செறிவு

saravananrajasekarank
அரசியல்
4.8 out of 5 (5 )

அம்மா சமையலறையில் பரபரப்பாக சமையல் செய்து கொண்டு இருக்கிறார்..


சத்யா வின் அறையில் (அலங்கோலத்தில் இருக்கிறது) தனது நண்பர்களுடன் சமூக வலை தளத்தில் உரையாடி கொண்டிருக்கிறாள்..

அம்மா கண்ட படி திட்டிகொண்டே சமைக்கின்றார்..

அம்மா: இங்க ஒருத்தி கஷ்டப்பட்டு சமையல் பண்ணிட்டு இருக்கேன்.. கொஞ்சமாவது கண்டுக்குறால பாரு.. எப்போ பாரு mobile...

தூக்கி போட்டு உடைக்குறேன் பாரு..

அதை சுத்தமாக கண்டுகொள்ளாமல் கைபேசியில் தொடர்ந்து சத்யா...

அருகில் தொலைகாட்சி பார்த்துக்கொண்டே , அம்மா திட்டுவதை கண்டுக்காதது போல உதரோடம் சிரிப்புடன் தொடர்ந்து தொலைக்காட்சி யிலே கவனம்..

வீட்டின் Hall யில் தொலைக்காட்சியில் செய்தி (ஆணவ கொலை சார்ந்து)

அப்பா செய்தியை பார்த்துக்கொண்டு இருக்கிறார்..


அப்பாவின் கைபேசி ஒலிக்கிறது (சாதியம் சார்ந்த பாடல் ரிங்டோன்)

அப்பா : சொல்லுங்க

கைபேசியில் ஒருவர் : என்ன sir பண்றீங்க.. பேசலாமா..


அப்பா : மம் .. சும்மா.. தா... செய்தி பாத்துட்டு இருக்கே.. சாப்ட போறேன்.. சொல்லு பா..

ஒருவர் : பேசலானங்கலா

அப்பா : சொல்லு பா..

ஒருவர் : இல்லா.. சார்
. ஒரு ஜாதகம் வந்துருக்கு.. பொருத்தம் ரொம்ப சூப்பர்.. என்ன சொல்றீங்க ... சார்

அப்பா : என்ன வேலை பாக்குறப்புல..
எவ்ளோ சம்பளம்.. குடும்பம் எப்படி..

ஒருவர் : நல்ல குடும்பம், மாசம் 30 ஆயிரம் வாங்குறாங்க... நல்ல பையன் தா சார்..

உடனே அப்பா..


அப்பா : இதுலம் இருக்கட்டும்
பையன் நம்ப ஆளாங்களா... அதுதா முக்கியம்


ஒருவர் : அட.. நா எப்டிங்க sir மாதி பாப்பேன்.. அதும் நீங்க சொன்னது அப்பறம்..

(அறையில் இருந்து சத்யா - ஒரு வகையான கோவதுடன் அப்பா வை பார்க்கிறார்)

அப்பா : சரி.. சரி.. எப்போ ன்னு நாள சொல்லு.. நா வீட்ல பேசிடு உண்ண அழைக்கிறேன்.


மறுநாள் காலை..


என்றுமில்லாமல் இன்று சத்யா நேரத்திற்கு முன்பாக கைபேசியை எடுத்து கொண்டு வீட்டிற்க்கு வெளியே சென்று காலணியை வேகமாக அணிந்துகொண்டு , ஒரு பட படப்புடன் கல்லூரிக்கு செல்கிறாள்..

(அறை அலங்கோலம் ஆகவே உள்ளது)..


இதையெல்லாம் கவனித்த அப்பா ...


அப்பா (mind voice) : என்ன போய்ட்டு வரேன்னு கூட சொல்லாம போரா..


யோசனையுடன் அலுவலகத்திற்கு தயாராகி வருகிறார்..


அன்று பிற்பகல்...


அப்பா வேலையின் உணவு இடைவேளையின் (அப்பா தேநீர் கடையில் இருக்கும் போது) சத்யாவின் அம்மாவிடம் இருந்து கைபேசியில் அழைப்பு..


அம்மா: என்னங்க .. சத்யா காலேஜ் போகலயாம்.. நீங்க கொஞ்சம் சிகரம் வாங்க.. வீட்டுக்கு.. ஒரு மாதிரி பட பட ன்னு இருக்கு..


நாம போய் விசாரிக்கலாம்...


அப்பா பதட்டத்துடன் கிளம்ப.. வழியல்லாம்.. பல யோசனையுடன்.


வீட்டிற்க்கு வருகிறார்..


வீட்டில் அவர் மனைவி (சத்யாவின் அம்மா) இல்லை.. அருகில் விசாரித்தால்..
" சத்யா காலேஜ் வரைக்கும் போறேன்னு சொன்னாங்க " அவ்வாறு அருகில் இருப்பவர்கள் கூறுகின்றனர்..


அப்பா -க்கு கோவம் ஒரு புறம் இருந்தாலும் இன்னொருபுறம் பயம் தலைக்கு ஏறிய நிலையில் , என்ன செய்யலாம் என்று புரியாமல் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருக்கும் பொழுது..


ஒருவன் வண்டியில் வேகமாக வந்து ஒரு கடிதத்தினை தூக்கியெறிந்து விடு (அப்பாவின் முதுகில் - அவர் பின் புறமாக) வண்டியை வேகமாக ஓட்டி செல்கிறான்..


அப்பா உடனே திரும்பி யார், என்ன என்று பார்த்தால்.. வண்டி சத்யாவின் வண்டி.. ஓட்டுவது யாரோ ஒருவன்.. கடிதம்.. ஒன்றுமே புரியவில்லை அப்பாவிற்கு..


பயத்துடன் அப்பா அந்த கடிதத்தினை எடுத்து வேகமாக படிக்க துவங்குகிறார்..


கடிதத்தில்.. (சத்யா Voice)


அப்பா..
நா சத்யா.. உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்..
சொல்றதுக்கு ரொம்ப பயமா இருக்கு.. நீங்களும் அம்மா வும் இப்போ ரொம்ப பதட்டத்தோடு இருப்பீங்க ன்னு தெரியும், என்னால உங்களுக்கு இவ்வளோ பெரிய அவமானம் வந்துருச்சு ன்னு நினைக்காதீங்க..


தயவு செஞ்சு நா சொல்றது கொஞ்சம் புரிஞ்சு கொங்க...


நா காலைல வீட்ட விட்டு சீக்கிரமா கெலம்பும் போது சின்னதா உங்களை கவனிச்சேன்.. அப்போவே உங்களுக்கு நா கஷ்டத்தை குடுக்க போறேன்னு ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு..

இருந்தாலும் உங்ககிட்ட நேர பார்த்து சொல்ல எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு..

இந்த விஷயம் உங்க கிட்ட சொன்ன ஆசை ஆசையா வளர்த்த பொண்ணுனு கூட பாக்காம என்ன கண்டிப்பா எதாது பண்ணிருவிங்க ன்னு எனக்கு நல்லாவே தெரியும்..


அத இந்த மாதிரி letter மூலையுமா சொல்றேன்..

என்னைய தயவு செஞ்சு மண்ணிச்சுறுங்க..


சத்யா என்ன சொல்ல வருகிறாள் என்று அப்பாவிற்கு புரிந்து விட்டது..
அப்பாவின் இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது..


அவருக்கு தற்போது தன் மகளை பற்றி கூட தற்போது சிந்தனை இல்லை..

உறவினர்,சுற்றத்தார் பற்றிய விஷயம் மட்டுமே மூலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது..

(அப்பா தொடர்ந்து கடிதத்தில்)

(சத்யாவின் voice)

அப்பா...

அப்பா அது வந்து...


என் வண்டில ஓட்டிடு வந்து உங்க மேல இந்த letter அ போட்டான்ல.. அவன் friend kayal உடன் அண்ணா தான் .

அவன் பெயர் குகன்.

அவன எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும், நெறைய விஷயம் எனக்கு சொல்லி குடுத்து இருகான்,


ரொம்ப நல்ல பையன்..

அப்பாவின் இரத்த அழுத்தம் உச்சியில் உள்ளது..

தொடர்ந்து...


என் friend கயல், குகன், நா ..

3 பேரும் பேசி தா இந்த முடிவு செஞ்சோம்..


எங்களுக்கு வெற வழி தெரியல..


மண்ணிசுறுங்க..


அதாவது.. அப்பா..

நா.. அது ..

அது வந்து..


எப்படி சொல்றதுன்னு தெரியல..


ஒரு நிமிஷம் அப்பா உச்சகட்ட கோவத்திலிருந்து.. மேலும் அவர் அதி உச்சத்திற்கு சென்று விட்டார்..


நா மறுபடியும் C/A Exam ல fail ஆகிடேன்..

மண்ணிசுறுங்க..


சிறிது இடைவெளி..


(Continues sathya Voice)
என்ன என்னாலம் நினைச்சுருபிங்க ன்னு என்னால நல்லாவே உணர முடியுது.. இவ்வளோ மனசுல அசிங்கத்தை வெச்சுகிட்டு எப்படி உங்களால என்கிட்ட பாசமா நடிக்க முடியுது ன்னு எனக்கு தெரியல பா..

நீங்க ஒரு நல்ல அப்பா வா தா இது வரைக்கும் எனக்கு எல்லாமே செஞ்சு இருக்கீங்க.. ஆன இந்த ஒரு விஷயத்துல மட்டும் ஏன் இவளோ ஒரு வெறி பிடித்த மாதிரி இருக்கீங்க நு தெரியல..

வீடு பாகுறதுல இருந்து, அக்கம், பக்கம் பழகுறவங்க இருந்து, இப்டி பாத்து பாத்து கடைசியாக எனக்கு பாக்குற மாப்பிளை வரைகுமா.. ஏன் அந்த கருமத்த என் தலைலயும் கட்ட பாக்குறீங்க .. அப்பா..


நீங்க என்னைய கஷ்டபட்டு வளத்து, நல்லா படிக்க வெச்சு , என்ன உபயோகம் சொல்லுங்க..


எனக்கு நீங்க செய்றது சுத்தமா புடிகல .. அப்பா.. அவ்ளோதான்..


நா பல தடவை சொல்லிட்டேன்..
நீங்க அதே தவற மேல மேல செஞ்சுகிட்டே தா இருகிங்க.. அது என்ன "சாதி, மண்ணாங்கட்டி சாதி" ..

நீங்க இந்த சாதி எனும் சாக்கடைல இருந்து மேல வந்து வெளிய பாருங்க..

நாங்க என்ன என்ன லாம் நினைக்கிறோம் , எப்டிலம் இந்த உலகம் போகிட்டு இருக்குனு கண்ணா தொறந்து பாருங்க..

சரி..

மண்ணிசுடுங்க.. உங்களை
ரொம்ப அழுத்தம் பண்ணிட்டேன்.. உண்மையா சொல்ல வேண்டிய நேரம் வந்துரச்சு..

நா exam ல லாம் Fail ஆகளா..
பாஸ் பண்ணிடேன்...

நா இப்போ எதிர் வீட்டு மாடில இருந்து தா உங்கள பாத்துட்டு தா இருக்கேன்..


(சத்யா இனிப்புசாப்டுட்டு , அப்பா வ சிரிச்சுகிட்டே பாகுறா)


இன்றைய தலைமுறைகள் அனைவருமே சாதி வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ சொல்வதில்லை..


அவர்களுக்கு சமூகம் சார்ந்த சரியான புரிதல் மட்டுமே வேண்டும்.


தற்போதுள்ள சமூக நிலை ஆனது சாதி, சாதியம் சார்ந்து தான் மறைமுகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது, கட்டமைக்கப் படுகின்றது..

" சாதி, சாதியம், ஒடுக்கு முறை இவையெல்லாம் இந்த காலத்தில் இல்லை " என்று கூறுபவர்கள் தான், மறைமுகமாக சாதியை தூக்கி நிறுத்துகின்றனர்...

தற்போது உள்ள சமூகத்தில், சாதி , சாதியம் பற்றி பேசாமல் இருந்தாலே சாதி என்பது இல்லாமல் போகிவிடும். அது சார்தே இங்கு எல்லாம் (அரசியல்) இயங்குகிறது.


இக்காலத்து தலைமுறைகள் தெளிவாக சிந்திக்க , சரியான வழிமுறைகள், தலைவர்கள் , கல்வி முறை மிக மிக குறைவாக உள்ளது,

" மிக சரியான கல்வி முறையே , இங்கு சாதியை ஒழிக்க முடியும் "

" பிறப்பலும், பேசும் பொழியாலும், இறப்பாலும் அனைவரும் ஒன்றாக பயணிக்கும் இந்த வாழ்வில்
, இடையில் இந்த சாதி எனும் சாக்கடை எதற்கு "


" சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் நஞ்சு கலக்கட்டும் " - அம்பேத்கர்

-

சரவணன் இராசசேகரன்

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...