காலாவதியான காதல்.
சிறு கதை.
என்னங்க இங்கேயே இருந்து விடலாம் என்று முடிவே எடுத்து விட்டீர்களா? அங்கே என்ன ஆச்சு? ஏது ஆச்சு? என்று நினைவு உங்களுக்கு வர வில்லையா!என்று கேள்விக்கு மேல கேள்வி கேட்டு தொலைத்து எடுத்துக் கொண்டு இருந்தாள் நந்தினி .
பிரவேஷ் கூட இதைப் பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தார். மகள் லிஷார்தா வை கூப்பிட்டு
அம்மு லிசு நாமே எல்லோரும் அடுத்த வாரம் இலங்கை யாழ்ப்பாணம் போறோம் சரியா?
ஆமாம் பா டூர் விஷா காலாவதி ஆகப்போகுது
ஆமாம் பா நான் தான் நேற்றுக்கு சொன்னேன் தானே!
ஆமாம் இங்கிட்டு இருக்க முடியாது நாமே போய் அங்கிட்டு ஜோலியியை பாக்கோனோம்
அதான் உன் மாமா போன் போட்டு உங்க அம்மா கிட்டே நேற்றைக்கு போனில் கதைசிட்டு இருந்தாரே என்ன விஷயம் உங்க அம்மாச்சும் சொல்ல காணோம்.
அதுவா அண்டு செகுந்தர் பள்ளத்தில் இருந்து குருநகர் வரைக்கும் செத்துப் போன ஹோஷாலிணி யின் ஆவி அட்டகாசம் செய்யுதாம் இது காணும்
ஏழு பேரை கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டும் இன்னும் ஆத்திரம் அடங்காமல் ஆத்மா எல்லோரையும் கொல்ல அலைந்துக் கொண்டு இருக்கிறது என்று சொன்னாள் நந்தினி.
அந்த நேரம் பார்த்து ராஜாவின் சிற்றப்பா கோட்டீஸ்வரன் அங்கே கூடவே அவர் பையன் ரவி வந்தார்.
இதை சற்றும் எதிர் பார்க்காத ராஜா அதிர்ச்சி அடைந்தான்.ராஜாவின் மாமா அவங்க மனைவி லிசா எல்லோரும் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.
வாங்கப்பா... வாங்க.. என்றான் ராஜா
நாங்கள் வர்றது இருக்கட்டும் முதலில் உன் மனசில் இருப்பதை சொல்லு?
உன் கேஸ் கோர்ட்டில் இருக்கும் போது நீ யார் யாரையோ வீட்டுக்கு கூப்பிட்டு வர்றே. உன் இஷ்டத்துக்கும் இருக்கிற போற
இது எல்லாம் சரி இல்லை. கோர்ட் கேஸ் முடிந்து தீர்ப்பு வரும் வரை நீ இங்கே வர கூடாது.
என்ன சார் இது நியாயம். வீடு அவரது, சொத்து அவரது, அவர் வீட்டுக்கு வருவார் போவார் அதெல்லாம் யார் தடுக்க முடியும்.
யேவ்.. நீ யார் எங்க குடும்ப விஷயத்தில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
என்ன என்ன அவரையா யார் என்று கேட்கிறீங்க. அவர் எங்க மாமா.
ஓ.உங்க மாமாவா இருக்கட்டும் இல்லை வேறு யாராக இருக்கட்டும். கோர்ட்டில் கேஸ் போட்டு இருக்கு அது வரும் வரை இந்த வீட்டை சொத்தை நீங்கள் யாரும் தொட கூடாது.
சரியா இருக்கு சார் உங்க நியாயம்.? அவர் சொத்துக்கு அவருக்கு உரிமை யில்லையா!
அது கோர்ட் முடிவு எடுக்கட்டும்.
அப்போ நீங்கள் கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் வாங்குங்க அப்போ பார்க்கலாம்.
ஓ நீங்கள் அவங்களுக்கு வக்காலத்து
வாங்க வந்து இருக்கீங்களா?.
சார் நீங்கள் பேசறது சரி இல்லை
நீங்கள் யார் சார் அவங்களுக்கு சப்போட்டுக்கு வற..
அவர் என் மாமா...
ஓ இத்தனை நாள் உங்க மாமா எங்கே போய் ஒளிஞ்சிக்கிட்டு இருந்தார்.
இப்போ உங்க அப்பா செத்ததும் சொத்து அமுத்திக் கொள்ளலாம் என்ற திருட்டு எண்ணத்தில் வந்து இருக்கிறார் போல.
இல்லை அவர் பொண்ணை உனக்கு கூட்டி கொடுத்து சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு வந்தாரா?
சார் மரியாதையாக பேசுங்கள் இனி உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
என்னய்யா வீட்டு படியேறி வந்து சண்டைக்கு நிக்கிறீங்களா?
இவருக்கு கேட்க நாதி யில்லை என்ற நினைப்பா?
இவருக்கு நாங்கள் இருக்கிறோம். இவர் என் அக்கா பையன் வேறு யாரும் அசல் இல்லை.
என் பொண்ணை அவருக்கு தான் கட்டி வைக்க போறோம்.
தெரிஞ்சுக்குங்க?
ஓ சாமி உங்க பிளான் எங்களுக்கு ரொம்ப நல்லா புரிஞ்சு போச்சு உங்க பொண்ணை கொடுங்க இல்லை கொடுக்காமல் போங்க அது உங்க சொந்த விஷயம்.
ஆனால் கோர்ட் தீர்ப்பு வருகிற வரைக்கும் இங்கே வர வேண்டாம்.
அது எப்படி முடியும் சார்.
உங்க இஷ்டம் இல்லை. நீங்கள் கோர்ட் போங்க அங்கே நாங்கள் இங்கே வர கூடாது, வாழ கூடாது, சொத்தை கை தொட கூடாது, அனுபவிக்க கூடாது. என்று ஸ்டே ஆர்டர் வங்கி கொண்டு வாங்க அப்புறம் பார்க்கலாம். அது வரை நீங்கள் இந்த இடத்துக்கே வர கூடாது.
ஓ... அப்படியா..
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை வீரட்டின கதையாக இருக்கே..
யார் ஊர் பிடாரி
யார் ஒண்ட வந்த பிடாரி?
இதோ பாருங்கள் நீங்கள் சொன்ன மாதிரியே இருக்கட்டும் என் மகளை என் மருமகனுக்கே கட்டி வைச்சு இங்கேயே வந்து ஒண்ட தான் போறேன்.
நீங்கள் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்ளுங்கள்.
என்று ரொம்ப ஆவேசமாக பேசுனாரு பரவேஷ்..
ராஜாவிற்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை.
மௌனமாக இருக்க அவர்களே பேசி விட்டு அவராகளே போய் விட்டார்கள்.
லிசு எனக்கு இப்போவே ஒரு முடிவு தெரிந்து ஆகணும்?
இதோ பாரு நந்து இப்போ நான் எடுத்த முடிவு சரியா என்று மட்டும் சொல்லுங்க.
என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
நான் எடுத்த முடிவு எடுத்த முடிவு தான்.
லிசு உனக்கு உங்க மாமாவை பிடிச்சி இருக்கா இல்லையா?
நீ டாக்டர் படிச்ச பொண்ணு ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை நீ மைனர் இல்லை.
மேஜர் நீ சுயமாக முடிவு எடுக்க முடியும்.
இது உன் கலியாண விஷயம் உனக்கு பிடிச்சி இருந்தா மட்டும் தான் செய்ய முடியும்.
உன் விஷயத்தில் நான் எடுத்த முடிவு சரி என்றால் மட்டும் சொல்லு?
இல்லை உன்னக்கு பிடிக்க வில்லை என்றால், தைரியமா சொல்லு உன் விருப்பத்துக்கு மாறாக நாங்கள் இருக்க மாட்டோம்.
உன் விருப்பம் தான் எல்லாம்.
நான் என்ன கட்டாயப்படுத்தி கலியாணம் செய்து வைத்த மாதிரி இருக்க கூடாது.
இது உன் வாழ்க்கை பிரச்சனை. நீ தான் கால காலத்துக்கும் சந்தோசமாக வாழ வேண்டிய பொண்ணு.
என்று பேச்சுக்கு முற்று புள்ளி வைக்க.
ஆமாம் மாப்பிள்ளை நாங்கள் ரொம்ப நாளைக்கு பின் உங்க மாமா மூலம் சொந்தம், பழைய உறவு பந்தம் சேர்ந்து இருக்கு.
சொந்தம் எப்போதும் மாறாது.
அந்த பந்தம் எப்போதும் தொடர் கதை போல் உறவுகள் நீடித்தால் தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு சந்தோசம் இருக்கும்.
இவ்வளவு நாள் கழித்து பிரிந்த குடும்பம் இப்போது சேர்ந்து இருக்கு இனிமேல் சேர்ந்து இருக்கட்டும்.
எங்களுக்கும் யாரும் இல்லை. உனக்கும் எங்களை விட்டால் யாரும் இல்லை. அதனால் உங்க மாமா எடுத்த முடிவு எடுத்தது சரி தான்.
ஆமாம் அத்தான் அப்பா அம்மா சொல்றது நூற்றுக்கு நூறு சரி தான்.
உங்களை கட்டிக்க நான் ரெடி.
அப்பா நீங்கள் சொன்னபடி எனக்கு மாமாவையை கலியாணம் செய்து வையுங்கள்.
எனக்கு மாமாவை ரொம்ப பிடிச்சி இருக்கு.
ஓகே அப்போ சரி...
இனிமேல் நாங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கு. நாங்கள் உடனே இலங்கை யாழ்ப்பாணம் போய் குருநகரில் உள்ள வீடு சொத்துக்கள் எல்லாம் விற்று விட்டு வருகிறோம் சரியா.
இதை கேட்டுக்கொண்டு இருந்த ராஜாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
அவர்கள் சொல்வது சரி தான் அவர்கள் இடத்தில் யாராக இருந்தாலும் இதை தான் செய்வார்கள்
அம்மா உயிருடன் இருந்து இருந்தால் கண்டிப்பாக இதைத்தான் செய்து இருப்பார்.
இப்போ பனிமலர் நினைவு வந்தது. பனிமலரோடு இவ்வளவு நாள் பழகி அவளின் நெஞ்சில் ஆசை விதைகளை விதைத்து விட்டு இப்போ அது மரமாக வளர்ந்து நிற்கும் போது என்ன செய்ய முடியும்.
சொந்தம் என்ற கோடாரியால் அந்த காதல் மரத்தை வெட்டி சாய்க்க தான் முடியுமா?
அவர்களுக்கு இந்த நேரத்தில் பனிமலர் பற்றி சொல்ல வேண்டாம். பிறகு கொஞ்சம் இந்த விஷயத்தை ஆற போட்டு பகுவமாய் சொல்லி விட வேண்டும் என்று நினைத்தான் ராஜா.
அதனால் அவன் மௌனமாக இருந்தான்.
என்ன மாமாவோய்... பேசாமல் இருக்கீங்க ரெடியாகுங்க ஓசூர் போகலாம் அப்புறம் வரலாம் சரியா.
ஆமாம் மாப்பிள்ளை வாங்க உஙகள் அப்பா அம்மா சமாதிக்கு போய் பார்த்து விட்டு கிளம்பி போகலாம் சரியா?
எல்லோரும் பண்ணையில் தென்னாந்தோப்பில் இருக்கும் சின்ன ஜமீன் ராஜாராம் ராமக்கா சமாதிக்கு சென்றனர்.
ராஜா கண் கலங்குது கண்டு லிஷார்தாவும் ராஜாவின் கைகளை பற்றிகொண்டாள். அவளின் ஸ்பரிசம் பட்டதும் அவன் உள்ளத்திற்கு ரொம்ப அறுதலாக இருந்தது.
ராஜாவின் மாமாவும், அத்தையும் மாலைப் போட்டு சூடம் ஏற்றி. அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி நனைத்து தீபம் ஏற்றினார்.
பூமிகா அக்கா எங்கே மாமாவை காணோம். வந்ததில் இருந்து பார்க்கிறேன் ஆளையே காணோம்.
புருஷனைப் பற்றி கேட்டதும் பூமிகா அக்காவுக்கு கண்கள் கலங்கி விட்டது.
என்ன ஆச்சு அக்கா?
அந்த நாய் பட்ட சாராயம் ஒரு முடா குடித்து விட்டு வரும் போது கீழே விழுந்து படாத இடத்தில் பட்டு துணி கூட இடுப்பில் கட்டாமல் படுத்து கிடக்கிறான் என்ற விஷயம் எப்படி சொல்ல முடியும்?
இல்லை பா அவருக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை அதான் டவுன் போய் டாக்டர் கிட்டே பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.
டவுன் பஸ் வந்ததே அதில் ஒரு சமையம் போய் இருந்தாலும் போய் இருப்பார்.
அப்படியா...
அக்கா இனிமேல் வீட்டை சுத்தமா வைக்கணும். பெரிய கேட் பூட்டு போட்டு மூடி வைக்கணும். கண்ட கண்ட நாய்களை கிட்டே சேர்க்க வேண்டாம்.
எங்க விஷயம் எதுவும் அவங்களுக்கு சொல்ல வேண்டாம்.
சரியா..
நாய் என்று...
சிரித்துக் கொண்டு லிசா.... கேட்க
வேறு யார் ராஜாவின் சிற்றப்பா தான்.
பூமிகா அக்கா ராஜாவும், அவன் மாமாவும் சொன்னதுக்கு தலையை ஆட்டினாள்.
வீட்டுக்கு வந்து எல்லோரும் சாப்பிட்டு விட்டு. ராஜா பூமிகா அக்கா கையில் ரூபாய் ஐந்து ஆயிரம் கொடுத்து விட்டு.
அங்கிருந்து ஓசூருக்கு கிளம்ப லிசா கார் சாவியை வாங்கி கொண்டு டிரைவர் சீட்டில் உட்கார்ந்து காரில் எல்லோரும் ஏறிகொள்ள. வண்டி புறப்பட்டது...
≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤
#600
50
50
: 0
1
5 (1 )
S. Naffia Gowser
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50