காலம் கடந்துவிட்டது

கற்பனை
5 out of 5 (10 )

ஒரு பரபரப்பான காலை பொழுதில், தன்னை தானே பள்ளிக்கு தயார் படுத்தி கொண்டு இருந்த ராமு உற்சாகம் இல்லாமல் காண பட்டான் . ராமுவின் தந்தை மோகன். அவன் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி கொண்டு இருந்தான். பல பண நெருக்கடி இடையிலும் அவனால் குடியை நிறுத்த முடியவில்லை. அன்று காலை சிற்றுண்டியை தயார் செய்து கொண்டு இருந்த தன் தந்தையிடம் ராமு அப்பா! அப்பா! எத்தனை நாளா உங்க கிட்ட பாட புத்தகம் வாங்கி தர சொல்லி கேக்குறேன். இன்றாவது வாங்கி தருவீங்களா நாளைக்கு பள்ளிக்கு கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்? என ஏக்கத்துடன் கேட்டான். ஆனால் மோகனோ வச்சி கிட்டேவா தர மாட்டிங்கிறேன் என சிடு சிடுத்தான். தயவு செய்து வாங்கி தாங்க அப்பா யென்று ராமு கேட்டான். அப்பாவிடம் இப்போதைக்கு காசு இல்லை வரும் பொது பார்க்கலாம் யென்று மோகன் கூறினான். உடனே ராமு அப்போ உங்களுக்கு குடிக்க மட்டும் எங்கு இருந்து தினமும் காசு வருது என்று அழுது கொண்டு கேட்கவே. அவன் தந்தையின் கோவம் மிகவும் அதிகமானது. கோபத்தில் அவனை அறைந்தவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். இது ஒன்றும் ராமுவுக்கு புதிதல்ல. தன் தாய் இருக்கும் போதும் இவ்வாறு நடப்பது வழக்கமே!

தொழிற்சாலையில் தன் வேலையை முடித்து விட்ட மோகன், ராமுவிற்கு அவன் கேட்ட பாட புத்தகம் வாங்க கடைக்கு சென்றான். புத்தகத்தின் விலை என்ன வென்று கடைகாரரிடம் கேட்டான். கடைக்காரர் விலை இருநூறு என்றார். தன் கையில் இருந்த பணத்தை எண்ணியவன். தான் குடிப்பதற்கு தேவையான பணத்தை ஒதுக்கி விட்டு மீதம் இருப்பதை எண்ணி கொண்டு இருந்தான். ஆனால் அந்த பணம் போதுமானதாக இல்லை. அவனுக்கு குடிக்க வைத்து இருந்த பணத்தை எடுக்க மனமில்லை. கடைக்காரரிடம் இருக்கட்டும் அப்புறம் வந்து வாங்கி கொள்கிறேன் யென்று சொல்லி கடையை விட்டு வெளியேறி மதுபான கடையை நோக்கி சென்றான்.

இரவில் மதுபான கடையில் இருந்த மோகனின் மனதில் ஏனோ மீண்டும் மீண்டும் ராமுவின் நினைவு வர காலையில் அவனிடம் கடுமையாக நடந்ததையும் பின்பு புத்தக கடையில் தான் நடந்து கொண்ட விதத்தையும் எண்ணி வருந்தினான். தாய்யில்லாத அவனை தான் சரியாக கவனித்து கொள்வதில்லை என்பது அவனுக்கு புரிந்தது. ராமு கூறியதிலும் தவறு ஏதும் இல்லையே. தான் தன் சுயநலத்துக்காக வாழ்வதாக எண்ணினான். அவன் தாய் அவனுடன் இருந்தால் அவனை இவ்வாறு ஏங்க விட்டு இருக்க மாட்டாள். ராமுவின் தாய் உடல் நலக்குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாள். இனியாவது அவனுக்காக நாம் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைத்தான். இன்றாவது வீட்டுக்கு செல்லும் பொது ராமு கேட்டதை வாங்கி செல்ல வேண்டும் யென நினைத்தான். இது குறித்து எண்ணுவதே அவனுக்கு வாடிக்கையாகி விட்டது. ஆனால் அவர் குடியை விட்ட பாடில்லை. ஆனால் இன்று ஏனோ என்றும் இல்லாத மோகனை போல் புத்தகத்துக்கு தேவையான பணத்தை முதலில் எடுத்து விட்டு பின்பு குடிப்பதற்கு தொடங்கினான். தனக்குள் நிகழ்ந்த மாற்றம் நிலையானதாக இருக்க வேண்டும் யென்று எண்ணினான்.

மறுநாள் பொழுது புலர்ந்த பிறகு தான் மோகன் இன்றும் மதுபான கடையில் இருப்பதை உணர்ந்தான். உடனே தன் மகனை பற்றி நினைவு வர வீட்டுக்கு விரைய பேருந்து நிலையம் சென்று பேருந்துக்காக காத்திருந்தான். இன்று அவனுக்கு நாம் வைத்திருக்கும் பணத்தை வைத்து புத்தகம் வாங்கி கொடுத்து தான் தொழிற்சாலைக்கு செல்ல வேண்டும் யென முடிவு எடுத்தான். காத்து கொண்டு இருந்த அவன் சாலையில் இருவர் மது போதையில் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் ரத்தம் வரும் வரை காயபடுத்தி கொள்வதை பார்த்தான். அவர்களை விலக்கி விட எண்ணி எழுந்தான். உடனே அவன் அருகில் இருந்த நபர் அவர்கள் குடிகாரர்கள் இவ்வாறு தான் கடுமையாக நடந்து கொள்வார்கள் என்று கூறியவர் இவனை முறைத்து பார்த்தார். இவனையும் யாராவது இவ்வாறு கூறியிருக்க கூடும் மென அவனுக்கு தோன்றியது. அதனால் சிறிது நேரம் அமைதியில் உறைந்தான் .பிறகு அவரிடம் பேருந்து வர எவ்வளவு நேரம் ஆகும் யென கேட்டான். அதற்கு இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும் என்று அவர் கூறினார். அவரை எங்கயோ பார்த்தது போல மோகனுக்கு தோன்றவே நாம் இதற்கு முன் சந்தித்துள்ளோமா? என்று கேட்க, இதை கேட்ட அவர் ஆம் நாம் தினமும் சந்தித்து கொண்டு தான் இருக்கின்றோம் என்று கூற, மோகன் அப்படி என்றால் எனக்கு ஏன் ஏதும் நினைவில்லையே! என்று கேட்க, நான் உங்களை மதுபான கடையில் அடிக்கடி பார்த்து இருக்கிறேன். நீங்கள் என்னை சரியாக பார்க்காமல் போதையில் இருந்து இருக்கலாம் என்று அவர் கூறி அமைதி ஆனார், அப்படியென்றால் நீங்களும் குடிப்பீர்களா? யென்று மோகன் கேட்க, மௌனத்தை களைத்த அவர் ஆம் யென்று ஒரு வரியில் பதில் அளித்தார். இந்த பதில் மோகனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் என்னை போல் தான் இருப்பார்கள் போலும்! யென்று தன் மனதிற்குள் எண்ணி கொண்டான். சிறிது நேர உரையாடலுக்கு பிறகு மோகன் குடிப்பதை தான் மகனுக்காக நிறுத்த நினைத்து இருப்பதை அவரிடம் கூறவே உடனே ஒரு வெறுப்பு கலந்த சிரிப்பை உதிர்த்த அவர் அது உன்னால் ஒரு போதும் முடியாது என்று கூறினார். இதை கேட்ட மோகனுக்கு கோபம் வந்தது. நானும் பலமுறை இப்படி முயன்று முடியாமல் போனது ஆனால் இந்த முறை நிச்சயமாக முயற்சி செய்ய போகிறேன் என்று கூறியவனை சற்று நேரம் உற்று நோக்கிய அவர் இனிமேல் உன்னால் முடியவே முடியாது யென தீர்க்கமாக கூறினார். கோபம் தலைக்கேறிய மோகன் என்னாய்யா நானே முயற்சி எடுக்கணும் ஒரு முடிவு கஷ்டப்பட்டு எடுத்து இருக்கேன் என்று கூறியவாறே அவர் சட்டையை பிடித்தவன் அதிர்ந்து போனான். ஏனெனில் மோகனால் அவரை பிடிக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து அதிர்ந்த மோகன் அவரிடம் யார் நீ பேயா? யென வினவ நான் பேய்யென்றால் நீ யார்? யென்று பதிலுக்கு அவர் வினவ அதிர்ந்து போன மோகன் என்ன கூற வருகிறீர்கள் என்று கேட்க அவர் தன் கைகளை எதிரே கோபத்துடன் சுட்டி காட்டினார். மோகன் பார்த்த இடத்தில ஒரு பேருந்து நின்று கொண்டு இருந்தது. மீண்டும் அவரை நோக்கினான். அவர் மீண்டும் கைகளை அந்த எதிர் புறமே காண்பித்தார். பேருந்து இப்போது கிளம்பியது. மோகன் தான் கண்ட காட்சிகளை நம்ப முடியவில்லை. மோகனின் கண்களில் நீர் வடிய தொடங்கியது. அங்கே அவர்கள் இருவரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. அவர் மோகனிடம் இப்போது உங்களிடம் ஏன் முடியவே முடியாது என்று கூறினேன் யென புரிகிறதா? காலம் கடந்து விட்டது என்று கூறி மறைந்தார். அந்த நபர் மறைந்த பிறகு மோகனுக்கு தனக்கு என்ன நேர்ந்தது என்பது நினைவுக்கு வந்தது. நேற்றைய தினம் மதுபான கடையில் குடித்து வெளிய வரும் பொழுது. இந்த நபரும் என் அருகே நின்று கொண்டு இருந்தார். தன் வாகனத்தை ஓட்ட முயற்சி செய்து கொண்டு இருந்தார். ஆனால் அவர் மிகுந்த போதையில் இருந்ததால் சரிவாரு அவரால் வாகனத்தை இயக்க முடியவில்லை. நான் தான் அவரையும் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு விடுவதாய் கூறிய பிறகு இருவரும் நடக்க தொடங்கினர். எதிர் பாரத விதமாக இவ்விருவர்க்கான உரையாடல் வாக்குவாதமாய் மாறியது. கோவத்தில் ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளவே எதிரே வந்த வாகனத்தை போதையில் கவனிக்காமல் சென்றதால் இருவரும் வாகனத்தின் மீது மோதியதில் உயிர் பிரிந்தது. தாயும் தந்தையும் இல்லாமல் தன் மகன் ராமு எப்படி வாழப்போகிறான் யென வருந்தியவாறே மோகன் காற்றில் கரைந்தார்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...