JUNE 10th - JULY 10th
அன்று காலை 6 மணி இருக்கும்.
சீனியின் அப்பா எழுந்து வாக்கிங் போறேன் அப்டியே பால் பாக்கட் வாங்கிட்டு வரேன் என்றார்.
சீனியின் அம்மா: சரிங்க வரும் பொது வடை வாங்கிட்டு வாங்க.
சீனியின் அப்பா: சரி மா வாங்கிட்டு வரேன் என்றார்.
சிறிது நேரம் பிறகு சீனியின் அம்மா சீனியை எழுப்பினர்.
சீனியின்அம்மா: டேய் சீனி எந்திரி டா மணி 7 ஆவுது வேலைக்கு தான் போகல சரி வீட்டுல இருக்குற சின்ன சின்ன வேலையாவது பாக்கலாம்ல. சீனி எழுந்து ஏன்மா காலைல திட்டுற .
சீனி அம்மா: சீனியை பார்த்து டேய் சீனி உன்ன பார்த்து எனக்கு பயமா இருக்கு ஏன்டா இப்படி இருக்க.
சீனி: உடனே சரி மா உனக்கு என்ன வேணும் நா எந்திச்சி பால் வாங்கிட்டு வரேன் என்றான்.
சீனி அம்மா: டேய் காலைல அப்பா பால் வாங்க பொயிட்டாரு.
சீனி : அப்போ ஏன் கத்துற மா .
சீனி அம்மா: என் கவலையெல்லாம் உனக்கு எப்போ பொறுப்பு வந்து நீ வேலைக்கு போவான் தான்.
சீனி: என்ன மா பண்ண எந்த வேலைக்கு போனாலும் புடிக்கல வேலை புடிச்சாலும் குட மேனஜர் வேலை பாக்குறவங்க சரி இல்ல நா என்ன பண்ண.
சீனிஅம்மா: எல்லாருக்கும் அப்டி தான் இருக்கும் அத சமாளிச்சு தான் அவனும்.
சீனி: உங்களுக்கு என்ன தெரியும் என்னோட வலி.
சீனி அம்மா: உனக்கு ஏன்னா டா கஷ்டம் இந்த வயசுல பொய் குளிச்சிட்டு கோவில் போயிடு சீக்கிரம் வேலைக்கு எதாவது ரெடி பண்ணு.
சீனி:சரி.
சீனி அப்பா வீட்டுக்குள்ள நுழைத்தார்.
சீனி அப்பா: ஏன்டா தம்பி இப்படி இருக்க.
சீனி: என்ன பா காலைல ஆரம்பிச்சுட்டீங்களா
அம்மா இப்போ அட்வைஸ் பண்ணாக இப்போ நீங்களுமா.
சீனி அப்பா: சரி பா உன்ன எதுவும் சொல்லல நீ போ பா என்று சொல்லியபடி டிவி ரிமோட்டை தூக்கி போட்டு உடைத்தார்.
சீனி: கோபத்துடன் மாடிக்கு சென்றான்
சிறுது நேரம் கழித்து சீனி கீழே வந்தான்.
அம்மா அவனை பார்த்து டேய் சீனி சாயங்காலம் ஒரு நிச்சயதார்தம் வீடு நானும் உன் அப்பாவும் போயிடு வரோம் டா வர லேட் ஆவும் கதவ லாக் போட்டு தூங்காத சரி யா
சீனி: சரி.
'மாலை ஐந்து மணி'
சீனி அம்மா: சரி தம்பி நாங்க போயிடு வரோம் வீட்டா பாத்துக்கோ.
சீனி அப்பா :போகலாமா சீக்கரம் .
சீனி அம்மா :இந்த வரேன் சரி பா போயிடு வரோம் பாத்துக்கோ.
சீனி புலம்பிக்கிக்கொண்டு எல்லாருக்கும் கல்யாணம் நடக்குது நம்மக்கு எப்போ தானோ ஆண்டவா என்று புலம்பிக்கொன்டு எதையோ யோசித்துக்கொண்டு இருந்தான் அப்போது ஒருத்தர் தம்பி உள்ள யாரு என்றார் .
சீனி: யாரு சார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்.
அந்த நபர் : தம்பி என் பெரு அன்பு நா உங்க அப்பா நண்பன் பா உன்பேரு சீனி தானே.
சீனி : ஆமா சார் ஆனா அப்பா இங்க இல்ல சார் வெளிய போயிருக்காரு.
அன்பு: தம்பி நா உன் அப்பா பாக்க வரல உன்ன பக்கத்தான் வந்தேன்.
சீனி: என்ன பக்கவா எதுக்கு சரி உள்ள வாங்க தண்ணி குடிங்க.
அன்பு :நன்றி பா .
சீனி :சொல்லுங்க சார் வேலை விஷயமா தான் பேச வந்திங்க .
அன்பு :இல்ல பா உன்ன பத்தி பேச வந்தேன் .
சீனி :என்ன பத்திய ம்ம் சொல்லுங்க.
அன்பு: ஏன்பா இப்டி ஆயிட்டா உனக்கு என்ன பிரச்சனை சின்ன வயசுல எவ்ளோ துரு துரு இருப்ப இப்போ ஏன் இப்படி ஆனா.
சீனி :என்ன பத்தி எல்லாம் தெரியுமா உங்களுக்கு.
அன்பு: எல்லாமே தெரியும் உன் கனவு சினிமா தான் ஆனா நீ ஆத விட்டுட்டு இப்போ எதோ வாழ்ந்த போதும் இருக்க ஏன்.
சீனி : என் மனசுல இருக்குறத அப்டியே சொல்றிங்க.
அன்பு :என்ன பிரிச்சானை ஏன்டா சொல்லு .
சீனி யோசித்து கொண்டு முழித்தான்.
அன்பு :என்ன நம்பி சொல்லு .
சீனி :சரி சொல்றேன் என் வாழ்க்கை லா நா என்ன பண்ணாலும் தடங்கலா வருது யார நம்புறது தெரில நண்பன் காதலி எல்லாரும் என்ன விட்டு போய்ட்டாங்க ஏன் கனவும் என்ன விட்டு போச்சு எனக்கு உதவி பண்ண யாரும் இல்ல .
அன்பு : சரி இப்போ இதுக்கு எல்லாம் யாரு காரணம் எனக்கு தெரியும் சொல்லவா.
சீனி: யாரு சொல்லுங்க.
அன்பு :நீதான் .
சீனி :என்ன சார் சொல்றிங்க
அன்பு: ஆமா நல்ல யோசி நீ தான் காரணம் உனக்கு உன்மேல அக்கறை இல்ல அதான் உண்மை. சீனி ஆமா சார் என் வாழ்க்கை என் காதலி விட்டு போனதுக்கு வேலை போனதுக்கு நண்பன் விட்டு போனதுக்கு நா காரணம் இல்ல அவங்க சுயநலம் தான் என்ன யாரும் மதிக்கல எங்க போனாலும் யாரும் மதிக்க மடிக்குறாங்க என்ன யாருக்கும் புடிக்கல அதனால யாரையும் எனக்கு புடிக்கல
அன்பு: சரி விடு நடந்தது நடந்து போச்சு நா உனக்கு ஒரு வரம் தரேன்.
சீனி சிரித்தான்
அன்பு: சிரிக்காத பா உண்மையாவே உனக்கு வரம் தரேன்.
சீனி: என்ன வரம் .
அன்பு: உனக்கு இந்த உலகம் என்ன தருமோ அதையே இந்த உலகம் வாங்கிக்கொள்ளும் இதன் வரம்.
சீனி : இல்ல புரியல .
அன்பு : புரியும் என்று சொல்லியபடி கண்ணைத்திற என்றான்.
சீனி: தூக்கத்தில் இருந்து எழுந்து இது கனவா என்று யோசித்தான் சிறுத்து நேரம் கழித்து சீனி அம்மா அப்பா வீட்டுக்குள்ளே வந்து நிச்சயதார்தம் நல்ல பாடிய முடிஞ்சது என்றனர்.
சீனி அம்மா: என்னடா ஒரு மாரி இருக்க கனவு எதுவும் கண்டிய .
சீனி: ஆமா மா.
சீனி அம்மா: சரி வீட்டுக்கு யாரும் வந்தங்களா.
சீனி : இல்ல மா
மறுநாள் காலை ஒன்பது மணி.
சீனி அப்பா: டேய் தம்பி என் வண்டிய சர்வீஸ் விட்டு வா.
சீனி: சரி பா.
சீனி வண்டியில் செல்லும் பொது ஒரு நபர் டேய் வழி விட்டு போ என்று கூறி முறைத்தார் .
சீனி முறைதான் அப்போது அந்த நபர் வண்டி கீழே விழுந்து அவருக்கு அடிபட்டது சீனி எதுவும் தெரியாது போல வண்டியை சர்வீஸ் விட்டு நடந்து வந்தான்.
அப்போது ஒரு நாய் சீனியை பார்த்து குலைத்தது சீனி முறைதான் நாய் பயந்து ஓடியது வரும் வழியில் ஒரு நபர் மதுபோதையில் சீனியிடம் காசு தருமாறு மிரட்டினார் சீனி முறைதான் அந்த நபர் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
சீனி அதே வழியில் நடந்து வரும் பொது சீனியின் எதிரி ஒருவன் சீனியை பார்த்து டேய் வேலைக்கு போகாம ஓசி சோறு திக்குரிய என்றான் சீனி முறைதான் அந்த நபர் தலையில் காகா எச்சம் போட்டது சீனிக்கு கடந்து வந்து விட்டுருக்கு வந்து ஒரே யோசனை எப்படி என்னை குறை கூறிய அனைவருக்கும் எதோ நடக்குது ஒருவேலை இதான் அந்த வராம என்றான்.
அப்போது அவர் மாமா விட்டிருக்கு வந்தார் மாமா என்ன பா சீனி நல்ல இருக்கியா.
சீனி : நல்ல இருக்கான் மாமா .
மாமா: எப்போ வேலைக்கு போவ நீ ஒறுப்புட மாட்ட.
அப்போது மாமா தலையில் அலமாரியில் உள்ள பேட்டி விழுந்தது .
மாமா மண்டையில் இருந்து ரத்தம் வந்தது.
சீனி திகைத்து போனான் மருத்துமனையில் சேர்த்து மாமா பெரிய காயம் இல்லை மருந்து போட்டால் சரியாகி விடும் என்றார் மருத்துவர்.
வீட்டுக்கு அனைவரும் வந்தனர்.
சீனி இந்த வரம் எனக்கு வேண்டாம் என்றான் நான் யாரையும் எதிரியாக நினைக்க மாட்டேன் என்று மனதுக்குள் நினைத்தான் என் வாழ்க்கையில் யாரும் எதிரி இல்லை நான்தான் எனக்கு எதிரி.
என்னை நான் கவனிக்க வில்லை அதனால் தான் எல்லாரும் எனக்கு அட்வைஸ் பண்றங்க இனி நான் யாராயினும் காரணம் கட்டமாட்டேன் நான் என்னை சரி செய்யாது கொள்ளப்போகிறேன் என்றான்.
அப்போது ஒரு குரல் கேட்டது சீனிக்கு மட்டும் சீனி நீ புரிந்து கொண்டாய் அது போதும் அவர் அவர் வாழ்க்கைக்கு அவர் அவர் தான் காரணம் உனது வரம் இனி வேலை செய்யாது என்று அன்புவின் குரல் கேட்டது.
சீனி: இது கடவுளா இல்லை ஏதோவோ எனக்கு தெரியாது ஆனால் நான் என்னை மாற்றி கொள்ளப்போகிறேன் என்றான்
கருத்து: நம்மை நமே சரிசெய்துகொண்டாள் யாரையும் குறைகூற வேண்டிய அவசியம் இல்லை நம் வாழ்க்கை நாம் தான் பொறுப்பு
-K. Seenivasan
#43
39,620
9,620
: 30,000
193
5 (193 )
ghiii
ghiiioo
hujjjjj
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50