புதியவர்

mgmprakash
பயண இலக்கியம்
4.9 out of 5 (7 )

சற்று பட பட பாகவே இருந்தது செல்வதுக்கு , பஸ்சில் வரும் போது கூட அந்த படபடப்பு குறையவில்லை. எப்போது தா வீட்டுக்கு வருவோமா என்று இருந்தது... ஸ்டாப்பிங் லிருந்து 10 நிமிட நடையில் இருந்தது வீடு... வேகமாக வந்து ஹால் இல் இருந்த டேபிள் மீது தேட ஆரம்பித்தான். சாப்பிடுவதற்காக வாங்கிய டேபிள் ஆனால் இப்போது அவசரத்துக்கு எல்லாத்தையும் அதின் மீது வைத்து பழகி போய் விட்டது ... ஏற்கனவே குப்பை மேடு போல் இருந்த இடம் இவன் கலைத்ததில் இன்னும் மோசமாக காட்சி அளித்தது. வந்த ஆத்திரத்தில் எல்லாவற்றையும் தள்ளி எரிந்து விட தோன்றியது.

" என்ன ‌தேடிட்டு இருக்க ?, எதாச்சும் வேணும்னா என்ன கூப்பிட வேண்டியது தான. "

என்றபடி அம்மா வந்தாள்.

"இன்னிக்கு எனக்கு கம்பனி ல இருந்து லெட்டர் வந்ததா சொன்னியே அத தா தேடிட்டு இருக்கேன், எங்க அது?"

"அதுவா அந்த டேபிள் மேல தான்டா வச்சேன் "

" அங்க இல்லையே " சற்று எரிச்சலுடன் சொன்னான்.

" ஃபர்ஸ்ட் இந்த காபி ய குடி , நா தேடித் தரேன், இங்க தா இருக்க போகுது " என்றபடி காபியை நீட்டினாள்.

ஏற்கனவே டென்ஷன் இல் இருந்த அவனுக்கு ஃபேன் ஓடியும் வேர்த்து கொட்டியது இதில் இந்த சூடான காபி வேறயா என்று தோன்றினாலும், அம்மாவின் வற்புறுத்தலால் எடுத்து குடிக்க ஆரம்பித்தான்... நெற்றி, கழுத்து என்று வேர்வை அதிகரித்தாலும் கர்சீப் மூலம் துடைத்து கொண்டே வந்தாலும் வேர்வை நின்ற பாடு இல்லை.

"பாரு எப்படி கலச்சு வச்சிருக்கிறான், இத அடுக்கி வச்சாலும் அடுத்த நிமிஷமே இதுல தா எல்லாத்தையும் வைக்கிறது" என்று அலுத்துக் கொண்டாள்.

" எங்கமா அத வச்சே."

" இங்க தான்டா வச்சேன், நீ தா தேடுறேன் பேர்ல எங்கேயோ தூக்கி போட்டுட்ட."

அவனை பழி சொன்னதில் இன்னும் எரிச்சலாக வந்தது இருப்பினும் சிரமப்பட்டு அடக்கி கொண்டான்.

" எப்படியாச்சும் எடுத்து குடுமா."

"இரு டா, தேடிட்டு தா இருக்கேன், நீ அதுக்குள்ள போய் கேஸ் புக் பண்ணு போ. "

" எங்க இருக்கு உன் ஃபோன்.?"

" உன் பக்கத்துல தான்டா இருக்கு, உனக்கு கண்ணு தெரில. "

சொன்னபடி அம்மாவின் பழைய நோக்கியா ஃபோன் இருந்தது... அம்மாவை போலவே உழைத்து தேய்ந்து போய் இருந்தது.

சில நிமிடங்களில கேஸ் புக் பண்ணி முடித்தற்கான sms வந்து சேர்ந்தது.

சரியாக அம்மாவும் லெட்டர் ஐ அவன் முன் போட்டாள்...

" எங்க இருந்தது ?."

" நீ கலச்சுதுல கீழ விழுந்து கிடந்துச்சு."

எதுவும் பேசாமல் லெட்டர் ஐ எடுத்து கொண்டு தன் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

"டேய் , என்ன லெட்டர் சொல்லிட்டு போடா."

" எனக்கே தெரில, அப்புறமா சொல்றேன் "

லெட்டர் ஐ இதய துடிப்பு அதிகரிக்க பிரித்து படிக்க ஆரம்பித்தான்.

பாக்கெட் டில் இருந்த செல்ஃபோன் ஒலித்தது.

" டேய், லெட்டர் வந்துச்சா?" என்றான் தினேஷ்.

"ம்ம்."

" என்ன போட்டுருக்கு. "

" Corona period நால வேல போய்டுச்சு. "

" ஆ அதே தா. "

" இப்போ சந்தோசமா உனக்கு?."

" டேய் எனக்கும் தா வேல போய்டுச்சு."

என்ன பதில் பேசுவது என்று தெரியவில்லை, நன்பனுக்கும் வேலை போனதை நினைத்து ஆறுதல் படுத்தி கொள்வதா இல்லை வேலை போய்டுச்சு அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று வருத்த படுவதா என்று தெரிய வில்லை.

" டேய் இருக்கியா?."

" சொல்லு லைன் ல தா இருக்கேன்."

" சரி விடு, ஃபீல் பண்ணாத, பாத்துக்கலாம். "

" எப்படியா ஃபீல் பண்ணாம இருக்கிறது, அடுத்த மாசம் சம்பளம் வீட்ல கேப்பாங்களே என்ன சொல்றது."

" உங்க வீட்டுல சொல்லிட்டியா?."

" இன்னும், இல்ல எப்படி சொல்றது?."

" நீ, ஏன் சொல்ற , அப்படியே விடு."

" வீட்டுலயே இருந்தா கேப்பாங்களே. "

" வீட்டுல இருக்காத , வெளியில சுத்து டா. "

" லாக் டவுன் ல எங்க போய் சுத்துறது, எல்லாமே மூடி தா இருக்கும், பஸ் கூட நெறய ஓடறது இல்ல. ச்சே நமக்கு மட்டும் இப்படி நடக்குது. "

" என்ன பண்றது, எல்லா நம்ம நேரம் , இரு ரவி கால் பன்றான் அவனையும் குரூப் கால் ல add பண்ணிக்கலாம்."

" தினேஷ், லெட்டர் வந்த்துச்சா?" கேள்வியுடன் ஆரம்பித்தான் ரவி..

" ம்ம் வந்துச்சு, டேய் நம்ம கூட செல்வம் உம் லைன் ல இருக்கிறான். "

"டேய் செல்வம் என்னடா இப்படி பண்ணிட்டாங்க?"

"உனக்கும் லெட்டர் வந்துச்சா?"

" ஆமாண்டா, என்னடா இப்படி திடீர்னு பண்ணிட்டாங்க. "

" தெரிலியே , நம்ம வேலை யில கூட எந்த குறையும் வைக்கலியே, அப்புறம் எண்ணதுக்கு தா இப்படி பண்ணுனாங்களோ. "

" இந்த எத்தன பேருக்கு லெட்டர் போய் இருக்கு தெரியுமா உனக்கு. "

" 200 பேருக்கு இருக்கும் ஆனா கிளியர் ஆ தெரியல தினேஷ்."

" நம்ம டீம் full ah காலி, பக்கத்து டீம் லயும் பாதி காலி. "

"நம்ம மேனஜர் என்ன சொல்றாரு. "

" அவரே ஷாக் ஆகி பேசுறாரு அந்தாளுக்கு இத பத்தி ஒண்ணுமே தெரியாதாம். "

" இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு, பேரு எடுத்து குடுத்ததே இவர் தா பண்ணி இருப்பாரு, இவருக்கு தெரியாமலா இருக்கும் "

" நம்ம டீம் லீடர் கிட்ட பேசியாச்சா. "

" அந்தாளு ஃபோன் எடுக்க வே இல்ல."

" இவங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இருக்காதா, நம்ம டீம் பசங்கள காபாத்தனும் எண்ணமே கொஞ்சம் கூட இல்ல. "

" டேய் செல்வம் ஒன்னு கவனிச்சியா... வேல போன வங்கள பாதி க்கு மேல எக்ஸ்பீரியன்ஸ் இருக்குறவங்க தா. "

" ஆ கரெக்ட் செம்ம பாய்ண்ட் ரவி. "

" வேலை செய்ய தெரிஞ்ச ஆளுங்கள வெளிய அனுப்பிட்டு நம்ம டீம் இழுத்து மூட போறாங்களா?."

" அது அப்படி கிடையாது... நம்மள அனுப்பிட்டு புதுசா வேலைக்கு கம்மி சம்பளத்தில ஆள் எடுத்துப்பாங்க அது தா பிளான். "

" சரி டா அப்படி பாத்தாலும், புதுசா வர்றவங்க அவ்ளோ சீக்கிரம் வேலய கத்துக்க முடியாதே லாஸ் கம்பனி கு தான."

" டேய் நம்ம வேலை கஷ்டம் தெரிஞ்சு நமக்கு நாமே பேசி ஒரு டார்கெட் செட் பண்ணி வச்சு இருக்கோம், அதனால அதுக்கு மேல நம்ம கிட்ட எதிர்பார்க்க முடியாது னு அவங்களுக்கும் தெரியும், அதுக்கு பதிலா புதுசா வரவங்க கிட்ட ரெண்டு மடங்கு டார்கெட் வச்சு வேலை வாங்குவாங்க...இப்போ கம்மி சம்பளத்துல ரெண்டு மடங்கு வேலை வாங்கலாம்... புதுசா வந்தவங்களுக்கு இதெல்லாம் தெரியாது, எதிர்த்து கேள்வியும் கேக்க முடியாது அதா பிளான். "

" இவங்க சொல்ற மாதிரி வேலை செய்யணும் நா மெஷின் தா வாங்கி வைக்கணும். "

" நம்மளயும் அப்படி தா நெனச்சு இருக்காங்க. "

" டேய் நம்ம மேனஜர் கால் பன்றாரு டா, இருங்க பேசிட்டு வர்றேன். "

" ரவி, உங்க ஊர்ல லாக் டவுன் ஆ இல்ல எல்லாமே ஓரளவுக்கு இருக்கா ".

" இல்ல டா எங்க area full ah COVID தா, நானே வெளிய எங்கேயும் போறதுக்கு இல்ல".

" இரு டா தினேஷ் தா கால் பண்றான், அவன் என்ன சொல்றான் னு பாக்கலாம் ".

" யோவ், என்ன அதுக்குள்ள பேசிட்டு வந்துட்ட. "

" செல்வம், ரவி இன்னும் பத்து நிமிஷத்துல நம்ம கம்பனி பெரிய தலைங்க கூட நமக்கு ஒரு ஆடியோ மீட்டிங் இருக்காம், அதா நம்ம மேனஜர் கால் பண்ணி சொன்னாரு. "

" என்னவா இருக்கும், ஒரு வேளை சமாதான படுத்த வா இருக்குமோ ?"

" நீ, வெற அப்படி எல்லாம் பாவம் பாக்குறவங்க கிடையாது. "

" தெரியல முதல்ல கால் அட்டென்ட் பண்ணுவோம், அப்புறம் மறுபடியும் நம்ம பேசிக்கலாம். "

" டேய், சாப்பிட வாடா " என்றது அம்மாவின் குரல்.

அப்போது தா மணி இரவு 9.30 ஐ கடந்துவிட்டது என்று செல்வம் உனர்ந்தான்...

" நீ, சாப்பிடு மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. "

சில நிமிடத்தில் செல் ஃபோன் மீண்டும் ஒலித்தது, அட்டென்ட் பண்ணியவுடன் , ஓவ்வொருவரின் பெயரும் அழைக்கப்பட்டு

உறுதிபடுத்திய பிறகு...

சீனியர் மேனஜர் பேச ஆரம்பித்தார்...

நீங்க எல்லாரும் இன்னிக்கு கம்பனி ல இருந்து வந்த லெட்டர் ஐ படிச்சு இருப்பீங்க... உங்க எல்லாருக்கும் கோபமும், வருத்தமும் இருக்கும்... ஆனா நல்லா புரிஞ்சுக்கனும் இது உங்களை ஏமாத்தவோ இல்ல பழி வாங்கவோ செஞ்ச நடவடிக்கை இல்லை. இது கம்பனி செலவை குறைப்பதற்கான எடுக்க பட்ட பல நடவடிக்கை யில ஒன்னு அவ்ளோ தான்... இருந்தாலும் நீங்க ரொம்ப நாள் நம்ம கம்பனி ல வேலை பாத்துனால உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு... ஒரு புது டீம் ஆரம்பிக்க போறோம்,

அதுல உங்க பழைய எக்ஸ்பீரியன்ஸ் தேவ படாது அதனால இப்போ உங்களை புதுசா வேலைக்கு வர மாதிரி தா எடுத்துப்போம்.

உங்க டார்கெட்ஸ் தேவபடும் போது அதிகமாக்குவோம்.

நீங்க வேலை செய்ற நேரமும் மாறும்.

உங்க சம்பளத்துல அடுத்த ஒரு வருஷத்துக்கு எந்த மாறுதலும் இருக்காது.

இது எல்லாத்துக்கும் உங்களுக்கு சம்மதம் இருந்தா நீங்க எனக்கு கால் பண்ணி உங்க விருப்பத்தை சொல்லலாம்.

நீங்க எங்க போனாலும் இதே மாதிரி தா நிலமை இருக்கும் அதனால நல்லா யோசிச்சு பார்த்து உங்க முடிவ சொல்லலாம்.

இப்படி அவர் பேசி முடித்தவுடன் மீட்டிங் முடிவடைந்தது...

சற்று நேரம் அமைதியில் கழிந்தது... பிறகு தான் புரிந்தது... குடும்ப சூழ்நிலை காக இந்த வேலையை ஏற்று கொள்ள வேண்டிய நிலை... எதற்காக இப்படி இருக்கிறோம் என்று தன் மீது கோவம் வந்தது... கடைசி வரை தன் சக வயது ஆண்கள் அனுபவிக்கும் விஷயங்கள் கூட எட்டா கனியாக உள்ளது...

அரை மனதுடன் மேனஜர் ku கால் பண்ணி தன் விருப்பத்தை தெரிவித்தான்.

" குட், செல்வம் நல்ல முடிவு எடுத்து இருக்கீங்க, ஓகே இன்னும் 2 நாள் ல உங்களுக்கு இன்டர்வியூ இருக்கும் நாங்களே உங்களுக்கு கால் பண்றோம்."

" இன்டர்வியூ ஆ?" செல்வத்துக்கு புரியவில்லை.

" ஆமா நீங்க இப்போ fresher செல்வம்".

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...