JUNE 10th - JULY 10th
தொலைந்த பயணங்கள்
"ஏய் யோகேஸ்வரி. என்ன தூக்கமா?"
"இல்ல மிஸ்.. இல்ல மிஸ்"
"உனக்கு பிடிச்ச இடம் சொல்லு? "
"இமயமலை மிஸ்... "
"ஏன் சாமியாரா ஆக போறியா"
"ஹா... ஹாஹா... ஹா.. "
வகுப்பறையில் இருந்த அத்தனை பிள்ளைகளும் சிரித்தனர்.
"ஸ்டூடண்ட் உங்களுக்கு பிடித்த ஊர் பிடித்த இடம் எதாவது சொல்லுங்க ஆனா இங்கிலிஷ்ல சொல்லனும். தப்பா இருந்தாலும் பரவாயில்லை. எல்லோரும் காலேஜ் வந்துட்டோம்ல கொஞ்சம் கொஞ்சமா இங்கிலீஷிம் பேசலாம்"
"சரி சார்"
"நீ சொல்லுமா யோகேஸ்வரி"
"எனக்கு? "
"ஹய்.. இங்கிலிஷ் ஒன்லி"
"ஐ.. ஐ.. லைக்கு.. லைக்கு.. இமாலயா"
"வெரிகுட் ஹிமாலயா பிடிக்குமா"
"யெஸ் சார்... "
கிளாஸ் ரூம் பிள்ளைகள் கைதட்டினார்கள்.
"ஆ... ங்... ஆஆ... ஆங்... "
"ஐய்யய்யா... ஏட்டி யோகி குட்டி பாயில பேஞ்சிட்டா எழும்பி பாருடி"காலால் சுரண்டி விட்டான். அவள் எழவில்லை கனவில் லயத்து போய் கிடந்தாள். " ஏய்... எழும்பு டி."சத்தம் போட்டான். தூக்கம் களைந்தது பாதி களையாதது பாதி. தலையை பரட்டு பரட்டென்று சொரிந்து கொண்டே எழுந்தாள். நைந்த சணல் சாக்கை இழுத்து பாயிக்கடியில் போட்டுவிட்டு பிள்ளையை ஈரத்திலிருந்து நகர்த்தி போட்டால். மணியை பார்த்தாள் ஐந்து மணி ஆனது. சிறிது நேரம் கால்களை கட்டிக்கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்தாள். எழுந்து களைந்திருந்த புடவையையும்,பரப்பி இருந்த தலைமயிரையும் சரி செய்து கொண்டு வாசலுக்கு வந்தாள். வாசல் ஓராமாகவே இருந்த சிமெண்ட் தொட்டியில் இருந்த தண்ணீரை அள்ளி மூஞ்சில் அடித்துக் கொண்டாள். அதே தண்ணீரை வாலியில் மோண்டு வாசலில் தெளித்தாள். புள்ளிகளை வைத்து அப்புள்ளிகளை இணைத்து அழகான கோலம் வரைந்தாள். ஒண்டிகுடுத்தனம் பெரிய வீடு போல இருக்கும். அதனுலயே வீடுகள் சேம்பர்களாக பிரிந்து குடோனில் கிடக்கும் அட்டைபெட்டியை போல வரிசைகட்டி இருந்தன.
எடுப்பிலேயே அடுப்படி அதற்கு பின்னால் இரண்டு செல்ப்கள் வைத்து சின்ன ஹால் அல்லது அறை. மொத்தமே அவ்வளவு தான் பத்துக்கு பத்து அறையை போல தான் இருந்தது முழு வீடுமே. கரியும்,எண்ணெய் பிசுக்கும் படிந்த அடுப்புமடையில் முழு இடத்தையும் பிடித்திருந்த கேஸ் அடுப்பை பற்ற வைத்து. பாத்திரத்தை போட்டு தண்ணீரை ஊற்றி டீதூளும் சீனியையும் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டினாள் யோகி.
கையில் எடுத்து கொண்டு வாசல் படியில் வந்து உட்கார்ந்தாள். தெளிந்து எழுந்து கொண்டிருந்த அடிவான வெப்பத்த்தில் நிலவும் நட்சத்திரங்களும் மெழுகை போல உருகி கொண்டு இருந்தன. "ஏய்.. யோகி தண்ணீ வண்டி வந்துட்டுடி." முதல் வீட்டில் இருந்து குரல் வந்தது. டம்ளருக்குள் டிக்காசன் அப்படியே இருந்தது. அப்படியே வைத்து விட்டு அரக்கபரக்க எழுந்து நான்கைந்து இரப்பர் குடங்களை பொறுக்கி எடுத்து கொண்டு ஓடினால். கியூ பக்கத்து தெரு வரை நீண்டு நின்றது.
போட்டடித்து தண்ணீரை தூக்கி வந்து இரக்கினாள். மணி ஆறு அம்பது ஆனது. கிணத்துகட்டையை நோக்கி ஓடினால் ஆறு வீட்டுக்கு ஒரு கழிவறை மட்டுமே அங்கே ஒரு கியூ. குளிக்க கிணத்துகட்டையை ஒட்டிய ஓரேமேடையில் நின்றே குளித்து கொள்ளவேண்டும். குறுக்கு மாராப்பை கட்டி கொண்டு கிணத்து கட்டைமறைவில் கூந்தியே இறைத்து வைத்திருந்த நீரை மொண்டு ஊத்திக்கொண்டாள். மாத்து புடவையை சுற்றிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினாள்.
புடவையை காட்டிக் கொண்டே குரல் கொடுத்தாள் "டேய் கபிலா எழும்புடா.. பள்ளிக்கொடம் போகனும்ன.. எழும்பு.. எழும்பு" கபிலன் சிணுங்கிவிட்டு படுத்திருந்தான். சமையலை ஆரம்பித்தாள் ஒரு அடுப்பில் இட்லியும் மற்றோரு அடுப்பில் சாதமும் வேந்துக்கொண்டு இருந்தது. எலும்பிச்சை பழங்களை அறிந்து புளிய உட்கார்ந்தாள். கபிலன் மடியில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
"ம்மா.. இந்த பாப்பாகுட்டிய என் பக்கம் போடாத என் மேலல்லாம் ஈரம்ஆக்கிபுட்டா"
"அவ இன்னைக்கு எழும்பி வரட்டும். நீ போய் பல்லவிளக்கிட்டு வா. வர காப்பி போட்டு வச்சிருக்கேன்"
"எப்போமா பால் வாங்குவ."
"அப்பாவுக்கு இரண்டு நாளா சவாரி இல்லன்னா. இன்னைக்கு போயிட்டு வரட்டும் நாளைக்கு பால் வாங்கிடுறேன். "
"இதே தான் ஒரு வாரமா சொல்ற போமா அங்குட்டு" எழுந்து கிணத்தடிக்கு போனான் கபிலன். எதோ யோசனையில் மூழ்கினாள் யோகி அதே நேரம் டூர்.. ர்.. ர்க் "ஏன்டி காபிய குடிச்சிட்டு டம்ளர ஓரமா வைக்க மாட்டியா?" செல்வம் எழுந்து வாசலுக்கு போனதை கூட கவனிக்காமள் உட்கார்ந்து கிடந்தாள் யோகி. அவன் டம்ளரை தட்டி விட்டதும் தான் நிதானித்து "காலையில் போட்ட காபியை நான் குடிக்கவே இல்லையே" எழுந்து ஊற்றி கிடந்த காபியை சுத்தம் செய்தாள்.
"நீங்க தான் கண்ண கீழ பார்த்து போனா என்ன? "
பல்லை தேய்தேயென்று தேய்த்து கொண்டே "இன்அவ்க்கயென்" வாயில் எச்சிலை வைத்து கொண்டே கேட்டான்.
"அய்யா.. துப்பிட்டு பேசு. "
தூப்.. தூப் "இன்னைக்கு என்னாடி சமையல்"
"லமன் சாதம், இட்லி"
"முந்தாநாளு புளிசாதம் கிண்டுன அது அப்படியே போய் விக்கிகிச்சி"
"ஆங்.. மைனரு ஆடு கோழின்னு வாங்கியாந்து போட வேண்டியது தானே. "
"உம்உம்.... போடுவோம் ஓடிபோன உன் அப்பன் பேட்டில கொண்டு கிட்டு வருவான். அப்போ ஆக்கி இறக்கு"
"உக்குங்... எங்க அப்பன இழுக்கலன்னா உனக்கு பொழுதே விடியாதே. என் அப்பன் இருந்துருந்தா நான் மூனே மாசத்துல காலேஜ் படிப்ப நிறுத்தி புட்டு. உன்ன ஏன் கட்டபோறேன். என் அப்பன் இருந்திருந்தா உருப்புடாத உன் தம்பிக்காடி என் மவள கட்டி கொடுக்க நிக்கிறன்னு என் அம்மாவ இழுத்து எறிஞ்சிருப்பான். " வாயில் பிரஸ்சை வைத்து கொண்டே அவள் கையை பின்னால் முறுக்கி "என்னடி ஓவாரா பேசுற.. ங்ங்"
"விடுந்த கைய வலிக்குது. "
"என்னாடி பாலு வாங்க காசு இல்லைன்ன சோப்பு மணக்குது"
"ஆங்.. உன்ன மயக்க தான்" அவன் கழுத்தை கோர்த்து பிடித்து கொண்டாள்.
"உன் மோவன் படிக்கனும்னு போனு வாங்கி கொடுத்துட்ட? நான் கிரைண்டர் கேட்டேன்"
"ஏய் அவன் ஆன்லைனு கிளாசுக்கு வேணும்னா? நானே இந்த மாசம் ஆட்டோ டியூவு என்ன பண்ண போறன்னு தெரியல?
அப்பா.. " கண்களை கசக்கி கொண்டே தூங்கி வழிந்து நின்றாள் மித்ரா குட்டி.
"வாடி வாடி தங்கம்" செல்வம் அள்ளி தழுவி கொண்டான்.
கணவன், பிள்ளைகள் சாப்பிட வந்தனர். எல்லோருக்கும் தட்டில் இட்லியை வைத்தாள். "யோகி இட்லி என்னா இப்படி புளிக்குது."
"ராணி அக்காட்ட வாங்குனன் பழைய மாவ கொடுத்துட்டா போல"
"முதல எப்பாடுபட்டாவுது கிரைண்டரு வாங்கனும்டி. இந்த பழச எடுத்துகிட்டு புதுசு கொடுக்குறாயிங்களான்னு கேட்போம்"
"எது இந்த தகரத்த எடுத்துகிட்டு புதுசு தருவாயிங்க"
செல்வம் இட்லியை சாப்பிடாமல் கையை கழுவினான். "த்த.. ஏன்❓"
"நீயே திண்ணு, பசங்களா வாங்க பள்ளிகொடத்துல உட்டுரன்" பிள்ளைகள் சென்றதும் வீடே வெறுச்சோ என்று ஆனது யோகிக்கு.சில நேரங்களில் தையல் தைக்கும் முதல் வீட்டு செண்பகத்திடம் சென்று ஜாக்கெட்டுகளுக்கு, சட்டைகளுக்கு பட்டன் காஜா தைப்பாள்.அதுவும் செண்பகம் தான் சொல்லி கொடுத்தாள். அவள் ஏதும் பத்து, இருப்பது கொடுப்பாள்.
"ஏன்டி யோகி இப்போ போனு முக்கியமா, கிரைண்டரு வாங்கிருக்களாம்ன"
"பெருசு ஏழாவது சின்னுது அஞ்சாவுது ரெண்டுக்கும் கிளாஸ் போன்ல எடுக்குறாங்க.படிப்பு தான முதல"
"இந்தா ஒருவாரம் போவுங்க அப்பறம் அந்த தோத்துவியாதி பரவும். அப்பறம் பள்ளிகூடம் ஏது? வயித்துக்கு பூவா ஏது. "
காஜா தைத்து முடித்தாள் யோகி.
"சரி நான் போறேன். போய் எதாவது குழம்ப காச்சிரேன்"
"ஏன்டி அந்த இமயமலை கதையை நேத்து பாதில உட்டுட்ட"
"அத நினைச்சிகிட்டு படுத்து தான் கனவெல்லாம் அதுவா வருது. நான் எங்க அப்பன கேட்டு அழுகுறன்னு என் அம்மா உன் அப்பன் இமயமலையில தான் இருக்கான்னு வாயில வந்த பொய்ய சொன்னா. அத நானும் நம்பிக்கிட்டு எல்லாருகிட்டையும் இமயமலை போறன்னு சொல்லிகிட்டு திரிஞ்சேன். போகபோக அது ஆசையாவே மாறிட்டு. ஆங்ங்...ஆனா ஒன்னுக்கா சாவுறதுக்குள அங்க போயிட்டு வந்துறனுக்கா அதான் ஏன் கனவு"
"போவோம்... போவோம்.. "
"சரி வரேன். " எழுந்து வீட்டிற்கு வந்தாள். புதிதாக வாங்கியிருந்த மொபைல் போன் ரிங்டோனை எழுப்பியது.
"ஹலோ.. "
"செல்வம் சார் இருக்காங்கலா"
"நான் அவங்க மனைவி தான் பேசுறேன். "
"மேடம், செல்வம் சார் எங்க கடையில தான் போன் வாங்கியிருந்தாரு. குலுக்கல்ல கிப்ட் கூப்பன் ஒன்னு உங்களுக்கு விழுந்துருக்கு."
"அப்புடியா என்னா சார் கிப்ட்"
"உங்களுக்கு பிடிச்ச இடத்துக்கு நீங்க டூர் போக டிக்கெட், தங்க இடம், சாப்பாடு எல்லாம் பீரியா ஏற்பாடு செஞ்சி தருவோம் அப்படி இல்லனா வீட்டு உபயோக பொருள் தருவோம். நீங்க நாளைக்கு கடைக்கு நேர்ல வாங்க. "
யோகேஸ்வரி பேருக்கு ஏற்றது போல யோகம் தான் என்பது போல சந்தோஷமிகுதியால் குதித்து கொண்டு இருந்தாள். இரவு வேலையை முடித்து விட்டு செல்வம் வீடு திரும்பினான். பிள்ளைகள் இரண்டும் உறங்கி கொண்டு இருந்தது. யோகி சாப்பாடு எடுத்து வைத்தாள், சாப்பிட்டான். காலையில் போன் வந்த கதையை சொல்லி முடித்தாள்.
"போயி பொருளவாங்கிட்டு வந்துடுடி"
"நான் இமயமலை போக போறேன்"
"போடி லூசு.. "
"நிசமா சொல்றேன் இரண்டு பேரு போவலமாம் நீயும், நானும் போவோம் புள்ளையல அம்மா வீட்டுல விட்டுபுட்டு"
"கூறுகேட்டவளே.. பேசாம படு. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்" அவன் திட்டிவிட்டு படுத்து விட்டான். விடியவிடிய நினைப்பதெல்லாம் இமயமலையாக இருந்தது. காலையில் எழுந்ததிலிருந்து செல்வம் வேலைக்கு போகும் வரை அவனிடம் முகம் கொடுத்து பேசவேயில்லை. சின்ன பிள்ளை போல் பிடிவாதம் பிடித்தாள். செல்வம் ஒரு முடிவுக்கு வந்தான்.
"போ போயி டிக்கெட்ட வாங்கிட்டு வா? எனக்கு முக்கியமான சவாரி இருக்கு"
"நிஜமாவா"
"ஆமாம்" என்று சிரித்தான் செல்வம். அவனை கட்டி கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தாள். அதே மகிழ்வோடு போன் கடைக்கு சென்றாள். போகும் வழியெங்கும் பலவருட கனவு பழிக்க போகிறதே என்ற சந்தோஷம் அவளை திக்குமுக்காட செய்தது. ஏதேதோ கற்பனை வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்தாள்.
"வெல்கம் மேடம்" என்றான் செல்ஸ் மேனேஜர். வந்த காரணத்தை சொன்னாள். போன் வாங்கிய பில்லை காட்டினாள்.
"எது மேம் நீங்க செலக்ட் பண்றீங்க. "
"டூர்.. "
" ஓகே.. சூப்பர் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு எந்த இடம் போகனும், உங்க நேம் டீட்டைல்ஸ் ஒரு பார்ம் தரோம் அதுல எழுதி கொடுங்க. "
யோகேஸ்வரி தலையை தலையை ஆட்டினாள் அவள் மனம் கொண்டாட்டம், குதூகலம் போட்டது. அவர்கள் கொடுத்த பார்மை பில் பண்ணி கொடுத்துவிட்டு வெளியில் வந்தாள்.
கடையின் கண்ணாடி கதவை தாண்டியவள் எதையோ யோசித்து மீண்டும் கடையின் உள்ளே சென்றாள்.
"சார்.. "
"சொல்லுங்க மேடம்"
"அந்த பொருள் சொன்னிங்களே அது என்ன"
"வெட் கிரைண்டர் மேம்"
அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். நிமிடங்கள் கடந்து ஓடியது " என்ன மேடம் சொல்லுங்க? "
" சார் நான் அந்த கிரைண்டரயே வாங்கிக்கிறன்"
"மேடம் முடிவ மாத்திட்டே இருக்கதிங்க. கடைசியா என்ன சொல்றீங்க? "
இரவுவேளை, மணி பதினொன்று ஆனது.
யோகேஸ்வரி நிலை வாசலிலேயே உட்கார்ந்து இருந்தாள்.
செல்வம் வேலை முடிந்து களைத்து போய் வந்தான்.
"என்னடி வெளியிலயே உட்கார்ந்து கிடக்குற. இப்பவே இமயமலை போக போறியா? " என்று சிரித்தான்.
"உள்ள வா.. " உள்ளே சென்றவனுக்கு பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்து.
"ஏன்டி இப்படி பண்ணுன"
"நீங்களா?கனவான்னு யோசிச்சேன்.. நீங்க தான்னுபட்டுச்சி" யோகி சொல்லும் போதே கண்ணீர் திரண்டு கொண்டு நின்றது அவள் க்ண்ணீல்.
செல்வம், யோகியை கட்டிக் கொண்டான்.
"நமக்கெல்லாம் கனவுங்கிறது கனவு மட்டும் தான" யோகி ஏக்கத்துடன் கேட்டாள்.
பளபளவென பொழுது விடிந்தது.
"யோகி.. இங்க பாரு.. மித்ரா.... " யோகியை எழுப்ப வாயெடுத்தவன் அவனே எழுந்து. மித்ராவை நகர்த்தி போட்டுவிட்டு யோகியை அணைத்து கொண்டு அவள் காதில் சொன்னான் "இரண்டு வருஷம் பொருத்துக்கோ உன்ன கண்டிப்பா அழைச்சிட்டு போறேன். " என்று அவளிடம் வாக்கு கொடுத்தான். யோகி அவன் மார்புக்குள் புதைந்துள்ள.
"
#783
Current Rank
48,433
Points
Reader Points 100
Editor Points : 48,333
2 readers have supported this story
Ratings & Reviews 5 (2 Ratings)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Pavalamani Pragasam
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points