JUNE 10th - JULY 10th
உயிர் தேவதை
- உடுமலை கி. ராம்கணேஷ்
' கிளம்பியாச்சா. நேரமாச்சு. சீக்கிரமா கிளம்பு' அருணை அவசரப்படுத்தினான் ரகு. ' நானெல்லாம் எப்பவோ தயாராகிட்ட, நீ நேரங்கடத்திட்டு என்னப் பேசறயா...' எனச் சொல்லிவிட்டு பெட்டி படுக்கைகளை வீட்டுத் திண்ணையில் கொண்டு வந்து வைத்தான் அருண். அம்மாவின் முகம் வாடித்தான் போயிருந்தது. இருந்தாலும் மகனின் முடிவுக்கு மறுத்துப்பேச முடியவில்லை. வண்டியில் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டிருந்தான் ரகு ' அம்மா! போய்ட்:டு வரம்மா. உடம்ப கவனிச்சுக்க. என்னால அடிக்கொரு தடவ, உன்ன வந்து... ரகு உன்ன நல்லா பாத்துக்குவான்' கண்களில் கண்ணீர் வரத் தயாரானபோது சுதாரித்துக்கொண்டான். ' சூதானமா போய்ட்டு வாப்பா!. இந்த அம்மாவை மறந்தராத சாமி. உங்கப்பா போனதுக்கப்புறம். எனக்குனு இருக்கறது நீ மட்டுந்தான்.' சொல்லச் சொல்ல கண்ணீர் சேலையை நனைத்தது. அம்மாவைக் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லி விட்டு வண்டியில் ஏறினான்.
பொள்ளாச்சி புகைவண்டி நிலையத்தை அடைந்தனர். அருணின் மனம் அவன் வைத்திருந்த பெட்டிகளை விட கனமாக இருந்தது. மனதில் சிதம்பர ரகசியம் ஒன்று ஒளிந்துள்ளது. அது ரகுவிற்கும் தெரியும். ' டேய், அருண். உம்மூஞ்சியே சரியில்லடா, அதையே நெனச்சு வருத்தப்படாத. உனக்குனு ஒரு எதிர்காலம் இருக்கு'. ' அட சாமி நா நல்லாத்தா இருக்க. வசனமெல்லாம் பேசாத. அம்மாவை நல்லபடியா பாத்துக்க' இரண்டு துளி கண்ணீர் வெளிப்பட்டு விட்டது. 'நீ கவலப்படாத. எங்கம்மாவைப் பாத்துக்கறத விட பக்குவமா பாத்துக்கற. சத்தியம் பண்ணட்டா...' ' இல்ல, அதுவந்து..' . ' போடா போடா உன்னவிட நல்லாவே பாத்துக்குவ' ரகு சொன்னபோது அருண் அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டான்.
' எல்லாம் சரியாயிருக்குதானு பாத்துக்க. மறந்துறாத. அசந்து தூங்கிறாத. நாட்டுக்குள்ள திருட்டுப்பசங்க அதிகம்...' ' உன்னைய விட பெரிய திருடன் இருக்கானா!' அருண் சொல்லிச் சிரித்தான். ' நீ உத்தமனா இருடா. நா திருடனாவே இருந்துட்டுப் போற. பச்சக்கொடி காட்டியாச்சு. பத்திரம்' என வழியனுப்பிவிட்டு சென்றுவிட்டான். புகைவண்டி படிப்படியாக வேகத்தை அதிகரித்து முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. அருண் கண்களை மூடினான். மனம் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. நினைக்க வேண்டாம் என்று நினைத்தாலும் முடியவில்லை.
அருண் நன்றாகப் படித்தவன். கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தான். அங்கு ஒரு வருடம் கழித்து ஒருத்தி வந்தாள். அவளே அருணின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டவள். சிதம்பரத்திலிருந்து மித்ரா வந்தபோது, ஆச்சரியமாக இருந்தது. அவளும் நன்றாகப் படித்தவள். புதிய இடம் என்பதால் சற்று பயத்துடன் காணப்பட்டாள். நிறையப் படித்தவளாக இருந்தாலும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை .சேலையைத் தவிர அவள் வேறெதுவும் அணிந்து வந்ததில்லை. அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற பெண்களைப் போல் அழகுநிலையம் செல்வதோ, ஆடம்பரமான உடைகள் அணிவதோ அவளிடத்தில் கிடையாது. தன் வேலையைச் சரியாக முடித்துவிடுவாள். அருணுக்கு அவளுடைய குணம் பிடித்துப் போனது. தனக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என மனம் தூண்டியது. அவளும் விரும்பினாள். வெளியே சொன்னதில்லை. திடீரென விழிப்பு வரவே நிகழ்காலத்திற்கு வந்தான்.
குழந்தை ஒன்று அருணுக்கு எதிர் இருக்கையில் தன் தாயின் மடியிலிருந்து சிரித்துக்கொண்டிருந்தது. பதிலுக்கு அருணும் சிரித்தான். சிறிது நேரத்தில் மறுபடியும் பழைய உலகிற்குச் சென்றான். மூன்று வருடங்களில் ஐந்தாறு நாட்கள் மட்டுமே விடுப்பெடுத்திருந்தான். பணியின் மீது இருந்த பக்தி என்பதைவிட மித்ராவின் மேல் இருந்த அன்பு எனச் சொல்லிவிடலாம். ஒருமுறை தயங்கித் தயங்கி தன் காதலை வெளியிட்ட போது அவள் முகம் கலவரமடைந்தது. அவள் வாய் திறக்கவில்லை. மௌனமாக இருந்தாள். அதை சம்மதமாக எடுத்துக் கொண்டான். அதன்பின்னர் ஒன்றிரண்டு நாட்கள் அவள் பேசவில்லை. இச்சமயத்தில் அருணின் தாத்தா இறந்துவிட்டார். விடுப்பிலிருந்தான்.. இதைத் தெரிந்து கொண்ட மித்ரா, தனக்கு திருமணமாகப் போகிறது எனச்சொல்லி பணியிலிருந்து விலகி சிதம்பரம் சென்றுவிட்டாள்.
அருணின் மனம் உடைந்து போனது. மித்ராவைப் பார்த்துவிடவேண்டும் எனத் துடித்தான். இன்னும் ஐந்து நாட்களில் அவள் பிறந்தநாள் வரப்போகிறது. பிறந்தநாளன்று நாள் முமுவதும் நடராசர் கோயிலில் இருப்பேன் என ஒருமுறை அவள் சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் பிறந்தநாளுக்குப் பரிசு வாங்கிக்கொண்டு அன்றிரவே சிதம்பரம் பறப்பட்டான். அங்கிருந்த நண்பர்களிடம் விசாரித்ததில் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படவில்லை எனத் தெரிந்தது. நிம்மதிப்பெருமூச்சு விட்டான். நண்பனின் அறையில் தங்கியிருந்தான். பிறந்தநாளன்று காலையில் கோயில் நடை திறக்கும் முன்பே சென்றுவிட்டான். காலை 9 மணியளவில் கோயிலுக்கு வந்தாள். அவள் முகம் வாடிப்போயிருந்தது. எல்லாக் கடவுள்களையும் வணங்கினாள். அவளையறியாமல் அருண் பின்தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மண்டபத்தின் ஓரிடத்தில் வந்தமர்ந்தாள்.
' இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மித்ரா.' அதிர்ச்சியடைந்தாள். ' நீங்க, இங்க, எப்படி' பதற்றமானாள். ' உங்களப் பாக்கத்தா வந்த. என்ன சொல்லிக்காம வந்துட்டீங்க'. அவள் பதில் பேசவில்லை. நச்சரித்தான். ' அதுவந்து எனக்குக் கல்யாணம்...' என இழுத்தாள். ' எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன வெட்டி வீசிருவாரு' அருணால் பேசமுடியவில்லை. ' நா உயிரோடு இருக்கனும்னு நெனச்சீங்கனா! போயிருங்க'. வாங்கி வந்திருந்த பரிசினை அவள் கைகளில் திணித்துவிட்டு வேகமாக வந்துவிட்டான். வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை. பணியிலிருந்து விலகினான். சில நாட்கள் தன் காட்டில் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் பொள்ளாச்சியில் ஓரிடத்தில் வேலை பார்த்தான். மித்ராவை மட்டும் அவனால் மறக்கமுடியவில்லை. ஆறுமாதங்கள் கழித்து நண்பனொருவன் அவளுக்குத் திருமணமாகிவிட்ட தகவலைத் தெரிவித்து, புகைப்படம் அனுப்பியிருந்தான். வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைத்தான். அதிலிருந்து மீண்டு வர இரண்டு வருடங்கள் ஆனது. இருந்தாலும் வேறொரு பெண்ணை மணக்க அவன் மனம் விரும்பவில்லை. திருமணம் செய்யச்சொல்லி அம்மா வற்புறுத்திய நேரத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தான். அந்த நேரத்தில் இராணுவத்தில் சேர்வதற்கான தேர்வு வந்தது. அதில் தேர்ச்சி பெற்றான். திருமணத்தைத் தள்ளிப்போட வாய்ப்புக்கிடைத்தது. இப்போது பணியில் சேர சென்றுகொண்டிருக்கிறான்.
பலமணி நேர பயணக்களைப்பில் தூங்கிப்போனான். சென்னைக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்து காஷ்மீர் சென்றான். மனம் படிப்படியாக மாறத்தொடங்கியது. எதிரிகளுடன் போராடும் சூழல். நாட்டுக்காக உயிரை விட்டவர்களின் குடும்பத்தின் நிலை. இதையெல்லாம் பார்த்தபோது தான் அனுபவித்த துயரம் ஒன்றுமேயில்லை எனப் புரிந்தது. அங்குதான் மேஜர் சிதம்பரம் அறிமுகமானார். அவரின் பெயர் அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஓய்வு நேரங்களில் கார்கில் போரில் எதிரிகளிடம் சண்டையிட்டது இதைப்பற்றியெல்லாம் அருணிடம் சொல்வார். ' அருண். நீங்க இராணுவத்துக்குப் பிடிச்சுத்தான் வந்தீங்களா?' இந்தக். கேள்வியை எதிர்பார்க்கவில்லை. பொய் சொல்லவும் மனம் வரவில்லை. தனது வாழ்க்கையைப் பற்றிச் சொன்னான். இப்போது இராணுவத்தைப் பிடித்துவிட்டது எனச்சொல்ல சிதம்பரம் அவனைக்கட்டித் தழுவினார். ' நீங்க. நல்லா வருவீங்க. உங்க காதலை எங்கிட்ட வெளிப்படயா சொன்னீங்க. அது பெரிய விசயம். வாழ்க்கையை வெறுத்து இராணுவத்துக்கு வரக்கூடாது. எல்லாரும் வாழனுங்கறதுக்காகத்தான் வரனும்' எனச் சொல்லியபோது, அருணுக்குள் மந்திரமாக அது பதிந்தது.
தொலைபேசி மூலமாக அம்மாவிடமும் ரகுவிடமும் ஓய்வு நேரங்களில் பேசுவான். அம்மாவுக்கு கல்யாணம் பற்றிய பேச்சைத் தவிர எதுவுமில்லை. சிந்தித்துப் பார்த்தபோது அம்மாவின் மனம் சரியெனவே பட்டது. இப்போது அருண் புதியதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நாட்டுப்பற்றுடைய ஒரு இராணுவ வீரரின் பெண்ணை மணம் செய்து கொள்ள நினைத்திருந்தான். ஒருநாள் மேஜரிடம் தெரிவித்தான். ' மகிழ்ச்சி அருண். நீங்க திருமணம் பண்ணிக்க தயாராகிட்டீங்க. அதே சமயம் நாட்டுக்காக உழைத்த இராணுவ வீரரோட வீட்டிலிருந்து பெண் எடுக்கனும்னு சொன்னது திருப்தியா இருக்கு. உங்க இனத்துல யாருனு யோசிக்கிற' என்றார். ' இராணுவ வீரர் வீட்டுப் பொண்ணு என்பதைத் தவிர இனம், மதம் இந்தப் பாகுபாடெல்லாம் வேண்டாம்' என அருண் சொன்னபோது, மேஜர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார். ஒரு விடுமுறையில் பெண் தேடும் படலம் தொடங்கியது. கார்கில் போரில் கால்களை இழந்த இராணுவ வீரரின் மகள் கல்பனாவை தேர்ந்தெடுத்தான். அவளிடம் மித்ராவின் சாயல் இருந்தது. அப்பெண்ணிடம் தன் கடந்தகால காதல் வாழ்க்கையைச் சொன்னான். அப்பெண் அதைத் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு நல்ல நாளில் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பதிவுத்திருமணம் நடைபெற்றது.
கல்பனா அருணின் தாயாரோடு பொள்ளாச்சியில் வசிக்கிறாள். நீண்டகாலம் ஆகியிருந்தாலும் ஒரு நல்ல பெண் மருமகளாக வந்தததில் சந்தோசமடைந்தார். ஆறுமாத விடுமுறையில் அருண் வந்து செல்லும்போது கல்பனா கருவுற்றிருந்தாள். ஆனந்தம் வாழ்க்கையில் கரைபுரண்டோடியது. கல்பனாவுக்கு கணவன் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும்போதெல்லாம் தன்னையே கண்டித்துக்கொள்வாள். கண்ணாடி முன்பு நின்று கொண்டு ' உனக்கு அறிவிருக்கா?. நாட்டுக்காக உழைக்கறவர் வீட்டுக்கு வரனும்னு நினைக்கிறது தப்பு' எனச் சொல்லி தலையில் அடித்துக்கொள்வாள். நாட்டுக்கு உழைக்க இன்னொரு இராணுவ வீரன் பிறந்துவிட்டான். அருண் எல்லையில்லா மகிழ்ச்சியை தொலைபேசி மூலமாக அடைந்தான். விடுமுறையில் சென்று மகனைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றிக்கொண்டேயிருந்தது. பணியில்லாத நேரத்தில் மகனைப்பற்றியும் அம்மாவைப் பற்றியும் கல்பனாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வான். அம்மாவுடனும் பேசுவான். ரகு தனக்கென குடும்பம் இருந்தாலும் அருணின் குடும்பத்திற்கும் வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தான். அருண் இருந்த பகுதியில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. அவனுடன் இருந்த வீரர்களில் நால்வர் பலியாகினர். காலில் பட்ட அடியோடு இவன் மட்டும் பிழைத்துவிட்டான். இதுவரை பிள்ளையைப் பார்க்கமுடியவில்லையே என்ற வேதனை பிய்த்துத் தின்றது. இறப்பிற்கு பயப்படவில்லையென்றாலும் பிள்ளையைப் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் மட்டும் ஆழ்மனதில் பதிந்திருந்தது. கல்பனாவிற்கு தாக்குதல் நடைபெற்ற நாளிலிருந்து நிம்மதியான தூக்கமில்லை. தனக்கு கணவன் என்பதைவிட பிள்ளைக்குத் தந்தை வேண்டுமென நினைத்தாள். அவள் மனதில் முன்பிருந்த உறுதி மாறிவிட்டது
குழந்தைக்கு ஆறுமாதங்கள் ஆகியிருந்தது. இரண்டுமாத மருத்துவ விடுப்பில் அருண் வீட்டிற்கு வந்தான். வீடு திறந்து கிடந்தது. தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்த கல்பனா, குடத்தைப் போட்டுவிட்டு கணவனைக் கட்டிக்கொண்டாள். அவளுக்குப் பேச்சு வரவில்லை. காலில் பட்ட குண்டடிக் காயம் அவளுக்கு இரணமாக இருந்தது. 'கல்பனா. ஒன்னுமில்லை. இராணுவ வீரரோட மகளாப் பிறந்து, ராணுவ வீரனுக்கு மனைவியா இருக்கற நீ இதுக்கெல்லாம் அழலாமா?' சமாதானப்படுத்தினான். 'குழந்தையும் அம்மாவும் எங்க'. ' உங்க பையன் ரொம்ப சேட்டை பண்றா. பக்கத்தில வேடிக்கை காட்ட அத்தை கூட்டிப் போயிருக்காங்க'. ' நம்ம பையன் யாரு மாதிரி இருக்கான்'. 'உங்கள மாதிரிதான்' வெட்கத்தில் சிரித்தாள். கோயிலுக்கருகில் வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த அம்மாவுக்கு பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணொருத்தி அருண் வந்திருப்பதைத் தெரிவித்தாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடோடி வந்தாள். ரகுவும் அந்நேரத்திற்கு அங்கு வந்திருந்தான். ' அருணு, நல்லாயிருக்கியா சாமி. உனக்கு அடிபட்டுச்சுனு கேட்டதிலயிருந்து எனக்கு நிம்மதியில்லை' கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். அம்மாவைச் சமாதானப்படுத்தினான். ரகுவும் தன் பங்குக்கு உணர்ச்சி வசப்பட்டான். அருண் ரகுவிடம் பேசினான். பிள்ளை திருதிருவென விழித்தது. அருண் தூக்கிவைத்துக் கொண்டு முத்தமழை பொழிந்தான். குழந்தை சிரித்தது.
வாழ்க்கையின் சுவை அருணுக்குள் ஊற ஆரம்பித்தது. இரண்டு மாதம் கழிந்தது. கல்பனாவிற்கோ, அம்மாவிற்கோ மீண்டும் அருணை அனுப்ப விருப்பமில்லை. அதை மறைமுகமாகக் கல்பனாவும், நேரடியாக அம்மாவும் தெரிவித்தனர். இம்மாதிரியான நேரங்களில் அவன் பேசுவதில்லை. தன்னிடம் சொல்லிச் செல்ல வரும்போது மறுத்துவிடலாம் என்ற நினைப்பில் கல்பனா இருந்தாள். அவளிடம் மீண்டும் இராணுவத்திற்குப் போகிறேன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டாள.; அதனால் போகும்போது அவளிடத்தில் சொல்லக்கூடாதென அருணும் இருந்தான். நினைத்தபடியே ஒரு நாள் கிளம்பிவிட்டான். கல்பனா துடித்தாள். மீண்டும் அருண் வரப்போகும் நாளை எண்ணிக் காத்துக்கொண்டிருக்கிறாள்...
#03
1,55,420
1,15,420
: 40,000
2318
5 (2318 )
kaliammal57
நன்று தம்பி
ayyasami112
Nive sir.keep
vatjana063
Good
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50