JUNE 10th - JULY 10th
"அரசியல் இந்த உலகை அமைதியாக இருக்க விடாமல் செய்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அதிகாரத்தை ஒரு பக்கமாக ஒரு கையில் குவியாமல் இருக்க அரசியல் தேவைப்படுகிறது என்பது நம்பிக்கை."
காலையில் எழுந்ததும் செய்தியை பார்ப்பது உங்கள் வாடிக்கையான விடயங்களில் ஒன்று என்றால் அறிந்து வைத்திருப்பீர்கள். நூற்றிற்கு தொண்ணூறு சதவீதம் வரும் செய்திகள் எதிர்மறையான செய்திகள் தான். கடவுள் இருக்கிறார், இல்லை என்பதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விடயம். ஆனால், அதை வைத்து அரசியல் செய்வது என்பது எவ்வளவு அசிங்கமான விடயம். லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையாக வணக்கத்திற்கு உரியதாக இருக்கக் கூடிய ஒரு விடயத்தை குறித்து ஒருவர் தவறாகப் பேசுகிறான் என்றால் அது எவ்வளவு பெரிய அறிவற்ற செயல்.
நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்காத மனிதர்களால் எப்போதும் நம்பிக்கைத் துரோகங்களுக்கு வழிவகுக்கும். இது அவர்களுக்கு புரிகிறதா? என்றால் சந்தேகம் தான். உங்களுடைய நம்பிக்கை உங்களுக்கு இவ்வளவு முக்கியமோ அதேபோல் மற்றவர்கள் நம்பிக்கையும் மற்றவர்களுக்கு முக்கியம் என்பதை உணர வேண்டும்.
ஒருவருடைய நம்பிக்கை உடைந்துப் போகும் போது அவருள் சமநிலை தவறுகிறது. அந்த சமநிலை தவறும் போது சமூகத்தின் மீதான வெறுப்பு அதிகரிக்கச் செய்து சமூகத்தில் அமைதியின்மையை அதிகரிக்கும்.
இந்தியாவில் நூற்றிமுப்பது கோடி மக்களுக்கு மேல் வாழும் நாட்டை வெறும் நாற்பது கோடிக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட அமெரிக்காவின் ஐக்கிய மாநிலங்கள் மனித உரிமைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அறிக்கைகளை வெளியிடக் காரணம் நமக்குள் இருக்கும் துரோகக் கூட்டம் தான் என்பது உண்மை. பணத்திற்காக சொந்த தாய்நாட்டையே வேவு பார்க்கும் துரோகிகளும் நமக்குள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது என்று ஒரு கூற்று உண்டு. "அரசியலில் ஏதோ ஒன்று நடக்கிறது. அதைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வெண்டும்?" என்று கூறும் பொறுப்பற்ற, அறிவற்ற மக்களுக்கு ஒன்றை தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். அரசியலில் நடக்கும் மாற்றம் நிச்சயம் நம்மை பாதிக்கும். உக்ரைனில் ரஷ்யா நடத்திக் கொண்டிருக்கும் சிறப்பு இராணுவ நடவடிக்கையால் இந்தியா உள்பட பல உலக நாடுகளில் விலைவாசி உயர்ந்து வருகிறது. இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் வாங்கும் திறன் குறைந்து வருகிறது.
இப்படி எல்லாம் துறைகளிலும் மூக்கை நுழைக்கும் அரசியல் பற்றி நாம் எல்லாரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
நம்பிக்கை என்பது குறித்து நாம் சிந்திக்கும் போது தினமும் ஆயிரக்கணக்கான செய்திகளை நம் படிக்கிறோம். அவற்றில் பல செய்திகள் ஆய்வுக் கட்டுரைகள் வேண்டும் என்றே நம்மிடம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. நாம் நம்பும் ஊடகங்களில் அப்படிப்பட்ட செய்திகள் திரும்பத் திரும்ப பிரசுகரிக்கப்படுவதை நம்மால் நிச்சயமாக காண முடியும்.
ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்தால் அந்த தவறு எல்லா இடத்திலும் நடப்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கும் செய்திக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் திட்டமிட்டே தயாரிக்கப்படுகின்றன. அந்த மாதிரியான கட்டுரைகள் நம் நம்பிக்கையை அடியோடு சிதைக்கவல்லவையாகவும் இருக்கின்றன. என்ன செய்வது? அத்தகைய சமுதாய சூழலில் சிக்கிக் கொண்டுள்ளோம்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலர் சிக்கித் தங்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டாலும் அந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு இன்னும் தடை செய்யப்படாமல் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் என்பதை நாம் உணர்ந்து உள்ளோமா? அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் பணத்தையும் இழந்துவிட்டு உயிரை விடும் முட்டாள்களை என்னவென்று சொல்வது? இந்த மாதிரியான விளையாட்டுகளில் ஈடுபடும் போது ஒருவருடைய வெற்றி மற்றொருவருக்கு தோல்வியாக இருக்கும் என்பதையும், தோற்றவர் எத்தகைய சூழலில் அந்த விளையாட்டிற்கு வந்தார் என்பதையும் யாரும் சிந்திப்பதில்லை. இதுவும் அரசியலில் அடங்கும். பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த தொழிற்நுட்ப பிரிவைச் சார்ந்தவர்களே இது போன்ற விளைாட்டுகளை சில நிறுவனங்களின் பெயரில் தொடங்கி மக்களை ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள் என்பது உண்மை. இல்லை என்றால் இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்து இல்லாமல் செய்து இருக்கலாமே இந்த சர்வ வல்லமை கொண்ட அரசியல் வியாதிகள்.
"எனக்குப் பணம் கிடைக்கிறது. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்." என்ற கொள்கை உடையவர்களால் தவறான விளம்பரங்கள் மூலம் தவறான விடயங்கள் மக்களிடையே கொண்டு போய் சேர்க்கப்படுகின்றன. அதில் அவர்கள் காட்டும் ஆர்வத்தை ஆக்கப்பூர்வமான விடயங்களில் காட்டி இருந்தால் நாம் எப்போதோ முன்னேறி இருப்போம்.
மக்களிடையேயான நம்பிக்கை குறைந்து வருவதைக் காண முடிகிறது.
"வாளின் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது." என்பதை உக்ரைன், ரஷ்யா இடையேயான சண்டையில் நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள். கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மக்கள் குறைந்து விட்டு வெளியேறும் நிலையில் தங்களுடைய நம்பிக்கையை இழந்து தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேறும் கொடுமையைப் பற்றி நாம் நேரடியாக பாதிக்கப்படும் வரை நாம் ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விடயம் பற்றி மேற்கத்திய தலைவர்களின் அறிக்கையில் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
ஆயுதங்களை மக்களிடம் திணிக்க வேண்டும் என்றால், ஆயுதங்களை மட்டும் நாடுகளின் மீது திணிக்க வேண்டுமென்றால் போர்கள் அத்தியாவசியமானவை என்ற கருத்தில் செயல்படும் மேற்கத்திய நாடுகள் இந்த உலகத்திற்கு மிகவும் அபாயகரமானதாக திகழ்கின்றன. ஊடகங்கள் மூலமாக மக்களிடையே தங்கள் கருத்துகளை கொண்டு சேர்க்கும் அரசியல் மிகத் திறம்பட செயல்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் செயல்படும் செய்தி நிறுவனங்களே திட்டமிட்டு சில செய்திகளை தவறாக பரப்பும் போது உலகில் இருக்கும் மிகப்பெரிய செய்தி ஊடக ஜாம்பவான்கள் திட்டமிட்டு பரப்பாமல் இருக்கப் போகிறார்களா?
உதாரணமாக ஒரு நிகழ்வைப் பார்ப்போம். இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து தோற்றுவிட்டது. அதைப்பற்றி அந்த செய்தியை வெளியிட்ட ஒரு மாநில செய்தி ஊடகம் "மீண்டும் மண்ணை கவ்விய இந்தியா" என்ற தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் தேசபக்தி எங்கு உள்ளது? இதுபோன்ற பிரிவினைவாத பத்திரிக்கைகள் உலகெங்கிலும் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமையாக இருந்த போது, இந்திய மக்களை ஒன்றாக திரட்டியது தேசபக்தி மிக்க ஆசிரியர்களைக் கொண்ட பத்திரிக்கைகள்தான். அப்படி ஒரு பத்திரிக்கை இன்று இந்தியாவில் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு செய்தி ஊடகம் என்றாலே ஒரு வியாபாரமாகவும், தங்கள் சுய லாபத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு ஊடகமாகவும் மாறிவிட்டது. நாம் பாடப் புத்தகங்களிலும், பல ஆசிரியர்களிடம் இருந்தும் பல தலைவர்களைப் பற்றி இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்களை பற்றி தெரிந்து வைத்திருப்போம். அவற்றையெல்லாம் தவறாக சித்தரிக்கும் வகையில் இப்போதைய செய்தி ஊடகங்களில் சர்வசாதாரணமாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. கேட்டால் கருத்துச் சுதந்திரம் இதுதானாம்?
எது கருத்துச் சுதந்திரம் மக்களே? நீங்களே கூறுங்கள். அடிமை விலங்கிலிருந்து விடுவிக்கும் கருத்துக்களை கருத்துச் சுதந்திரத்தில் வருமே தவிர, அடிமைப் படுத்துவதற்காக எழுதப்படும் கருத்துக்கள் எப்படி கருத்துச் சுதந்திரத்தினுள் வரும்?
"ஒற்றை வரிகளில் சொல்ல வேண்டுமானால் செய்தி ஊடகங்கள் அதிகரித்துவிட்டன. உண்மையான செய்திகளும், சரியான தகவல்களும் குறைந்துவிட்டன." என்பதே நிதர்சனம்.
எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கசப்பான நிகழ்வுகளையும், மக்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அந்த காயத்தை ஆறவிடாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த ஊடகங்களின் பெரும்பான்மை நம்பிக்கை என்பதை அழித்து, எதிர்கால சந்ததியினர் இடையே ஒரு அமைதியின்மையை ஏற்படுத்த வல்லதாக உள்ளது. இத்தகைய அறிவற்ற செயல்களை எப்போது நிறுத்துவார்கள்?
ஒரு தேசத்தின் ஒற்றுமையை உருக்குலைக்க கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடமாடும் முட்டாள் ஊடகங்களின், வணிக நோக்கம் ஊடகங்களின் ஆதிக்கத்தை முடக்க முடியாவிடில் நம் சந்ததியினரின் எதிர்காலம் நிச்சயமாக கேள்விக்குறிதான். வரலாற்றில் யாரோ ஒருவர் ஒரு அறிவற்ற செயலை செய்து விடுகிறார் என்பதற்காக எதிர்காலத்தில் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் அனைவருமே அப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை நம்முள் திணிக்கும் அரசியல் வியாதிகளையும், அதற்குச் சாதகமான ஊடகங்களையும் நம்பும் மக்கள் விழிப்படைய வேண்டும்.
நீங்கள் உங்கள் வேலையை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், உங்கள் மீது யுத்தம் திணிக்கப்படும். இதை இந்த ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சாத்தியம் ஆக்குவார்கள். "தான் ஒரு நாட்டின் தலைமை பொறுப்பில் இருக்கிறோம் என்கிற ஆணவத்தில் அதிகமாக ஆடக்கூடாது." என்பதை பல நாடுகளில் நடக்கும் அரசியல் சூழல்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஒரு காலத்தில் ஒரு நாட்டின் பாதுகாவலர்களாக அறியப்பட்டவர்கள் இன்று அந்த நாட்டைவிட்டு தப்பியோடும் நிகழ்வுகளும் அரங்கேறிவருகின்றன. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும். அரசியலும், ஊடகங்களும் உலகை கெடுத்துக் கொண்டு இருக்கின்றன. மக்களிடையே ஒற்றுமையை வேர் ஊன்றச் செய்யாமல் செய்வதற்கான அத்தனை செயல்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. அவை ஜீரணிக்க முடியாத அளவில் மிகவும் மோசமான நிலையில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
ஒரு நாட்டை அடிப்படையா வைக்க அந்நாட்டுக்கு எதிராக அந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதாகவும் மற்றொரு நாட்டின் அரசாங்கமே அறிக்கை வெளியிடுகிறது எனில் அதில் உள்ள அரசியலை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாக உள்ளது. அரசியலை தவிர்த்து பார்க்கும்போது, இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்ற வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக வாழும் போது சூழல் நிலவி வருகிறது. அதை உருக்குலக்கும் வகையில் சில அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, அவர்கள் அயல் நாட்டவர்களின் கைப்பாவைகளாக, பணத்திற்கு விலை போய்விட்ட தேசத்துரோகிகளாகவே தோன்றுகிறது.
இப்படிப்பட்ட தேசத்துரோகிகள் கூறும் கருத்தை அந்த தேசத்தின் கருத்தாகக் கொண்டு ஒட்டுமொத்த தேசமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சில இஸ்லாமிய நாடுகள் கூறுவது இது இந்தியாவை அடிபணிய வைக்க மேற்கத்திய நாடுகளின் தூண்டப்பட்ட செயல்பாடு என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அன்பு சகோதரர்களே, இது போன்ற விடயங்களில் நாம் நிச்சயம் பொறுமை காக்க வேண்டும். உண்மையையும் சூழலையும் அறிந்து பார்க்க வேண்டும். நம் நம்பிக்கை முக்கியமானதுதான். அந்த நம்பிக்கையை நமக்கும் மட்டுமே முக்கியத்துவமானது. அதற்கு அடுத்தவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பேராசையாகவே உள்ளது.
இனியும் நம்மிடையே பிரிவினைவாதத்தை தூண்டும் எந்த ஒரு நம்பிக்கையையும் வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியும் அறிவு நம்முடையதாக இருக்க வேண்டும். அதற்கான ஞானத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த சுதந்திரம் நான் பின்பற்றும் மதத்தில் இருப்பதாக உணர்கிறேன். நம்பிக்கை என்பது நம் மீது இருக்க வேண்டும். வியாதிகளை நம்பினால் வியாதிகளாலே நாம் வியாபிக்கப்படுவோம்.
சிந்தித்து செயல்படுங்கள் அன்பு சகோதர சகோதரிகளே!
ஜெய்ஹிந்த்
#774
11,767
100
: 11,667
2
5 (2 )
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
kingmakerkanna0007
மிகவும் சிறப்பான கருத்து. வாழ்த்துக்கள் நண்பரே.
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50