நிர்வாணம்

Bharathi Balasundaram
கற்பனை
3 out of 5 (2 )

முதல் பார்வை

ஒரு கருவில் புதைக்கபட்டு விளைந்தபோது சில மாதங்கள் ஆகின நான் நிர்வாண உடலை அடைய, கருவிலே சில நாட்கள் முழு நிர்வாணம்தான்.

ஒரு நாள் ஒரு மாட்டு தொழுவத்தில் என்னை நான்கு மாராம்பு இல்லாத ஆயாக்கள் புடவையை மாரில் போர்த்திக் கொண்டு ஒவ்வொருவராய் அனைத்து என்னை தூக்கி பார்த்து கொண்டிருந்தனர்..ஒரு கிழவி என் மேலே சுத்தி இருந்த இரத்தம் படர்ந்த துணியை விலக்கி
- - அடியோய்... ஆம்பள புள்ளஅ - - என சிரித்தி கொண்டே துணியை மூடினாள்.
நான் அய்யய்யோ என்னய பாத்துட்டா, என நினைத்து இன்னும் சத்தமாக கத்தினேன் போல - ஞாபகம் எனக்கு.

அது என்னவோ தெரியவில்லை, அம்மா என்னை கால்ச்சட்டை இல்லாமல் வெளியவே விடமாட்டாள், தெருவில் இருக்கும் ஒரு அக்காவை காட்டி --அங்க பாரு, அங்க பாரு பார்வதி பாக்குவது, வா வா சீக்கிரம் ஜட்டி போடு ஜட்டி போடு - - என்னை கைத்தட்டி கைத்தட்டி உள்ளே அழைப்பாள்... நானும் ஏதோ யாரோ சொல்லி கொடுத்த ஞாபகம், முகத்தை இரண்டு கைகளில் மூடிக் கொண்டு உள்ளே ஓடி விடுவேன். இப்போதிய சிந்தனைகள் அப்போதே இருந்திருந்தால் கண்டிப்பாக முகத்தை மூடியிருக்க மாட்டேன்.

தெருவில் மல்லிகாவுடன் ஓடி ஆடி விளையாடிய போது, பக்கத்து வீட்டில் புது வீடு கட்ட ஆற்று மணல் மாட்டுவண்டியில் வந்து இறங்க, மறுநாள் காலையில் மேல்ச்சட்டை இல்லாமல் நான் மணலுக்கு ஓடி வர பக்கத்து வீட்டு மல்லிகா மஞ்சள் ஜட்டியுடன் என்னை பார்த்து ஓடி வந்தாள். அவளுக்கும் இப்போது நான்கு வயதுதான்.

சூரியக்கதிர்களால் மணல் பளபளவென மின்னிக் கொண்டிருக்க ஓடிபோய் இரண்டு கால்களையும் தாவி குத்தி குதித்து உள்ளே இறங்கி குப்புற விழுந்ததில் வயிற்றிலும், மார்பிலும் இதமான சூட்டுடன் வெள்ளை மணல் துகள்கள் ஒட்டி கொண்டது... - - நல்லா இருக்கே - - என திரும்பி மல்லிகாவை பார்த்தேன். மல்லிகாவின் அம்மா ஓடி வந்து அவளுக்கு ஒரு பழைய பிங் கலர் கெவுனை மாட்டிவிட்டு விட்டு உள்ளே சென்றார்.. மஞ்சள் ஜட்டியில் ஒரு மிக்கி மௌஸ் இருந்தது, இப்போ மறைஞ்சி போச்சே - அய்யய்யோ- அவளோட கெவுனை பார்தேன், ஒரு வாத்து இருந்தது. - - அது டொனால்ட் டக் னு அப்போ எனக்கு தெரியாது. - -

நான் மீண்டும் மணலில் இம்முறை முதுகு படுமாறு விழுந்து மல்லிகாவை பார்தேன். மணலில் அவளுக்கும் ஆர்வம் போல, கஷ்டப் பட்டு அந்த கெவுனை கழற்றி மணலில் எறிந்து அவளும் ஒரு முறை விழுந்தாள், சரியா விழவில்லை போல, அவள் நெஞ்சில் மணல் கொஞ்சமாக படிந்ததை பார்த்து மணலை எடுத்து மேலே போட்டு கொண்டாள், நானும் உதவி செய்யலாமே என ஒரு கைப்பிடி மணலை அவள் உடலில் வாரிக் கொட்டினேன்... - - ஓஓஓஓ- ன்னு ஒரே அழுக, நான் கொஞ்சம் தாராள மனதோடு அவள் முகத்திலும் மணலை எறிந்தது தப்பு என, என் அம்மா என்னை வெறும் உடம்புடன் அடிக்கும் போதுதான் தெரிந்தது. அழுதுக் கொண்டே மல்லிகாவை பார்த்தேன்,, மல்லிகா அம்மா அவள் கண்களில் மணலை ஊதி கொண்டிருக்கிறாள்.

--டேய் ஒரு பையனும் பொண்ணும் ஒன்னா ஒன்னுமே இல்லாம படுத்து கிடந்தா குழந்தை பொறக்கும்மான்டா-- என விக்கி என் காதருகில் கசித்திக் கொண்டிருக்க, நான் எங்கள் ஐச்சாம்பு டீச்சர் ஐ பார்த்து கொண்டிருக்க, டீச்சர் கரும்பலகையில் பாரதியார் பாடல் (ஓடி விளையாடி பாப்பா) எழுதி கொண்டிருக்கிறார்.
டேய் விக்கி பேசாத என டீச்சர் சட்டென்று திரும்ப அவன் கொஞ்சம் விலகி சென்றான்.

நானும் நோட்டில் ஓடி விளையாடு பாப்பா என எழுதி கொண்டே அருகில் அமர்ந்திருந்த லெட்சுமியை பார்த்தேன். குனிந்த தலை நிமிரால் பென்சிலை அழுத்தி அழுத்தி எழுதி கொண்டிருந்தாள். ஒரு வரி எழுதி முடிப்பதற்குள் பென்சில் கூரை உடைத்து விட்டாள். லெட்சுமிக்கு எப்போதும் நான்தான் பென்சிலை பிளேடில் சீவி தருவேன், அன்று எதோ என்னிடம் தரவில்லை.

விக்கி சொன்னது எனக்கு யோசனையாகவே இருந்தது, நானும் லெட்சுமியும், இன்னும் கொஞ்சம் பேரும் பள்ளி முடிந்து ஒரு புளியந்தோப்பு வழியாகதான் வீட்டிற்கு செல்வோம், அன்றைக்கு நாங்கள் நடந்து செல்லும் போது லெட்சுமி காலில் ஒரு அழுக்கு கைலி சிக்கியது, அருகில் மரத்தடியில் ஒரு ஆள் சாராய பாட்டிலிடுன், உடல் முழுக்க மண் ஒட்டி கொண்டு,, பட்டன்கள் பூட்டாமல் மேலே சட்டை மட்டும் போட்டிருந்தார்...

இறந்த மாதிரி கிடந்தார்... நல்ல வேலை கை கால் அசைந்தது. அவர் கிடந்த கோலம் ஒரே அருவருப்பாக இருந்தது, லெட்சுமியும் ச்சீசீ என கூறி கொண்டே என் பின்னே ஓடி வந்தாள்.

--அந்த ஆளுக்கு எப்படி அங்க அவளோ முடி, எனக்கு வளருனு நினைக்குற, கண்ராவியா இருக்கும், ஆன முடி வளந்தாதா நா பெரிய பையன் ஆவன்-- என யோசித்தி கொண்டை வீட்டிற்கு சென்றேன்.

பருவம்

தொலைகாட்சி ஒலியை நன்றாக குறைத்து விட்டு பார்வையை வேறெங்கும் விலக்காமல், உற்று நோக்கி கொண்டிருந்தேன். வீட்டில யாரும் இல்லாத போது சேனல் என் ஐம்பத்திரண்டு பார்ப்பதும், அதில் வரும் முத்தக் காட்சிகளை பள்ளி நண்பர்களுடன் மறுநாள் விலக்குவதில் ஒர் ஆர்வம் இருக்கும்.

அன்று அந்த சேனலில் ஒரு மெல்லிய ஆடை உடுத்திய கதாநாயகி ஒரு ஓவியம் வரையும் காதாநாயகன் முன் வந்து நிற்கிறாள்.. சற்று நேரத்தில் இருவரும் ஏதோ பேசிக்கொள்ள கதாநாயகி ஆடையை கழற்றி கீழே போட்டுவிட்டு (எனக்கு உடல் விரைத்து, நாடித்துடிப்பு அதிகமானது) அருகில் இருந்த சோபாவிற்கு சென்று படுத்து கொண்டாள். கதாநாகயன் அவள் படுத்திருந்த அழகை சரிசெய்து பின் அவளை வரைய ஆரம்பித்தான்.
நான் முதலில் திரையில் பார்த்த பெண் மார்பகம் அந்த கதாநாயகியோடதுதான். அதுவும் அந்த வெள்ளை காகிதத்தில் ஒவியமாகதான்.. காட்சிகள் கத்தறிப்பட்டதென தெரிந்து கொள்ள என்க்கு சில வருடங்கள் ஆகின. காகிதத்தில் இருந்தாலும் அந்த காட்சிகள் எனக்கு பிடித்திருந்தது. வலைவுகளும், வடிவங்களும், வட்டத்திற்குனுள் வைக்கப்பட்ட மத்திய கரும்புள்ளிகளும் என் இதயதுடிப்பை மேலும் அதிகமாக்கி விட்டடது... கதாநாயகன் அவள் கழுத்தில் இருந்த ஒரு டாலருக்கு பென்சிலால் அச்சடித்து கொண்டிருந்தான்.
தெருவில் எதோ சத்தம் கேட்க, சட்டென்று சேனலை மாற்றி ஒலியை அதிகப்படுத்தினேன்.

அம்மா வேகமாக உள்ளே வந்து -- அந்த தேங்காய்ல இருக்குற நாற பிச்சி எடுத்துட்டு வள்ளி ஆயா வீட்டுக்கு வா - - என வேகமா ஒரு பிளாஸ்டிக் குடத்தை எடுத்து கொண்டு வெளியே சென்றார்.

நானும் நாறை எடுத்து கொண்டு ஒடினேன். வள்ளி பாட்டி ரொம்ப நாளாகவே உடல்நிலை சரி இல்லாமல் படுத்தப்படுக்கையில் இருக்கிறார். அன்று அந்த பாட்டியை குளிப்பாட்டுவதற்கு ஒரு இரும்பு நாற்காலியை எடுத்து வெளியே போட்டு அதில் பாட்டியை தூக்கி கொண்டு வந்த இரண்டு ஆட்களும் பாட்டியை உட்கார வைத்தபின் உள்ளே சென்றனர். அம்மாவும் சில பக்கத்து வீட்டு அத்தைமார்களும் பாட்டி மேலே குடத்தில் இருந்த தண்ணீரை ஊற்றி பின் பாட்டி உடலில் சுற்றி இருந்த அழுக்கு புடவையை கயற்றினர். உடல் முழுவதும் சுருங்கி சுருங்கி, உடலில் சில காயங்களுடன் கழுத்திலிலும், பத்து பிள்ளைகளுக்கு பாலூட்டிய மார்களிலும் புண்கள் இருந்தது. எனக்கு உடல் முழுவதும் கூசி சிலிர்தது. பாட்டியை பார்க்க பாவமாக இருந்தது. பாட்டியின் தலையை நிமிர்த பாட்டி என் பக்கம் பார்த்து, அசைக்கமுடியாமல் இருந்த கைகளை கழ்டப்பட்டு தூக்கி, தொடையில் விலகி இருந்த அந்த அழுக்கு புடவையை இழுக்க முயற்சித்து கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் கெட்டியாக பிடித்து இழுத்து கொண்டிருந்தாள். பாதி நாரைத்தும் கருமையும் இருக்கும் முடிகளுக்கு இடையில் கைகளை வைத்து மறைத்து கொண்டாள்.

நான் அங்கு நிற்கவா இல்லை வேண்டாமா என எனக்கு கேள்வியுடனும், ஒரு அனுதாபத்துடனும் கைகளில் நாறுடன் குடத்தை தூக்கி அம்மாவிடம் கொடுத்தேன்.
- - நீ போடா கண்ணு - - என சங்கீதா அத்தை கையில் இருந்த நாறை வாங்கி கொண்டாள்.
- - இந்த கிழவிக்கு இருபது வயசு நெனப்பு - - என அங்கு இருந்தவர்கள் சிரித்து கொண்டே நாறை பாட்டியின் முதுகில் தேய்த்தனர்...

பாட்டியை குளிக்க வைத்த நிலை, என்னை சோகமாகவே சில மணி நேரங்கள் வைத்திருந்தது..
அன்று இரவு புத்தகங்களைப் புரட்டி கொண்டிருந்தேன். இன்னும் இரண்டு நாட்களிலில் எட்டாம் வகுப்பு முழுதேர்வு தொடங்க போகிறது. கணக்கு போட்டு பார்பதற்கு ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்ததும் இடுப்பு வலைவுகளும், பென்சிலில் தீட்டப்பட்ட மய்யக் கரும்புள்ளிகளும் ஞாபகம் வந்நது. இருபது என எழுதி சுழியத்தின் மையத்தில் ஒரு புள்ளியை வைத்தேன்.
சீசீ... இப்படி செய்யக்கூடாது என எனக்குள் ஒரு குரல் கேட்க, பரவாயில்லை என இன்னும் ஒரு குரல் கேட்கிறது.
அந்த இரண்டு குரல்களும் என் வாழ்நாள் முழுவதும் கேட்கும் என நினைக்கிறேன்.

நிர்வாணம் - அழகியல்

உடலில் வியர்வை துளிகள், வழிந்தோடிக் கொண்டிருக்க வியர்வை சுவாசத்தை நுகர்ந்த படியே அலமாரியில் இருந்த கண்ணாடியை எடுத்து வயிற்று பகுதியை அழுத்தி கொண்டிருந்தேன். அருகில் நின்று கொண்டிருந்த வினோத் கண்ணாடியை பிடிங்கி அவன் மீசையை முறுக்கி கொண்டே,
- - எஏன்டா இரண்டு வாரம் வொர்கவுட் பண்ணா சிக்ஸ் பேக் வந்துடிமா - - என கண்ணாடியை பார்த்தபடியே நக்கல் சிரிப்புடன் என்னிடம் கேட்டான்.
--அதுலா சிக்கரம் உன்ன விட செமயா வக்க போற பாரு - - என வினோத் வயிற்றில் ( வொர்கவுட் செய்து கல்லு மாதிரி இருக்கும், வயற்றில் வியர்வை துளிகள் திட்டு திட்டாக பிசு பிசுத்திருந்தது.) ஒரு பஞ்ச் விட்டேன்.

வினோத் கண்ணாடியை அலமாரியில் வைத்து விட்டு கையை மடக்கி ஆம்ஸை காட்டி, வலது கை நடுவிரலை உயர்த்தி காட்டி விட்டு அறைக்கு வெளியே வராண்டாவில் ஓடி விட்டான். துரத்தி கொண்டே நானும் செல்ல சத்தம் கேட்டு, ஹாஸ்டல் வார்டன் கிழே இருக்கும் அறையில் இருந்து வெளியே வந்தார்--டய் ஸகென்ட் இயர், ப்ஃலோர் ல யார்டா ஓடுறது, நைட் ஃபுல்லா க்கேட்டுக்கு வெளியதா நிக்கனும்..... --
நானும் வினோத்தும் தடுப்பு சுவரில் ஒளித்த படியே, குனிந்து சென்று அறைக்கு உள்ளே நுழைந்து ஒளிந்து கொண்டோம்.

சில குறும்புத்தனம் கொண்ட சண்டைகள், தேர்விற்கு முதல் நாள் மட்டுமே படிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் என கல்லூரி வாழ்க்கை எப்படியோ முடிந்து விட்டது. நான்கு ஆண்டுகளில் சமுக சிந்தனைகளையும்,
ஆண், பெண் இடையில் ஏற்படும் நட்பு ரீதியான உணர்வுகள் பற்றிய சிந்தனைகள், இவை யாவும் என்னை ஒரு புது மனிதனாகவே கல்லூரியை விட்டு வெளியே அனுப்பியது.

இருந்தும், இந்த மனதிற்கும் உடலுக்கும் எதிர்பால் நிர்வாண உடலில் இருக்கும் ஆர்வம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.
வினோத்திடம் சவால் விட்டது மட்டும் என்றுமே நிறைவேறவில்லை. அடிக்கடி கண்ணாடி முன் நின்று வயிறு தொப்பையாவது விழாமல் இருக்கிறதே, என சந்தோழப் பட்டு கொள்வேன். இரண்டு, மூன்று உள்ளுர் கம்பெனிகளில் வேலை செய்து பின் வெளிநாட்டிற்கு பறந்து செல்ல தயாராக இருந்தேன்.

--ஹலோ, விக்கி... கேக்குதா... - -
--ஹலோ... ஹலோ.. லேட்டா கேக்குதாடா.. - -
-- ஃபாரின் கால் அப்படிதான் டா.. கேட்கும்.. - -
--சரிடா... அடுத்தமாசம் எப்போ வர.. இங்க கல்யாண வேல லாஆ,,, நீயும் குமாரும் தா பாக்கனும்... சத்தியா உன்ன சீக்கிரம் நேர்ல பாக்கனுமா---
--ம்மம்ம்மம்....பதினேழாந்தேதி ஃபிளைட் ஏறுற....,, இங்க லீங் இல்லனு சொல்லிடானுங்க, அப்பறம் தம்பி கல்யாணம் னு பொய் சொல்லிருக்க, நீ என்ன பண்ற,, ஒரு பத்திரிக்கை அடிச்சி, உன் பேரு சத்தியா பேரு போட்டு, என் பேர அண்ணணு போட்டு, எனக்கு ஒரு மெயில் ஒன்னு அனுப்பி வை.... சரியாஆ.... - - -
--ஓகே.. வச்சிடவா... எனக்கும் காசு போது ஃபோனுல--

மூன்று வருடம் கழித்து சொந்த, ஊருக்கு திரும்ப போகிறேன்...


ஊருக்கு வந்து இறங்கியதும், காலையில் விரைவாக சென்றது, ஊர் ஏரிக்குதான்... போகும் வழியில், தெருவில் கமலா ஆயா மெலிந்த தேகத்துடன் தார்சாலையில் அமர்ந்து கண்களுக்கு மேலே கையை வைத்து, --யாரு ஆனந்தம் பையனா...--

இந்த கிழவி யாருனு ஞாபகம் இருக்கா?? நான் பிறந்த உடன் என்னை தூக்கி துனியை விலக்கி ஆம்பள புள்ளனு சந்தோழப்பட்ட பாட்டி...
பாட்டிக்கு முன்னை விட இப்போது காது இன்னும் இழுந்து கொண்டு கீழே தொங்குகிறது.. அவ்வளவு பெரிய தோட்டை போட்டு கொண்டு, கையில் ஒரு குச்சியுடன், எதர்க்கு இருக்கிறது என தெரியாமல் ஒரு மாராப்பு போட்டு கொண்டு, என்னை பார்த்து மீண்டும் சந்தோழுப் பட்டு கொண்டிருக்கிறது.
--ஆமா பாட்டி - - என பாட்டியை கடந்து சென்றேன்.

ஆற்றில் தண்ணீர் சீராக ஓடிக்கொண்டிருக்க, துண்டை மட்டும் கட்டி கொண்டு குளிப்பதில் இருக்கின்ற இன்பத்தை எப்படி சொல்வது... அப்படி குளித்தவர்களுகுகு மட்டுமே புரியக்கூடிய உணர்வு ரீதியான புரிதல் அல்லவா அது.... குளிரான நீரின் உள்ளே நின்று கொண்டு, துண்டை கயற்றி ஐந்து நிமிடம், சும்மாகவே தண்ணியில் நிற்க வேண்டும்.. துபாயில் சின்ன சின்ன பாத்ருமில் குளித்து குளிந்து சலித்துப் போனதுதான் மிச்சம்...

- - சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா-- இளையராஜா வரிகள் மனதில் ஓடிக்கொண்டிருக்க மீன்கள் என்னை இறையாக்க நினைத்து அங்காங்கே கடிக்க தொடங்கியது.... கொஞ்ச நேரம் நல்லாத இருக்கும்.....கால் நகங்களுக்கும் சதை பகுதிக்கும் இடையில் மீன் கடிக்க கடிக்க,, மாசாஜ் போல இருக்கும்...


பதினைந்து நாட்களில் விக்கி கல்யாணத்தை முடித்து விட்டு, மீண்டும் துபாயில் இரண்டு வருடங்கள் ஓடி ஓய்ந்து ஒருவழியாக என் கல்யாணத்தும் தயாராகினேன்...

கல்யாண ஆசையில், கனவுகள் சித்தரித்து காலங்கள் நகர்த்தி கல்யாண நாளும் வந்தது... இன்று முதலிரவு.....

காமம்,,, நிர்வாணம் இதுவரை திரையிலும் கனவுலகில் இருந்தது பொல இல்லை இது.. நிஜம் இது... உண்மை இது.... உண்மையாக இருந்தது, போலி எவ்வளவு பொய்மையானது என உணர்திய இரவு இது... சில தடுமாற்றவ்கள்... பல முத்த பறிமாற்றவ்கள்.... காமம் இருவரையும் நிர்வாணமாக்கியது... நிருவாணம் அவளை இன்னும் அழகாக்கியது..( நான் என் மனைவி பெயர்யை சொல்லவில்லை,, பெயர் தெரியாமலே இருக்கட்டுமே.) இந்த நிலையிலும் நான் பல மணி நேரம் அவள் கண்களை மட்டுமே பார்த்து கொண்டிருந்தேன்... அந்த பார்வை காமம் உடலில் மட்டும் இல்லை, என என்னை யோசிக்க வைத்தது.......

காமம், நிர்வாணம் வேறு வேறு தான்.. நிர்வாணத்திற்கு காமம் தேவையில்லை, காமத்திற்கு நிர்வாணம் ஓரளவு தேவைபடுகிறது என்றே சொல்லாம்...
இந்த சிந்தனை உடனே தோன்றியது அல்ல.. எங்கும் படித்ததும் அல்ல... சில நிகழ்வுகள் நடந்தேரியது.

இன்று என் மகள் என் கைகளை பிடித்து கொண்டு நடக்க பழகுகிறாள்,, நான் நடக்க சொல்லி கொடுக்க மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்று பவித்ரா முதல் பிறந்தநாள்.

ஒருவருடம் முன்பு இதே நாள் இவள் அம்மாவிற்கு, வயிற்றில் வலி எடுத்து கொள்ள, கத்திக் கொண்டு என் இரு கைகளையும் பிடித்துக் கொண்டே ஹாஸ்பிட்டல் பெட்டில் இருந்தாள்.. டாக்டர் என்னை போக சொல்ல அவள் கைகள் என்னை விடவே இல்லை,, அடைப்பட்ட என் கைகளை எடுக்கவும் எனக்கு மனமில்லாமல் அவள் கதறல்கள் என்னை வாட்டியது.. கண்களில் கண்ணீர்கள் கொட்டிக் கொண்டிருக்க --கொஞ்சம் பொருத்துக்கோ,, தயவு சென்சி -- என அவள் தலையை அழுத்தினேன்... (அன்று காமம் கண்டு என் கண்கள் இன்று இவளை கண்டு கதறுகிறது..)

--நீங்க கொஞ்சம் பிலிஸ் வெளிய போங்க - - டாக்டர் சொன்னதும்,,

--அவர் இருகட்டு - - என அவள் கத்தியது இன்னும் எனக்கு கேட்டு கொண்டே இருக்கிறது...

டாக்டர் அவள் உடுத்தி இருந்து உடையை வயிறு வரைக்கும் மேலே உயர்தி இரண்டு காலையும் மடக்கினார். - - சுக பிரசவம், எல்லாமே உன் கைலதா மா இருக்கு - -

நான் அவள் காலை பிடித்து கொண்டேன். மற்றோரு காலை வேறொரு நர்ஸ் பிடிக்க,, டாக்டர் அவள் உறுப்பிற்கு அருகில் கையை வைத்து கொண்டு அவளை அழுத்துமா என கத்தி கொண்டே இருந்தார்.. அவளுக்கு மற்றொரு நரஸ் உதவி செய்ய, வயிற்றில் கை வைத்து கொண்டாள்..
குழ்தை பிறப்பது எப்படி என கேள்வி பட்டிருக்கிறேன்... முதுகெலும்பு வலியை என்னால் உணர முடியாது இருந்தும் இவள் கால் உதர முயற்சிப்பது அவளுக்கு வலி எப்படி இருக்கும் என உணர்தினாள்.. ஒரு தடவை பெரிதாக கத்தி கொண்டே வயிற்றில் அழுத்தினாள்.....கதறினால்...கால்கள் படபடத்ததது...
-- அப்டிதா... புஸ்... சூப்பர்,, குழந்த தலை வருது,, அழுத்து,, அழுத்து-- என டாக்டர் கத்தினார்...
--அம்மா.. ஆஆஆஆஆஆ,, என்னங்க...முடியல,, அஆஆ.--

--இந்தாமா இன்னும் கொஞ்சம் தா,,, உனக்கு வலிக்கிற மாறிதா,, உன் புள்ளைக்கு இப்போ வலிக்கும் தல்லு.. - - -
டாக்டர் சொல்லி முடிப்பதற்குள் அவள், உயிரே போன மாறி கதறி வயிற்றை தள்ளினாள்...
--அவ்வளோதா,, குழந்த வந்துச்சி--டாகடர் குழந்தையை அருகில் இருந்த நர்ஸிடம் கொடுந்தார்.. குழந்தை கத்தி கொண்டிருந்தது..

இவள் மயங்கி விட்டாள். தொடையில் இருந்து வயறு வரை இரத்தக்கறை... டாக்டர் ஒரு நரம்பையும், ஒரு தையல் ஊசியையும் அவள் கால்களுக்கு இடையில் வயற்றிற்கு கிழே கொண்டு சென்றார்.
--டாக்டர்,, இது எதுக்கு சிஸேரியன் இல்லல... - - என்றேன்..

--அது தோள் கிழிச்சிருக்கு பா-- என கூறினார்.. டாக்டருக்கு என் அம்மா வயது இருக்கும். இந்த உறுப்பு கிழியும் என்பதை பொதுவாக யாரிடமும் அவ்வளவாக யாரும் வெளியே சொல்வதில்லை..

இவள் இன்னும் மயக்கதிலே இருக்கிறாள்... இவளை பார்த்து கொண்டே, குழந்தையை பார்க மறந்தேன்...

அறையில் ஓரத்தில் நர்ஸ் திரும்பி குழந்தையை துனியால் துடைத்து கொண்டுருந்தாள். நான் அவருக்கு அருகில் சென்று, பொண்ணா, பையனா?? என கேட்டதும்.. நரஸ் திரும்பி ஒரு வெள்ளை துனியில் குழந்தையை சுற்றி என் கைகளில் கொடுத்தாள். - - பாருங்க சார்--

எனோட குழந்தை, என் கைகளால் சரியாக பிடிக்க தெரியவில்லை.. பயத்துடன் பிடித்து, உடலில் இருந்த துனியை விலக்கினேன்.
--ஆஆ... பொண்ணு,, அதவும் அவ அம்மா மாறியே அந்த கண்ணு..... - -

குழந்தையை தூக்கிச் சென்று கட்டிலில் அவளருகில் வைத்தேன்...

--ஃபஸ்ட் பால் கட்டிறுக்கும்,, கொஞ்சம் கைலயே அழுத்தி அப்பறமா,, குழந்தைக்கு கொடு -- என சொல்லி டாக்டர் வெளியே சென்றார்...

இன்றோடு இவள் பிறந்து ஒரு வருடம்,..

--இந்த காமம், நிர்வாணம்,..இவை யாவும் வேறு வேறுதான்..
காமம் இங்கு காமம் மட்டுமே கொண்டிருக்கும்...

ஆனால் நிர்வாணம் இங்கு எவ்வளவோ பரிமாணங்கள் உடையது.... இது அழகில் சார்ந்தது, என் மனைவியிடம் கண்ட அழகியல்...

சந்தோஷ உணர்வுகளை கொண்டது, என்னை முதல் முறை தூக்கிய அந்த பாட்டி கண்ட உணர்வு, நான் என் மகளை தூக்கி, மகள் என கண்டு மகிழ்ந்தது... மனித உணர்வின் வெளிபாடு அன்று அந்த நிர்வாணம்..

நிர்வாணம் மானம், ஞானம், பயம் கொண்டது,, வள்ளி ஆயா என்னை பார்த்து பயந்தது... நிர்வாணம் பயம்...

நிர்வாணம் இயற்கை வரம்... நான் பல நாட்கள் ஏரியில் குளித்ததும்... இயற்கை என்னிடம் தன் அழகை காட்டி சென்றதும்.......


(எல்லாமே நிர்வாணம் தான்.. நாளை நான் இறக்கலாம், நிர்வாணமாக எறிந்து கரியாக போய் காற்றில் கரையலாம்.....)

நிர்வாணம் அழகியல்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...