JUNE 10th - JULY 10th
"*நீங்க யாரு? என்று கேட்டார் ராகவன். "நான்தான் கடவுள் அல்லது இயற்கை அன்னை என்று வைத்துக் கொள்". . "நான் எங்க இருக்கேன்.என் மனைவி மக்கள் எல்லாம் எங்கே?என்று வினவினார்". . " நீயும் அவர்களும் இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கீறீர்கள்"என்றாள் இயற்கை அன்னை. மேலும் தொடர்ந்த அன்னை"நீ என்னை எவ்வாறு லெல்லாம் சீரழித்தாய் என்று ஞாபகம் வருகிறதா"என்று கேட்டாள் அன்னை. " "ஜயோ நான் உங்களை ஒண்ணுமே செய்யலையே"என்று அலறினார் ராகவன். அன்னை சிரித்துக் கொண்டே "ஓகோ, உனக்கு அதுகூட தெரியவில்லையா?,பாவம் நீ என்ன செய்வாய், உன் செல்வச் செருக்கு உன் கண்களை மறைக்கிறது.நன்றாக யோசித்து பார், உனக்கு விளங்கும்" என்று கூறி விட்டு அமைதியானாள் அன்னை. விசாலமான ஏர் கண்டிஷனர் செய்யப்பட்ட ஆஃபீஸ் அறையில், தன் விலை உயர்ந்த புஷ்பேக் சேரில் அமர்ந்திருந்தார் ராகவன்.அப்பொழுது,பிஏ என்ற ஆங்கில எழுத்தின் மேல் மிகச் சிறிய பச்சை விளக்கு பீப் சவுண்டுடனே எரிந்தது. கதையை மேலே தொடரும் முன்பாக, நாம் ராகவனை பற்றி தெரிந்து கொள்வோம். கோயமுத்தூரில், 1960 ஆம் ஆண்டு ராகவன் தன் சைக்கிளில் பெரிய துணி மூட்டையை வைத்துக கொண்டு வேகாத வெய்யிலில் மிகவும் மெதுவாக பெடலை மிதித்து சென்றார்.ஏனெனில் பெடலை வேகமாக அழுத்தினால் சைக்கிள் செயின் கழண்டுவிடும். ராகவனுக்கு வயது பதினெட்டு இருக்கும் போது ஒரு கம்பெனியில் டெலிவரி பாய்யாக சேர்ந்தார்.அதாவது அன்று உற்பத்தி யான ரெடிமேட் துணிகளுக்கு காஜா எடுக்கவும்,பட்டன் தைப்பதற்கும் கோவையின் மறு கோடியிலுள்ள ஒரு சிறிய கடைக்கு டெலிவரி செய்யும் பாய்.அந்த காஜா கடையின் முதலாளி உடைகளை எண்ணி சரி பார்த்து தன் உதவியாளரிடம் கொடுப்பார்.பின் எல்லோருக்கும் டீ வடை சப்ளை செய்யப்படும்.இது தினந்தோறும் நடை பெறும் நிகழ்வு.மேலும் ராகவனுக்கு இதுதான் காலை டிபன்.சில நாட்களில் தாமதமாக வந்தால் வடை,டீ கட்.இந்த காஜா கடையில் தானும் காஜா எடுக்கும் வேலையை குறுகிய காலத்திலேயே கற்றுக் கொண்ட ராகவன், அங்கேயே வேலைக்கு சேர்ந்தார்.சிறிது காலத்திற்கு பிறகு இவர் உழைப்பையும்,திறமையையும் பார்த்த ஒரு மில் முதலாளி,தங்களிடமிருந்த பழைய காஜா எடுக்கும் மெஷினை இலவசமாகவே கொடுத்தார். தானும்,அவர் அம்மாவும் அதில் வேலை செய்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு வேஸ்ட் காட்டன் பிஸினஸை தொடங்கிய ராகவன் குறுகிய காலத்திலேயே தன்னுடைய உழைப்பாலும்,நேர்மையாலும்,நாணயத்தாலும் பல மில் ஓனர்களின் ஆதரவை பெற்றார்.பிறகு பண மழைதான் அவர் காட்டில்.நலிந்து போன மில் ஓனரின் மகளை திருமணம் செய்த பிறகு ,அந்த மில்லையே பொலிவாக்கியதோடு அல்லாமல், மில்லை விரிவாக்கமும் செய்தார்.அதே சமயத்தில் தன் குடும்பமும் விரிவானது.இரண்டு மகள்கள்,ஒரே மகன். சேஷர்களை ஃப்ளோட் செய்து தன் மில்லை லிமிட்டட் கம்பெனியாக்கினார். குழந்தைகள் வளர வளர செல்வமும் பல மடங்கு பெருகியது.இப்பொழுது பல தொழில்கள் தொடங்கினார். ஆர்.ஆர்.ஆர் மில்ஸ்,ஆர்.ஆர்.ஆர் சாஃப்ட் வேர்ஸ்,ஆர்.ஆர்.ஆர் லூம்ஸ் இப்படி மேலும் பல தொழில்கள். ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்து சில லட்சங்களை பத்தாண்டுகளில் பல கோடிகள் ஆக்கினார். தன் ஸ்தாபனங்களில் வேலை பார்த்த எல்லா தொழிலாளிகளின் குழந்தைகளுக்கும், தான் ஆரம்பித்த கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியை கொடுத்தார்.அதே போல் எல்லோருக்கும் இலவச மருத்துவ வசதிகளையும் செய்து கொடுத்தார். . . தன்னை போலவே தன் மகள்களுக்கும் நல்ல பண்புகளை கொண்ட குடும்பத்திலிருந்து இரண்டு படித்த மாப்பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்த கையோடு,மூத்த மாப்பிள்ளையை தன் ஆர்.ஆர்.ஆர் சாஃப்ட்வேர்ஸ்க்கு எம்.டி ஆக்கினார்.இளைய மாப்பிள்ளையை ஆர்.ஆர்.ஆர் லூம்ஸ்க்கு எம்.டி ஆக்கினார். இந்த இருவருக்கும் தலா ஒரு மகன்,மகள்.ஆக மொத்தம் ராகவனுக்கு லட்டு போல இரண்டு பேரன்கள், இரண்டு பேத்திகள். தன் ஒரே மகனை எம்.எஸ் மேற்படிப்பிற்காக யு.எஸ் அனுப்பி வைத்தார். இப்படி எல்லா வகையிலும் மிக மிக நல்லவராக இருந்த ராகவன் எங்கே மிகப் பெரிய தவறு செய்தார்? அவருக்கு தெரியாமலேயே தவறு நடந்ததா, அல்லது, அத்தவறு அவருக்கு தவறே என்று தெரியாமலேயே நடந்ததா? அப்படி நடக்க வாய்ப்பில்லையே. ராகவனின் மேஜை மேலிருந்த டிவைஸ்லிருந்து பீப் ஒலியுடன் பிஏ என்ற ஆங்கில எழுத்தின் மேல் மிகச் சிறிய பச்சை விளக்கு எரிந்தது.இதை பார்த்த ராகவன் ஒரு புஷ் பட்டனை அழுத்த அறை கதவு திறந்தது. உள்ளே வந்த பிஏ "சார், ராஜேந்திரன் உங்களை பார்க்க ஒரு மணி நேரமாக வெயிட் செய்றார்",என்றார். உடனே தன் டிஜிட்டல் வாட்ச்சில் புதன் 12.45பி.எம் என்பதை பார்த்து "சரி வரச் சொல்லுங்க", என்றார். வெள்ளை சர்ட் பேண்ட் மற்றும் நெற்றியில் குங்குமம் அணிந்து ஒருவித நமட்டுச் சிரிப்புடன் உள்ளே வந்த ராஜேந்திரன் மிகவும் பவ்வியமாக "வணக்கம் சார்", என்றார். "வாங்க ராஜேந்திரன், உக்காருங்க,என்ன விஷேசம்", என்று கேட்டார். சார் நீங்க மூணு மாசத்துக்கு முன்னாடி, கெஸ்ட் ஹவுஸ் கட்றதுக்கு ஒரு ஏக்கர் பூமி ஊட்டி அவுட்டரில் கேட்டீங்களே", என்று இழுத்தார். "ஆமாம் ஆமாம், எங்க இருக்கு, எப்படிபட்ட பூமி ",என்று வினவினார். "ஒரு 70செண்ட் அவலாஞ்சி லேக் மேலே பாதி மலையில் அமஞ்சிருக்கு.பிரமாதமான இயற்கை நிறைந்த காட்டின் நடுவே இருக்குது.அங்கிருந்து அவலாஞ்சி லேக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம்,கண்கொள்ளாக் காட்சி", என்று நீட்டி முழக்கினார் ராஜேந்திரன். ஆனால் சின்ன பிரச்சினை,சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல வளர்ந்த மரங்கள் பத்துக்கும் குறையாது,பராஸ்ட் டிப்பார்ட்மெண்டுல கட்டிங் ஆர்டர் வாங்கணும்,அது அவ்வளவு லேசான காரியமில்லை",என்று இழுத்தார் ராஜேந்திரன். என்னய்யா மரம் கிரம்னு,இது ஒரு விஷயமுன்னு ஏங்கிட்ட சொல்லிக்கிட்டு,காசு விட்டெரிஞ்சா காரியம் நடக்குது",என்றார் ராகவன். "ஆமா,ஆமா நீங்க சொல்றது மாதிரியே செஞ்சுட்டா போச்சு",என்ற ராஜேந்திரன் மேலும் உற்சாகத்துடன் "சார் அப்படியே முப்பது செண்ட் பாரஸ்ட் லேண்டும் இருக்கு, கொஞ்சம் செலவு செஞ்சா அதையும் சேர்த்து நமக்கு ஒரு ஏக்கர் பூமி ஆக்கிடலாம்". . "சரி சரி சீக்கிரம் செய்யுங்க,மரத்தயெல்லாம் பற்றி கவலைப் படாதீங்க, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை", என்று பச்சை கொடி காட்டினார் ராகவன். அதற்கு பிறகு வெகு விரைவாக வேலைகலெல்லாம் நடந்தது.ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் இரண்டே நாளில் எலக்ட்ரிக் சா கொண்டு அறுக்கப்பட்டது. பங்களா நான்காயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு பல அழகான பூச்செடிகள் வைக்கப்பட்டது. ஒரிடத்தில் டென்னிஸ் கோர்ட்,மற்றோரு இடத்தில் பாட்மிண்டன் கோர்ட் மற்றும் இன்டோர் சும்மிங் பூல், சூடு தண்ணீர் வசதியுடன் அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக பேரன், பேத்தி பர்த்டேயை குடும்பத்துடன் அங்கே சென்று கொண்டாடுவார். இந்த ஆண்டும் கடைக்குட்டி காயத்ரி தேவியின் பிறந்தநாளை கொண்டாட எல்லோரும் குடும்பத்தோடு புறப்பட போகும் போது, ராகவன் தன் மூத்த மாப்பிள்ளையை பார்த்து "நீங்க எல்லாரும் இருட்டுறதுக்குள்ள போயிடுங்க,இங்க முக்கியமான போர்ட் மீட்டிங்,அஞ்சு மணிக்குத்தான் முடியும். முடிந்த பிறகு நான் உடனே புறப்பட்டு வர்ரேன்"என்று கூறி எல்லோரையும் இன்னோவா காரில் அனுப்பி வைத்தார். போர்ட் மீட்டிங் நினைத்ததைவிட எளிதாக முடிந்தது. டிரைவர் சுந்தரம் ,ஆடி காரோட்ட, பின் சீட்டில் அமர்ந்து அவலாஞ்சி நோக்கி ராகவன் பயணம் செய்தார். கார் குன்னூர் தாண்டி யவுடன் இரண்டு மூன்று முறை செல்லில் மூத்த மாப்பிள்ளையை அழைத்தார்,நாட் ரீச்சபிள்,பேசமுடியவில்லை.'காட்ல வீட்ட கட்டினது தப்போ'என்று மனதில் நினைத்து க் கொண்டார். ஊட்டி தாண்டி அவலாஞ்சி நோக்கி செல்லும் சாலையில் கார் நிறுத்தப்பட்டது. அசதியில் நன்றாக பின் சீட்டில் தூங்கி கொண்டிருந்த ராகவன் திடீரென ஒருவித பதட்டத்துடன் கண் விழித்து என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தன் கார் விண்டோவை இறக்கினார். வெளியே ஒரே சலசலப்பு. மக்கள் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர்." "ஆமாம் ,ஆமாம் அவலாஞ்சியில் கனமழை பெய்து பலத்த மண் சரிவு ஏற்பட்டிடுச்சு,அதல கோயம்புத்தூர் ஆர்.ஆர்.ஆர் மில்ஸ் வீடுகூட அப்படியே சேற்று மண்ணில மூழ்கிடுச்சு". இதைக் கேட்ட ராகவன்'ஆ'என்று அலறிக்கொண்டே காரில் மயக்கம் போட்டு விட்டார். காரிலேயே சோதித்த லோகல் டாக்டர்,"மாசிவ் ஹார்ட் பெயிலியர், உடனே கோயம்புத்தூர் கொண்டு போங்க"என்று டிரைவரிடம் சொன்னார். மேட்டுப்பாளையத்தில் முன்னறிவிப்பு செய்ததனால், தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு,கோவை மருத்துவ மனையில் அவசர சிகிச்சை அளிக்கபட்டும்,பல்ஸ் ரேட் குறைந்து கொண்டே வந்தது. இயற்கை அன்னை தொடர்ந்து பேசினார்"ராகவா என் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை (மரங்களை) ஒரேயடியாக வெட்டி வீழ்த்தினாய்.இப்படி பல லட்சம் மரங்களை பல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக பின் விளைவுகள் பற்றிய கவலை கொள்ளாமல் வெட்டிகொண்டே இருக்கிறார்கள்.கனமழை பெய்யும் போது பலத்த மண்சரிவு ஏற்படுவது இயல்புதானே? அதனால்தான் உனக்கு இந்த தண்டனை", என்று சொல்லி முடித்தார் இயற்கை அன்னை. "தாயே", என்று அலறிக்கொண்டே கண் விழித்தார் ராகவன். . தன் எதிரே நின்று கொண்டிருந்த மூத்த மாப்பிள்ளையை பார்த்து," நீங்க, நீங்க" , என்று சொல்ல"பயப்பிடாதீங்க மாமா,நாங்க எல்லோருமே உயிரோடு செளக்கியமாக இருக்கிறோம்". நாங்க அவலாஞ்சி வீட்டுக்கு வந்த பின்னாடிதான் தெரிந்தது, பர்த்டே கேக் எடுத்து வரலேன்னு.ஸோ எல்லோரும் ஊட்டிக்கு கேக் வாங்க வந்த போதுதான் நம் அவலாஞ்சி வீடு மண்சரிவு ஏற்பட்டு சேத்துல மூழ்கிடுச்சு. நல்லவேளை நம் வேன் டிரைவர்,சமையல் சிவம், வாட்ச்மேன் எல்லோரும் சிகரெட்,பீடி வாங்க பக்கத்து கிராமத்துக்கு வந்ததனாலே அவங்களும் உயிர் பிழைச்சுட்டாங்க. ஒரு வாரத்திற்கு பிறகு மருத்துவமனையிலிந்து ராகவன் டிஸ்சார்ஜ் செய்ய ப்பட்டார். . ஆஸ்பத்திரியில் இருந்த போதே இனிமேல் தன்னால் இயற்கையை ,பாதுகாக்க,பேண பல திட்டங்களை மனத்திலேயே வகுத்ததோடு மட்டுமில்லாமல், அவைகளை நோட்பேடில் குறித்துக் கொண்டார். . அவர் அப்படி என்னென்ன நல்ல காரியங்களை செய்தார்? 1) லட்சக்கணக்கான விதைப் பந்துகளை காடுகளில் தூவும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. . 2) கோவையை சுற்றி பல ஏக்கர் பூமி வாங்கி,மியாவாக்கி காடுகளை அமைத்தார். 3 ) அரசாங்க அனுமதியுடன் குளம்,ஏரிகளை தூர் வாரி சுத்தப்படுத்தினார். 4) சுற்றுச் சூழலை பாதுகாக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவி சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டார். மில்லிலிருந்து வந்த ராகவன், வீட்டுக்குள் நுழைந்து போது கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படத்தை தங்கள் 65 இன்ச் டிவியில் குடும்பத்தினர் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த சிறுவன் தன் தாத்தாவை பார்த்து 'நீங்க நல்லவரா கெட்டவரா, சொல்லுங்க' என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
#106
54,170
4,170
: 50,000
85
4.9 (85 )
podrick3101
vennil
N.A. Srinivasan (NAS)
சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியதின் அவசியத்தினை வலியுறுத்தும் கதை. வாழ்த்துக்கள்.
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50