திருவிழா

chithumani12
சாகசம்
5 out of 5 (12 Ratings)
Share this story

திருவிழா

உயர்ந்த மலைகளும் பசுமையான மரங்களும் சூழ்ந்த கடம்பூர் கிராமம் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் உள்ள எட்டு பட்டியை உள்ளடக்கிய ஒரு கட்டுப்பாடான ஊர்

பழனிச்சாமி ஜமீன்தார் குடும்பம் தான் அந்த கிராமத்தின் அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டு வந்தனர். பழம்பெருமையான ஒரு முருகன் கோவில் அந்த ஊரில் உள்ளது, கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக எந்த விதமான விசேஷங்களும் திருவிழாக்களும் பூஜைகளும் நடைபெறாமல் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமி ஜமீன்தாரின் ஒவ்வொரு முன்னோர்களும் அந்த கோயிலை சீரமைத்து பூஜை புனஸ்காரங்களை செய்திட எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. பழனிச்சாமி ஜமீன்தார் இந்த முறை எப்படியாவது திருவிழாவை நடத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்து கேரளாவில் இருந்து ஒரு மிகச்சிறந்த ஜோசியரை கோயிலை பார்வையிட அழைத்து வந்திருந்தார். கிருஷ்ண பனிஷ்கரம் என்ற அந்த ஜோசியர் பழனிச்சாமி ஜமீன்தார் உடன் சென்று கோயிலை பார்வையிட்டார் வெளியிலிருந்து பிரம்மாண்டமான கோயில் கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழலுடன் அந்த கோபுரம் இருந்தது வெளியில் இருந்து பார்த்த ஜோசியர் ஜமீன்தாரை பார்த்து வாருங்கள் போகலாம் என்று சொல்லிவிட்டார் ஜமீன்தாருக்கு ஆச்சரியம் வெளியில் இருந்து பார்த்தபடியே ஏதும் உள்ளே சென்று பார்த்து ஏதும் சொல்லாமல் ஜோசியர் திரும்ப போகலாம் என்று சொன்னதைக் கேட்டு ஜமீன்தார் ஆச்சிரியமடைந்தார் மறு பேச்சு பேசாமல் ஜோசியரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்

உள்ளே சென்று ஜோசியருடன் அமர்ந்தார்.

ஜமீன்தார்: என்ன ஜோசியரே என்ன சொல்ல போகிறீர்கள்? இந்த முறையும் என்னால் இந்த திருவிழாவை நடத்த முடியாதா என்று வருத்தத்தோடு கேட்டார்

ஜோசியர்: கடுமையான தோஷம் உள்ளது அதை போக்குவதற்கான முயற்சி செய்துவிட்டு முருகன் அருள் இருந்தால் நாம் செய்யலாம்

ஜமீன்தார்: என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்னவாக இருந்தாலும் செய்வதற்கு தயாராக உள்ளேன்

ஜோசியர்: இந்த ஊரின் கிழக்கு பக்கத்தில் ஒரு மலை உள்ளது அந்த மலையின் மேல் உச்சியில் ஒரு அருவியும் அந்த அருவிக்கருகில் ஒரு காளி கோவில் உள்ளது . மலை உச்சிக்கு சென்று அந்த காளி கோயிலில் உள்ள காளிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த முருகனுடைய வேலை எடுத்து வந்து அதை கையில் வைத்துக்கொண்டு கோயிலின் வாசலை திறக்க வேண்டும். அதன் பிறகு கோயிலை சுத்தம் செய்து அதற்கான பூஜைகளை செய்யலாம்

ஜமிந்தார்: இவ்வளவுதானா உடனே இதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்று கூற

ஜோசியர்: மெல்ல சிரித்தபடியே நீங்கள் உங்கள் வேலையை முடித்த பிறகு அந்த வேல் வந்த பிறகு நான் வருகிறேன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லுகிறேன் விடை பெற்றுக் கொள்கிறேன் என்று கிளம்பிவிட்டார்.

ஜமிந்தார்:பண்ணையார் தன் மகனை அழைக்கிறார் ரவிச்சந்திரா என்று அழைத்து ஜோசியர் சொன்னதை வழிமொழிகிறார். 25 வயது இளைஞன் இப்போதுதான் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வந்திருக்கிறார். பண்ணையாரின் ஒரே மகன் ரவியும் யோசனை செய்து பார்க்கிறான் தன்னோடு தன்னுடைய நண்பர்கள் குமார் மற்றும் ராமசாமி ஆகியோரை அழைத்துக் கொண்டு மலை மேல் செல்ல முடிவெடுக்கிறான். பண்ணையாரும் அவர்களுக்கு உதவி செய்ய நான்கு வேலையாட்களை உடன் அனுப்புகிறார்.

ரவி நாளை காலை பிரம்ம முகூர்த்தத்தில் நீங்கள் ஏழு பேரும் கிளம்புங்கள். மலை மேலே உள்ள முருகனுடைய வேலை எடுத்துக்கொண்டு வந்து இந்த ஜென்மத்திலேயே திருவிழாவை நடத்தி விட வேண்டும்

பயணத்தை ஆரம்பிக்கின்றார்கள். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த மலை போகப்போக அடர்த்தியாகவும் கடுமையாகவும் இருந்தது. கிட்டத்தட்ட 1500 அடி உயரம் இருக்கும் முதல் நாள் 150 அடி தாண்டி விட்டனர் எந்த இடர்பாடுகளும் இல்லை ஏழாம் நாள் காடுகளுக்கு நடுவே ஒரு மரத்தை சரிசெய் செய்து ஏழு பேரும் அமர்ந்து அன்றைக்கான உணவை தயார் செய்ய ஆரம்பித்தனர் தண்ணிக்கு பஞ்சம் இல்லை அங்கங்கே அருவிகளும் ஓடைகளும் இருந்ததால் அவற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டனர். கையில் இருந்த சாமான்கள் மற்றும் சமையலுக்கு தேவையான சில விஷயங்கள் கிட்டத்தட்ட 15 நாளைக்கு இருந்தது குறையொன்றுமில்லை உணவை சாப்பிட்டுவிட்டு அன்று இரவு படுத்தனர் நடு சாமம் தாண்டி இரண்டு மணி அளவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டு ரவி கண் விழித்தான். அருகில் இருந்த அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சுற்றும் முற்றும் பார்க்க சூழ்நிலை பயங்கரமாக இருந்தது காற்றடிக்கும் சத்தம் ஆந்தைகளின் லேசான அலறல் பயம் தந்தது.

யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது சருகுகளின் சத்தம் கேட்டு ரவி மெல்ல எழுந்து ஒரு பத்தடி தூரம் சென்று பார்த்தான் கையில் குச்சியை ஊன்றி கொண்டு சடா முடிகளுடன் ஒல்லியான உருவத்தோடு ஒருவர் சென்று கொண்டிருந்தார். ஓடி சென்று அவர் அருகே நின்று அவரை வணங்கினான்.

சாமி வணக்கம் அருள் புரிய வேண்டும் என்று மிகப்பெரிய மரியாதையோடு நின்றான்.

சாமியார்: என்ன தம்பி காளியை பார்க்க போகிறாயா? வேலை உன்னிடம் தந்து விடுவாள்! என்று நினைக்கிறாயா? முயற்சி செய் எல்லாம் அவன் செயல் என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் விறு விறுவென்று பக்கத்து சரிவில் இறங்கி விடுகிறார் இரவு நேரமாதலால் ஏதும் தெரியவில்லை.

பிறகு பேசாமல் வந்து படுத்துவிடுகிறான்

இன்னும் இரண்டு நாட்களில் மலை உச்சியை அடைந்து விடலாம் என்ற மகிழ்ச்சியோடு ரவி மலையேற ஆரம்பிக்கிறான் கிட்டத்தட்ட மலை உச்சியை நெருங்கி விடுகிறார்கள் உயரத்தில் இருந்து ஒரு அருவி கொட்டுகிறது எங்கே? இருக்கிறது காளி கோயில் என்று தேடுகிறான். அருவியோடு முடிகிறதே ஒழிய கோயிலை காண முடியவில்லை திகைத்து போய் நிற்கிறான் எங்கே இருக்கிறது? சிலை

முருகா…. என் தந்தையார் அவருடைய காலத்தில் என்னுடைய காலத்திலும் உன்னுடைய கோயில் விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். நீதான் அருள் புரிய வேண்டும் என்று மனம் விட்டு பிராத்திக்கிறான். சரி இந்த அருவியில் குளிக்கவாவது செய்வோம் என்று உடைகளை களைந்து விட்டு எல்லோரும் குளிப்பதற்கு முனைகிறார்கள் ரவி துண்டை கட்டிக்கொண்டு அருவியில் குதிக்கிறான். ஆனந்தமான அருவி சுவையான நீர் குளித்துக் கொண்டே அருவியின் உள்ளே பார்க்கும்போது ஏதோ வழி செல்வது போல் தெரிகிறது திகைத்துப் போகிறான். தண்ணி அப்படியே மெல்ல உள்ளே போய் அந்தப் பாறையில் தொட்டு பார்க்க பாறை ‘என்னுடைய அருகில் ஒரு வழி தெரிகிறது பார் என்பது போலிருந்தது’.

நண்பர்கள் வெளியில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். சரி நான் மட்டும் உள்ளே போய் பார்ப்போம் என்று கொட்டிக் கொண்டிருக்கும் அருவியின் உள்ளே அந்தப் பாறைகளுக்கு இடையே மெல்ல செல்கிறான். ஒரு ஆள் நடக்கும் வழி உள்ளது இருள் அப்படியே மெல்ல உள்ளே செல்கிறான் வெளியே சலசலக்கும் அருவி பாறைகளுக்குள் ஈரம் பாறைகளை தொட்டுக் கொண்டே மெல்ல உள்ளே செல்கிறான். கிட்டத்தட்ட 20, 25 அடி சென்ற பிறகு ஒரு விசாலமான இடம் தெரிகிறது. அதிசயமாக அற்புதமான 10 அடி உயர காளி சிலை பின்னால் பாறைகள் முன்னாள் பாறை நடுவில் காளி சிலை கையில் சூலாயுதம் ஏந்தி கம்பீரமாக காத்துக் கொண்டிருக்கிறாள். காளி சிலையின் காலுக்கு அருகே ஒரு மேடையில் 3 அடி உயர ஒரு வேல் வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு மேலாக மட்டுமே தெரிந்ததே ஒழிய எதனால் செய்யப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை… எனவே யோசித்தான் வேலை தொடலாமா? சரி இதற்காகத்தானே வந்திருக்கிறோம் என்று மெல்ல காளியை வேண்டி அருகில் சென்றான் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு ஆந்தை ரவியை உரசி சென்றது. நிமிர்ந்து பார்த்தால் பஞ்சபட்சிகளுள் ஒருவர். ஆந்தையாரே உம்மை வணங்குகிறேன் இந்த வேலை எடுத்து செல்ல என்னை அனுமதியுங்கள் என்று சொல்லிவிட்டு காளியை வணங்குகிறான். என் தாயே காளி மாதா உன்னை காண்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும் யாருக்கும் கிடைக்காத தரிசனத்தை எனக்கு தந்த நீ இந்த வேலை எடுத்துச் செல்லும் பாக்கியத்தையும் தர வேண்டும் இந்த முறை திருவிழாவை நல்லபடியாக உன் ஆசீர்வாதத்தோடு நாங்கள் நடத்த வேண்டும் முன்னேற்பாய் என் காளி தாயே என்று வழங்கிவிட்டு காளியின் காலடியில் உள்ள வேலை தொட்டான். எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் அவன் கையில் வந்து விட்டது. காளியை வணங்கி விட்டு கூப்பிய கரங்களில் வேலையும் பிடித்துக் கொண்டு வந்த வழியே அருவியை நோக்கி வருகிறான். காளி ரவியை மர்ம சிரிப்போடு வழி அனுப்பி வைத்தாள்

அருவிக்கு வெளியே வந்தவுடன் நண்பர்கள் அவனை பார்த்து திகைக்கிறார்கள் என்னடா திடீர்னு ஆள் காணாம போயிட்ட??

என்று கேட்டு கொண்டே ரவி கையில் இருந்த வேலை பார்த்து ஆச்சர்யமானர்கள். ரவி வேல் கிடைத்த தகவலை அவர்களிடம் கூறினான். அனைவரும் வேல் கிடைத்த சந்தோஷத்தில் வீடு திரும்ப ஆர்வமானர்கள் ஆனால் இரவு நேரம் நெருங்கியதால் அங்கேயே தங்கி மறுநாள் காலை கிளம்ப முடிவுசெய்தார்கள்.

இரவு உணவை முடித்துவிட்டு மூன்றடி உயரம் உள்ள அருமையான வேலை ரவி மெல்ல பார்த்துக் கொண்டிருக்கிறான். திடீரென்று சலசலவென்று ஒரு சத்தம் மரத்தின் மேலிருந்து ஒரு கருஞ்சிறுத்தை ரவியை நோக்கி பாய்ந்தது. சுதாரித்துக்கொண்ட ரவி அதனிடம் இருந்து தப்பி விலகுகிறான். சிறுத்தை சரிவில் இறங்கி சென்று விடுகிறது. இப்படி ஒரு ஆபத்தா? என்று மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கிறான் ரவி. சிறிது நேரம் கழித்து யோசிக்கும் பொழுது கையில் இருந்த வேலை காணவில்லை என்னடா இது? இப்பொழுதுதான் பார்த்துக் கொண்டிருந்தோம் இந்த வேல் எங்கே சென்று விட்டது என்று பதைபதைப்புடன் தேடுகிறார்கள் இரண்டாம் சாமம் கழிகிறது. வேல் எங்கே விழுந்தது என்று தெரியவில்லை சிறுத்தை பாய்ந்த நேரம் உயிரை காப்பாற்றிக்கொள்ள தடாரென்று நகர்ந்த ரவி கையில் இருந்த வேலை தவறவிட்டான். பக்கத்தில் இருந்த ஓடையில் விழுந்திருக்குமா இல்லை அந்த சரிவில் விழுந்திருக்குமா என்று தேடி சலித்து போய் விட்டார்கள் என்ன செய்யலாம் என்று யோசித்து அமர்ந்திருக்கிறார்கள்.

ரவி தன்னுடன் நண்பர்களை மட்டும் வைத்துக் கொண்டு வேலையாட்களை நீங்கள் ஊருக்கு திரும்பி செல்லுங்கள் வேலை எடுத்துவிட்டோம் நடுவழியில் அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று தந்தையிடம் சொல்லி விடுங்கள் நாங்கள் வேலோடு வருகிறோம் என்று சொல்லிவிட்டான்.

அவர்களும் சரி என்று ஊர் திரும்பி விட்டார்கள் ரவியும் நண்பர்கள் இருவருமாக மூன்று பேரும் வேலை தேடலாம் என்று அந்த மலைச்சாரவையில் இறங்கி தேடுகிறார்கள் தேடிக் கொண்டே செல்லும் பொழுது ஒரு சின்ன கிராமம் ஒன்று வருகிறது.

மலைவாழ் மக்கள் உள்ள கிராமம் அங்கு சென்று புதிதாக வந்தவர்களை பார்த்தவுடன் அந்த ஊரில் உள்ளவர்கள் வந்து என்ன ஏது என்று விசாரிக்கிறார்கள்.

நடந்த தகவல்களை ரவி சொல்ல அவர்களுக்கு ஆச்சரியம்! ஏனென்றால் இரண்டு நாட்களுக்கு முன்னாள் அவர்கள் ஊரில் உள்ள அருவியில் ஒரு வேல் ஒன்று கண்டெடுத்தார்கள். அந்த வேலை எடுத்து அவர்கள் தங்கள் கோயிலில் வைத்திருந்தார்கள் சரி வாருங்கள் ஊர் தலைவரிடம் செல்வோம் என்று சென்றார்கள். ஊர்தலைவர் நடந்தவைகளை விசாரித்து ஆமாம் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த அருவியில் குளிக்க சென்ற ஒரு சிறுவன் அந்த வேலை பார்த்து அருகில் இருந்தவர்களிடம் சொல்ல அவர்களும் வேலை வியப்புடன் நோக்கினர்

அதை சுத்தம் செய்து பார்த்ததில் தூய தங்கத்தால் ஆன மூன்றடி வேல். இது எப்படி இங்கு வந்தது? யாருக்கு சொந்தமானது ? என்று எங்களுக்குள் ஒரே திகைப்பு. சரி இருக்கட்டும் என்று வைத்திருக்கிறோம். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அது உங்களுக்கு சேர வேண்டியதுதான் போலிருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தார்கள் சரி நீங்கள் சிறிது நேரம் ஓய்வு எடுங்கள் மற்ற விஷயங்கள் பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

ரவிக்கு மிகுந்த சந்தோஷம் எங்கடா வேல் காணாமல் போய் விட்டதே என்று வருத்தத்தில் இருந்த ரவி வேல் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் அன்று இரவு அந்த கிராமத்திலேயே தங்கினார்கள்.

அப்போது ஏற்கனவே கேட்ட ஒரு சலசலப்பு சத்தம் கேட்டது ரவி சந்தித்த அதே சாமியார் நடந்து போய்க்கொண்டிருந்தார் ரவி அதே போல் ஓடி சென்று சாமியை வணங்க

சாமியார் மெல்ல திருப்பி புன்னகையுடன் வேல் கிடைத்து விட்டதா? என்று கேட்டார்

வேல் கிடைத்துவிட்டது சாமி. ஏன் இத்தனை தடங்கல் நாங்கள் ஏதாவது தவறு செய்து விட்டோமா? என்று கேட்க

தவறு ஏதும் செய்யவில்லை. ஆனால் முறையாக காளியிடமிருந்து நீங்கள் எடுத்து வரவில்லை. வேலை பார்த்தாய் உடனே கையோடு எடுத்து வந்து விட்டாய். காளிக்கு அதுக்கான சாங்கியங்களை நீ செய்ய வேண்டும் உடனே போய் செய்வாய் என்று சொல்ல

ரவிக்கும் மனசில் பட்டது ஆம்! பார்த்தவுடன் எடுத்து வந்து விட்டேன் காளிக்கு எந்த பூஜையோ மரியாதையோ செய்யவில்லை. காளியினுடைய உத்தரவு இல்லாமல் எடுத்து வந்தது தவறுதான் என்ற உணர்ந்து நாளை காலை மறுபடியும் காளிகோயில் செல்வது என்று முடிவு செய்தான்.

மறுநாள் காலை விடியலில் நண்பர்களை அழைத்துக் கொண்டு அந்த ஊரில் கிடைத்த முக்கனிகள் மற்றும் பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று மலையை நோக்கி விரைந்து செல்கிறார்கள். மலையில் ஏறி அந்த அருவியை சென்றடைந்தார்கள்.

அருவியை அடைந்தவுடன் ரவி பூஜை சாமான்கள் தண்ணீரில் நனையாமல் இருக்க மூட்டையாக கட்டிக்கொண்டு இறங்கி நடக்க தொடங்கினான். அருவிக்குள் சென்று வழி எங்கே இருக்கிறது என்று தேட இடம் புலப்பட்டது.உள்ளே சென்று பார்க்க காளி அதே சூலாயிதத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

தாயே மன்னித்துவிடு… வேலை பார்த்த சந்தோஷத்தில் நான் எடுத்துக் கொண்டு சென்று விட்டேன். உங்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்யவில்லை என்று கூறி

அருவியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து காளிக்கு அபிஷேகம் செய்து சுத்தமாக துடைத்து பூஜைக்கான சாமான்களை எல்லாம் வைத்து அருகில் இருந்த விளக்கில் எண்ணையை ஊற்றி தீபம் ஏற்றிவிட்டு தீபாராதனை எல்லாம் காட்டிவிட்டு அதை அப்படியே வைத்துவிட்டு காளியை வணங்கிவிட்டு தாயே உன் ஆசீர்வாதத்துடன் எங்களது ஊர் திருவிழாவை நல்லபடியாக நடத்தி கொடு என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

மீண்டும் நண்பர்கள் மூவரும் அந்த கிராமத்துக்கு சென்றார்கள் சென்று அந்த ஊர்தலைவரை பார்த்து ஐயா நீங்கள் தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் வேலை எங்களிடம் கொடுக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூற அந்த பெரியவரும் அந்த வேலுக்குரிய மரியாதைகளை செய்து பூஜை புனஸ்காரங்களை எல்லாம் செய்துவிட்டு இந்தா தம்பி நல்லபடியாக போய் ஊர் திருவிழாவை நடத்துங்கள் என்று அனுப்பி வைத்தார்.

ஊருக்கு போன வேலையாட்கள் கூறியதை கேட்டு ஜமீன்தார் மிகவும் சந்தோஷம் அடைந்தார் ஆனால் வேல் திரும்பவும் காணாமல் போய்விட்டது என்ற அறிந்த பிறகு மனசு விசனப்பட்டார்.

சரி எப்படி இருந்தாலும் தன்னுடைய மகன் அதை கண்டுபிடித்து கொண்டு வந்து விடுவான். வேல் கிடைத்ததே பாதி திருவிழா நடந்து முடிந்த மாதிரி என்று சந்தோஷப்பட்டார்.

வேலை பழையபடி எடுத்துக் கொண்டு ரவியும் ஊருக்கு திரும்பினான் ஊரை அடைந்த உடன் கிராமமே திரண்டு நின்று வரவேற்றது. தந்தையிடம் சென்று வணங்கி அந்த வேலை கொடுத்தான் ஜமீன்தாரும் சந்தோஷத்துடன் வேலை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார்.

ஜமீன்தார் உடனே ஜோசியற்கு வேல் கிடைத்த தகவல் சொல்ல ஆள் அனுப்பினார்.

ஜோசியர் செய்தியை கேட்டு சந்தோஷமானார். விரைவாக வந்து கோயிலில் செய்ய வேண்டிய காரியங்களை கவனிக்கலானார்

கோயில் புது பொலிவுடன் ஒளி பெற்றது ஊரில் எங்கு பார்த்தாலும் தோரணங்களும் வேடிக்கையுமாக கோலாகலப்பட்டது.

ரவி தன் தந்தையின் கனவை நிறைவேற்றிய பெருமிதத்தில் இருந்தான்.

ரவிக்கு மீண்டும் அந்த சலசலப்பு சத்தம் கேட்டது அதே சாமியார் அவன் வீட்டின் முன்பு யாரையோ எதிர்பார்ப்பது போல நின்று கொண்டிருந்தார்.

ரவி வேகமாக ஓடி சென்று அவரை வரவேற்று உபசரித்தான்

நிதானமாக பார்த்த சாமியார் ஊரே திருவிழா கோலம் பூண்டுவிட்டது. அப்படியே உனக்கு திருமணவிழாவும் வைத்துவிடலாமே? என்று கூற

ரவி புரியாமல் விழித்தான்

சாமியார்: உனக்கேற்ற துணை இத்திருவிழாவிலேயே கிடைக்கும். அதனால் தான் இத்தனை வருடங்களாக நடக்காத திருவிழா உன் மூலமாக நிறைவேறுகிறது.

இது உன் தந்தையின் ஆசையானாலும் அதுவும் "அவன் செயலே" என்று புன்னகையுடன் கூறிக்கொண்டே கண்ணை விட்டு மறைந்து சென்றார்.

-முற்றும்.

Stories you will love

X
Please Wait ...