யார் கடவுள்

கற்பனை
4.9 out of 5 (7 Ratings)
Share this story

கணபதி என்ற ஒரு அழகான கிராமத்தில் ராஜா என்ற ஒரு தொழிலாளி தான் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார் அவர் குடியிருக்கும் பகுதியில் ஒரு பிரபல கோவில் ஒன்று இருந்தது அந்த கோயிலில் பல சாமி சிலையை இருந்தது அங்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் அதிக அளவில் கோவிலுக்கு சென்று வந்தார்கள் அதைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜா கடவுள் என்பது யார் கோயில் என்று யாரு முதன் முதலில் உருவாக்கியது கடவுள் இடையே உள்ள வேறுபாடு என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்.

மதுரை கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயிலுக்கு சென்று தேடலை தொடங்கினார் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா ஆந்திரா கர்நாடகா என வடமாநிலங்களிலும் உள்ள ஆலயங்களுக்கு சென்று தன் தேடலை தீவிரமாக செய்து வந்தார்

பழங்கால ஓலைச்சுவடிகள் கல்வெட்டுகள் என அனைத்தையுமே தேடத் தொடங்கினார் ராஜா

அந்தத் தேடல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சித்தர்கள் சமாதி என அனைத்து இடத்திற்கும் தேடல் தொடங்கியது

ஒரு இடங்களில் ஒரு வகையான பதில்களும் அதில் சில குழப்பங்களும் நீடித்துக்கொண்டிருந்தது

மனம் தான் கடவுள்

நம் முன்னோர்கள் தான் கடவுள்

என்று பலரும் பல வகை கேள்விகளுக்கு பதில்கள் வந்து கொண்டே இருந்தது

ஆனால் ராஜாவுக்கு அதில் ஒரு சந்தேகம்

ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விதமான ஆற்றல்கள் இருக்கின்றது அது மறுக்க முடியாத உண்மை

இது எப்படி என்று தெரியாமல் மிகக் குழப்பமான நிலையில் விடாமுயற்சியுடன் தன் தேடலைத் தொடங்கி கொண்டிருந்தார் ராஜா .

அப்பொழுது மதுரை மாவட்டம் சுந்தர மகாலிங்கம் சதுரகிரி கோயிலில் ஒரு துறவியை கண்டார் அந்த குருவிடம் கேட்டு பாப்போம் என்று சில கேள்விகளை கேட்டார்

ராஜா: ஐயா என் பெயர் ராஜா

துறவி : சொல்லுப்பா என்ன வேண்டும்

ராஜா : நான் சில மாதங்களாக என் கேள்விக்கு விடை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் உங்களுக்கு தெரிந்தால் கூறவும் ஐயா

துறவி: உன் கேள்வி என்ன என்னால் தெரிந்ததை நான் கூறுகிறேன்

ராஜா: ஐயா கடவுள் என்பது யார் கோவில்கள் எப்படி உருவானது அதை உருவாக்கியவர்கள் யார்

துறவி : இயற்கை தான் கடவுள்

ராஜா: புரியவில்லை இயற்கை எப்படி கடவுள் என்று கூறுகிறீர்கள் ஐயா கொஞ்சம் விளக்க முடியுமா

துறவி: இறைநிலை அடைவது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம் இறைநிலை என்பது இறைவன்நிலை என்று அர்த்தமல்ல இயற்கை நிலை இயற்கையுடன் இயற்கையாக இருப்பதுதான் இறைநிலை அந்த இயற்கையை உணர்ந்தால் அது தான் கடவுள்

ராஜா: அப்படி இயற்கை தான் கடவுள் என்றால் கோவிலை உருவாக்க காரணம் அதை உருவாக்கியவர்கள் யார்

துறவி: கோவிலை சித்தர்கள்

ராஜா: ஏன் கோவிலை உருவாக்கினார்கள்

துறவி : பஞ்சபூதங்கள் தான் கடவுள் நீ செல்லும் அனைத்து கோயில்களிலும் இதையே தான் நீ வணங்கிக்கொண்டு இருக்கிறாய்

ராஜா: எப்படி ஐயா

துறவி: பஞ்சபதங்கள் என்ன என்று சொல் பார்ப்போம்

ராஜா: நெருப்பு ,காற்று, நீர், நிலம், ஆகாயம் இவை ஐந்தும் தான் ஐயா

துறவி: தற்போது நீ கோவிலுக்கு செல்கிறார் கோவில் வாசலில் இருந்து ஆகாய விமானத்தை ( கோபுரத்தை) கையேந்தி வணங்குகிறோம் பின்பு உள்ளே சென்ற உடன் சாமி சிலையை வணங்குகிறோம் பின் தீபம் பின் சூடம் தீர்த்தம் பத்தி சாம்பிராணி தொடர்ச்சியாக இதை அனைத்தையுமே நாம் வணங்குகிறோம்

1) நெருப்பு - தீபம் மற்றும் சூடம்

2) நிலம் - சிலை ( கல்லால் ஆனது)

3) நீர் - தீர்த்தம்

4) காற்று - சாம்பிராணி மற்றும் பத்தி ( புகை)

5) ஆகாயம் - விமான கோபுரம்

அல்லது

(ஆகாயம் என்பது அமைதியை குறிக்கும்

கோவிலுக்கு சென்று அவர்கள் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்து வரவேண்டும் என்று கூறுவார்கள்)

தற்பொழுது புரிகின்றதா நீ யாரை வணங்குகிறோம் என்று பஞ்சபூதங்களை நெருப்பு நீர் காற்று நிலம் ஆகாயம் இவைகளை நீ தினசரி வணங்கு என்று சொன்னால் நாம் செய்ய மாட்டோம் அதனால்தான் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் கோவில் என்ற ஒரு வழிமுறைகள் கொண்டு வந்து பஞ்சபதங்களின் நாம் வணங்க வைத்து இருக்கிறார்கள்

இப்போது உனக்கு யார் கடவுள் மற்றும் கோவில் உருவான கதை உனக்கு புரியும் என்று நம்புகின்றேன்.

ராஜா: ஐயா உங்கள் விளக்கங்களும் நன்றாகப் புரிகின்றது ஆனால் இதுதான் இறுதி பதிலா

துறவி: இதுவும் ஒரு பதில் மட்டுமே

ராஜா : அதுவும் ஒரு பதில் மட்டுமே என்றால் இன்னும் வேறு விஷயங்கள் உள்ளதா

துறவி: கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு .

ராஜா: இயற்கைதான் பஞ்சபூதங்கள் தான் கடவுள் என்றால் ஒவ்வொரு கோவிலிலும் உள்ள வேறுபாடுகள் ஆற்றல்கள் எப்படி மாறுபடுகிறது

துறவி: ஒவ்வொரு கோயிலும் புதிதாக அமைக்கும் பொழுது கும்பாபிஷேகம் என்ற ஒரு வழிமுறைகள் நடக்கும் தெரியுமா

ராஜா: ஆம் ஐயா தெரியும் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்

துறவி: அது மந்திரங்களும் சிலர் மந்திர சொற்கள் பயன்படுத்தப்படும் அப்பொழுது அந்த வார்த்தையின் மூலம் ஒரு ஆற்றலை அந்தக் கோவில் முழுவதும் நிறைந்திருக்கும் இதன் மூலம் அதன் ஒவ்வொரு கோயிலும் ஒருவிதமான ஆற்றல்கள் நிறைந்திருக்கின்றது

ராஜா: ஐயா நம் முன்னோர்கள் தான் கடவுள் என்று சிலர் கூறுகிறார்கள் அதைப் பற்றிய உங்கள் கருத்து

துறவி: இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில் மதுரை சுற்றியுள்ள கிராமத்தல் குலதெய்வ வழிபாடு ஒரு சிறப்பான வழிபாடாக நடந்து வருகிறது

பிதா குரு தெய்வம்

தாய் தந்தை ஆசிரியர் கடவுள்

என்று கூறுவார்கள் அந்த வழிமுறையில் நம் முன்னோர்களை நமக்கு தாய் தந்தையாக இருந்தவர்கள் நமக்கு வழிகாட்டியாக இருந்த குரு அவர்களையும் கடவுளாக மதித்து வணங்கி வருகிறோம்

நம் முன்னோர்களை குலதெய்வமாகவும்

குருவாக இருந்து நமக்கு அறிவியல் பாதுகாப்பையும் கற்றுத்தந்த

குரு காவல் தெய்வமாகவும் வணங்கி வருகிறோம் .

இது தான் நம் முன்னோர்களை கடவுளாக இருக்க காரணம்

ராஜா: சாரிங்க ஐயா ஆனால்

துறவி: என்ன ஆனால் சொல்லுபா

ராஜா: இல்லை ஐயா அப்புறம் ஏன் இந்த உலகில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு பெயர் ஒவ்வொரு கடவுள் பெயரை வைத்து நாம் வழங்குகின்றோம் அம்மன் என்று இல்லாமல் காளியம்மா முத்துமாரி பத்திரகாளி என்று பல அம்மன் கோவில்கள் கருப்பசாமி சின்ன கருப்புசாமி பெரிய கருப்பசாமி அய்யனார் அழகர் முருகன் கந்தன் விநாயகர் கணபதி செல்வகணபதி வெற்றி கணபதி கிருஷ்ணன் சிவன் நந்தி லிங்கம் லிங்கேஸ்வரன் என்று என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்

துறவி: (சிரித்துக்கொண்டே) உன் பெயர் என்ன

ராஜா: ராஜா ஐயா

துறவி : நாம் அனைவரும் யார்

ராஜா: புரியவில்லை ஐயா

துறவி: நாம் அனைவரும் மனிதர்கள் தானே

ராஜா: ஆம் ஐயா

துறவி : அப்புறம் ஏன் அனைவரும் மனிதர்கள் என்று சொல்லாமல் உன்னை ராஜா என்று கூப்பிடுகிறார்கள்

ராஜா: ஒரு அடையாளம் தெரிந்து கொள்ளவே இந்தப் பெயர்கள் ஐயா

துறவி: அதே போன்று தான் ஒவ்வொரு கோவிலையும் தனிமைப்படுத்த பெயர்கள் வைக்கப்பட்டது அந்தந்த கோயிலில் யார் தோற்றுவித்தார்கள் அவர்களை அந்த கோயிலுக்கு அடையாளமாக இருக்க பெயர்களை மாற்றி மாற்றி வைத்தார்கள் .

நாம் வளர்க்கும் கால்நடைக்கு பசு காளை நாய் பூனை என உயிரினங்களுக்கு நம் பெயர் வைத்து அடையாளப்படுத்துகிறது

ஏன் நாம் கட்டும் வீடு மண்டபம் அதற்கு ஒரு பெயர் வைத்து தனியாக அடையாளப்படுத்துகிறது சரியா

நாம் சாப்பிடும் உணவகங்களுக்கு தனித்தனி பெயர்கள் உள்ளது ஏன் அனைத்தையுமே உணவகம் தானே

ஏன் உணவகம் மற்றும் என்று பெயர் வைத்தாள் இது யார் உடையது என்று தெரியாது

அதேபோல தான் இறைவனுக்கும் பல பெயர்கள் உள்ளன

ராஜா: சாரிங்க ஐயா

இந்த சதுரகிரி மலையில் சித்தர்கள் இன்னும் உயிரோடு வாழ்கிறார்கள் என்று கேள்விப்பட்டு உள்ளேன் அது உண்மையா ஐயா

துறவி: ஆம் இங்கு மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் சித்தர்கள் நடமாட்டம் இருக்கின்றது.

ராஜா : அய்யா அப்படி என்றால் பழனி கோவிலில் ஜீவசமாதி அடைந்த போகர் சித்தர் ராமேஸ்வரம் கோவிலில் ஜீவசமாதி பதஞ்சலி சித்தர் என்று சில பல கோயில்களில் ஜீவசமாதி அடைந்து இருக்கிறார்கள் ஜீவ சமாதி என்பது அவர்கள் கடைசி நொடி மரணம் என்பது தானே அருத்தம்.

துறவி: ஜீவ சமாதி ஒரு உடலில் ஜீவன் என்று உயிர் உள்ளவரை தான் அவன் உயிருடன் இருக்கின்றார்கள் ஒரு சித்தர் ஜீவ சமாதி நேரம் எப்படி என்றால் இறைநிலை அடைவது என்று அர்த்தம் அவர்கள் உடல் மற்றுமே சமாதி நிலை அடையும் அவர்கள் ஆத்மா மற்றும் ஜீவனுக்கு மரணம் கிடையாது . அதுபோல் அவர்கள் நினைத்த உருவத்தில் நினைத்த இடத்திற்கு சென்று வரலாம்.

சித்தர்கள் இந்த பூமியில் உலா வருவது என்பது உண்மைதான் சித்தர்கள் பல பயிற்சிகள் மூலமாக கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் நினைவு ஆற்றல் மூலம் ஒருவரை தொடர்பு கொள்வது இன்று பல வித்தைகளையும் மருத்துவம் மற்றும் விஞ்ஞான அறிவியல் என்று அனைத்தையும் அவர்கள் கற்றுவைத்து இருக்கிறார்கள்

ராஜா: சாரிங்க ஐயா

ராஜா: நன்றி ஐயா உங்கள் விளக்கங்களுக்கு

ராஜாவுக்கு இப்பவரை இது ஒரு முடிவில்லாத கதையாகவே சென்று கொண்டிருக்கிறது .

இறைவன் வேறு எங்கும் இல்லை உன்னை சுற்றியே இருக்கிறான்

இயற்கையுடன் உணர்ந்து வாழ்ந்தால் அந்த இயற்கையை உன்னை காப்பாற்றும்.

உள்ளம் ஒரு கோவில் உன் உடலையே நீ சுத்தமாக வைத்துக்கொண்டால் உன் உடலும் ஆலயம் தான்

பிறருக்கு உதவி செய் அல்லது செய்யாமல் இரு ஆனால் ஒரு பொழுதும் இயற்கையை சீண்டாதே

இந்த உலகத்தில் இயற்கையால் வரும் அழிவை யாராலும் தடுக்க முடியாது

மரங்களை வளர்ப்போம் இயற்கையை பாதுகாப்போம்

கடவுள் யார் என்ற தேடல் நோக்கி என் பயணம் முடியவில்லை தொடரும்.

உங்கள் நண்பன்

ரா.ராஜகணபதி

7200062082

மதுரை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Stories you will love

X
Please Wait ...