தீ மிதிர்காலம்

த்ரில்லர்
4 out of 5 (3 Ratings)
Share this story

தீ மிதிர்காலம்- சிறுகதை - கவிஜி

********************************
சேப்டர் 1 -யுத்தன்

எனது நடையில் ஒரு வகை பூனைத்தனம் வந்திருந்தது.


இந்த ஒரு வாரமாக நான் ஒரு பிசாசைப் போல வேவு பார்த்துக் கொண்டிருக்கிறேன். எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே வீட்டு வாசலில் என் நிழலை மறைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் எதிர் வீட்டு சடையன் தான். அவன் எதற்கு சடை வளர்க்கிறான் என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று மனதார ஆசைப்படுகிறேன்.


எனதாசைகள் எப்போதுமே பேராசைகள் தான். கொலை செய்வது என்பது அத்தனை சுலபமானதா என்ன...!


ஆனால் எனக்கு செய்ய வேண்டும். வேறு வழி இல்லை. இல்லையென்றால் அவனிடம் தனிமையில் சென்று கெஞ்ச வேண்டும். எப்படியெல்லாம் கெஞ்ச வேண்டும் என்று பலமுறை பயிற்சி செய்தும் பார்த்தேன். காலில் விழுவது... கை கட்டிக் கொண்டு நிற்பது.... மண்டியிட்டு கைகள் விரித்து காப்பாற்றுங்கள் என்று முணுமுணுப்பது...அவன் ஒருவேளை காசு கேட்டால் எப்படியாவது கொள்ளையடித்தாவது தந்து விடுவது....எப்படியும் அவன் வாய் திறக்கக் கூடாது. எல்லாவற்றையும் மீறி நீதி நியாயம் தர்மம் என்று பேசி.... அல்லது வெறுமனே வாட்சப் பகிர்தலில் இருக்கும் குரூரத்துக்கு என்னை பலியிட்டால்...வேறு வழியே இல்லை. கொல்லத்தான் வேண்டும்.


அந்த சடையனோடு நான் இதுவரை பேசியதே இல்லை. கிட்டத்தட்ட 15 வருடங்களாக எதிர் எதிர் வீட்டில் இருக்கிறோம். ஆனால் நாங்கள் பேசிக் கொண்டது கிடையாது. பேச ஒன்றுமே இல்லை என்பது போல தான் அவன் உடல்மொழி இருக்கும். அவன் காட்டில் அவன் ராஜா. என் காட்டில் நானும் ராஜா. நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இப்போது அவனுக்கும் எனக்கும் ஒரு நேர்கோட்டு சிந்தனை முட்டிக் கொண்டு நிற்கிறது. ஒரு காட்சிக்குள் இருவரும் ஒளிந்து கண்ணாம் மூச்சி விளையாடுகிறோம். விளையாட்டின் மையம் எதுவென்று முடிந்தவரை உங்களிடமும் நான் மறைக்கத்தான் பார்க்கிறேன். ரகசியங்கள் என்பது சம்பத்தப்பட்ட ஆளே கூட திரும்ப திரும்ப நினைக்காமல் இருப்பது. ஆனால் கைமீறி போய் விட்டது. கழுத்திறுக்குவது தவிர வேறென்ன செய்ய முடியும்...?


அவன் செல்லும் இடமெல்லாம் ஒரு நாயைப் போல பின் தொடர்ந்தேன். அவன் காற்றில் கைவிடப் பட்ட இலையைப் போல நகர்ந்து கொண்டே இருந்தான். இரண்டு மூன்று முறை அவன் வீட்டு காலில் பெல்லை கிளிக்கி விட்டு அதன் பிறகு மனம் மாறி ஓடி வந்திருக்கிறேன். அவன் வந்து கதவைத் திறந்த மாதிரியே இல்லை. சொப்பனங்களின் சூட்டுக்கு கொப்புளம் நிறைந்த மனிதன் போல அவன் நடந்து கொள்கிறான்.


"சார் ஒரு நிமிஷம்.. கொஞ்சம் பேசணும்...." என்று நான் ஆரம்பித்து அவன் சிரித்துக் கொண்டே.... வில்லன் போல பேச ஆரம்பித்தால் என்ன செய்வது. ஆள் வைத்து கொல்வதெல்லாம் எப்படியும் மாட்டிக் கொள்ளும் விஷயம். ஆனால் அவன் ஒரு வாரம் ஆகியும் என்னைப் பற்றி மூச்சு விடாமல் இருக்கிறான். என்ன திட்டம் வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் வாய் திறந்தால்.... நான் என்ன ஆவேன் என்று தெரியவேயில்லை.


இன்று தாமதமாகத்தான் விழித்தேன்.


வீதியில் ஏதோ கூட்டம். இந்த வீதியில் இத்தனை மனிதர்கள் இருக்கிறார்களா என்று பெரும் வியப்பெனக்கு. ஆச்சரியம் இன்னும் தேர் பூட்டிக் கொண்ட சாமி ஊர்வலம் போல எனக்குள் நெகிழ்ந்தது. விசாரித்ததில் நெஞ்சில் குருதி வார்த்தார்கள். எதிர் வீட்டு சடையன் செத்து விட்டானாம். ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும், மூர்ச்சையாகும் சந்தோசம் என்னை சிந்திக்க விடாமல் தகிடதத்தம் செய்தாலும்... மெல்ல எறும்பு கடித்தது போல பின்னால் ஒரு சொரிதல்.


"எப்படி செத்தான்.....?!" நாம் தான் ஒன்றும் செய்யவில்லையே...? பின் எப்படி செத்தான். எனக்குள் ஏதேதோ மேப் விரிந்தது. சாமியானா நிழலில் பிணம் காணும் முகங்களில் செல்பி எடுத்து ஒட்ட வைத்துக் கொண்ட பாவனையோடு வெயில், முலாம் பூசிக் கொண்டிருந்தது.


சாவு வீட்டில் அரை மணி நேரத்துக்கு பின் செய்ய ஒன்றுமே இருக்காது. சும்மா நடப்பார்கள். நானும் நடந்தேன். என் கண்களில் எல்லாருமே என்னையே பார்ப்பது போல தான் இருந்தது. ஏதேதோ சிந்தனைகள் விழுந்தன. கண்களில் பூச்சி விழுந்ததை போல தானாவே அனிச்சையாய் தேய்த்துக் கொண்டேன் சிந்தனைகளை.


யாரோ தேநீர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். யாரோ குடித்துக் கொண்டிருந்தார்கள். நான் தேள் கடித்த திருடனைப் போல... உள்ளே சடையனின் பிணத்தருகே நின்று பார்த்து கொண்டிருந்தேன்.


"ஒருவேளை நேற்றிரவு நான் தான் கொலை செய்தேனோ.? மறந்து விட்டேனோ...!"


"டேய் சடையா.... நீ அங்க வந்திருக்க கூடாது... ரகசியங்களில் பங்கு கேட்டிருக்க கூடாது..." ஓடிச் சென்று கையில் வைத்திருந்த கத்தியால் அவன் அல்லையில் கச்சக் கச்சக் என்று குத்தி எடுத்தேன். பச்சை ரத்தம் பிசுபிசுவென ஒழுகியது.


கண்கள் சிமிட்டினேன். காட்சி மாறியது.


அவன் படுத்திருக்கிறான். நான் மட்டும் நிற்கிறேன். மெல்ல அருகில் சென்று, " சார்... நான் உங்கள கொல்லல.. உங்க கால்ல விழுந்து கெஞ்சத்தான் உங்கள பின் தொடர்ந்திட்டு இருந்தேன். ஆனா... நீங்க எப்படி செத்தீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா நீங்க சாகணும்னு நான் ரெம்ப ஆசைப்பட்டேன்."


வீதி மக்களில் சிலர் வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். அவரவருக்கு அவரவர் மரணம் நினைவுக்கு வந்திருக்கும்.


மீண்டும் அந்த அறையில் அவனும் நானும் மட்டுமே இருந்தோம். அவன் எழுந்தமர்ந்து, ' ஏன் இப்டி பண்ணின?' என்பது போல பார்த்தான். அவன் முகம் அகன்று நீண்டிருந்தது.


நான் வேகமாய் அருகே சென்று அவன் கழுத்தை நெறித்தேன். "நீங்க சும்மா கூட உயிரோடு இருக்கக் கூடாது சடையன். நீங்க சாவதுதான் சரி...." அவன் கழுத்து நெறிபட்டு கழுத்தெலும்பு உடைபடும் சப்தம் தேனீயின் நுணுக்கத்தை போல மெய்ம்மறந்து சறுக்கி இடைபுகுந்து சென்றது.


"ஆமா.... நேத்து நல்லாத்தான் இருந்தார்..."


"ஹார்ட் அட்டாக்...."


"இல்ல இல்ல......இது மூணாவது டைம்... ஏற்கனவே ரெண்டு முறை வந்துருக்கு..."


யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். வெல்லப்பாகு காய்ச்சி சுட சுட காதில் ஊற்றியது போல இருந்தது.


கூட்டத்தில் கலந்திருந்து எட்டிப் பார்த்த செண்பகா பாட்டியின் பேரன் தூயவன் என்னைப் பார்த்ததும் என் அருகே வந்து அமர்ந்து கொண்டான். 10 வயது ஆகிறது. கொஞ்சம் குள்ளமாகத்தான் இருப்பான். வயதுக்கும் அவன் வாழ்வுக்கும் தொடர்பில்லாதது அவன் பிழைப்பு. தோற்றம். உருவம்....பேச்சு... பார்வை....எல்லாமே தனித்து விடப்பட்ட ஒரு தவிப்பின் பதற்றத்தோடு தான் இருக்கும். அவன் இதோ இப்போது கீழே விழுந்து விடுவான் என்ற பாவனையோடு தான் எப்போதும் இருப்பான். அப்போதும் இருந்தான்.


அவனை சேர்த்து அமர்த்திக் கொண்டே திரும்பினேன். மெல்ல புன்னகைத்த செண்பகா பாட்டி பெண்கள் பக்கம் நின்று கொண்டு பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தது. மரணம் அதுக்கு சலிப்பு தட்டிய ஒன்று. தட்டிய சலிப்பிலெல்லாம் தன் மரணத்தை எப்போதும் தூக்கி அலையும் மனமற்ற மனுஷி.


"சாப்டியாடா....." என்று கிசுகிசுத்தேன்.


"ம்ம்ம்.... பாட்டி ரொட்டி செஞ்சு குடுத்துச்சு..." என்று அவனும் கிசுகிசுத்தான்.


"இனிப்பு ரொட்டியா...?" என்றேன்.


"ம்ம்ம்" என்று பற்கள் காட்டி சிரித்தான் தூயவன்.


*


சேப்டர் 2 - தூயவன்


காரணமற்று நின்றிருந்தான். மழை ச்சோவென கொட்டுகிறது. அவரவர் பிள்ளைகளை பேருந்து நிறுத்தத்தில் இருந்து குடை பிடித்துக் கொண்டு அழைத்து செல்கையில் அவன் மட்டும் தனித்து நின்றிருந்தான். அவன் காணும் சோகம் அவன் முகத்தில் சொட்டியது. அவனை முன்பே பலமுறை நான் பார்த்திருக்கிறேன். அவன் கால்களில் செருப்பு எப்போதுமே இருந்ததில்லை. அவனுக்கு கால்கள் இருக்கிறதா என்ற சந்தேகமும் வரும். அப்படி எப்படி நடக்கிறான் என்று தவிப்பும் இருக்கும் அந்த குறுகுறு நடையில். முட்டி வரை தொங்கும் ட்ரவுசரை எப்போதும் தூக்கிப் பிடித்துக் கொண்டே இருப்பான். ஊருக்குள் அவனை ஆங்காங்கே பார்த்திருக்கிறேன். கடைகளில் ஏதாவது வாங்கி அங்கேயே நின்று தின்று கொண்டிருப்பான். அது தின்பது போன்ற பாவனையாக கூட சில சமயம் இருக்கும். கனிவற்ற முகம் அவனுக்கு. எங்கு பார்க்கிறான் என்று கணிக்கவே முடியாத பார்வையில் அவன் அவன்தானா என்றே சந்தேகம் வரும் நமக்கு.


அவன் வயது பிள்ளைகளுக்கு இருக்கும் இயற்கையான ஒரு முகம் அவனுக்கு இல்லை. சூனிய முகம் அது. அவன் கை கால்கள் சூம்பிக் கிடந்தன. அவன் கண்களில் பசித்த பொந்துகள் இரைக்கு அலையும் இயந்திரமாகவே சுற்றிக் கொண்டிருக்கும். மழைக்குள் யாரையோ எட்டி எட்டித் தேடுகிறான் என்று தெரிந்தது. அவனோடு இருக்கும் அந்தக் கிழவியைத் தேடுகிறான் என்று புரிந்த கணத்தில் அவனருகே சென்றேன்.


"வா....பைக்கில் உட்கார். வீட்டில் விடுகிறேன்....!" என்றேன்.


என்னையே முறைத்துப் பார்த்தவன்; 'முன்னால உக்காந்துக்கவா' என்று பாறை கிழிந்த உதட்டில் கேட்டான். அவன் பார்வை விரிந்திருந்தது. இறுக்கத்தில் இருந்து தன்னை தளர்த்திக் கொண்ட சிரிப்பை அவன் அத்தனை கிட்டத்தில் கஷ்டப்பட்டு காட்டினான்.

'வீடு...?" என்றேன்...!


அவன் வழி காட்டினான்.


அந்த வீட்டில்... அந்தக் கிழவி.... கையெடுத்துக் கும்பிட்டது.


பக்கத்து வீட்டில் குடை கேட்கத்தான் போயிருந்ததாக கூறியது. அந்த வீட்டில் வெறும் சுவர்கள் மட்டும் தான் இருந்தன. அதில் ஒரு வீட்டை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்கள் என்று தான் தோன்றியது. இருந்த ஒரே அறையில், சுவற்றில் மாற்றப்பட்டிருந்த ஒரு புகைப்படத்துக்கு மாலை போடப்பட்டிருந்தது. என் கண்கள் அனிச்சையாய் சந்து பொந்துகளில் நுழைந்து தேடியதில் சிக்கிய போட்டோ காட்சி அது.


"தம்பி, நீங்க படம் எடுக்கறவர்தான...? நான் உங்கள பாத்திருக்கிறேன்...! இருங்க, டீ போடறேன்" என்ற அப் பாட்டியின் தோற்றம் பரிதாபத்துக்குரியதாக இருந்தது.


"என்ன புரிந்து கொண்டதோ...தன் பேரனை இழுத்து அணைத்துக் கொண்டு, அவன் தலையைத் தடவியது. நான் நன்றி சொல்லி விட்டு வந்து விட்டேன். அதன் பிறகு வழியில், கடையில், பேருந்து நிறுத்தத்தில் அந்த பையனுக்கு நான் தின்பண்டம் வாங்கி கொடுத்தேன். அவன் பாக்கெட்டில் பத்து ரூபாய் இருபது ரூபாய் என்று வைத்தேன். என்னைப் பார்த்தாலே ஓடி வந்து மூச்சிரைக்க என் பக்கம் நின்று கொள்வான். எதுவும் பேச மாட்டான். என்னைக் கண்டால் அவன் கண்கள் அலைபாயும். உறைந்து நிற்கும் அவன் சிரிப்பு புது மாதிரியான சிரிப்பாகவே இருந்தது.


தூயவன்- நாலாப்பு சி


அழுக்கேறிய சீருடையில் சுருங்கிய முகத்தில் அவன் குறுகுறுவென நடந்து கொண்டிருப்பான். அவன் கையைக் கெட்டியாக பிடித்தபடி அந்த செண்பகா பாட்டி வேகவேகமாய் அவனோடு நடக்கும். இருவர் காலிலும் நான் செருப்பு கண்டதில்லை. இது எங்கள் வீதியில் யாரோ வரைந்த ஒரு சித்திரமாக நான் தினமும் பார்த்துக் கொண்டே இருந்தேன். இன்னொரு மழை நாளில் அவனை குடைக்குள் அமர்த்தி வீடு சேர்த்த போது செண்பகா பாட்டி அவன் கதையைக் கூறியது.


மழை முழுக்க கண்ணீர் சொட்டும் கதை அது.


சேப்டர் 3 - மலர்விழி

"வினீத் என்ன பண்றாங்க உன் பிரன்ஸ்....... இது தப்பு... நாம லவ் பண்றோம்... வினித்.. நமக்குள்ள எல்லாமே சகஜம்.. ஆனா உன் பிரென்ட் கூட எப்டி...! என்னைப் பத்தி...என்ன நினைச்சிட்டு இருக்காங்க உன் பிரெண்ட்ஸ்.... நீயும் பேசாம இருக்க... .? நீ என்னை நிஜமா லவ் பண்றயா....இல்ல, இதுக்குத்தான் பழகினயா....? அயோ கடவுளே.... விடுங்கடா ; நான் கிளம்பனும்.... என்ன விட்றுங்க..... "


மலர்விழி பதறிக் கொண்டு பேச பேச நண்பன் ஒருவன் அவள் காலை பரப்பி பிடித்து தன் கழுத்து டை கொண்டு கட்டிலோடு சேர்த்துக் கட்டினான். இன்னொரு நண்பன் அவள் இரு கைகளையும் சிலுவையாக்கி மூலை மூலைக்கு கட்டினான்.


வினீத் வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தான்.


சற்று முன் வினீத்தும் மலர்விழியும் அந்த அறையில் தனித்திருந்தார்கள். முத்தங்களாலும் மொத்தங்களாலும் இருவரும் காதலைக் கொண்டாடித் தீர்த்தார்கள். கண் பட்ட இடமெல்லாம் ஆசை முட்டி மோதி வேர் விட்டது மலர்விழிக்கு. ஆகையால் காதலிக்கலாம் வா என்று வாரி வாரி தழுவிக் கொண்டாள். தவறென்று ஒன்றுமில்லை. தாலிக்கு வாய்த்தவனிடம் வேலி தாண்டுதல் தப்பேதுமில்லை. வியாக்கியானம் முணங்கியது. உள்ளிருந்து எழும்பிய தாபத்தின் சுவர்களை அவன் முட்டித்தள்ளி ஸ்பரிசமாக்கினான்.


கால்கள் பின்ன இதழ்கள் மின்ன.. மாறி மாறி வேர்த்த போது பெண்மையும் ஆண்மையும் இடம் மாறி இருந்தது. உடல் முழுக்க களைத்த போது கதவு தட்டப்பட்டது.


அரை குறை ஆடையில் எழுந்தவன், கதவு திறக்கையில்... வெளியே நண்பர்கள் இருவர்.


"வாங்கடா..." என்று உள்ளே அழைத்தவன் முன் அறையில் இருக்க சொல்லி விட்டு உள்ளே சென்றான்.


நேரம் ஓட பாரம் கூட மீண்டும் உள் அறைக் கதவும் தட்டப்பட்டது. தட்டும் சத்தத்தில் நடுக்கம் இருந்தது.


திறந்த வினீத்....."என்னங்கடா...?" என்றான்.


அவனை வெளியே வர ஜாடை செய்தார்கள் நண்பர்கள். வெளியே நன்றாக வந்தவன் கொஞ்சம் திறந்திருந்த கதவை நன்றாக சாத்தி விட்டு
"என்ன மச்சான்....! எதும் ப்ராப்ளமா...?" என்றான்...இருவரையும் மாறி மாறி பார்த்து.


இருவருமே வினீத்தின் கால்களில் விழுந்தார்கள்.


"என்னாச்சுடா....., இப்போ சொல்ல போறீங்களா இல்லயா....?" கத்தினான்.


"மச்சா.... ப்ளீஸ்டா.... தப்பா நினைக்காத... .. நாங்களும்..... மலர்விழி கூட..... ப்ளீஸ்" என்றவர்களின் கண்களில் சிவப்பு வழிந்தது. முகம் கூட உப்பி இருந்தது. வாய் ஊறிய முகத்தில் காமம் கனத்திருந்தது.


"முட்டா....... அவ என் லவ்வர்டா.. லூசுங்க மாதிரி பேசறீங்க.. கிளம்புங்கடா..... நாய்ங்களா.... உங்கள வீட்டுக்குள்ள விட்டதே தப்பு....அவுட்.... அவுட்.. இடியட்ஸ்...." வினீத் கத்தினான்.


வெளிக்கதவு சாத்தப்பட்டது.


நண்பர்கள் இருவரும்.... கெஞ்சிக் கொண்டே இருந்தார்கள்.


"ப்ளீஸ்டா மச்சா.... சொன்னா புரிஞ்சுக்கோ... பிளீஸ்...." அவர்கள்... ஆடை அவிழ்த்துக் கொண்டு நின்றார்கள்.


"சொன்னா கேளு மச்சா..."என்று சொல்லிக் கொண்டே வினீத்தின் வயிற்றில் ஓங்கி ஒரு மிதி வைத்து விட்டு மலர்விழி இருந்த அறைக்குள் நுழைந்தார்கள் நண்பர்கள்.


வினித் மூச்சு வாங்கி கீழே சரிந்திருந்தான்.


மலர்விழியால் கத்த முடியவில்லை. வாயில் உள்ளாடை திணித்து கட்டியிருந்தார்கள்.


அப்படி இப்படி என்று அசைய முடியவில்லை.


முதல் நண்பன்... பிறகு இரண்டாவது நண்பன். அவள் மீது படர்ந்தான். கதவு மெல்ல திறக்கப்பட்டது. இன்னும் இரண்டு நண்பர்கள் வந்திருந்தார்கள். இப்போது அறைக்குள் தவழ்ந்தபடியே நுழைந்திருந்த வினித் சிலையாகி அமர்ந்திருந்தான்.


புது ஊர்.... நகரம் தன் கோர குறியால் அவளைப் புணர்ந்து தள்ளியது. அவள் சோர்ந்திருந்தாள். அவள் கட்டுகளை உணர்ச்சி வேகத்தில் அவிழ்த்து விட்டிருந்தான் ஒரு நண்பன். அவள் பார்வை முழுக்க காதலன் மீதே நிலை குத்தி இருந்தது.


"ஏதாவது செய்.... உன்னை நம்பித்தானே வந்தேன்" என்பது போல அவள் பார்வை வெறித்திருந்தது.


மீண்டும் இரண்டு நண்பர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். முடித்தவன் முன் அறைக்கு சென்று இன்னுமிரண்டு நண்பர்களுக்கு செய்தி பரிமாற்றம் கொடுத்தான். இன்னும் இருவர் சற்று நேரத்தில் வந்து விடக் கூடும்.


இப்போது புணர்ந்து கொண்டிருந்த நண்பனை அனிச்சையாய் தழுவிக் கொண்டிருந்தாள் மலர்விழி. தொடர் புணருதலின் முடிச்சில் இருக்கும் வலி சுகமாய் மாறி இருந்தது. முடியாத போது ஏற்றுக் கொள்ளும் பசி வாய்த்தவள் தான் அவள். அது இப்போது உடல் கொடுத்தது. அவள் பார்வை மட்டும்.... சிமிட்டாத கண்களோடு காதலனை வெறித்திருந்தது.

இடையே வினீத்தும் ஒரு முறை புணர்ந்தான். புணர்தல் அங்கே சகஜமாகிக் கொண்டிருந்தது.


"சூப்பர்டா மச்சா...இப்டித்தான் ஸ்போட்டிவா எடுத்துக்கனும்..."என்ற நண்பன் மலர்விழியைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளின் கால் கட்டுகளையும் அவிழ்த்து விட்டான். அவள் தொடர் புணர்தலை மூச்சு முட்ட உள்வாங்கிக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட எட்டு பேர். மாற்றி மாற்றி புணர்ந்து விட்டு ஒவ்வொருவனாக வெளியாறினார்கள். அவள் அம்மணமாய் கட்டிலில் கிடந்தாள். அந்த காட்சியில் அவள் ஒரு வேங்கையைப் போல தெரிந்தாள். அவளின் ஆழ்மனம் அவளையும் அறியாமல் இன்னும் யாராவது வாங்களேன் என்று அவளைக் கீறியது. வலி மறத்து போய் வலியில் சுகம் காணும் நிலை அது. புண்ணென்று தெரிந்தும் சொரியும் சுகம் அது. அவமானப்படுதலின் அடுத்த கட்டம் அது. தன்னையே சுரண்டி சுரண்டி தன்னையே தின்னும் ஆத்மார்த்தம் அது. கெட்டுப் போவதன் பூரணத்துவம் தேடும் கால்களுக்கிடையே இன்னும் பூரித்து தான் கிடந்தது அவளது பெண்மை. ஆவென திறந்து கிடக்கும் முக்கோண காட்டில் இன்னும் யாரும் வந்து தொலையலாம் என்றே விரும்பியது அவளின் ஆன்ம குருதியின் சுவை. தன் ரத்தத்தையே உரிந்து உரிந்து பின் மயங்கி சரியும் நாயின் பேராசையைக் கொண்டிருந்தாள். யாருமற்ற அந்த அறையில் இருந்த தன் காதலனைப் பிடித்து இழுத்து மீண்டும் அணைத்துக் கொண்டாள்.


இம்முறை அவள் அவன் மீதேறி அமர்ந்து ராட்சஸப் புணர்தல் நிகழ்த்தினான். அவன் வாயில் துப்பிக் கொண்டே இருந்தாள். வாய்க்குள்.... வயிற்றுக்குள்... குறிக்குள்.. மார்புக்குள்.. அக்குளுக்குள்.... எதுவோ உறுத்திக் கொண்டே இருந்தது அவளுக்கு.

களைத்துக் கிடந்த மலர்விழி கட்டிலில் பிணத்தைப் போல கிடந்தாள். கீழே மறத்துப் போன மிருகம் போல அமர்ந்து எங்கோ சூனியம் வெறித்துக் கொண்டிருந்தான் வினீத். அந்த அறையில்.... மனித வாசம் மிதந்து கொண்டிருந்தது. தொடர் கொலைகளினால் அந்த அறையில் சொல்லொணா நெடி படர்ந்திருந்தது. அறை முழுக்க சுற்றிய மலர்விழியின் கண்களில் வினீத்தின் அம்மா அப்பா சேர்ந்திருக்கும் போட்டோ விழுந்தது. மெல்ல எழுந்தவள் நடுங்கிக் கொண்டே அந்த போட்டோ அருகில் சென்று சுவற்றில் இருந்து பலம் கொண்டு பிடுங்கினாள். பிடுங்கிய போட்டோவை கீழே போட்டு அதன் மீது அமர்ந்து மூத்திரம் போனாள். உடல் நடுங்க செய்வதறியாது வினீத் பார்த்துக் கொண்டே இருந்தான். ஒரு நிமிடம் தாண்டியும் வந்து கொண்டிருந்த மூத்திரத்தில் கொஞ்சம் ரத்தமும் கொஞ்சம் சதையும் கொஞ்சம் காதலும் கொஞ்சம் கருமமும் கலந்திருந்தது. எழுந்து ஆடை மாற்றியவள்... வேகமாய் அவனருகே வந்து அவன் தலையை பிடித்து வேகமாய் சுவற்றில் மோதினாள்.... மோதினாள்......மூன்றாவது மோதலுக்கு அவன் தலை சரிந்திருந்தது. இன்னுமொரு முறை மோதி தலையை சிதறு என்பது போல பார்த்தது சரிந்து கிடந்த வினீத்தின் தலை.


அப்படி இப்படி என்று சொந்த ஊரில் தலைமறைவு வாழ்க்கையில் 9 மாதம் சில நாட்களில் தூயவன் பிறந்து விட்டான். அம்மா செண்பகாவிடம் குழந்தையை கொடுத்த மறுநாள் தூக்கில் தொங்கி விட்டாள் மலர்விழி. ஊர் பேச்சு காது கொடுத்து கேட்க முடியவில்லை. உள்ளே எழும் தன் பேச்சு முரண்பட ஆரம்பித்திருந்தது. முன்னுக்கு பின் உளரத் துவங்கும் இடத்தில் சாவு உசிதம் என்று நம்பினாள். கொலை கேஸ்... தற்கொலை என்று அடுத்த இரண்டு வருடங்கள்....செண்பகாவின் துக்கம் தூயவனின் அழுகைகளால் நிரம்பியவை.


செண்பகாவும் சிறு வயதில் ஒருவனால் ஏமாற்றப்பட்டவள் தான். அதன் மிச்சம் தான் மலர்விழி. வாழ்நாள் முழுக்க பாத்திரம் தேய்த்துக் கொண்டே அழும் சாபம் பெற்றவள் செண்பகா.


சேப்டர் 4 - செண்பகா பாட்டி

"இப்போ எனக்கு வயது 60. இன்னும் பத்து வருசத்துக்காவது நான் உயிரோட இருக்கனும் யுத்தன். தூயவன் வளர்ற வரைக்குமாவது நான் இருக்கனும்தான....? என்ன செய்ய. நான் செத்துட்டா இவன் அனாதையாகிடுவானே.. "துக்கம் தொண்டையில் முள்ளாகி விட அத்தனை உயரமான ஆஜானுபாகுவான செண்பகா பாட்டி குலுங்கி அழுவதை பார்க்க சகிக்கவில்லை. பக்கத்து பெரிய வீடுகளில் பாத்திரம் தேய்த்து தேய்த்து ரேகைகள் அற்ற தன் கைகளை காட்டி அழுகையில்... காலத்தின் சுவடுகள் செண்பகாவுக்கு இல்லவே இல்லை. ஒருபோதும் சந்தோசங்களை நெருங்கிப் பார்த்திடாத செண்பகாவுக்கு வாழ் நாள் முழுக்க துக்கத்தின் கதவுகள் தான் திறந்து கொண்டே இருக்கின்றன.


ஒரு ஜோடி துணி எடுக்க இன்னும் நான்கு வீடுகளில் துணி துவைக்க வேண்டும். இட்லியும் தோசையும் இன்னும் பலகாரம் தான் தூயவனுக்கு. அவனுக்கு அவன் அம்மா பற்றி ஊர் பேசும் ரகசியங்கள் ஒருமாதிரி புரிந்தன. அவனுக்கு யாரிடமும் பேச ஒன்றுமே இல்லை. செண்பகாவின் வாழ்வு நடுக்கத்துக்குரியவை. நாடகத்தில் வரும் திருப்பங்கள் நிறைந்தவை. பசி பஞ்சம்.. பட்டினி.. வேலை.. தனிமை.. இருள்... சாக்கடை நாற்றம்.. கொசுக்கடி.. மூட்டைபூச்சிக்கடி... உப்புசம்... என்று தன் வாழ்நாளெல்லாம் வயிற்றுக்கு அடித்துக் கொண்டு சாவதிலேயே வாழவும் கற்றுக் கொண்டிருந்த செண்பகாவுக்கு ஒவ்வொரு நாளும் பயத்தை தந்து கொண்டிருப்பவன் தூயவன். அவன் முகத்தில் துளியளவு கூட மலர்விழியின் ஜாடை இல்லை. மலர்விழி தூக்கில் தொங்குகையில் சிரித்தபடியே இருந்தது இன்னும் துக்கமானதாகவே இருக்கிறது. தாயைக் காணவே காணாத தூயவன் செண்பகாவையே தாய் என்று நம்புகிறான்.


நான் அடிக்கடி சென்று உதவி செய்ய ஆரம்பித்தேன். அவனுக்கு புது ட்ரெஸ் வாங்கிக் கொடுத்தேன். அடுத்த மாதம் சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.


எப்போது வீட்டுக்கு சென்றாலும் சக்கரை கம்மியா டீ போட்டுத் தரும் செண்பகா பாட்டி கையெடுத்துக் கும்பிடும். நீ நல்லா இருக்கணும் யுத்தன்.....உன் மனசு பெருசு. நீ இதுவரை செஞ்சதெல்லாம் பெரிய உதவி. தூயவன் எப்படியாவது படிச்சு முன்னுக்கு போய்டனும். அவ்ளோ தான். அதுக்கப்புறம் இந்த உயிர் போய்ட்டா எந்தக் கவலையும் இல்ல. என்று பேசி என்னை விட்டு விட்டு, எது பத்தியும் கவலைப் படாம படக்குனு தூக்குல தொங்குன அந்த திருட்டு முண்டையை மட்டும் திரும்ப நான் பெத்துறக் கூடாது என்று மலர்விழியின் போட்டோவை பார்த்து துப்பி பேசி அழுத செண்பகா பாட்டிக்கு எப்போதுமே நடுங்கும் உடல் தான்.


சேப்டர் 5 - சடையன்

சக்கரை கம்மியாய் டீ தந்த செண்பகா பாட்டிக்கு நன்றி சொல்லி விட்டு தென்றலை எடுத்து பருகினேன். என் கண்கள் முழுக்க சடையனின் பிணத்தை சுற்றி ஈக்களாய் நகர்ந்து கொண்டிருந்தன.


இன்னும் சற்று நேரத்தில் பிணத்தை எடுத்து விடுவார்கள்.


எனக்குள் கேள்வி திரும்ப திரும்ப திரும்ப கொலை செய்து கொண்டிருந்தது. அவனைக் கொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவன் அவனாகவே செத்து விட்டான். ஒரு பக்கம் ரகசியம் மூடி மறைக்கப்பட்டு விட்டது என்றாலும் எனக்கு சடையனின் மரணத்தின் மேல் சந்தேகம் இருந்தது. சடையனை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்த நான் செண்பகா பாட்டியைப் பார்த்ததும் பட்டென்று தன் கண்களை தாழ்த்திக் கொண்டு மற்றவர்களுக்கு தேநீர் கொடுக்கும் வேலையைத் தொடர்ந்தது.


அன்று சடையன் அங்கு வந்திருக்கக் கூடாது. நானும் செண்பகாவும் அப்படி ஒட்டுத்துணி இல்லாமல் புணர்ந்து கொண்டிருந்த போது ஜன்னலைத் தாண்டி அந்த சடையன் பார்த்திருக்க கூடாது. பட்டென்று ஜன்னலின் நிழலைப் புரிந்து கொண்ட நான் எழுந்து வேகமாய் வெளியேறி அவனைத் தேட ஆரம்பித்ததில் இருந்து தொடங்கியது இந்தக்கதை. நல்லவேளை அவன் செத்து போனான். நிம்மதி தான். ஆனால்.... இது இயற்கை மரணமா...... கொலையா....? செண்பகா செய்திருக்க வாய்ப்பில்லை. அவன் பார்த்து விட்டது செண்பகாவுக்குத் தெரியாது என்று தான் நான் நினைக்கிறேன். அது பற்றி என்னிடம் செண்பகா இதுவரை ஒன்றும் கேட்கவில்லை. நானும் எதுவும் சொல்லவில்லை.


பிணத்தை தூக்கி விட்டார்கள்.


கூட்டத்தோடு நானும் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். ஆங்காங்கே பெண்கள் கூட்டம் சிறுவர் கூட்டம் என்று நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. என் கண்கள் அலைபாய்ந்ததில் சிறுவர் கூட்டத்தில் நின்றிருந்த தூயவன் பிணத்தைப் பார்த்து அனிச்சை செயலைப் போல மெல்ல புன்னகைத்தது போல இருந்தது...தெரிந்தது.


திக்கென்று குனிந்து கொண்டேன்.


நாங்கள் புணர்ந்து கொண்டிருந்த அறையில் எதிர்ப்புறம் இன்னொரு ஜன்னல் இருந்தது இப்போது நினைவுக்கு வந்தது...!


கவிஜி

Stories you will love

X
Please Wait ...