JUNE 10th - JULY 10th
அறியாமை
’’முனியம்மா வேலையை முடிச்சிட்டு ரேஷன் கடைக்குப் போய்
சாமன்களை வாங்கி வந்து கொடுத்துடு ’’‘’முதலாளி அம்மா
லீலா சொல்ல
‘’ அம்மா குமரேசுக்கு சாப்பாடு பண்ணி வைத்துவிட்டு வந்திடறேன்
பத்துமணிக்கு வரேன் பணமும் பையும் வைங்க நான் வரேன் ‘’
முனியம்மாவின் முகத்தை ஒரு முறை பார்த்தால்போதும் மனதில்
நின்றுபோகும்
உயரமாய் ஒடிசலான தேகம் மஞ்சள் தோய்ந்த முகத்தில் நெற்றியில்
பளிச்சிடும் குங்குமம் காதில் வெள்ளைக்கல் கம்மல்கள் எண்ணெய்பட்டு
பழுப்பு ஏறியிருக்கும் கணுக்காலுக்கு மேலேதான் புடவைகட்டல் இதுதான்
முனியம்மா வேலையில் நேர்த்தி அனாவசியமா லீவு போட மாட்டாள்
இத்தனைக்கும் அவள் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவள்
மாரியை திருமணம் செய்த பின்புதான் தெரிந்தது அவன் யோக்கியதை
சம்பாதிக்கும் பணத்தில் பாதியை குடிக்கே செலவு செய்து விடுவான்
இவள் காதலால் இரண்டு வீட்டாரும் பகையாகிப் போனார்கள் இந்த
லட்சணத்தில் முனியம்மா வயிற்றில் கரு பிள்ளைத்தாய்ச்சி என்றுகூ
பாராமல் குடித்துவிட்டு வந்து அடித்து நொறுக்குவான் மாரி ?
தனக்கு இல்லாவிட்டாலும் தன் வயிற்றுக் குழந்தையை பட்டினி
போட விரும்பாமல் லீலா வீட்டுக்கு வேலைக்குப் போனாள்
லீலாவின் கணவர் ஒரு வக்கீல் அவர்கூட மாரிக்கு புத்திமதி கூறினார்
என்னென்னவோ சொல்லிப்பார்த்தும் அடங்காமல் குடித்து குடித்தே
ஒரு நாள் மண்டையைப் போட்டான் தானே தேடிக்கொண்டவினை
யாரிடம் முறையிட முடியும் பிறந்த பிள்ளையையும்
தூக்கிகொண்டு போய்த்தான் வேலை பார்த்தாள் குமரேசு மட்டும்
இல்லையென்றால் அவளும் செத்துப் போயிருப்பாள் இப்பொழுது
அவளின் பிடிப்பு மகன் மட்டும்தான் மகனின் நல்வாழ்க்கையை
முன்னிட்டு முதலாளி வீட்டு வேலை முடிந்ததும் கடைகளில்
கூட்டுவது மளிகை சாமான்களுக்குப் பை போடுவது என்று கூடுதலாக
உழைத்தாள்
குமரேசு பள்ளிக்கூடம் போக ஆரம்பித்ததும் தன் சேமிப்பை அதிகப்படுத்தினாள்
பய பஞ்சம் பத்து வருசம்னு சொல்வாங்க அவளும் அப்படித்தான்
தன் கஷ்டம் தீரும்னு நம்பினாள்
பஞ்சம் தெரியாமல் அவனை வளர்த்தாள் தாயின் அன்பில் அவன்
திளைத்துக் கிடந்தான்
‘’ உன்னை நினச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு முனியம்மா ’’
முதலாளி அம்மா சொல்ல
‘’ஏம்மா அப்படிச் சொல்றீங்க ?’’
‘’உன்னுடைய கஷ்டத்தை பிள்ளைக்குக் காட்டாம அவனை
வசதியான பிள்ளைபோல வளர்க்கிறே நீ பழையதை தின்னுட்டு மகனுக்கு
இட்டிலியும் ஹார்லிக்ஸும் கொடுக்கிறே அதையெல்லாம் அவன்
உணரணுமே’’
‘’ அவன் வேலைக்குப் போயிட்டா போதும்மா தெம்பா இருந்தாதானே
உழைக்க முடியும் ‘’
ஒரு நாள்
குமரேசு பள்ளிக்குப் போகாம படுத்திருந்தான்
பதறிப்போனாள் முனியம்மா ‘’என்னய்யா படுத்திருக்கே உடம்புக்கு
சுகமில்லையா “ என்று கேட்டபடியே அவன் நெற்றியிலும் முகத்திலும்
கைவைத்துப் பார்த்தாள் டாக்டரிடம் போவோமா
‘’அதெல்லாம் ஒண்ணுமில்லைஆத்தா எனக்கு படிக்கவே போரடிக்குது”
‘’என்னய்யா சொல்றே படிக்காம யார் வேலை கொடுப்பா ?’’அதிர்ந்துபோய்
கேட்டாள்
’’அட என்னஆத்தா நீ?? படிச்சாதானா? நீ என்ன படிச்சிருக்கே இப்ப
சம்பாதிக்கலே ‘’
‘’அப்போ நீயும் வீட்டு வேலைக்குப் போறேங்கிறியா ?
’’ இல்லஆத்தா குருசாமி கடையிலே என்னை சேர்த்துவிடு அங்கே
வேலை கத்துகிட்டு அப்புறம் தனியா மெக்கானிக் ஷாப் வச்சிடலாம்
இப்பவெல்லாம் படிச்சவனை விட கடை வச்சிருக்கவங்கதான்
நல்லா சம்பாதிக்கிறாங்க ஆத்தா ‘’
அவளும் பிள்ளைக்கு நல்ல புத்தி சொல்லிப்பார்த்தாள் அவன்
கேட்பதாயில்லை வேறு வழியின்றி குருசாமி கடையில் கார் சைக்கிள்
பஞ்சர் ஒட்டும் வேலைக்குப்போய்ச் சேர்ந்தான்
ஏதோ முனியம்மாவிற்காக தினம் இருபது ரூபாய் கொடுப்பான் குருசாமி
’’ என்னண்ணே ஏதாவது தேறுவானா குமரேசு “ என்று ரக்சியமா கேட்பாள்
‘’ எத்தனை தடவை சொன்னாலும் புரியலே பத்துக்கு பனிரெண்டு ரிங்கை
எடுன்னு சொன்னா தெரியலே ஆயிளை பிடின்னு சொன்னாலும்
தெரியலே உன் முகத்துக்காக வச்சிருக்கேன் பாவம் நீ அவனை
வச்சு கனவு கண்டுகிட்டு இருக்கே என்னசெய்யறது எண்ணெயை
வைக்கலாம் எழுத்தை யார் மாற்றமுடியும் ‘’
‘’கொஞ்சம் பொ$றுமையா சொல்லிக்கொடுங்க இதையாவது முழுசா
கத்துக்கட்டும் வேறென்ன செய்ய முடியும் நீங்கதான் ’’
நாட்கள் ஓடின வயதும் ஓடியது
குருசாமி முனியம்மாவிடம் சொன்னார் ’’ என் கடை பைன்களை
ஒரு மாசம் பயிற்சிக்காக சென்னை அனுப்ப்போறேன் அதுக்கு
ஆயிரம் ரூபாய் ஆகும் சாப்பாடு தங்கிற செலவெல்லாம் நான்
பாத்துக்கிறேன் உனக்கு பிள்ளையை பிரிஞ்சிருக்க முடியும்னா
சொல்லு அங்கே போயாவது கத்துக்கிறானா பார்ப்போம் என்ன சொல்றே”
முனியம்மா முதலாளி அம்மாவிடம் சொல்லி யோசனை கேட்க
லீலாவின் கணவரும் அது நல்ல யோசனைதான் ஒரு முயற்சி
பண்ணிப் பார்க்கலாம் பணத்தைப் பத்தி கவலைப்படாதே நான்
தருகிறேன்’’ சொன்னதுடன் அல்லாமல் பணமும் கொடுத்தனர்
ஊரில் உள்ள கோவிலில் எல்லாம் வேண்டிக்கொண்டு குமரேசுவை
அனுப்பி வத்தாள்
இரண்டு நாள் ஆனதுமே பிள்ளைப்பாசம் அவளை பாடாய் படுத்தியது
மனதை அடக்கிக் கொண்டு இருந்தாள்
பயிற்சி முடிந்து அவன் வருகிறான் என்றதும் கையும் ஓடவில்லை காலும்
ஓடவில்லை அவனுக்குப் பிடித்ததை எல்லாம் செய்ய வேண்டும் என
நினைத்துக் கொண்டாள் மனம் ஒரே பரபரப்பாய் இருந்தது
விடியற்காலையில் வேலிப்படலைத்திறக்கும் சத்தம் கேட்டு
விழித்த முனியம்மா ஓடோடி வந்தாள் பிள்ளையை வரவேற்க
வந்தவள் திடுக்கிட்டாள் குமரேசு கூட ஒரு இளம் பெண் சண்டைபோட்டபடி
நின்றிருக்க முனியம்மா
பட படப்பானாள் பார்க்க வசதியான வீட்டுப்பெண்ணாக இருந்தாள்
படித்தப் பெண்ணாகவும் இருந்தாள் மலங்க மலங்க விழித்தபடி நின்றாள்
‘’ஏய் இது யாருடா ?’’
‘’உள்ளே வாஆத்தா சொல்றேன் வா விஜி ‘ என்று அவளையும்
கூப்பிட்டான்
‘மாட மாளிகையில் வளர்ந்தவள் குடிசையைப் பார்த்ததும் மிரண்டாள்
குனிந்து போகத்தெரியாமல் கூரையில் இடித்துக் கொண்டாள்
ஓ இவன் வேலை கத்துகீட்டானோ இல்லையோ இந்த பெண்ணை
கவுத்துட்டான் அப்பனைப் போல் பிள்ளை யார் வீட்டுப்
பெண்ணோ இதனாலே என்ன வில்லங்கம் வருமோ ? இதை வளரவிடக்
கூடாது இவன் பிடிவாதக்காரன் இவளை என்னென்ன சொல்லி
ஏமாற்றி அழைத்து வந்தானோ வயதும் பதினெட்டுக்கூட ஆகவில்லை
அதற்குள் காதல் கசுமாலம்னு சே மனசு பதறியது
’’பாவம்டா ஃபான் இல்லாம அவளால் தூங்கமுடியுமா அதோட
அக்கம் பக்கம் இருக்கிறவங்க பார்த்தா தப்பாப் போயிடும் அதனால
நம்ம முதலளி வீட்டிலே இருக்கட்டும் வக்கீல் அய்யாவிடம் சொல்லி
மற்றதை நாம பேசிக்கலாம் நீ படு நான் விடியறதுக்குள்ளே
அங்க கொண்டுபோய் விட்டுட்டு வரேன் காலையில் பேசிக்கலாம்
நீ தூங்கு நான் காலையில் வரேன் ‘’
பாவி மகனே இப்படியொரு காரியம் பண்ணிவச்சுட்டானே மனசுக்குள்
புலம்பியபடியே “’ஏம்மா நீ படிச்சவள்தானே பெற்றவங்களை விட்டுட்டு
இவன் பேச்சை கேட்டுட்டு வந்திருக்கியே இவனைப்பத்தி உனக்கு
என்னத்தெரியும் சொல்லு நான் நாலுவீடு பத்துதேச்சு காலம் தள்ளுறேன்
அவன் செலவுக்கே நான் கொடுக்கணும் உன்னை வச்சு சமாளிக்க
முடியுமா அவனால் நீ பேசாம உங்க வீட்டுப்போயிடு ‘’
‘’அது முடியாது தெரியாம ஓடி வந்ததாலே எங்க வீட்டிலே சேர்த்துக்க
மாட்டாங்க ‘’
‘’தெரியுதுல்ல அவன் பேச்சை கேட்டு ஏன் ஓடி வந்தே ’’
‘ உண்மையை சொல்லு உங்களுக்குள்ளே ஒண்ணும் நடக்கலையே “’
‘ இல்லம்மா அவர்தான் கம்பெனியிலே வேலை பார்க்கிறதாகவும்
மாடிவீடு இருக்குன்னும் சொன்னாரு ‘’
‘’ஆம்பிளை அப்படித்தான் சொல்லுவாங்க படிச்ச நீ என்ன
சொல்லியிருக்கணும் உங்க அப்பா அம்மாவை கூப்பிட்டு வந்து பொண்ணு
கேளுன்னு சொல்லியிருக்கணும் அதை விட்டுட்டு எதுவுமே தெரியாம
கூப்பிட்டதும் ஓடி வந்துடறதா “ இது தப்பில்லையா ?
‘’ சரி இப்ப நாம ஸ்டேஷனுக்குத்தான் போறோம்’’ காலை ஆறு மணிக்கு
ரயில் இருக்கு அதுலே போவோம் உங்க வீட்டுக்கு ‘’
‘’இல்லே என்னை அடிப்பாங்க நான் வரலே ‘’
‘’ அதை நான் பார்த்துக்கிறேன் இவனால நீ சுகப்பட முடியாது
நான் இவன் அப்பன் கிட்ட மாட்டி அவஸ்தைபட்ட்துமாதிரி உன்னை
விடமுடியாது எனக்கும் தெம்பு இல்லே உன்னை சவுரியமா
வச்சுக்கிற அளவு நீ வாயை மூடிக்கிட்டு வா நான் சமாதானம் பண்ணி
அங்கே விட்டுவரேன் நீ அப்பா அம்மா சொல்ற பையனை கல்யாணம்
பண்ணிகிட்டு நல்லா வாழணும் மகளா நினைச்சு சொல்றேன் கேளு’’
விஜி சொன்ன அடையாளத்தில் வீட்டை அடைந்தனர்
விஜியைக் கண்டதும் ஓடிவந்தனர் பெற்றோர்
‘’’ அடிப்பாவி யாரோட ஓடினே இப்ப எதுக்கு இங்கே வந்தே
“”குறுக்கிட்டாள்
முனியம்மா
‘’ஐயா பொறுமை உங்க பொண்னு தன்னால ஓடலை யாரோ ஒருத்தன்
ஏமாற்றி அழைச்சுக்கிட்டுப் போறதைப் பார்த்து சந்தேகப்பட்டு பின்னாலப்
போய் மிரட்ட அவன் பயந்து போயிட்டான் அவனோட சண்டை போட்டு
பெண்ணை மீட்டுட்டு வந்திருக்கேன் பாவம் இது பயந்து போயிருக்கு
இது மேல தப்பில்லே அவன் தான் போக்கிரி நல்ல வேளை நான்
பார்த்தேன் இல்லேன்னா அவன் இந்த பெண்ணை நினைக்கவே
பயமாயிருக்கு உங்க பெண்ணை பத்திரமா பார்த்துக்குங்க
’’ நீயாரம்மா “விஜியின் பெற்றோர்கள் கேட்டனர்
‘’ நான் ஸ்டேஷனில் கூட்டுறவள் ‘’ பொய்சொன்னாள் முதன் முறையாக
முனியம்மா
தன் பிள்ளையுடன் போனாள் என்று தெரிந்தால் பெண்ணை
சந்தேகப்படுவார்கள் என்ன ஆச்சோ வென்று சமயோசிதமாய் சொல்லி
அன்று மாலையே ஊர் திரும்பினாள் முனியம்மா
விஜி எதுவும் சொல்ல முடியாமல் அந்த தாயின் அன்பில் நெகிழ்ந்தாள்
முனியம்மா அவள் மனதில் உயர்ந்து நின்றாள்
குமரேசு முதன் முறையாக முனியம்மாளிடம் கோபம் கொண்டான்
’’ஏன் ஆத்தா இப்படி செஞ்சே உனக்கு என்மேல உள்ள அன்பு
இவ்வளவுதானா
’’ உன்மேல உள்ள அன்பினாலேதாண்டா இப்படி செஞ்சேன் நான்
மேஜர் ஆகாத பெண்ணை ஏமாத்தி கூட்டிட்டு வந்தது தெரிஞ்சா
உன்னை ஜெயிலிலேதான் போடுவாங்க நல்ல வேளை ஊருக்குத்
தெரியாம முதலாளி அம்மாவுக்கும் தெரியாம கொண்டவிட்டுட்டேன்
காசில்லாவிட்டாலும் மானத்தோடு வாழ நினைச்சா நீ என்னை
உயிரோட சாகடிச்சிடுவே போலேயிருக்கே வேண்டாண்டா
’’போய் வேலையைப்பாரு போ’ சம்பாதிக்க ஆர்ம்பிச்சதும் நமக்குத்
தகுந்தார்போல் உனக்கு பொண்ணு பார்த்து நான் கட்டிவைக்கிறேன்
இந்த காதல் கசுமால்மெல்லாம் கவைக்குக்கு உதவாது என் பேச்சை
கேட்கமாட்டேன்ன்னு சொன்னா இப்பவே எங்காவதுப் போய்த் தொலை
நானும் கிணத்திலே விழுந்து சாகிறேன் கண்களில் நீர் தளும்ப
பேசியதைக் கேட்டதும் குமரேசு ஓடிவந்து காலில் விழுந்தான்
என்னைய மன்னிச்சுரு ஆத்தா இனிமே உன்பேச்சைக்கேட்டு நடப்பேன்
காலம் மாறினாளும் இந்த பொம்பளைப் பிள்ளைங்க் படிச்சிருந்தாலும்
ஆண்களோட பேச்சிலே மயங்கீ எதையுமே கேட்காம ஏமாந்து போற
அறியாமை மட்டும் இன்னும் நீங்களையே இது பெண்ணோட சாபக்கேடோ?
தான் காட்டிய அதீத அன்பே அவனை ஆபத்தில் தள்ளப் பார்த்ததே
சரஸ்வதிராசேந்திரன்
49 A ஆதினாயக்கன் பாளையம்
மன்னார் குடி
614001
Cell 9445789388
#309
42,033
1,200
: 40,833
24
5 (24 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
praveen88
kariya123
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50