ஏஞ்சில் மேரி

Crime Thriller
5 out of 5 (1 Ratings)
Share this story

ஏஞ்சில் மேரி

திகில்

சிறுகதை

இந்த குருநகரின் கமிஷனராக நியமிகப்பட்ட சுப்பிராய சௌத்திரி ரொம்ப கெடு பிடியான ஆள் என்று மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை எல்லோருக்கும் தெரியும். எப்படியாப்பட்ட கேஸ் எல்லாம் தவடு பொடியக்கி விடுவார் என்று எல்லா செய்தி தாள்கள், டிவி நியூஸ் எல்லாம் வந்து கொண்டு தான் இருந்தது.

அந்த சிவப்பு நிற ஜீப் வேகமாக அந்த இராவணன் பள்ளம் நோக்கி போய் கொண்டு இருந்தது.

அதில் B2போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஒரு ரைட்டர், இரண்டு கான்ஸ்டப்ல் CCP 303, மற்றும் 309

போலீஸ் கமிஷனர் டிரைவர் உட்பட ஏழு பேர் உட்கார்ந்து இருந்தார்கள்.

சரியாக மூன்று கிலோமீட்டர் தூரம் போய் இருப்பார்கள்.

யேவ் 303, நாம வந்த அதே இடம் தான்

பார் என்ன நடக்க போகுது. எது நடந்தாலும். நாம வண்டியை விட்டு கீழே இறங்க கூடாது சரியா?

இங்கே

சரி ராஜாவுக்கு போன் வந்து இருக்கு

லிஷார்தா எங்கே இருக்கிறான் கூப்பிடு அவளை..

லிசு அப்பா கூப்பிறாங்க?

என்ன அப்பா?

ஒன்னும் இல்லை ராஜா போனுக்கு போன் வந்து இருக்கு.

அவர் அப்படி தான் போனை மறந்து எங்கே என்றாலும் வைத்து விடுவார்.

அதை அவர் சரியாக கவனிக்க மாட்டார்.

இருங்க அப்பா இங்கே தான் இருப்பார் போய் பார்க்கிறேன் என்று போனை வாங்கி கொண்டு விரைந்தாள் லிஷார்தா.

யார் போன் பண்ணியது.?

ஓ. ஆமாம் இலங்கைக்கு காரில் வரும் போது போன் வந்ததே அந்த பொண்ணாக இருக்கலாம்..

சந்தேகமே இல்லை அந்த பொண்ணு பனிமலர் தான்.

ராஜாவின் போனை எடுத்துக் கொண்டு வெளியே விரைந்தாள் லிஷார்தா.

திக்......திக்..... திக்

ஆவி......

ஆவி ஹோஷாலிணியின் ஆவி இருப்பது உண்மையா? பொய்யா?

அது தன்னை கற்பழித்து கொன்றவர்களை பழி தீர்த்து வருவது உண்மையா பொய்யா!

அன்று நடந்தது...

ஹோஷாலிணி மாறி மாறி பாலியல் பலாதக்காரம் செய்தவர்கள். தடுக்க வந்த அவளின் அப்பாவை கொலை செய்து விட்டு.உயிர் பிரிந்து சடலமாக கிடந்த அந்த சடலத்தில் உஷ்ணம் இருக்கும் வரை கூடி போதையில் விடாமல் அவர்களின் ஆத்திரம் அடங்கும் வரை அனுபவித்து விட்டு ஓடி போய் விட்டார்கள்.

உடலில் இருந்து வெளியேறிய ஹோஷாலிணியின் ஆவி உடலின் மேலே ஆறு அடி உயரத்தில் நின்றது.

அப்படி உடலில் இருந்து பிரிந்த ஆவி அங்கேயே ஆறு மணி நேரம் நின்றது.. ஆறு மணி நேரம் அந்த உடலின் மேலே சடலத்தின் மேலே நின்றது.

அது அதன் பூர்த்தியாகாத ஆசைகளை, கனவுகளை அடைய நினைத்தது.

ஆவியாக நின்ற ஆத்மா யாராவது உடலில் புகுந்து கொண்டு தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பம் எதிர்ப் பார்த்து நின்றது.

அவளுக்கு மிகவும் பிடித்தவர்கள்

யாரும் அந்த சடலத்தை ஊது வத்தியை கொளுத்தி மூன்று முறை சுற்றி வர

அப்படி சுற்றி வந்து தலை மாட்டில் ஊதுவத்தி வைக்கும் போது அந்த ஊது வத்தியின் புகையின் மூலமாக அவர்களின் உடம்பில் புகுந்து இருக்கும்.

அப்படி யாருமே சொந்தங்களே வர வில்லை. ஊதுவத்தியும் கொளுத்த வில்லை.

கொலை என்பதால் போலீசுக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து பாடியை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தான் அனுப்பி வைத்தார்கள்.

அந்த ஆன்மா அந்த பிரேத்ததோடு பிணவறைக்கும் போனது. அங்கேயே இருந்தது.

பிரேத பரிசோதனை முடிந்து உடலை எடுத்துக் கொண்டு போய் யாரும் இறுதி சடங்கு செய்யவில்லை.

அப்படி இறுதி சடங்கு செய்யும் போது பிடித்தவர்கள் யாராவது வாய்க்கு அரிசி போடும் போது அந்த அரிசியின் மூலம் போடுப்பவர்கள் உடம்பில் புகுந்து இருக்கும்.

அப்படியும் நடக்கவில்லை.

உடலை குளிப்பாட்டவும் இல்லை

உடலை வைத்து இறுதி சடங்கு செய்து பூ மாலை போட்டு இருந்தால் பூமாலை போடுப்பவர்கள் நெருங்கிய தனக்கு பிடித்தவர்களாக இருந்தால் அந்த பூ வின் வழியாக அவர்களின் உடம்பில் புகுந்து இருக்கும்.

அதற்கும் வழியில்லை.

இல்லை உடலை வைத்து விட்டு ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி சுற்றி வர பானை தோளில் வைத்து சுற்றும் போது கூர் வெட்டு அறிவாலால் மூன்று முறை கொத்தி ஓட்டைப் போட்டு அதில் இருந்து வழியிம் தண்ணீரின் மூலம்

அவரின் உடம்பில் புகுந்து கொள்ள முடிந்து இருக்கும் அதற்கும் வழி யில்லை.

இப்படி இருக்க எந்த ஆதரவும் இல்லாமல். அடக்கம் பண்ணவும், இல்லை தகனம் பண்ணவும் யாரும் முன் வந்து உடலை வாங்கி இறுதி சடங்கு செய்ய யாருமே வராத போது ஹோஷாலிணி அனாதை பிணமானாள்.

அவன் சிற்றப்பா அந்த நாய். அண்ணன் வீட்டுக்கும், சொத்துக்கும் ஆசைப் பட்டானே தவிர தன் சொந்த அண்ணன் இப்படி கொலை செய்து கிடக்கிறான்

சொந்த அண்ணன் மகள் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள் என்ற மன வருத்தமோ இல்லை துக்கமோ, வேதனையோ, கவலையோ அவனுக்கு ஒரு இம்மியளவும் இல்லை.

மாறாக அவங்களுக்கு சந்தோசமாக தான் இருந்தது.

தான் செய்ய வேண்டிய காரியத்தை யாரோ செய்து விட்டார்கள்.

இனி அந்த வீடும் சொத்தும் நமக்கு தான் சொந்தம். அதுக்கு சொத்து, உரிமை, வாரிசு எல்லாம் நாம் தானே என்ற சந்தோசம் அவனுக்கு.

அந்த இராவணன் பள்ளம். இராவணன் நகர் அண்ணா நகர் மக்கள் எல்லோரும் அவனை காரி துப்பினார்கள்.

அதையெல்லாம் அவன் துடைத்து விட்டு கடைசி வரை அந்த இரண்டு உடல்களையும் வாங்க வில்லை.

இறுதியில் மக்கள்நல பணியாளர்கள் உடலை நிர்வாகத்திடம் இருந்து பெற்று மின் மாயணத்தில் தகனம் செய்து விட்டார்கள்.

இப்படி இருக்கும் போது அந்த ஆத்மா யார் உடம்பிலும் சென்று சேரவில்லை.

அந்த உடல் மின் மாயானத்தில் எரிக்கப்பட்டாபின் நேராக அவள் வீட்டுக்கு சென்றது.

வீட்டின் முன்னே நெருப்போ அல்லது விளக்கோ யாரும் வைக்க வில்லை.

பூட்டி கிடந்த வீட்டிற்குள் புகுந்துக் கொண்டு கொஞ்சம் நாள் அங்கேயே தங்கி இருந்தது.

அலைப்பாயிந்தது, அழுது தீர்த்தது.

அதன் பின்னே தான் கலங் காலமாக வழிபட்டு வந்த காட்டு அம்மனின் காலடியில் தஞ்சம் புகுந்தது.

அம்மனின் அருள் அதற்கு பரிபூர்ணமாக கிடைத்தது.

ஹோஷாயிணியின் வேண்டுதல் ஏற்றது.

அதற்கு அது கேட்டுக்கொண்ட படி காக்கும் கடவுள் பரமசிவனின் அருள் தேவியின் மூலம் அருளப்பெற்று அதற்கு எதிரிகளை பழி தீர்க்கும் ஆற்றல் அருளப்பெற்றது.

ஏஞ்சில் மேரிகுக்கு இரவில் கெட்ட கெட்ட கனவாக வந்துகொண்டு இருந்தது.

தம்பி டேனியல் டிஷாஷோ முன் போல் இல்லை.

அவனுக்கு அப்பா இல்லாமல் போகவே அவன் நண்பர்கள் கூட போதை போட ஆரம்பித்து விட்டான்.

என்னவெல்லாம் கெட்ட வழிகள் இருக்கோ அந்த வழிகளில் போக ஆரம்பித்து விட்டான்.

அப்பாவிற்கு அரசு மூலம் கிடைத்த எல்லா பணத்தையும் அழித்து வந்தான்.

அம்மா ரோஸ் மேரி ஜெர்சி கணவர் இறந்த துக்கத்தில் இருந்து இன்னும் மீளவே இல்லை.

ஏஞ்சல் மேரி போய் டூட்டியில் போய் ஜாயின் செய்து விட்டாள்.

என்றாலும் அவளை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு பயம் இருப்பது போலவே உணர்ந்தால் அவள்.

நோயளிகள் கூட சரியாக டாக்டர் ஏஞ்சில் மேரியிடம் வருவது இல்லை. இது அவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாகவே தோன்றியது.. அவள் வீட்டுக்கு வந்து சரியாக யார்கிட்டேயும் பேசுவது இல்லை.

அதேப் போல் இவளும் யார்கிட்டேயும் பேச வில்லை.

இவள் உடம்பில் ஹோஷாலிணியின் ஆவி புகுந்து கொண்டு அட்டகாசம் செய்தது இந்த சுற்று வட்டாரதில் இருக்கும் யாரும் எளிதில் மறக்க வில்லை.

அவர்கள் வீட்டின் முன்னே ஒரு கார் வந்து நின்றது.

அதில் இருந்து டேனியல் டிஷாஷோ இறங்கி தள்ளாடி தள்ளாடி வந்துக் கொண்டு இருந்தான்.

அவனை கொண்டு வந்து இறக்கி விட்டு விட்டு அந்த கார் வேகமாக சென்று விட்டது.

இன்று ஆடி அம்மாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய. திதி கொடுக்க நினைத்தார்கள் பரவேஷ் அவன் மனைவி நந்தினி.

இவர்கள் ராஜாவை குருநகர் அழைத்து வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது.

ராஜாவுக்கு ஒரு ஆச்சர்யமாக இருந்தது.

இலங்கை யாழ்ப்பாணம் வருவது இது தான் முதல் முறை..

இவன் வியந்து நின்று விட்டான் இலங்கை இவ்வளவு இயற்கை அழகுடன் விளங்குவது கண்டு ஆச்சரியம் பட்டு நின்றான்.

மாமா பரவேஷ் வீடு இவ்வளவு பெரிய வீடாக இருக்கும் என்று அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை. கோடி கணக்கில் விலை போகும். அரண்மனை மாதிரி பெரிய வீடு. எல்லாம் மேலை நாட்டு தொழில் நுட்பத்தோடு கட்டப்பட்டு இருந்தது.

லிசு.....

லிசு...

இதோ வந்து விட்டேன் பா

மாப்பிளை எங்கே கொஞ்சம் கூப்பிடுமா?

இதோ மாமாவே வராங்க பாருங்க.

மாப்பிளை.. கொஞ்சம் வாங்க..

என்ன மாமா?

ஒன்னும் இல்லை இன்று ஆடி அம்மாவாசை. நாம்ம முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.

தர்ப்பணம் செய்ய வேண்டும்.

உங்க அப்பா, அம்மா சார்பாக கொடுக்கலாம்.

அது எப்படி மாமா செய்ய முடியும்?

அப்பா, அம்மா அங்கே தானே இறந்தார்கள். அங்கே தானே செய்ய வேண்டும்.

அப்படி ஒன்னும் இல்லை அங்கே இருந்தால், கங்கை, காவிரி என்று போய் ஐயர்களை வைத்து தர்ப்பணம் செய்து திதி கொடுத்து இருக்கலாம்.

ஆனால் அவர்களின் ஆத்மா சாந்திக்கும் எங்கு வேண்டும் என்றாலும் செய்யலாம்?

அவர்களின் ஆத்மா சாந்திக்கும் எங்கு என்றாலும் செய்யலாம்.

முன்னோர்கள் மட்டும் இல்லை நமக்கு பிடித்த யாரெல்லாம் இறந்து இருக்கிறார்களோ அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாம் எங்கு இருந்தும் செய்யலாம்.

அப்பா என் உயிர் தோழி. நீங்கள் அதை பார்த்து நீயும் என் மகள் தான் என்று அடிக்கடி சொல்லவீங்களே!

இப்போ ஆறு மாதத்திற்கு முன்னாடி இறந்து போனாளே.

அற்ப ஆயிசில் அவளுக்கு என்று யாருமே இல்லை பா. அம்மா பாம்பு கடித்து இறந்து விட்டாள். அப்பா ஹோஷாலிணியை கெடுக்க வந்தவர்களை தடுக்க வந்து கொலை செய்யப்பட்டு இறந்து விட்டார்.

அப்படி இருக்கும் போது அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வழியே இல்லை அவர்களுக்கும் சேர்த்து திதி கொடுக்கலாம், தர்ப்பணம் செய்யலாம் இல்லையா..?

ஓ....

தாராளமாக செய்யலாம் திதி யாருக்கெல்லாம் கொடுக்க நினைக்கிறோமோ அவர்களுக்கு எல்லாம் கொடுக்கலாம்......

திதி கொடுத்து தர்ப்பணம் செய்ய அதனால் ஹோஷாலிணி யின் ஆவி லிஷார்தாவின் உடம்பில் புகுந்து கொண்டு என்னவெல்லாம் ஆட்டம் போடுதோ...??????

≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥

Stories you will love

X
Please Wait ...