் போயிருலாம் பொறு..

சிறுமி :

நாம நாளைக்கு ராமர் கால் வச்ச எடத்துக்கா போறோம்?

தமிழ் :

ம்ம் அப்டித்தான் சொல்றாங்க ஆனா நாம கால் வைக்கிறது உறுதி.!!

அவன் இவர்களை சாய்ந்தப்படியே உற்றுநோக்கினான்.

சிறுமி :

ஏன் தமிழு.. நம்ம கால் அச்சையும் பாக்க நெறய பேர் வருவாங்கள்ள... ஐ ஜாலி..!!! என பேரின்பதோடு கூறினாள்.

திடீரென ஏதோ யோசித்தாவறு அய்யய்யோ என் கால் அச்சு சின்னதா இருக்குமே பெரியவங்க கால் அச்சுல என் அச்சு மறைஞ்சுருமே... என தன் கால்களை அமர்நதப்படியே மடக்கி தன் அண்ணனிடம் காண்பிக்கிறாள்.

அந்த கால்கள் சிலுசிலுவென கொலுசுகளும் ஓர் காலில் மட்டும் தாயோத்தோடானா கயிராலும் வலது காலில் சிறிய தழும்புமாய் காட்சியலித்தது.

அவளது கால்களை அவள் காண்பித்ததால் அவளது அண்ணன் விரல்களை நீவி சொடக்கு எடுத்துவிட்டப்படியே

தமிழ் :

அட ஆமால்ல என்ன பண்ணலாம் என அவளை சிந்திக்க வைக்க ஏற்ப்ப அவன் கண்களை மூடி சிந்திதான். அவளும் அவனை போலவே கண்களை மூடி சிந்தித்தாள்... பேசாம என்னோட செருப்ப போட்டு கால் அச்சு வைக்கறயா என அண்ணன் கேட்க்க ம்ம்.. வைக்கிறேன் வைக்கிறேன் என தொடர்ந்து குரல் கொடுத்தாள் கண்மணி.

நாயகனோ நின்று நின்று சலிர்த்துப்போய் அங்கே கீழே உட்காந்துகொள்ள... அதை பார்த்த கண்மணியும் கீழே இறங்கி தாங்கள் கொண்டுவந்த கட்டைப்பயை தலைக்கு வைத்தபடி படுத்துக்கொண்டாள்.

அவளது அண்ணனும் அருகில் அமர்ந்துக்கொண்டான்.

பிறகு அருகில் இருந்தவர்கள் கண்டும் காணாமல் தங்கள் உரையாடலை தொடர்ந்தனர்.

கதாநாயகனின் கவனம் தற்போது கொஞ்சோம் இவனை விட்டு தள்ளி

இருந்த டீ கடையில் அமந்திருந்த இரு பெண்களை நோக்கி சென்றது.

சிவப்பும் மஞ்சலும் என இரு வெவேறு நிற சீலைகள் அணிந்திருந்த பெண்கள் இவனின் கண்நெதிரே அமர்ந்தப்படி நல்ல தூர இடைவெளியில் அமர்ந்தாவாறு ரகசியமான உரையாடலை மேற்கொண்டனர்...

ஆனால் இவன் காதுகளுக்கு அது ரகசியம் அல்ல. நம் கதாநாயகனுக்கு ஒருவர் பேசும்போதே அப்படியே அப்பெண்களின் உதட்டசைவை போல் தாமும் தன் உதடு மற்றும் நாக்கை சுலற்றிஅது போல் செய்து பேசி அர்த்தங்களை ஊகிப்பவன்.

இரண்டு பேரும் நன்கு இடைவெளி விட்டு உரையாடல் மேற்கொண்டதால் இரண்டுப்பேரின் அசைவுகளையும் ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்தி உதடுகளை அசைப்போட ஆரம்பித்தான்.

சிவப்பு நிற சீலை :

ஏன் நீ இப்படி சொல்லற..

மஞ்சள் நிற சீலை :

ஆமா நான் சொல்லறது நெசம்தான். அந்த ஆளு அதிகபட்சம் 3 நிமிஷம்தான். என் மனசுக்கு அதுதான் பெரிய தப்போன்னு படுது.

சிவப்பு சீலை :

அதுதான் வயகரா எல்லாம் விக்குதுல வாங்கி குடுக்க வேண்டிதானடீ..என் புருஷனுக்கும் இப்படிதான் இருந்துச்சு நல்லா நாட்டுக்கோழி அடிச்சு குழம்புல கொல்லிமலை லேகியத்த கலந்தேன்,

மனுஷன் குதிரைக்கொம்பல்ல அலையரான் என்றவள் சில நொடிகள் மவுனமானாள்..

பின் அவளை நோக்கி கேக்கறேன் தப்பா எடுக்காத?.. உன் புருஷன் ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணறறாரா?

மஞ்சள் சீலை :

அப்படி ஏதும் எனக்கு தோணலடீ நார்மல்தான்.

சிவப்பு சீலை :

எங்கயாச்சும் வெளில கூடிட்டு போக சொன்னா கூட்டிட்டு போவார இல்ல சடைவாரா?..

மஞ்சள் சீலை :

அதுலாம் சொல்லமையே கூட்டிட்டு போவாரு. சாப்பிடறக்கும் ஒரு கொறையும் இல்லாம வாங்கித்தருவாரு அவரோட தங்கசிங்க்களே அதுக்காக சில நேரம் பொறாமை படுவாளுக அதுலாம் எனக்கு பிரச்சனையே இல்ல.

எனக்கு பிரச்சனையே எல்லாத்துக்கும் கிடைக்கிற ஒன்னு எனக்கு என் வாழ்க்கையில இல்லாத மாறி ஒரு பீல்.

இதனிடையில் (வழுத்தூர்.. வழுத்தூர் என ஜன்னல் கம்பி வழியாக இளவயது கண்டக்டர் ஒருவன் கூவியப்படியே பஸ் ஒன்று வந்து நின்றது.)

நமது கதாநாயகன் இவர்களை பார்த்தப்படியே சம்மணம் இட்டு பீடியை ஊதி தள்ளி அசைபோடப்படி இருந்தான்.

மஞ்சள் சீலை :

அந்த கண்டக்ட்டர்ர பாரேன் இந்நேரத்துக்கு அவன் பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுட்டு வந்து குறஙகு மாறி கத்திக்கிட்டு இருக்கான்.

சிவப்பு சீலை:

ஏன் வெண்ணிலா நீ அதுலாம் யோசிக்கற உனக்கும் குழந்தைலாம் கண்டிப்பா பொறக்கும் நிலா.நான் சொல்லறத கேளு நீ நம்ம ஊரு கோனியப்பன் கிட்ட காச குடுத்து லேகியம் வாங்கிட்டு வரச்சொல்லு அவனுக்குதான் விலாசம் ஊருலாம் தெரியும்.

அவன் எகத்தாலாமா சிரிப்பான். நீ கண்டுக்காத உன் புருசனுக்கு தெரியவேணாம்ன்னு சொல்லிவை மறக்காம..

வெண்ணிலா (பாதிக்கப்பட்டவள் ):

அதுலாம் விடு.. நீ எவ்ளோ நாளைக்கு ஒரு தடவ பழக்கம் வச்சுருக்க

சிவப்பு சீலை :

முன்னாடி எல்லாம் தினமும் இருக்கும் ரேவதியும் கண்ணனும் எப்போடா தூங்குவாங்கனு இருக்கும் அப்புறம் அவங்க பெருசானதும் தனியா தூங்க ஆரம்பிச்சாங்க.

நாங்களும் சுதந்திரமா இருந்தோம்.புள்ளைக இல்லாதனால ஏனோ அப்போதாய்க்கு நாங்க பயந்து பயந்து செஞ்சுகிட்ட சுவாரஸ்யம் கொறஞ்சனால எங்களுக்கு இப்போலாம் எப்பவாச்சும்தான் அது நடக்கும்.

அதுவும் ரொம்போல்லாம் இருக்காது சப்புன்னு ஆகிடுச்சு எனக்கு.

வெண்ணிலா :

ம்ம் ஒவ்வொருவருதங்களுக்கு ஒவ்வொருவரு மாறி எனக்கு இப்போல்லாம் என்ன செய்யறதுண்ணே தெரியல என்று கூறியப்படி தனது சீலையால் முகத்தை துடைத்தபடி கூடையில் இருந்த தண்ணீரை எடுத்து மட மடவென குடித்தாள்.

பின் நிதானமாக" அடுத்த ஆடியோட 8 வருஷம் டீ அதான் மனசு பாரமா இருக்கு.

நான் ரொம்ப புலம்பறன்னால என் புருஷனுக்கு ரொம்ப வேதனையை கொடுக்குறோமோன்னு தோணுது.

அவள் வெண்ணிலாவின் தோளில் கை வைத்தாள்.

வெண்ணிலா :

நைட் டிவி சேனல்ல அந்தரங்கம் ஷோல டாக்டர் ஹெல்ப்லைன் நம்பர் வரும்.

இந்த மாறி பிரச்சனை இருக்குல நாம

டாக்டர்க்கு போன் பண்ணி பேசலாமாங்கன்னு கேட்டேன். அதுக்கு அவரு எங்க குடும்பத்துல மூணுல ஒருத்தருக்கு குழந்தை பாக்கியம் லேட்டாதான் கிடைக்கும் ஆனா கண்டிப்பா கிடைக்கும்.

எங்க அப்பா ஓட பெரியப்பா பையன் அப்புறம் எங்கப்பா எல்லாம் அண்ணன் தம்பிகதான...ஆனா எங்க பெரிப்ப மகனுக்கு குழந்தை லேட்தான். அதான் உனக்கு தெரியும்ல நம்ம ராமேஷு அவன் 15 வருஷம் கழிச்சுதான பொறந்தான்.

அதலாம் நடக்கும் நாம ஒன்னு செய்யாம இருந்தா சேரின்னு சொல்லறாரு என் புருஷன்.

என் மாமியாருக்கு தான்தான் ஒரு பெரிய தெய்வக்கரசின்னு நெனப்பு என்னய காலைல 4 மணிக்கு எந்திருச்சு 48 நாளைக்கு விரதம் இருக்க சொல்லுது...

சிவப்பு சீலை :

தோள்களில் கைவைத்தப்படியே நீ வேணும்னா டெஸ்ட்டியுப் பேபிக்கு ட்ரை பண்ணி பாரேன் வெண்ணிலா... என கூற வெண்ணிலாவோ பெருமூச்சு விட்டாள்.

தெரியாமல் கேட்டுவிட்டோமோ என எண்ணியவள் அட..நான் தப்பா ஏதும் சொல்லல நிலா அண்ணனுக்கு (வெண்ணிலாவின் கணவன் ) கூட பொறந்தவங்க யாரும் இல்லய்யில..அதான்..??

என் புருஷன வேணா ஹாஸ்ப்பிட்டல்க்கு வரச்சொல்லறேன் அண்ணனுக்கு தெரியவேணாம். என்று அவள் கூற

பேச்சு மூச்சே வெண்ணில்லாவிடம் இல்லை சில் நொடிகள் நிசப்தம் நிலவியது..

பிறகு தலையை உயர்த்தியப்படி ஹாஸ்ப்பிட்டல்லாம் வேணாம் வள்ளி எங்க மாமியாரும் அவரும் இல்லாதபோது சொல்றேன் வீட்டுக்கே வரச்சொல்லறயா.. என படக்கென்று கேட்டுவிட்டாள்.

(டிசம்பர் 25. 12 மணி ) ஆனது. கிறிஸ்தவ ஆலயத்தின் மணி பயங்கரமாக வான வேடிக்கையோடு அடித்தது....எங்கும் வண்ண வண்ண வெடிகள் வெடித்து சிதறியது.இவர்களின் நிலற்குடையில் நெருப்பு பொறிகள் விழ..

ஆலயத்தின் பெருங்கூட்டமும் பேருந்து நிலையத்தின் கூட்டமும் ஆலயத்தின் ஒலிபெருக்கியில் கர்த்தரே எங்களை பாருங்கள் என வரிகள் ஒலிக்க..

"மாறும் உலகில் மாறத அன்பே நிரந்தரம்" என்று பெருங்கூட்டம் அடுத்த வரியை பாடியது.

வள்ளி வெண்ணிலாவை உற்று நோக்கினாள்.

பின் ஓங்கி பளார் என வெண்ணிலவை அறைந்தாள். அறைந்த அந்த நொடியே..

வெண்ணிலவோ வள்ளி தன்னை பொதுப்பார்வையில் வலி அறியாத ஒருவளாக எடை போடுவதாக எண்ணி வள்ளியை நோக்கி...

"நீதான் தேவிடியா " என கத்தி கூச்சலிட்டு அங்கிருந்து ஓடினாள். வெண்ணிலவை தூரத்தியப்படியே வள்ளியும் ஓட 12 மணி ராமேஸ்வரம் பேருந்து வந்தது.

கூட்டம் முண்டியடித்து கொண்டு பஸ் எற.. வள்ளியும் வெண்ணிலாவும் ஓடிக்கொண்டே இருந்தனர்.

சுதா

8.4.22.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...