காலத்தின் கையில் திறமை

கற்பனை
5 out of 5 (12 Ratings)
Share this story

ஏப்பா! வாழைமரம் கட்டியாச்சா, சீரியல் லைட்டு சொல்லிடீங்களா, என்னப்பா! இவ்ளோ மெதுவா வேலை பாக்ககுறீங்கா சீக்கிரம்! சீக்கிரம்! என்ற பரபரப்புடன் காணப்பட்டார் ராமசாமி.

அவரின் மூன்று பெண்களின் திருமணத்தை விட தன் இளைய மகளின் (4வதுமகள்) திருமணத்தை இன்னும் கிரேண்டாக செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

"மாமா சாப்பாட்டுக்கு சொல்லியாச்சு, மண்டபத்தில் டெக்கரேசன் நடந்துகிட்டு இருக்கு, சமையல் ஜாமான் வாங்க சொல்லிட்டேன், தண்ணி கேன் சொல்லிட்டேன், வண்டி ஏற்பாடு பண்ணிட்டேன், நம்ம இரண்டு மாப்ளைங்க தங்குரதுக்கும் வீடு ரெடி பண்ணிட்டேன்" என்று பரபரப்புடன் அடுத்து வேலை என்ன என்பது போல் கேட்டார் அவரது முதல் பெண்ணின் கணவர் அதாவது அவரின் மருமகன் சக்திவேல்.

அவர் அவரின் மருமகன் மட்டுமல்லாமல் அவரின் சொந்த தங்கையின் மகன். என்னதான் இரண்டாவது மருமகன் அரசு வழக்கறிஞர், மூன்றாவது மருமகன் சாப்ட்வேர் இன்ஜினியர், இப்போது பார்த்திருக்கும் மாப்பிள்ளை கூட ஐ.டி. துறையில் பெரிய அதிகாரியாக இருந்தாலும், இவரின் அன்பும், பாசமும் தனது முதல் மருமகனான சக்திவேலுக்கு தான்.சக்திவேல் சொந்த ஊரில் விவசாயம் செய்தும், ஆடு, மாடுகளை வளர்த்தும், பால் வியாபாரம் செய்துக் கொண்டும் இருக்கிறார். ஆனால் சக்திவேல் திருமணத்திற்கு முன் தொழில் தொடங்கி நஷ்டம் ஏற்பட்டதால் வேறு வழி இல்லாமல் தற்போதைக்கு விவசாயம் செய்தும், தன் மாமனார் வீட்டிலேயே மனைவி மற்றும் தன் இரு குழந்தைகளுடன் இருக்கிறார்.

பாம்|பாம்!

"டேய் சக்திவேல்! நம்ம மாப்ளைங்க வண்டி வந்துருச்சு வாடா" என்று கூறிக்கொண்டே ராமசாமி வாசற்படியை நோக்கி சென்றார்.

வாங்க மாப்ள!வாங்க மாப்ள!என்று தனது இரு மருமகன்களையும், மகள்களையும் வரவேற்றார்.

ஹாய் தாத்தா! என்று தனது பேரன், பேத்திகள் ஓடி வந்து தாத்தாவின் தோளில் ஏறிக்கொண்டார்கள்.

வாங்க, வாங்க சகல! எப்படி இருக்கீங்க!என்று ஆசையுடனும், ஆவலுடனும் சக்திவேல் ஓடி வந்தான்.

"ம்... உனக்கென்ன மாமனார் வீட்டிலேயே ஜாலியா செட்டில் ஆகிட்ட, எங்களுக்கு தான் அந்த வாழ்க்கை குடுத்து வைக்கல," என்று முகத்தை சுளிக்கும் படி பதில் சொன்னார் இரண்டாவது மகளின் கணவன்.அதற்கு ஜால்ரா அடிப்பது போல் "அதுக்கெல்லாம் ஒரு ராசி இருக்கனும் சகல" என்றார் மூன்றாவது மருமகன்.

ஆனால் சக்திவேலுக்கு இது ஒன்றும் புதிதல்ல, ராமசாமி குடும்பத்தில் என்னவிசேஷம் நடந்தாலும், இரு மருமகன்களும் சக்திவேலை மட்டம் தட்டி பேசுவதும் ,இழிவாக பேசுவதும் வழக்கம் தான். ஆனால் அவர்களை சமாளிக்க அவனுக்கு தெரிந்தது மௌமான சிரிப்பு மட்டும்தான்.

ஆனால் ராமசாமிக்கு கோபம் தலைக்கேறும். சரி மருமகன்கள் ஆகிவிட்டதால்,அவர் கோபத்தை பொறுத்துக் கொள்வார்.

"சரி சரி !வாங்க மாப்ளைங்களா சாப்பிடலாம்" என்று சமாளித்து அனைவரையும் சாப்பிட அழைத்தார் ராமசாமி.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கையில், "நாளைக்கு காலைல கல்யாணம் முடிஞ்சதும் சாயங்காலம் எல்லாரும் போரதுக்கு பஸ் சொல்லிட்டியா,"என்று சொல்லி முடிப்பதற்கு முன்பே "டூரிஸ்ட் பஸ் புக் பண்ணிட்டேன் மாமா எல்லாரும் பஸ்லயே போயிரலாம்" என்றான் சக்திவேல்.

"எங்கிட்ட கார் இருக்கு நாங்க கார்ல வந்துற்றோம்" என்று கர்வத்துடன் சொன்னார் சாப்ட்வேர் இன்ஜினியர்.

"இல்ல மாப்ள, நாளைக்கு காலைல கல்யாணத்த முடிச்சுட்டு, 300 கிலோ மீட்டர் உங்களால் கார ஒட்டிட்டு வர முடியாது, இன்னும் நீங்க ஊர்ல இருந்து வந்த டையர்டு கூட போகல", என்று அவரை ஒரு வழியாக ஒத்துக்க வச்சுட்டார்.
சரி எல்லோரும் தூங்குங்க, நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்திரிக்கனும், என்று ராமசாமி சொல்லிக்கொண்டே அவரின் அறைக்கு சென்று உறங்க தொடங்கினார். ஆனால் அவர் மனதில் நாளைக்கு தன் இளைய மகளின் திருமணம் நல்ல படியாக எந்த தடங்களும் இன்றி நடக்க வேண்டும் என்று யோசித்து கொண்டே கண்ணை மூடினார். சக்திவேலும் இரவு 11 மணிக்கு வேலையை முடித்துவிட்டு தூங்கச் சென்றான்.

சக்திவேலின் மகன் தினகர் தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தான். "என்னடா! தம்பி தூங்கலையா "என்று கேட்டவாறு, மனைவியை தள்ளி படுக்கும் படி சைகை காட்டி தானும் படுத்தான்.

"அப்பா நா உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா" என்றான்

என்னடா!

"உங்களுக்கு எந்த திறமையும் இல்லையாப்பா"

சக்திவேல் சிரித்து கொண்டே "ஏண்டா இப்படிகேக்குற"

"இல்லப்பா,திவ்யாவும் ஷாலினியும் அவங்க, அவங்க அப்பாக்கு திறமை நிறைய இருக்குறதால தான் பெரிய ஆளா ஆயிட்டாங்களாம், உங்களுக்கு திறமை இல்லாததால் தான் இப்படி இருக்கீங்கனு சொல்றாங்க பா".

"சரி பதிலுக்கு நீ என்ன சொன்ன"
"நான் நாளைக்கு எங்க அப்பாகிட்ட கேட்டுட்டு வந்து சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்".

"சொல்லுங்கபா உங்ககிட்ட என்ன திறமை இருக்கு" என்று கேட்டுக்கொண்டிருக்கையில்,

"டேய், பேசாம தூங்குடா" என்று கத்தினாள் அம்மா.

"ஏய் விடுடி, நான் பேசிக்கிறேன் பையன்கிட்ட, நீ பேசாம தூங்கு "என்றான் சக்திவேல்.

"அதாவது தம்பி திறமைங்கறது எல்லார்க்கிட்டையும் இருக்கும்பா, ஆனால் வெளியே காட்ட அதுக்கு தகுந்த காலமும், நேரமும் வரனும்,அது வர்ர வரைக்கும் நம்ம காத்து இருந்து தான் ஆகனும், ஆனால் எல்லாருடைய வாழ்க்கையிலும் அந்த நாள் வரும். வர்ற வரைக்கும் காத்திருக்கனும்,"என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தி தூங்க வைத்தார்.

மறுநாள் காலையில் 7.30 to 9 மணி நல்ல நேரத்தில் திருமணம் நடந்து முடிந்தது. மதியம் 2 மணிக்கு உணவு முடிந்த பின் அனைவரும் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வதற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

டேய் சக்தி பஸ் வந்துருச்சா! என்று ராமசாமி கேட்டுக் கொண்டு வெளியே வந்து பஸ்ஸை பாத்துட்டார்.

"எல்லாரும் பஸ்ல ஏறுங்க" என்று அவரும் ஏறினார்.

முதன் முதலில் பொண்ணு, மாப்பிள்ளை, பெண் வீட்டார் சொந்தங்கள், மாப்பிள்ளை சொந்தங்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பது ராமசாமிக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஷடேய் சக்தி !உள்ள போடா படியில் நிக்கிற" என்றார் ராமசாமி,

ஷபரவால்ல மாமா எனக்கு பழகுனது தான்" என்று சிரிப்போடு, அவருக்கு மட்டும் புரியும் படி சொன்னான்.

நீ கேக்க மாட்ட போடா! என்று பின்னால் திரும்பி தன் பொண்ணுயும், மாப்பிள்ளையும் பார்த்து Ok வா என்பது போல் பார்த்தார்.

"Ok தான் பா என்று சிரித்துக் கொண்டே மாப்பிள்ளையின் தோளில் சாய்ந்து
கொண்டாள்.

ராமசாமி மற்ற மாப்பிள்ளைகளை பார்த்து "Ok வா மாப்ளைங்களா" என்று கேட்டார்.

"என்ன A.C பாஸ்ஸா இருந்தா நல்லாயிருக்கும் Its ok அட்ஜஸ் பண்ணிக்கிறேன்" என்று முனுமுனுத்தனர்.
"டிரைவர் நல்ல படம் ஒன்ன போடு" என்றார் மாப்பிள்ளை வீட்டாரில் ஒருவர்.

"ஏப்பா, ஊர்க்கு போறதுக்கு 3 மணி நேரம் ஆகும் நல்ல MGR படமா போடுங்கப்பா" என்றார் பஸ்ஸிலிருந்த பாட்டி.

மிகவும் சந்தோசமான, மகிழ்ச்சியான தருணத்தில் திடிரென பஸ் ஒரு ஓரமாகவே
போய்கொண்டு இருந்தது. சக்திவேல் ஸ்டேரிங்க மேல் தலையை வைத்து விழுந்து கிடந்த டிரைவரைப் பார்த்து,

"யோவ் டிரைவர் டிரைவர்" என்று கத்தினான் .

பஸ்ஸில் அனைவரும் பயந்து எழுந்து நின்று அலற தொடங்கினர்.

சக்திவேல் உடனே டிரைவரை இழுத்து, பிரேக்கை அழுத்தி, பஸ்ஸை நிறுத்தினான். டிரைவருக்கு என்னன்னு தெரியலயேனு எல்லோரும் பதட்டத்தோடு இருந்தனர்.

அங்கிருந்த ஒருவர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து விட்டார். சிறிது நேரத்தில்
ஆம்புலன்ஸ் வந்தது. அவரை ஏற்றி விட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி
கூறினார்கள்
சரிசரி டிராபிக் ஆகுது, என்று சத்தமிட்டு கொண்டு அங்கிருந்து பஸ்ஸை எடுக்கும்படி டிராபிக் S.I கூறினார்

"சார், நாங்க டிரைவர் இல்லாம எப்படி போறது எங்களுக்கு டிரைவர் வேனும் என்று திமிராக பேசினார் வழக்கறிஞர் மாப்பிள்ளை.

சார் 5 நிமிஷத்துல வண்டிய எடுக்கல உங்களையும், வண்டியையும், வண்டில இருக்குற எல்லாத்தையும் உள்ள தள்ளிடுவேன் என்று பதிலுக்கு அவரும் திமிராக பதிலளித்தார்.

பஸ்சுக்கு உள்ளே சொந்தத்தில் ஒருவர் "என்ன மருமகள் வந்த நேரத்தில் இப்படி அசம்பாவிதம் ஆயிடுச்சுனு சொல்ல, அங்கிருந்த மாப்பிள்ளையின் ஒன்றுவிட்ட சித்தியும், ஆமா ஆமா !பொண்ணுக்கு ஏதாவது தோசம் இருந்துருக்கும் அத மறச்சுடாங்களோ என்னவோ, என்றனர்.

ராமசாமிக்கு கோபம் வந்தது.

கீழே இறங்கி, மாப்ளைங்களா எல்லாரும் வண்டில ஏறுங்க "சார் நாங்க கிளம்பிடுறோம் நீங்க போங்க சார்" என்று S.I யை பணிவுடன் அனுப்பிவிட்டார் ராமசாமி.

"மாமா, பஸ் யார் ஓட்றது" என்றார் வழக்கறிஞர். "மாப்ள நீங்க ஏறுங்க நான் பாத்துக்கிறேன்" என்றார்.
எல்லோரும் பேருந்தில் ஏறிய பின், "டேய் சக்தி வண்டிய எட்றா" என்றார்.
பஸ்ஸில் உள்ள அனைவரும் அவருக்கு பஸ்ஸை ஓட்ட தெரியுமா என்று கேலி செய்து கொண்டிருக்கையில்,
"மாமா எங்க உயிர பணையம் வைக்க சொல்றீங்களா, இவன நம்பி நாங்க
வரமாட்டோம், இவனுக்கு முதல்ல ஹெவி லைசன்ஸ் இருக்கா, அனுபவம் இருக்கா என்று கேட்டார் மாப்பிள்ளை.
"மாப்ள நீங்க சும்மா இருங்க ,டேய் சக்தி! நீ வண்டிய எட்றா நா சொல்றேன்" என்று வேகமாக சொன்னார்.

அவனும் வேறு வழியின்றி டிரைவர் சீட்டில் அமர்ந்து, சாமி படத்தை தொட்டு கும்பிட்டு வண்டியில் சாவியை போட்டு,Start பட்டனை அழுத்தியவுடன் அனைவரின் முகத்திலும் ஒரு பயம் கலந்த மகிழ்ச்சி.

அரசல், புரசலாக எல்லோரும் பேசிக்கொண்டிருக்கையில் ராமசாமி எழுந்து நின்று, "யாரும் பயப்பட வேண்டாம், என் மருமகன் சக்திவேல் பஸ்ஸை ஓட்டுவார் என்று பெருமையுடன் சொன்னபோது.

"என்ன மாமா கார் ஓட்டுறதும், டூரிஸ்ட் பஸ் ஓட்றதும் ஒன்னா" என்றார் ஐ.டி மாப்பிள்ளை.

"மாப்ல, அவர பத்தி உங்களுக்கு நாலு அஞ்சு வருசமா தான் தெரியும். அவன் 15 வருசத்துக்கு முன்னாடி டிரைவர் டிரைனிங் இன்ஸ்டிடியூட் வச்சி நடத்துனான். அவன் எத்தனையோ பேருக்கு பஸ் ஓட்ட சொல்லி கொடுத்த டிரைவர் டிரைனர் ( Driver Trainer) அவருக்கு இந்த பஸ்சு ஒட்றதுலாம் சாதாரண விஷயம் என்று பெருமையாய் பேசிவிட்டு டேய் சக்தி, எட்றா வண்டிய "என்று சொன்னதும், சக்திவேல் செல்ல தொடங்கினான்.

அனைவரும் ஆச்சரியத்தில் இருந்த போது "அப்பா உங்களுக்கு பஸ் ஓட்ட தெரியாதா" என்று திவ்யா கேட்டால், "இல்லமா அப்பா வக்கீல் எனக்கு இதெல்லாம் தெரியாது" என்றார்.

"போப்பா நீ வேஸ்ட் !நான் பெரியப்பா பஸ் ஓட்றத பாக்க போறேன்" என்று துள்ளி குதித்து ஓடி வந்து முன்னாள் உட்கார்ந்து இருந்த தினகர் பக்கத்தில் அமர்ந்தாள்.

"டேய் உங்க அப்பா சூப்பரா ஓட்ராறு டா, உங்க அப்பா தான்டா ஹீரோ" என்று பேசிக் கொண்டிருக்கையில்,

தன் மகனை திரும்பி பார்த்த சக்திவேல் கண்களால் பதில் கூறினான்.

அனைவரும் மாப்பிள்ளை வீட்டை அடைந்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Stories you will love

X
Please Wait ...