யார் குழந்தை?

கற்பனை
5 out of 5 (2 )

கண்மணி தனது கணவனுக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து விட்டு.. தனது இரு குழந்தைகளுக்கும் சட்டியில் இருந்த பழைய சாதத்தை பிசைந்து ஊட்டினால்..

அம்மா எப்ப பார்த்தாலும் பழையது எப்பம்மா இட்லி செஞ்சி தருவ என்றால் பெரியவள்... சின்னவளுக்கு இன்னும் பேச்சி சரியாக வரவில்லை.. ஆனால் அதுவும் வாயில் சோற்றை முழுங்காமல் துப்பி கொண்டிருந்தது...

கண்மணி காதல் திருமணம் செய்தவள் கணவன் ஒரு விபத்தில் படுத்த படுக்கயானான். இரு குழந்தைகளை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவளுக்கு.. எங்கிருதோ யாரோ அவளை கூப்பிடுவது போல் தோன்றியது..

வாசலில் கனகா...

என்னக்கா வட்டி காசு அடுத்த வாரம் குடுத்துடுறேன்க்கா

ஏய் நான் அதுக்கு வரல.. ஒரு நல்ல விஷயம் உன் வீட்டுக்காருக்கு ஆபரேஷன் பண்ணிடலாம் கடன அடச்சிட்டு நீயும் புள்ளைங்களும் சந்தோசமா இருக்கலாம் அத சொல்லத்தான் வந்தேன்.

எப்படி அக்கா..

போன முறை ரத்தம் குடுக்க அழைச்சிட்டு போய் 5,000 பணம் குடுத்தான்ல குணா அந்தாளு வந்துருக்கான்..

மறுபடியும் ரத்தம் குடுக்கணுமாக்கா.. குடுத்தா எம்புருஷன் ஆபரேஷன் எப்புடிக்கா அதுக்கு நிறைய செலவு ஆகுமே..

ஏய் இப்போ ரத்தம் தேவை இல்ல யாரோ ஒரு பெரிய பணக்காரங்களுக்கு புள்ள இல்லயாம்.. அவுங்க கருவ சுமந்து அதாண்டி வாடகை தாய் ன்னு சொல்வாங்களே.. நம்ம உஷா கூட போன வருஷம் பெத்து குடுத்தாலேடி..

ஆமா.. ஆனா நான் எப்புடிக்கா..

இங்க பாருடி உன் புருஷன் கஷ்டம், உன் புள்ளைங்க நல்லா சாப்பிடும்... வாங்குன கடன் கட்டிடலாம் 3 லட்சம் தரேன்னு சொல்றான்.. யோசிச்சு சொல்லு.. நீ கஷ்டப்படுறண்ணுதான் உன் கிட்ட வந்து சொன்னேன்.. இல்லன்னா மாலாகிட்ட சொல்றேன்..

தனது கணவனை குணப்படுத்திவிடலாம்.. யாரு தன்னை நம்பி 3 லட்சம் தருவாங்க.. என்று யோசித்தாவள் சரி என்று ஒப்புக்கொண்டால்..

அடுத்த வரும் நாட்களில் அவளுக்கு முன்பானமாக 2 லட்சம் கொடுக்கப்பட்டது.. நிறைய இடங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது.. வாடகை தாயாக மாறினால் கண்மணி..

தனது கணவனுக்கு நல்ல மருத்துவ மனையில் பணம் செலவு செய்து ஆபரேஷன் செய்தால்... இன்னும் ஓரிரு மாதங்களில் தனது கணவன் நடந்துவிடுவான் என்று டாக்டர் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தால்.

ஆனால் நிலைமை தலை கீழாக மாறியது.. குணமாகிய கணவன் அவள் செய்த தியாகத்தை மறந்து.. இந்த குழந்தை நீ எவனுக்கோ போய் வயித்துல வாங்கிட்டு வந்துருக்க.. அத மறைக்க எனக்கு ஆபரேஷன் பண்ணிருக்க.. என்று அவளை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்தான்..

இவள் எவ்வளவு சொல்லியும் கேட்காதவன்.. குழந்தையை கலச்சிட்டு வா என்று சொல்ல.. அவள் அதிர்ந்து போனால்.

எப்படி செய்ய முடியும் கை நீட்டி பணம் வாங்கியாச்சு 5 மாத குழந்தை.. இவள் முடியாது என்று சொல்ல.. அவன் அப்போ உன்னோட என்னால வாழ முடியாது என்று சென்றுவிட்டான்.

இவனை காப்பாற்ற இவள் செய்த நல்லதை கூட நினைக்காதவணை எண்ணிக்கொண்டே மாதங்கள் 8 சென்றுவிட்டன.. அனைவரின் ஏச்சுக்களும், பேச்சுக்களும் அதிக வலியைய் தந்தாலும் தனது குழந்தைகளின் பசி போனது அவளுக்கு சந்தோசத்தை தந்தது.

குழந்தைகளை கனகா அக்காவிடம் விட்டு விட்டு ஹாஸ்பிடலில் சேர்ந்தால் கண்மணி..

மருத்துவமனையில் டாக்டர் மற்றும் குணா இருவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர்...

குணா இவளிடம் வந்து எதோ சொல்ல வந்தவன் ஒன்றும் சொல்லாதவனாய்.. பேலன்ஸ் 1லட்சம் பணத்தை தான் வெளியூர் செல்வதாகவும் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்றும் வந்து தருவதாக கூறிவிட்டு பாத்தாயிரம் அவளது கையில் கொடுத்து விட்டு டாக்டர் மற்ற அனைத்தையும் பார்த்துக்கொள்வார். என்று கிளம்பினான்..

கனகா கண்மணியின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கண்மணி இருக்கும் அறைக்குள் நுழைந்தால்..

குணா அவசரமாக வெளியேற கனகாவை பார்த்து சற்று தயங்கினான்

என்ன குணா நம்மள எதுவுமே கவனிக்க மாட்டேங்குற... அவளுக்கு இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து வாங்கி குடு.. அவ புருஷன் இந்த குழந்தையை காரணம் காட்டி உடம்பு நல்லா ஆனது உட்டுட்டு ஓடிட்டான்.. பாவம் ரெண்டு புள்ளைங்கள வச்சிக்கிட்டு அவ ரொம்ப கஷ்டப்படுவா

அவன் அவனது பையிலிருந்து ஒரு 5000 எடுத்து இந்தா வச்சிக்க எனக்கு ஒரு அவசர வேலை என்று அங்கிருந்து சென்றான்..

மறுநாள் அழகான பெண் குழந்தை பிறந்தது....நல்ல கலராக இருந்தது.. கண்மணி நினைத்தால் தன் வயிற்றில் இவளோ வெள்ளையா ஒரு குழந்தையா.. என்று.. ஏனெனில் அவளது இரு குழந்தைகளும் கருப்பு நிறம் அவளும் அவளது கணவனும் கருப்பு நிறத்தில் இருப்பதால் அவர்களது சாயலில்.. ஆனால் இது அவளது குழந்தை இல்லையே.. அந்த பிஞ்சு கையை பற்றி அவள் எண்ணியதை நினைத்து கண்மணி தானக்குள்ளே சிரித்து கொண்டால்..

ஒருவாரம் ஆகியும் யாரும் எதுவும் சொல்லாத நிலையில்... தனது குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று நினைத்தவள்.. கனகாவை வரவாழைத்தால்..

கண்மணி அந்த குணா போன் போட்டா எடுக்கவே மாட்டேங்குறான்.. போனமுறை இது மாதிரி நம்ம மஞ்சுவுக்கு பண்ணப்ப பொறந்தோனயே தூக்கிட்டு போய்ட்டாங்க.. பால் கூட குடுக்க விடல..

நிஜமாவா.. பால் குடுக்க விடலையா

ஆமாண்டி நான் கேட்டதுக்கு.. தாய்பால் குடிச்சா குழந்தை மேல அந்த பொண்ணுக்கு பாசம் வந்துடும் ஒரு வாட்டி ஒரு பொண்ணு குழந்தையை குடுக்க மாட்டேன்னு சொல்லிடுச்சாம் அதான் உடனே எடுத்துட்டு போய்டுவாங்கலாம்.

ஓ.. எனக்கு அப்புடி இல்லக்கா.. என் ரெண்டு பொண்ணுங்களையே என்னால எப்புடி வளர்க்க போறேன்னு நெனச்சாலே பயமா இருக்கு இதுல இதை வேற நான் எங்க பார்க்குறது.. அவர பத்தி ஏதாவது தெரிஞ்சிதா என்று அவள் கேட்கும் போது அவள் கண்களில் கண்ணீர்.

சீ நீ ஏண்டி அவனை நெனச்சி அழுவுற நீ பண்ணுன தியாகத்தை நம்பாத நாயி போவியா உன் புள்ளைங்கள பாருடி.. அவனெல்லாம் புழு புழுதுதான் சாவான்..

விடுக்கா என் தலையெழுத்து..டாக்டர் கூப்பிடுக்கா நாம போவோம்.. வீட்டுக்கு..

டாக்டர் அவர்களிடத்தில் வந்து நின்றார்

டாக்டர் ஒரு வாரம் ஆயிடுச்சு நான் எப்போ வீட்டுக்கு போறது..

அவர் கைகளை பிசைந்து கொண்டு நிற்க

கனகாவிற்கு கோபம் வந்துவிட்டது டாக்டர் உங்களைத்தான் கேட்குறோம் அவளை எப்போ அழைச்சிட்டு போறது.. இந்த குழந்தை ஏன் இன்னும் யாரும் வந்து எடுத்துக்களை..

குணா எங்க போனான்னு தெரியல போன் அடிச்சாலும் கட் பன்றான்..

டாக்டர் மெல்லிய குரலில் தயங்கி தயங்கி இந்த குழந்தையை எடுத்துக்க அந்த parents வரமாட்டாங்க.

கனகாவும், கண்மணியும் அதிர்ந்து போய் என்ன சொல்றீங்க டாக்டர்.. அப்போ இந்த குழந்தை..ஏன் அவுங்க வரல பெண் குழந்தைன்னா..ஆம்பள புள்ள எதிர்பார்த்தாங்களோ அவுங்கள எங்க இருந்தாலும் தேடி புடிச்சி குடுத்துடுங்க..டாக்டர்..

அவுங்க ரெண்டுபேரும் ஒரு விபத்துல இறந்துட்டாங்க..என்று டாக்டர் சொல்ல..

இருவருக்கும் அதிர்ச்சி.. கண்மணிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.. கனகா சுதாரித்தவளாய் டாக்டர் ஏற்கனவே அவளுக்கு ரெண்டு பொட்ட புள்ளைங்க.. அதுங்கலையே இவளாள காப்பாத்துறது கஷ்டம் இதை யாரு பார்க்குறது..

வாடி எழுந்துரு நாம போகலாம்.. இந்த நாதாரி குணா விஷயம் தெரிஞ்சி ஒட்டிட்டானா.. பணத்தையும் குடுக்காம ஓடிட்டான்.. படுபாவி.. ஏண்டி அந்த குழந்தையை பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்க இனி அவுங்க வேலை அத என்ன பண்ணனும்னு அவுங்களுக்கு தெரியும் என்று கண்மணியை கனகா அழைத்தால்..

வாடி நீ இப்புடி அந்த கொழந்தையை பார்த்துகிட்டே நின்னா உன்னோட ரெண்டு பிள்ளையும் யாரு பார்ப்பா.. அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும்.. என்ன பண்றேன் பாரு

டாக்டர் அவர்கள் போவதையே பார்த்தவர்.. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்..

ஏனெனில் இந்த குழந்தையை எங்கு விடுவது என்று அவருக்கும் தெரியவில்லை.. போலீஸ் சென்றால் இவர் சட்ட விரோதமாக செய்தார் என்று மருத்துவமனையயே இழுத்து மூடி இவரையும் கம்பி என்ன வைப்பார்கள்..

அந்த பிஞ்சு குழந்தை வயிற்று பசியில் தாம் யார் குழந்தை? என்று கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தது.

குறிப்பு

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும்போது.. இப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டால் அந்த குழந்தையின் நிலை என்னவாக இருக்கும்.. இது யார் குழந்தை? என்ற கேள்வி மட்டுமே மிஞ்சி இருக்கும் என்ற சிறு கற்பனையில் உருவான கதை.. எது செய்தாலும் சட்டத்தின் உதவியோடு செயுங்கள் அது அனைவர்க்கும் நல்லதாக இருக்கும்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...