JUNE 10th - JULY 10th
ஆடம்பரமான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது... தங்களின் செல்வச் செழிப்பை காட்டிக் கொள்ளும்படியாக இருந்தது...
சொந்தங்கள் மற்றும் நண்பர்களும்
மேடையின் அலங்காரத்தை பற்றி பேசிய வண்ணம் இருந்தனர்... அதன் செலவுகள்... பார்ப்பதற்கு ஆடம்பரத்துடனும், அழகாகவும் இருந்தது ...
ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில்
மணமகள் பாவனா மற்றும் மணமகன் கமலேஷூம் இன்றைய நாகரீகத்தின் உதாரணம் சொல்லும் அளவுக்கு இருந்தனர்...
பேரழகி பெண்ணவள் போதைக் கொண்டதில் தவறு ஏதுமில்லை... என்பதற்கு ஏற்ப அவனின் அழகும்... உயரமும்...நிறமும் என கலவையான ஒரு மிடுக்குடன் காணப்பட்டான்...
கமலேஷ் ...பாவனாவும் சளைத்தவளில்லை அவனுக்கு ஏற்றபடி பொருத்தமாகவே இருக்க ...வந்திருந்த உறவினர்களும் சற்றுப் பொறாமையும் படவே செய்தனர்...
இவற்றில் ஒரு நெருங்கிய வயதான முதியவர்... "யார் மூலமாக இந்த வரன் முடிந்தது"... என்று கேட்டே விட்டார்...
மணமகளின் தாய்க்கோ பெருமை தாங்கவில்லை... பெண்ணின் தகப்பன் மீசையை முறுக்கி விட்டு கொண்டார் ...
மணமகனின் பெற்றோர்கள் வந்திருந்தவர்களை கவனிப்பதில் இருந்தனர்...
மாப்பிள்ளையின் ... நண்பர்களும் கமலேஷை கிண்டலும், கேலியுமாக வலம் வந்தனர்...
இனிதே நிச்சயதார்த்த விழா முடிந்தது... மணமகன் கமலேஷ் பாவனாவை தேடிச்சென்று ...
தொலைபேசியின் எண்ணை பெற்றுக் கொள்ள செல்லும் போது ...பாவனாவின் தோழிகளும்...
"என்னடி அழகன் படத்தில் வர மாதிரி ...நீயும் அவரும் விடிய விடிய... பானுப்பிரியா...மம்முட்டி போல பேசிக் கொண்டே இருக்கப் போறீங்க"...
பாவனா தனது மொபைல் நம்பரை கொடுத்து விட்டு வெட்கம் கலந்த சிரிப்புடன் இருக்க... சிரிக்கும் பாவனவை பார்த்து விட்டு... தோழிகளின் முன்பு எந்தவித உணர்வுகளையும் காட்டாமல் நாகரிகமாக விடைபெற்றுச் சென்றான் கமலேஷ்...
நிச்சயதார்த்தம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்தே திருமணம் என முடிவு செய்யப்பட்டிருந்தது...
மொபைலின் எண்ணை வாங்கிச் சென்ற... கமலேஷ்... பாவனாவிற்கு 15 நாட்களாகியும் போன் செய்யவே இல்லை...
பாவனா பொறுத்து... பொறுத்து பார்த்தவள் தனது தந்தையிடமே கேட்டு தனது ரூமில் இருந்து போன் செய்ய... ரிங் போய்க்கொண்டே இருக்க... கமலேஷ் எடுக்கவில்லை...
பல ஆசைகளுடனும் போன் செய்து ஓய்ந்து போன பாவனாவிற்கு... 'வேலைகள் அதிகம் இருப்பதால் பிறகு கூப்பிடுகிறேன்'... என்ற குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிட்டு ...மொபைலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்...
கமலேஷ்...
"நான் செய்வது சரியா" என யோசனை செய்து கொண்டு இருக்க... அவனுடைய அம்மா வந்து... "கமலேஷ், வந்து சாப்பிடு" என அழைக்கவும்...
தனது பிரச்சினையை எவ்வாறு அனைவருக்கும் புரிய வைப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டே சாப்பிடச் சென்றான் ...
கமலேஷ் சாப்பிட்டு முடித்து ...இன்று இரவு எப்படியும் அவளிடம் பேசி விட வேண்டும் என்று முடிவு செய்து...
தனது அறைக்கு வந்து படுக்கையில் படுத்து கொண்டு...எப்படி ஆரம்பித்து...எவ்வாறு புரிய வைப்பது...என யோசனைகள் ஓட...
கமலேஷ் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தான்...மொபைலை எடுத்து அவள் எண்களை தேடி ஒவ்வொரு எண்ணாக கைகள் நடுங்கிய படியே அழுத்தினான்...எண்களை அழுத்தி விட்டு...காத்திருந்தான்...ரிங் போகவும்...
மூன்றே ரிங்கில் தனது மொபைலை எடுத்து மொபைலை ஆன் செய்து ..."ஹலோ" என்றாள் பாவனா ...கமலேஷின் எண்ணை ... "மை ஃப்யூச்சர்"..(my future).. என சேமித்து வைத்திருக்க...
இவன் போனுக்காக காத்து கொண்டிருந்தவள் கமலேஷ் அழைத்ததும் உடனே எடுத்து விட்டாள்... பத்து மணி ஆவதை பார்த்து கற்பனைகளுடன், புன் சிரிப்போடு... "சொல்லுங்க, சாப்டீங்களா... வீட்ல, ஆன்ட்டி, அங்கிள், பிரதர்...இன்..லா... சிஸ்டர்...இன் லா ... எல்லாம் எப்படி இருக்காங்க"...
என படபடவென பேசவும்...
"எல்லாம் நல்லா இருக்காங்க"... "நீங்க, எப்படி இருக்கீங்க"...என இவனும் சம்பிரதாயத்துக்காக கேட்கவும்...
"நல்லா இருக்காங்க ...அப்புறம் நீங்க போன் பண்ணுவீங்கனு நெனச்சேன்"... என்று சொல்லி விட்டு தயங்கினாள்...
கமலேஷ் அமைதியாக இருக்கவும்... "என்ன எதுவுமே பேச மாட்டீங்களா"... என கேட்கவும் ... கமலேஷ் "அது வந்து உன்கிட்ட ... உங்ககிட்ட... ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"... என தயங்கியபடியே சொல்ல...
"நீங்க, வேண்டாம்... நீயின்னே சொல்லுங்க"... என்று அவன் தயக்கத்தைப் போக்க சொல்லவும்... கமலேஷ் அவற்றை கவனிக்காமல்... "நீங்க, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்" என்றவன்...
"சொல்லுங்க"...என்றவுடன்
"இந்த திருமணத்தை நிறுத்தி விடுங்கள்"... "நான் உங்களுக்கு தகுதியானவன் இல்லை" ..." என்னால் உங்களை தாம்பத்திய வாழ்வில் திருப்தி படுத்த முடியாது"... என்று சொல்லி விட்டு... பாவனாவின் தலையிலும்... மனதிலும் இடியை இறக்கிவிட்டு... தனது மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டான்...
பாவனாவிற்கு அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர சுமார் ஒரு மணி நேரம் தேவைப்பட்டது... தன்னை இயல்பாக்கி கொண்டு பல்வேறு விதமாக யோசிக்கவும்... ஒரு முடிவுக்கு வந்து ...படுத்துவிட்டாள்...உறக்கம் வரவில்லை...
விடியற் காலையில் தூங்கி விட்டாள்... 9 மணி வரை பொறுத்து பார்த்த... பாவனாவின் அம்மா வந்து குரல் கொடுக்கவும்... சோர்ந்து போய் எழுந்து கொள்ள ...
தலைவலிக்க ஆரம்பித்து விட... தனது தாயிடம் சென்று காபியை கேட்டு அருந்தி விட்டு சிறிது நேரம் இரவில் கமலேஷ் சொன்னதையே திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டு இருக்க...
"என்னமா, ரொம்ப பலமா யோசிச்சிட்டு இருக்க"... என்று தனது தந்தை வாக்கிங் சென்றுவிட்டு நாற்காலியில் அமர்ந்தபடியே கேட்கவும்... பாவனா சிரித்தபடியே... "அதெல்லாம் ஒன்றுமில்லை டாடி"...என்று குளிக்க சென்றுவிட்டாள்...
குளித்து முடித்தவுடன் தனது தாயிடமும்... தந்தையிடமும் தோழிகளுடன் திருமணத்திற்காக சில பொருட்களை வாங்க வேண்டும்... என்று கூறிவிட்டு ...தனது நெருங்கிய தோழி ப்ரீத்தியின் வீட்டிற்கு சென்றாள்...
அதில் இன்னொரு விஷயமும் இருந்தது ப்ரீத்தியின் அம்மா ஒரு டாக்டர்... அவரிடமும் கலந்து பேசவே பாவனா முடிவு செய்து கொண்டு போகவும்... பெற்றோரிடம் சொன்னால், அழுது ஆர்ப்பாட்டம் செய்து... கமலேஷின் வீட்டிற்கு போய் பிரச்சனையாகி விடும்...
என்று யாரிடமும் எதுவும் சொல்லவில்லை... ஆம் கமலேஷ் இன்னும் தன்னுடைய பியூச்சர் என்பதை அவளால் மாற்றிக் கொள்ள முடியவில்லை... மனதில் ஒரு முடிவு உடனே சென்றாள்...
ப்ரீத்தியின் வீட்டிற்கு தனது ஹோண்டா ஆக்டிவாவில்... சென்று கொண்டிருந்தாள்...ப்ரீத்தி மொட்டை மாடியில் யாருடனோ டவர் கிடைக்காமல்... "இப்ப கேட்குதா"... "இப்ப கேட்குதா"... என்று கத்திக் கொண்டிருக்க...
தனது வீட்டின் முன்பு... தனது தோழியின்
வண்டியை கண்டதும் ...ஓடோடி வந்த ப்ரீத்தி... "வாடி, எப்படி ...உங்க வீட்ல விட்டாங்க"... "நிச்சயமான உன்னை என்று தனது தோழியை கண்டு கட்டி கொண்டாள்"...
"இல்லடி சும்மா தான் வந்தேன்... ஒரே போர் அடிக்குது"... என்று சொன்ன பாவனாவை மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு ..."ஏண்டி, இப்படி சொல்ற நிச்சயமாகி கல்யாணம் முடிஞ்சு குழந்தை பிறக்கும் வரைக்கும் ...உங்களுக்கு எங்க ஞாபக எல்லாம் வருமா"... "மறந்து இருப்பீங்கனுல ... நினைத்தேன்"... என்று தோழியை சீண்ட...
பாவனா முகம் மாறுதல்களை மறைக்க ரொம்பவே சிரமப்பட்டாள்... "என்னடி உன்னோட ஆளு ரொம்பவே பேசி பேசி தொல்லை பண்றாரா ..."ஏன்டி, இப்படி முகமெல்லாம் டல்லா இருக்கு... "என்ன... ராத்திரி எல்லாம் வெறுக்க போன்லேயே கடலை வறுக்கிறீர்களா"...என்று கேலி செய்யவும் ...
"சும்மா இருடி, என்று தனது தோழியை அடிக்க... போது பிரீத்தியின் அம்மா வெளியே வரவும்... "என்னம்மா எப்படி இருக்க"... எனக் கேட்கவும்...
"நல்லா, இருக்கேன் ஆண்ட்டி... நீங்க எப்படி இருக்கீங்க"... என்று விசாரித்து விட்டு... "ப்ரீத்தி, இன்னுமா குளிக்கல போ போய் முதல்ல குளிச்சிட்டு வா"... என்று கண்டிப்புடன் அதட்டவும்...
பாவனாவிடம் "இருடி, இதோ வந்துற்ரேன்"... என்று ப்ரீத்தி உள்ளே செல்ல ... "அம்மா தாயே... நல்லாவே தேச்சி குளிச்சிட்டு வா... நான் வெயிட் பண்றேன்...என தனது தோழியை துரத்தி விட்டாள்... பாவனா...
அவளுக்கு ப்ரீத்தியின் அம்மாவிடம் தனிமையில் பேச வேண்டியிருந்தது... பாவனாவிடம்... "சொல்லுமா கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு" எனக் கேட்கவும்... பாவனாவின் முகம் வாடி விட ...
மருத்துவரான அவர்... சரியானபடி பாவனாவின் முக மாறுதல்களை படித்து ..."ஏதோ சொல்ல நினைக்கிற"... என்று சொல்லவும்... "ஆன்ட்டி"... என்று அதிர்ந்தாலும்... உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் தான்.... என்று தயங்க....
"சொல்லுமா, என்று ப்ரீத்தியின் அம்மா ஊக்கப்படுத்த... கமலேஷ் தன்னிடம் சொன்னவற்றை அனைத்தையும் சொல்லி முடிக்க... அவரும் சற்று அதிர்ந்து விட ...பிறகு யோசித்து விட்டு...
"சரி விடும்மா, அவன் கல்யாணத்துக்கு முன்னமே சொன்னதும்... ஒரு விதத்துல நல்ல விஷயம் இருக்கு... அதுக்காக அந்த பையனை பாராட்டணும்"... என்று சொல்லவும்...
"இல்லை, ஆண்ட்டி நான் கேட்க வந்ததே வேற"...
என்ன என்பது போல் பார்க்க... "இந்த குறையை நீக்க முடியுமா"...?... இல்லையா...?... எனக் கேட்கவும்... மருத்துவர் சற்று யோசனையுடன் பாவனாவை பார்க்கவும்...
"ஆமாம், ஆண்ட்டி வீட்டுல யாருக்கும் தெரியாது... அதுவுமில்லாம எனக்கு அவர ரொம்ப பிடிச்சி இருக்கு"... "இந்த, பிரச்சனையை
தீர்க்க முடியுமா...?...ஏன்னா அவர்தான் என் ஹஸ்பண்ட்னு முடிவு பண்ணிட்டேன்"... என்று கண் கலங்க பாவனா சொல்லவும் ...
ப்ரீத்தியின் அம்மா பாவனாவை ஆச்சரியத்துடன் பார்த்தார் ...பிறகு தனது சக மருத்துவர் நண்பருக்கு போன் செய்து ... சில விவரங்களைச் சேகரித்துக் கொண்டு... "நான் ஒரு டாக்டரோட நம்பரும்... அட்ரஸும் தரேன்... நீ மட்டும் போக வேண்டாம்... கமலேஷையும் ...கூட கூட்டிட்டு போய் பார்க்கணும்"...
"இது நம்ம முடிவு பண்ற விஷயம் கிடையாது கமலேஷ் தான் மனசு வைக்கணும்"... என்று சொல்லவும்... "சரிங்க ஆண்டி... ரொம்ப தேங்க்ஸ்"... இந்த விஷயம் ப்ரீத்தி கிட்ட கூட சொல்லல... நீங்களும் ...என சொல்லவும்...
சிரித்தபடியே "இல்லமா நான் சொல்ல மாட்டேன் எனிவே ஆல் தி பெஸ்ட்"... என்று ப்ரீத்தியின் அம்மா சொல்லும் பொழுதே...ப்ரீத்தி வரவும்... "எதுக்கும்மா ஆல் த பெஸ்ட்"... என கேட்க...
பாவனா... "ஆண்டி... உன்கூட கடைக்கு போறேன்னு சொன்னேன்... "எல்லாம் நல்லபடியா முடியும்னு இல்ல"... "அதுக்கு தான் ஆல் த பெஸ்ட் சொல்றாங்க"... என கிண்டல் செய்யவும்... அனைவரும் சிரித்து விட்டனர்...
பிறகு சிறிது நேரம் ப்ரீத்தியுடன் இருந்து விட்டு மதியம் வீடு வந்து சேர.... சாப்பிட்டு விட்டு... இரவு தூங்காததாலும் வெளியே சென்றுவிட்டு வந்தாலும் அசதியாக இருக்க பாவனா தூங்கி விட்டாள்...
நாளை கமலேஷ் வீட்டிற்கு போக வேண்டும் என்று தனது மாமனாரின் மொபைல் எண்களை வைத்து வீட்டின் அட்ரஸை கண்டு பிடித்து.... (வீட்டில் கேட்க முடியாதே) தனக்குள்ளே சில முடிவுகளை எடுத்து விட்டு மறுநாளுக்காக காத்து கொண்டு இருக்க...
அங்கு தனது நண்பர்களிடமும் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ள முடியாமலும் ... வேலையிலும் கவனம் செலுத்த முடியாமலும் ... ஒருவித அழுத்தத்துடன் இருந்த கமலேஷ்... தனது தவறுகளை நினைத்து வருந்திக் கொண்டிருந்தான்...
நினைவுகள் சுழல தனது நண்பர்களுடன் ... ஒரு முறை சுற்றுலா சென்றிருந்தான் ... அப்பொழுது அனைவரும் அருவியில் குளித்து விட்டு... சிறிதளவு மது அருந்துவிட்டு ... தாங்கள் கொண்டு சென்ற இருந்த ஆபாச வீடியோக்கள் சிலதை பார்த்துக்கொண்டிருந்தனர்...
முதலில் பார்த்து உடலில் கூசினாலும்... காமேஷ் போகப் போக அதன் மீது ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து அந்த அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட.... போதையிலும் இரவில் கண்விழித்து இருந்ததினாலும் அவனது நண்பர்கள் அனைவரும் உறங்கிவிட்டனர்...
கமலேஷ் மட்டும் உடலில் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு... முதல் முதலாக சுய இன்பத்திற்கு ஆட்ப்பட்டான்...அதில் மனம் கிளர்ச்சியுர அப்படியே தூங்கிவிட்டான் ...
பிறகு சுற்றுலா முடிந்து அனைவரும் அவரவர் பணிகள் என்று சென்றுவிட... கமலேஷ் வேலைகள் செய்தாலும் ... சுய இன்பத்தில் அடிக்கடி திளைக்க அதுவே பழக்கமாகி விட்டது ... பிறகு... இது தொடர்கதையாக போகவும் ... மற்றவற்றில் ஆர்வம் குறைந்து ...
பெண்களிடம் இயற்கையாகவே ஏற்படும் எந்த ஈடுபாடும், ஆர்வமும் குறைவதை அவன் உணர்வே சில வருடங்கள் ஆகிவிட்டது...
"ஏன்டா, மச்சான் நீங்கள் எல்லாம் ஏன் பொண்ணுங்களா பார்த்து இப்படி வழியீறீங்க"...என கமலேஷ் தனது நண்பனிடம் விளையாட்டாக கேட்க ...
அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஆம்பளன்னா பொண்ண பாத்தா மனசுலயும்... உடம்புலையும்...ஒரு வித கிளர்ச்சியையும் ஆசையும் வரணும்டா" ... என்ற தவறான கருத்தை கருத்தை விதைத்திட ...
கமலேஷ்... "எனக்கு, அப்படி தோணலை டா"... என்று கேட்க... அவன் நண்பன் சிரித்துவிட...அப்ப நீ நல்ல டாக்டரா போய் பாரு மச்சான்"... என்று சொல்லவும்... கமலேஷக்கு முகம் வாடிவிட்டது...
"டேய்... நான் சும்மாதான் சொன்னேன்... நீ ஆம்பிள சிங்கம்டா"... என்று நண்பன் சமாதானப்படுத்த... ஆனாலும்...கமலேஷ் மனதிற்குள் எதோ நெருட ஆரம்பித்தது... பிறகு ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு ...அங்கே யாருக்கும் தெரியாமல் போக ...
அங்கு ... அவன் என்னவோ இவன் மருந்தினால் தான் வானுலகில் இருக்கும் மன்மதனுக்கே மருந்து அரைத்துக் கொடுப்பதாக... கதை அளக்க... கமலேஷ் சில பல ஆயிரங்கள் செலவு செலவழித்து யாருக்கும் தெரியாமல்... அந்த லேகியம் மாத்திரை என விழுங்கி வைக்க...
அது உடலில் பல உபாதைகளை தர... அந்த மருத்துவனோ(போலி) போய் பார்த்து கேட்க...அவனோ தன் தவறை மறைக்க... மொத்த தவறையும்...கமலேஷ் மேலேயே போட்டு... "உனக்கு கை பழக்கம் இருக்கா" என்று கமலேஷிடம் கேட்கவும்... ஏற்கனவே குற்றவுணர்வில் இருக்கும்... கமலேஷ் தயக்கத்துடன் "ஆமாம்"...என்று தலையை ஆட்ட...
அந்த மருத்துவனோ(போலி)அவனை எங்கே அடித்தால் இவன் அடங்குவான் என்று அறிந்து.. கமலேசன் அந்தரங்கங்களை பரிசோதனை செய்து... "உனக்கு, ஆண் தன்மை இல்லை"... "உன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்தவே முடியாது"... என சொல்லவும்...
கமலேஷ்க்கு உலகமே சுற்றுவது போல் தோன்றவும் ...அங்கிருந்து கிளம்பிவிட ...'தனது வாழ்க்கையை தேவையில்லாமல் தவறான பழக்க வழக்கத்தினால் இழந்து விட்டோமே" என்று வருத்தத்துடன் வீட்டிற்கு வந்துவிட்டான்...
பிறகு சிறிது காலம் எந்தவித கெட்ட பழக்க வழக்கங்களிலும் ஈடுபடாமல் இருந்தாலும்... ஆழ் மனதில் பதிந்து போன தான் ஆண்மையற்றவன் என்ற வார்த்தையை மட்டும் அவனால் என்ன செய்தும்... அதிலிருந்து மீள முடியவில்லை... தனது அண்ணனுக்கு திருமணம் முடித்து...
தனக்கும் பெண் பார்த்து முடிவு செய்ததை தடுக்க முடியாமலும்... தனது பெற்றோரிடமும் இந்த பிரச்சனையை சொல்ல முடியாமலும் தான்... தன்னை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிடமே சொல்லிவிடலாம்...
என்று ...இதோ பாவனாவிடமே சொல்லிவிட்டான்...
மறுநாள் காலையில் தனது டூவீலரில் பாவனா கமலேஷ் வீட்டை நோக்கி ...வரும் வழியில் சிலரிடம் விசாரித்து... ஒரு வழியாக கண்டுபிடித்து... வீட்டின் காலிங் பெல்லை அடிக்க... கமலேஷின் அண்ணி வந்து கதவை திறக்கவும்...
பாவனாவை எதிர்பார்க்காத அனைவரும் வாசலை திரும்பி பார்த்து ...ஆச்சரியப்பட. கமலேஷ்க்கு மட்டும் அதிர்ச்சி 'என்னஇங்கு வந்திருக்கிறாள்... ஏதாவது பிரச்சனை பண்ணி விடுவாளோ.. இல்லை எல்லாம் ரகசியமும் சொல்லிவிடுவாளோ'... என்று வியர்த்துக் கொட்ட அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்...
பாவனாவிற்கு அவன் உணர்வுகள் புரிந்து சிரித்தபடியே அனைவரிடமும் சகஜமாக பேச... அனைத்து நல்ல விசாரிப்புகளும் முடிந்த பிறகு... "ஆண்ட்டி , அங்கிள் அவர் தான் வெளில கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு... அதனால தான் வந்தேன்"...
"நான் வந்தது உங்களுக்கு ... ஏதும் கோபம் இல்லையே"... என்றுபாவனா கேட்கவும் ... கமலேஷின் தாய்...தந்தை சிரித்தபடியே இது இயற்கையான விஷயம்தான்... என்று மனதில் நினைத்தாலும் ..."பரவாயில்லை அதுல என்ன இருக்கும்மா:... "கமலேஷ் அவள கூட்டிட்டு போயிட்டு வா"... என்று சொல்லவும்...
கமலேஷ் பாவனாவை யோசனையுடன் பார்க்க...
பாவனா... கமலேஷை பார்த்து கண் சிமிட்ட... கமலேஷ்க்கு கோபம் வந்து விட "இவளுக்கு
எவ்வளவு திமிரு ...நாம சொல்லியும் அசிங்கப்படுத்தாம விடமாட்டா போல இருக்கே"... என எதுவும் சொல்ல முடியாமல்... கிளம்பி வரவும்...
தன் வண்டியை விட்டு விட்டு கமலேஷின் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிக் கொண்டும் ... கமலேஷின் வண்டியிலேயே ஏறிக்கொள்ள... கமலேஷ்... இவளுக்கு சொல்லியே புரிய வைத்து விடலாம்... என்று நினைத்துக் கொண்டிருக்க ...
"ஏங்க, நான் சொல்ற அட்ரஸ்க்கு கொஞ்சம் கூட்டிட்டு போறீங்களா...?... எனக்கு இதுவரைக்கும் அங்கெல்லாம் போனதில்ல ...புதிய இடம்... என் பிரென்ட் வீடு அங்கதான் இருக்கு "என்று சொல்லவும்...
"இல்ல அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"... என்று கமலேஷ் சொல்ல ...அது தான் போன்லயே எல்லாம் சொல்லிட்டீங்களே... இதுக்கு மேல என்ன இருக்கு... அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ...."ப்ளீஸ் ப்ளீஸ்"... என்று கெஞ்ச...
கமலேஷால் மறுக்க முடியாமல் அவள் சொன்ன அட்ரஸ்க்கு போகவும்... அந்த கட்டிடத்தில் உள்ள போர்டைப் பார்த்து கடுப்பாகி விட ...இங்கு எதுக்கு என்பது போல் அவளை முறைத்து பார்க்க... "என் பிரண்டோட அப்பா தான் வாங்க என்று சொல்லவும்...
முதல் மாடியில் அவள் சொன்ன அட்ரஸ் இருக்கவும்... உள்ளே சென்றனர்... வீட்டிலேயே தனியறையில் தெரிந்தவர்களுக்கு எனவும்... தனக்காகவும் என...ஒரு அறையை மனோதத்துவ மருத்துவர் ஒதுக்கியிருந்தார் ...பெயரை வைத்து "ஆமாம், ஏற்கனவே போன் செய்துட்டாங்க ...வாங்க வாங்க"... என அழைக்கவும்...
கமலேஷுக்கு நெருப்பில் இருப்பது போல் தோன்ற... கண்கள் சிவந்து விட்டது... பாவனாவின் காதருகே குனிந்து "என்னை அசிங்கப்படுத்தி பார்க்கதானே இங்க கூட்டிட்டு வந்திருக்க"...என கேட்க ..."இல்லைங்க எனக்கு நீங்க வேணும் அதுக்காக தான் கூட்டிட்டு வந்திருக்கேன்"... என்று கமலேஷ் என் கண்களை பார்த்து சொல்லவும்...
கமலேஷ் அந்த வார்த்தையில் ஒரு மாதிரி ஆகி விட ...அமைதியாக பாவனாவிற்காகவும்... தன் நிலையை அறிந்து கொள்ளவும் ...உள்ளே செல்ல... மருத்துவர் அவர்களை இருவரையும் அமர வைத்து ஏற்கனவே சில விஷயங்களை அறிந்து இருந்ததால்... பாவனையுடன் சில கேள்விகளையும்... அவளை வெளியே அனுப்பிவிட்டு... தனியாகவும் என சில கேள்விகளை கேட்டார் ...
ஒரு நான்கைந்து முறை கவுன்சிலிங் வந்தாலே போதுமானது... என்று முதல் நம்பிக்கை விதையை அவன் மனதில் விதைத்து ...அனுப்பி வைத்தார்... கமலேஷிக்கும் சற்று ஆறுதலாக இருந்தது... நீண்ட நாட்களுக்கு பிறகு... தன் மனதில் நம்பிக்கை இலைகள் துளிர்த்து போலிருக்க... பாவனாவை பார்த்து மெல்லிய சிரிப்புடன்... ஆனால், அதில் ஆயிரமாயிரம் நன்றிகள் பொதிந்திருந்தது...
பிறகு... கமலேஷும், பாவனாவும் வழியில்
எங்கும் பேசிக் கொள்ளவில்லை ...வீட்டிற்கு வந்ததும் ...வீட்டில் கமலேஷின் அன்னை தந்த காபியை குடித்துவிட்டு...பாவனா கிளம்பவும்... "இரும்மா"... என்று சொல்லவும்... "இல்லைங்க ஆண்ட்டி ஏற்கனவே ரொம்ப டைம் ஆயிடுச்சு"... "வீட்ல தேடுவாங்க"... "நான் கிளம்புறேன் அவர்கிட்ட சொல்லிடுங்க"... என்று சொல்லவும்...
"அவன் பிரஷ்ஷப் பண்ண தான் போயிருப்பான்" போம்மா...போய் அவனுடைய ரூமையும் பாத்துட்டு அப்படியே இந்த காப்பியையும் கொஞ்சம் கொடுத்திட்டு ... என்று சொல்லவும் ...
பாவனாவிற்கு அது சரியென படவே காபியை எடுத்துக் கொண்டு போகவும் தன் ரூமில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு...
பாத்ரூமில் இருந்து வெளியே கமலேஷ் வரவும் ..பாவனாவை அவள் எதிர்பார்க்காததால் "வாங்க".. என்று அழைக்கவும் ..."ரூமை சூப்பரா மெயின்டெயின் பண்ணி வச்சு இருக்கீங்க"... என்று சொல்லவும் ...சிரித்தபடியே காபியை வாங்கிக் கொள்ள ...காபி குடித்து முடித்த பிறகு...
"சரிங்க, நான் கிளம்பறேன்"... என்று சொல்லவும் "தேங்க்ஸ்: என்று மட்டும் கமலேஷ் சொல்ல... எதுக்கு என்பது போல் பாவனை பார்க்க... கமலேஷ் அமைதியாகவே இருக்க... கமலின் அருகில் சென்ற பாவனா... என்ன என்று கமலேஷ் யோசிக்கும் முன்பே ...பாவனா... கமலேஷ் அணைத்து இதழில் தன் இதழை பதித்து விட ...திடீரென்று நிகழ்ந்த நிகழ்வினால் அவனு க்கு ஒன்றும் புரியவில்லை...
சிலையென நின்றுவிட ...
பாவனா அவனை விடுவித்து "என்னை தப்பா நினைச்சுக்காதீங்க... "என் போன்ல எப்போ..
( m y ❤ f u t u r e) னு உங்க நம்பரையும்... உங்க பேரையும் சேவ் பண்ணி சேவ் வச்சேனோ... அப்பவே உங்களை விரும்ப ஆரம்பிச்சிட்டேன்"... "நீங்கதான், என் புருஷன்னு "நீங்க எப்படி இருந்தாலும்"... என்று அதில் அழுத்தம் கொடுத்து சொல்லவும் ...
கமலேஷ் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த பாவனாவையே பார்த்து கொண்டு இருக்க... பாவனா தனது வீட்டிற்கு எப்பொழுதோ சென்று விட்டாள் ... என்பதை அறிய சில மணி நேரம் ஆனது கமலேஷிக்கு ...
முதன்முறையாக ஒரு பெண்ணின் பரிசம் ...நம்பிக்கையான வார்த்தைகள்... தன்னை நேசிக்கிறாள்... என்பது எல்லாம் அவனுக்குள் ஏதோ ஏதேதோ செய்ய ...பாவனா சொன்ன டாக்டரை தொடர்ந்து போய் கவுன்சிலிங் செய்துகொள்ள முடிவு செய்து விட்டான்...
இரண்டு முறை சென்று வந்த பிறகு... திருமண ஏற்பாடுகளை தடுக்க எந்த முயற்சிகளையும் செய்யவில்லை... மனோதத்துவ மருத்துவர் முதலில் அவனுக்கு தன்னம்பிக்கையை தான் ஆழ் மனதில் ஆழப் பதித்து வைத்தார் ... பிறகு சில மூச்சு பயிற்சிகள் ...யோகா... தியானம் என செய்ய அறிவுறுத்தினார் ... ஒரு மனிதன் தன் எண்ணத்தையோ ... ஒரு செயலையோ தொடர்ந்து செய்து வந்தாலோ ... நினைத்துக் கொண்டே இருந்தாலோ...நாள் பட ...நாம் அதுவாகவும்... அவை நாமாகவும் மாறிவிடுவோம்... அது நல்லதா...? தீயதா...? என்பது எல்லாம்... இல்லை ...
"நீ என்னவாக நினைக்கிறாயோ
அதுவாகவே மாறி விடுவாய்"...!
என்று முன்னோர்கள் சொன்னது போலவும்...
"நம் எண்ணங்களே..! நம் வாழ்க்கை.!
என்பது போலவும் ... கமலேஷ்க்கு ஆழ்நிலை மனதில் உள்ள தேவையற்ற
பயம்
தாழ்வுமனபான்மை
வெட்கம்
தயக்கம்
மூடநம்பிக்கைகள் ... எனும்
எண்ணத்தில் மாற்றம் செய்ததுதான் மருத்துவரின் முக்கிய வேலையாக இருந்தது...அதில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது...
இவை திருமணம் முடிந்தும் தொடர பயிற்சிகளின் மூலமும்... இன்று நமது கமலேஷ் என் வாழ்க்கையில் வசந்தம் வீசி கொண்டு இருக்கிறது... கமலேஷின் கைபேசி அடிக்க ...
அதை எடுத்து...
பார்த்து ...சிரித்த படியே ...ஆச்சரியத்தோடு...
"பாவனா என்ன சொல்ற ...? டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்களா"...என நா தழுதழுக்க பேசவும்...
தன் கையில் இருந்த அலைபேசியில் திரையில் தெரிந்த "almighty creator"என்று அது ஒளிர்ந்து கொண்டிருந்தது...
#826
Current Rank
50,913
Points
Reader Points 80
Editor Points : 50,833
2 readers have supported this story
Ratings & Reviews 4 (2 Ratings)
rajmicheal027
Nla pathivu
Pavalamani Pragasam
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points