JUNE 10th - JULY 10th
வலி.
நான்கு வருடங்கள் முன்பு கிராமத்திலருந்த அப்பா அம்மாவை, மத்திய அரசு ஊழியரான நான்
எல்.டிசிமூலமகாசிஅழைத்துபோயிருந்தேன்.அவர்களுக்கு சந்தோசம் .
காசி போய் வந்த பிறகு எல்லோரிடமும் , என் பையன், புண்ணியத்தில், காசி யாத்திரை போயிட்டு வந்துட்டேன். இந்த பத்ரிநாத் பார்த்துட்டு வந்துட்டா, என் கட்டை வெந்துடும். என்று அம்மா அடிக்கடி ,புலம்பி கொண்டுருந்தாள்.
நீண்ட நாள் ஆசை. ஏனோ தெரியவில்லைஅதற்கான சந்தர்ப்பம் அமையாமல் . ஒவ்வொரு வருடமும் , தள்ளி கொண்டே போனது. புண்ணியமும். பிராப்தமும் இருந்தாதான் போக முடியும்.
இங்கே பக்கத்திலே இருக்கிற, திருப்பதி பெருமாளை சேவிக்க கூட, சில பேருக்கு உடனே சந்தர்ப்பம், கிடைக்காது. பெருமாள் நினைக்கனும்.
இந்த வருடம், எல் டி சி லாப்ஸ், ஆயிடும்ன்னு, அம்மா அப்பாவிடம் சொல்லி , பத்ரிநாத் புறப்பட தயாராகும் படி சொன்னேன்.
வீட்டை பக்கத்து வீட்டு பாட்டியை, பார்த்துக்க சொல்லிவிட்டு, அம்மாவும் அப்பாவும், நேரே சென்னையில், உள்ள அண்ணா வீட்டுக்கு, வர சொல்லி, கை செலவுக்கு பணமும் கொடுத்து விட்டு ஊர் திரும்பிருந்தேன்..
அண்ணாவிடம் தகவல் சொன்னபோது,
எங்களுடன்துணையோடு துணையாக, மன்னியும் வர விருப்பபடுகிறாள். . எனவே அவளுக்கும் சேர்த்து டிக்கெட் ரிசர்வு பண்ணி விட்டேன். என்று சொல்லியிருந்தார்.
நீங்க இரண்டு பேரும் டெல்லிய சுற்றி பார்த்து விட்டு , ஒரு வாரம் கழித்து வருவேன், என்று சொன்னதால் உங்க இரண்டு பேரை தவிர்த்து, மத்த மூணு பேருக்கும் ரிட் ட ன் டிக்கெட் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ல ரிசர்வுபண்ணிட்டேன்.
இன்டர்நெட் ஸ்மார்ட் போன் வராத காலம். புக் பண்ணிய டிக்கெட்க்கு பணம் அனுப்பு என்று தகவல் சொல்லி விட்டு,கூடவேஎன்டிக்கெட்ஸ்,அப்பா அம்மா டிக்கெட்ஸ் ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி இருந்தார். என் ஆபிசில் காண்பிக்க.!!
ஒரு முறைக்கு பல முறை வேண்டிய துணி.மணிகள் பணம் ட்ரெயின் டிக்கெட் செக் பண்ணி கிளம்பும் போது இரவு மணி 0850 .திடீரென லை ட் ஆப் ஆனது அபசகுணமா தெரிஞ்சுது.
இரவு 0930க்கு ட்ரெயின்.15 நிமிடத்தில் போய் விடும் தூரம் தான். அதற்குள் பவர் வந்துவிடும் ஏன்று நம்பிக்கை கொண்டேன் .
மணி 0910.இனியும் தாமதிக்க முடியாது ரிசர்வு பண்ணிய வண்டி.
வீட்டை பூட்டி விட்டு ஆட்டோவில் அரை மனதுடன் கிளம்பினோ ம்.
சென்னை வந்து மறுநாள் டெல்லிக்கு ட்ரெயின் டெல்லியிலிருந்து பணிக்கர் ட்ராவல்ஸ் மூலம் ஹரித்வார் ரிஷிகேஷ்.அங்கு இரண்டு நாள்சுற்றி,பார்த்துவிட்டுபின், அரசாங்க பஸ் மூலம், பத்ரிநாத் பயணமானோம்.
அப்பா, அவர் மூதையார்க்கு சிரார்த்தம் பண்ணினார்.
எந்த பிரச்சினையும் இல்லாமல், டெல்லிக்கு திரும்பி வந்து,
அம்மா அப்பா ,மன்னி மூவரையும், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்மூலம், ஏற்றி விட்டு நான்,மனைவி குழந்தைகள் இருவரும் ஹாலிடே ஹோமில், தங்கி டெல்லி, ஆக்ரா சுற்றி பார்த்து விட்டு, திருப்பதி பெருமாளை, ரேனிகுண்டாவில், இறங்கி தரிசித்து விட்டு, சென்னை போகலாம், என்ற முடிவில் ஜனதா எஸ்பிரஸ்ஸில் ஏறி கொண்டோம்.
டாய்லெட் பக்கத்தில் பர்த் கொடுக்கபட்டிருந்தது. டாய்லெட் ஸ்மெல் மனைவியை முகம் சுளிக்க வைத்தது.
நான் எடுத்த முடிவு, மறு நாள் காலை, என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி வீசப்போகிறது என் மனதில் ரணங்களை உண்டு பண்ண போகிறது என்று, உணராமல் இரவு தூங்க போனேன்.
நான் என் மனைவி 6 வயது பெண் 3 வயது பையன். இரவு படுப்பதற்கு முன்பு எல்லா பணம், டிக்கெட் மனைவியின் கைபை எல்லாவறறையும் சூட் கேசில் வைத்து விட்டு, , இரவு என்ன சிலவு இருக்க போகிறது?….. என்று நினைத்து, ரூபாய் 20 மட்டும் சட்டை பையில், வைத்து கொண்டு, தலைக்கு தலையணை மாதிரி சூட் கேசை வைத்துக்கொண்டு , அலாட் ஆகியிருந்த லோயர் பர்த்தில் படுத்து, அசதியில் தூங்கி விட்டேன்..
அதிகாலை 4 மணி,ரயிலில் . ஒரே சத்தம் . என் சூட் கேஸ் ,காணாமல் போய் விட்டதாக, உள் உணர்வு சொல்ல, திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது, நிஜமாகவே என் சூட்கேஸ் காணமால், போயிருந்த்து . பார்த்தபோது அது நாக்பூர் ஜன்க்ஷன் .
10 பவுன் , 2000 ரூபாய் பணம் ட்ரெஸ் டிக்கெட்ஸ் எல்லாம் பறி போய்விட்டது.
அழுகை, துக்கம் ,நெஞ்சை அடைத்தது .ஒன்றும் புரியவில்லை .
காம்பர்ட்மெண்ட்ல்இருந்தமத்த
பிரயாணிகள்,நீங்கஆர்.பி.எப்க்குபுகார்
செய்யுங்கள்ஏதாவதுபலன்கிடைக்கும்.நாளைக்கு எல்.டி. சி பில் சான்க்ஷன் செய்ய, இந்த ரிப்போர்ட் உதவும் என்றார்கள்.
சில பேர் இந்த ரயிலிலே, பிரயானம் செய்யுங்கள் என்றார்கள்.
"எத்தை தின்றால் பித்தம் தெளியும் "
என்பார்களே அது போல் குழப்பமான சூழ்நிலையில் அந்த ரயிலை விட்டு இறங்கி,ஆர்.பி. எப் இன்ஸ்பெக்டரை பார்க்க போகும் போது அவர் டேபிள மீது கால் போட்டுகொண்டு சேரில் தூங்கி கொண்டுருந்தா ர்.
ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டும் ஒரு தனி அறையில். ..நான் உள்ளே போனதும் இன்ஸ்பெக் ட்ர்
முழித்து கொண்டு" ஹோ ன் ஹை? ஹோன் ஹை" !! என்று கேட்க நான் ஆங்கிலத்தில் நடந்த தை சொல்ல .அவர் இந்தியில் பதில் சொன்னது எனக்கு புரியவில்லை ..
எனக்கோ இந்தி கொஞ்சம் தான் தெரியும் பேச வராது.
"அங்கிரெசிமே போலியே" என்று எனக்கு தெரிந்த இந்தியில் ,சொன்னேன்.
சட்டென்றுஅவர் டேபிளில் . உள்ள பெயரை பார்த்ததும் ."சார் நீங்க தமிழா "?.........ஆமாம் "! வேலூர் பக்கம்"
"நான் மன்னார்குடி சார்."
நடந்த விஷயத்தை சொன்ன பிறகு,
" புகார் எழுதி கொடுங்க "
எழுதிகொடுத்தேன்.
திருடன் இந்நேரம் பறந்துருப்பான்.
இருந்தாலும் ஏதோ ஒரு
பிளா ட் பாரமில் ஒங்க சூட் கேஸ் ,துணிமணிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று சொல்லிவிட்டு ,
என்னுடன்,ஒரு கான்ஸ்டபிள் ஐ அனுப்பிவிட்டு ,அங்குள்ள எல்லா நடை மேடை முழுவதும் ,தேட சொன்னார்.
அதற்குள், மணி காலை 6 ஆகி விட்டது. கூடவந்த போலீஸ்."நாஸ்தா சாப் " நாஸ்தா சாப் என்று நச்சரித்து கொண்டே வந்தான்.
என் கவலை அவனுக்கு தெரியுமா? அவனுக்கு நாஸ்தா வேண்டும்.
எரிச்சலுடன் அவனுக்கு ஒரு டீ இரண்டுபன் போக, இருந்த ரூபாய் 20 காலி
நாங்கள் எல்லா நடைமேடையும் தேடி, தேடி அசதியாகி, திரும்ப ஸ்டேஷன் வருவதற்குள், ரிப்போர்ட் கொடுக்காமல் சூரிய நாரயண்ன் டூட்டி முடிந்து போய் விட்டார்.
டூட்டிக்கு வந்த இன்னொரு இன்ஸ்பெக்டரிடம், மறுபடியும் நடந்ததை சொன்னேன்.ஆங்கிலம் தெரியாததால்," க் யா க்யா" என்றார்.
நல்ல வேளை, கூட வந்த போலீஸ் ,நடந்ததை சொன்னபோது, "10 மணிக்கு வா "என்று திருப்பி விட்டார்..
பிச்சை எடுக்கும். நிலை குழந்தைகளுக்கு ,ஒரு மராத்தி குடும்பம் டிபன் வாங்கி கொடுத்தார்கள்.
12 மணிக்கு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் வந்துடும் .அதுலே ஏறிடுவோம்.
போய் ரிப்போர்ட் வாங்கி வாருங்கள் என்றாள் என் மனைவி.
மணி11.ரிப்போர்ட் கொடுக்கஅந்த இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினேன்.என் நிலைமையைஎவ்வளவு சொல்லியும் என்ன காரணமோ தெரியவில்லை.
கிட்ட தட்ட 30 நிமிடம் வாதாடியும் அவன் என் கஷ்டத் தை உணர்ந்து கொண்டதாக தெரிய வில்லை.
மணி 1150 ஆகி விட்டது
இனி இவனை கேட்பதில் ப்ரயோசனமில்லை.
இன்னும் 10 நிமிஷத்தில் ரயிலை பிடிக்கவேண்டும் .
மீண்டும் என் பிளாட் பாரம் மூச்சு இறைக்க ஓடி வந்தேன்.
நடப்பது நடக்கட்டும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வண்டியில், ஏறி உக்காருங்கள் என்றனர் சிலர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் உக்கார்ந்தகொண்ட எஸ்
4 கோச்சில் ஏறிய எங்களை , ( ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் வேலை செய்யும் , சென்னை பெண்மணி தனக்கும், தன் பையனுக்கும் உள்ள இரண்டு பர்த்தில் ,பையன் பர்த் ஐ கொடுத்து, உக்கார சொன்னார்.
அவரே குழந்தைகளுக்குலஞ்சு வாங்கி கொடுத்தார்.
எங்களையும் கேட்டார் ஆனால் எங்களுக்கு பிடிக்க வில்லை .காபி மட்டும் சாப்பிட்டோம்
மதியம் 4 மணிக்கு வேறு விதத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
.
டி டி ஆர் மூலம் பிரச்சனை .அவர் புல் போதை . எங்களை, "இறங்கு, இறங்கு" ,என்று இந்தியில் சொல்லி கொண்டே வந்தார்.
நான் வாய் மொழி சொல்லில் என் உத்தியோகம் எல்.டி சி மூலம் வந்துள்ளோம் காலையில் நாக்பூர் இல் நடந்த விபரங்களை சொல்லியும் என் அடையாள அட்டையை காணபிக்க முடியாத நிலையில் என் பேச்சு எடுபடவில்லை.
என் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக நடந்து கொண்டார்.
நான் கிட்ட தட்ட 4 மணி நேரம், டாய்லெட் பக்கத்திலேயே, இருந்தேன்.அவர் கண்ணில் படாமல் இருக்கவேண்டுமே!.
சைல்பெண்மணி எவ்வளவு வாதாடியும், அந்தடி டி ஆர் கேட்கவில்லை.மற்ற பிரயாணிகள் வலியுறுத்தி சொல்ல, என் மனைவி குழந்தைகளை மட்டும் அனுமதித்தார்.
ஓ ரு வழியாக ,அவர் டூட்டி இரவு 10 மணிக்கு முடிந்து போனதும் ,இன்னொரு
டி டி ஆர் எங்கள் நிலமை கண்டு, பரிதாபம் கொண்டார். என் அடையாள கார்ட் இல்லை. என்றதும் நம்ப மறுத்தார்.
(SAIL )சைல் பெண்மணி தான் ,எங்களுக்கு எல்லாம் உதவிகளையும் செய்தார்.
ஒரு ராணுவ வீரர் 100 ரூபாய் கொடுத்தார்.
இரவு முழுவதும் தூங்கா இரவு எங்களுக்கு.அழுது அழுது ,கண்ணில் நீர் வற்றி போயிருந்தது.
மறு நாள் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தவுடன் .சைல் பெண்மணிக்கும், ராணுவீரருக்கும் ,நன்றி சொல்லிவிட்டு, வெளியில் போக வரும்போது ,டிக்கெட் செக் பண்ணும் ரயில்வே ஊழியரை பார்த்ததும், மீண்டும் வயிறு கலக்கியது
.நம்மிடம் டிக்கெட் இல்லை. அபராதம் போட்டு விட்டால்?
கேட் நெருங்க நெருங்க
பயம் இன்னும் அதிகரித்து.
குலதெய்வத்தை வேண்டி கொண்டேன்.
ஏதோ இன்னொரு ரயில் வந்துருக்க வேண்டும். திடீரென திமு திமுவென ஒரே கூட்டம். முண்டி அடித்து வந்து கொண்டு இருந்தது
கூட்டத்தோடு கூட்டமாக, தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே வந்தோம்.
.17 D பிடித்து கோடம்பாக்கம் சாமியார் மடம் வந்து, அண்ணாவிடம் சொன்ன போது, ,
இங்கு வந்த பிறகு, நீ திருப்பதி போக வேண்டியது தானே?..ஏன் ரேனிக்குண்டா டிக்கெட எடுத்தே? ஒன் அஜாக்கிரதை தொலைச்சிட்டு வந்து நிக்கற!!!
.
சொல்லிவிட்டு தன் ரூம் போய் விட்டார்.
,பணம் தரட்டுமா ? என்று கேட்கவில்லை.…..
இதே அண்ணாவுக்கு, இரண்டு வருடம் முன்பு, அவருடைய பெண் கல்யாணத்துக்கு கடைசி நேரம் ,சிலஅத்தியாவசமான சிலவுக்கு 1 லட்சம் தேவைபட்டது.சம்மந்தி கத்திக்கொண்டு இருந்தார்.
கை பிசைந்து ,எங்கும் கேட்டும் பணம் கிடைக்காத போது, என் மனைவி சங்கிலியை, உடனே அடகு வைத்து ,பணத்தை, அவரிடம் கொடுத்தேன்.
இன்று,நான்எல்லாவற்றையும் தொலைத்து விட்டு, பிச்சைக்காரன் கோலத்தில், இருக்கும் போது, ஒரு ஆறுதல் பேச்சு கிடையாது.உதவி இல்லை.
சோகமான சூழ்நிலையில், தணலில் விழுந்த புழுக்கள் மாதிரி உணர்ந்தோம்..
.
மறுநாள் ,என் சட்டையை, துவைக்க போட்டு இருந்ததால் ,, அவர் சட்டையை போட்டுக் கொண்டு, வெளில போக வேண்டிய சூழ்நிலை.
என் மேல் அதிகாரிக்கு, ஒரு மாத லீவு சம்பளம் விண்ணப்பித்து, சம்பளத்தை ,தந்தி மணி ஆர்டர் மூலமாக அனுப்ப சொல்ல,
தந்தி ஆஃபீஸ்க்கு சென்று தந்தி கொடுத்து விட்டு,
வீட்டை அடைந்த போது, அவர் கத்தி கொண்டு இருந்தார்.
அவர் சட்டையை, நான் போட்டு கொண்டேனாம்!! .
அதனால் கோபமும் தடித்த வார்த்தைகளும் என் மேல்!
நான் ஏதும் பேசாமல், சட்டையை துவைத்து இஸ்திரி போட்டு வைத்தேன்
மறு நாள் மணியார்டர் ,12 மணி அளவில் வந்தது.
ஆபீஸ் போயிருந்தஅண்ணாவிடம், சொல்லி கொண்டு, ஊர் வர, எனக்கு மனசு வரவில்லை .
.
ஊர் கிளம்பும் போது, "
"அண்ணன் என்ன? தம்பி என்ன ?சொந்தம் என்ன?பந்தம் என்ன?நன்றி கொன்ற உள்ளங்களை, கண்டு, கண்டு, வெந்த பின்பு, என்னடி எனக்கு, இங்கு வேலை ?"
"நம்பி ,நம்பி , வெம்பி, வெம்பி, ஒன்றுமில்லை என்ற பின்பு ,உறவு கிடக்கு போடி ?"
டீ வியில் ரஜினி பாடிக்கொண்டுருந்தார்
.
எனக்காகவே பாடிய மாதிரி இருந்தது.
ஆனந்த் ஶ்ரீனிவாசன்
.
#481
25,520
520
: 25,000
11
4.7 (11 )
iraraghavan
சூப்பர்.
ilaval2010
pnrbhuvana
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50